என்ன சொல்வது.. திரும்பிப் பார்த்தால் வியப்பாகவே உள்ளது. முன் திட்டமேதுமில்லாமலே துவங்கிய இந்த நிகழ்ச்சியும் இதற்காக நாங்கள் அமைத்துக் கொண்ட களமும் இன்றைக்கு இடையறாது பயணித்து இந்த நிகழ்ச்சி மட்டுமே இந்த அரிய முயற்சியின் முதல் படியாக அமைந்து இன்றைக்கு 450-வது நாளை எட்டியிருக்கிறோம். இது எங்களால் உண்டானதல்ல, தேவனுடைய அளவற்ற கிருபையே.. எல்லாம் அவருக்காகவே.
தற்செயலாக அல்லது தேவ செயலாக இன்றைய தினம் இணையும் விருந்தினர் அருமை அண்ணன் ஸ்ரீதரன் ஐயா அவர்களும் விசேஷித்தவர்களே. இன்றைய அமர்வில் அவர் இணைவது பொருத்தமானதே. தனது வாலிப வயதில் உலகப் பிரகாரமான உத்யோகத்தை உதறித் தள்ளிவிட்டு கர்த்தருக்காக மட்டுமே தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அற்புத மனிதர்.
அக்காலத்து பரிசுத்தவான்களிடம் அமர்ந்து கற்றுக்கொண்டவர். நிதானத்தை பிரதானமாக்கி விண்ணகமெனும் விதானத்தையே தன் இலக்காக்கி இம்மையில் பெயர் பொருள் பெருமை நாடாது உப்பைப் போன்று கரைந்திருந்தே சுவைதரும் அன்பான மேய்ப்பன். அவர் ஒரு சபையின் தலைவரானதும் கூட அவரே திட்டமிடாத சம்பவம் எனலாம். ஆவியானவர்தாமே அவரை அதுபோன்ற பாதைகளில் நடத்தி வந்திருக்கிறார்.
அவர்களுடைய அன்பு மனையாள் இராணி அக்காவும் அண்ணனுக்கேற்ற அமைதியான இல்லாள் தோழி ஊழியத்தில் உடன் பாடுபடும் தியாகமான சேவகி ஆவார். இவ்விருவரையும் இந்நாளில் சந்திப்பதும் உரையாடுவதும் அவர்கள் காலத்திய அரிய பல திருச்சபை புண்ணியங்களைப் பேசுவதும் நமக்கான வாய்ப்பாகும்.
**வாருங்கள்.. இணைந்து சுவைப்போம்... தேவ நதியினைப் பருகுவோம்.. இது உங்கள் குடும்ப சானல் என்பதை மற்றோர்க்கும் மறவாமல் பகிருங்கள்.. நன்றி..!
⭕#Live: #மனம்விட்டு_உங்களுடன்
#Tamil_Christian_Testimony | #alphaomegachurch
#ஆல்பாஓமேகா #MV449 |
#பாஸ்டர்ஸ்ரீதரன் #pssreedharan
#sisranisreedharan
#chillsam #Samuelchurchill
#cfc_media #compassion #family #channel
#compassion_family_channel
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நாட்கள் வேகமாக கரைகிறது, அதில் பயனுள்ள நாட்கள் எத்தனை என்பதுதான் முக்கியம். ஆண்டவரின் கரத்திலுள்ள நாட்களை நமக்கு அவர் இலவசமாக தருகிறார் .இந்த நாட்களில் நமது #CFC மீடியா அநேக தேவமனிதர்களுடன் பயனுள்ள பல மணி நேரங்களை செலவிட்டுள்ளது.
தங்களின் மேலான ஜெபங்களுக்கும் ,ஒத்துழைப்பிற்கும் நன்றி !!
இன்று #மனம்விட்டு உங்களுடன் நிகழ்ச்சியின் #400வது நாள் .நினைத்துப் பார்க்கையில் பிரமிப்பாகவும் ,மலைப்பாகவும் உள்ளது .இது கர்த்தரால் ஆயிற்று .
இன்று மூத்த #போதகர் ,#பேராயர் #ஜோதிபிரகாசம் அய்யா அவர்கள் தன் மனம் திறக்கிறார்...
இயேசு கிருஸ்துவால் மட்டுமே உயிர் பிழைப்பதும் உயிர் மீட்சி அடைவதும் நடக்கிறது . திரும்பிப் பார்த்தால் நம் நம்பிக்கை இன்னும் பெருகும், அத்தனை விதமாக ஆச்சரியமாக நடத்திக்கொண்டு வருகிறார். இன்று நம்முடன் இணைகிறவரின் வாழ்வின் எல்லாமுமாக கிறிஸ்துவே இருக்கிறார் ...இணையுங்கள் !
அருகில் வந்த மரணத்தை அடித்து விரட்டின சாட்சி !!ப்அழுகிப்போன உடல் உறுப்புகள்.... மறு இயக்கம் கொண்டது மன்னவர் இயேசுவாலே
இயேசு கிருஸ்துவால் மட்டுமே உயிர் பிழைப்பதும் உயிர் மீட்சி அடைவதும் நடக்கிறது .
திரும்பிப்பார்த்தால் நம் நம்பிக்கை இன்னும் பெருகும் ,அத்தனைவிதமாக ஆச்சரியமாக நடத்திக்கொண்டு வருகிறார் ...இன்று நம்முடன் இணைகிறவரின் வாழ்வின் எல்லாமாக கிறிஸ்துவே இருக்கிறார் ...இணையுங்கள் !
நற்செய்தியாளரான இவர் தனது பிறப்பு வளர்ப்பு குடும்பப் பின்னணி மற்றும் ஊழியத்தின் அனுபவங்களை நமது இன்றைய #மனம்விட்டு_உங்களுடன் நிகழ்ச்சியில் பகிர இருக்கிறார்.
**இணைவீர்.. இணைப்பீர்.. பாலமாய் விளங்குவது நமது சானல் !!!
இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்... நம்முடைய கண்களுக்கு இது ஆச்சரியமாயிருக்கிறது எனும் சங்கீதக்காரனின் வாக்கியத்தின்படி கர்த்தர் தாம் பிரசன்னமளிக்கும் ஒரு ஸ்தலத்தை ஏற்படுத்தவும் அங்கே தம் ஜனத்தை கூட்டிச் சேர்க்கவும் தம் ஊழியர்களுக்கு கட்டளையிடுகிறார். அந்த நன்மையானது தேசம் முழுவதையும் ஆசீர்வதிக்கும் என்பது பரிசுத்தவான்களின் நம்பிக்கையாகும். அதன்படி இன்று நம்முடைய சானலில் முதன்முறையாக ஒரு சபையின் திறப்பு விழாவை நேரலை செய்ய இருக்கிறோம்.
**கர்த்தருடைய பிள்ளைகள் யாவரும் இந்த அருமைமிகு நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அன்போடு வேண்டுகிறோம், நன்றி.
⭕#Live #Church_Dedication |
#VoiceofGod Church |
#PsBoaz | #Ps #LucasSekar |
#Bishop_Mohandoss
#cfcmedia #compassionfamilychannel
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
ஒரு ஆத்துமாவை தம்மோடு சேர்த்துக் கொள்ள விதம்விதமான வழிமுறைகளை பயன்படுத்தும் சர்வவல்ல தேவனாகிய கர்த்தர் அத்தகைய அனுபவங்களின் வழியே கடந்துசெல்வோரை தம் சாட்சிகளாக்கி சமுதாயத்தில் நிறுத்துகிறார். அப்படிப்பட்ட அற்புத சாட்சியான ஒருவரையே இன்றைய நம்முடைய #மனம்விட்டு_உங்களுடன் நிகழ்ச்சியில் சந்திக்க இருக்கிறோம். ஆம், சகோதரி நதியா ரேச்சல் நெல்சன் அவர்கள் கடந்த வருடத்தில் எளிமையாய்ப் பகிர்ந்த தனது தனிப்பட்ட அனுபவத்தின் காணொளியானது சமூக வலைதளத்தில் தீயாய் பரவியது. பற்பல ஊடகங்கள் அவரை நேர்காணல் செய்து மேலும் அந்த செய்தியைக் கடத்தியது. சற்று இடைவெளியில் நாம் அவர்களை இன்று சந்திப்பதும் கூட ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருக்குமென்று நம்புகிறோம்.
**வாருங்கள்... பிறரையும் இணைத்து அமருவீர்.. பக்திவிருத்திக்காக.. ஆவியில் உற்சாகப்பட... தேவநாமம் மகிமையடைய !!!
#இயேசு கிறிஸ்துவின் வல்லமை இன்றும் வெளிப்பட்டுக் கொண்டுதான் உள்ளது ,அதற்கு சாட்சியாக நம் அருமைபோதகர்.. ஆம் ,அவரே நேரலையில் வந்து சுடச்சுட நடந்தவைகளை உயிருள்ள சாட்சியாக விவரிக்கிறார் ..ஞாயிறு மாலை 3 மணிக்கு காணத்தவறாதீர்கள் !!
"மார்ச்சுவரியிலிருந்து உயிர் பெற்ற அதிசயம்"
என்ன நடந்தது ? மரணம் எப்படி சம்பவித்தது ? கொலையா ? விபத்தா ?
தனது கடந்த காலத்தின் கசப்பானஅனுபவங்களோடு , புத்துயிர் பெற்ற புதிய வாழ்வின் நிகரற்ற நாயகர் இயேசு கிறிஸ்துவின் அரும்பெரும் செயல்களையும் ந��ரலையில் நம்முடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறார் ..
#Live #மனம்விட்டு_உங்களுடன் MV343 |
#Tamil_Christian_Testimony |
#Pr._ #டோம்னிக்_ சேவியர் | #Zeal _ of _ the _ LORD _Ministries | #Chennai
#cfcmedia #compassionfamilychannel
#chillsam #samuelchurchill
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நாளது தேதிவரையிலும் முந்நூறுக்கும் மேற்பட்ட தேவப் பிள்ளைகளை நம் அரங்கிற்கு அழைத்து பேசியுள்ளோம். அதினால் அநேகர் தேற்றமும் ஏற்றமும் பெற்றனர். கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதியாய் நிற்க உதவும் இதுபோன்ற நிகழ்ச்சியினால் கர்த்தருடைய பிள்ளைகளுக்குள்ளாக இணைப்பும் பிணைப்பும் உண்டாக பிணக்குகளும் சுணக்கங்களும் கரைகிறது. இதுவே நம்முடைய சானல் #குடும்ப_சானல் என்று போற்றப்படுவதற்கு மூலக் காரணமாகும்.
இன்றைக்கும் கூட நம் அரங்கிற்கு நம்முடைய #மனம்விட்டுஉங்களுடன் நிகழ்ச்சியில் இந்தியாவின் முதல் இளம் பெண் ட்ரம்ஸ் கலைஞராக #செல்விகெத்சியாள்_ஷலோமி இணைகிறார். கலைகள் யாவும் நம் ஆண்டவரால் அருளப்பட்டதே யானாலும் ஒருசிலர் மாத்திரமே அதனை கர்த்தருக்காய் அர்ப்பணித்து சேவையாற்றுகின்றனர். அத்தகைய மாண்பை உடைய அருமை மகளோடு அவரால் பெருமைபெற்ற அன்பான அவருடைய தகப்பனாருடனும் அவர்களுடைய இசைக் குழுவுடனும் இன்றைய நிகழ்ச்சி அமைகிறது.
**இணைவீர்... இணைப்பீர்.. இது நம்முடைய சானல் !!!
#Live #மனம்விட்டு_உங்களுடன்_329 |
#Tamil_Christian_Testimony |
#Ms_keziashalomi #கெத்சியாள்_ஷலோமி
#இந்தியாவின்முதல்இளம்பெண்டிரம்ஸ்கலைஞர்
#compassionfamilychannel
#chillsam #samuelchurchill
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நாளது தேதிவரையிலும் முந்நூறுக்கும் மேற்பட்ட தேவப் பிள்ளைகளை நம் அரங்கிற்கு அழைத்து பேசியுள்ளோம். அதினால் அநேகர் தேற்றமும் ஏற்றமும் பெற்றனர். கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதியாய் நிற்க உதவும் இதுபோன்ற நிகழ்ச்சியினால் கர்த்தருடைய பிள்ளைகளுக்குள்ளாக இணைப்பும் பிணைப்பும் உண்டாக பிணக்குகளும் சுணக்கங்களும் கரைகிறது. இதுவே நம்முடைய சானல் #குடும்ப_சானல் என்று போற்றப்படுவதற்கு மூலக் காரணமாகும்.
இன்றைக்கும் கூட நம் அரங்கிற்கு நம்முடைய #மனம்விட்டுஉங்களுடன் நிகழ்ச்சியில் இந்தியாவின் முதல் இளம் பெண் ட்ரம்ஸ் கலைஞர் #செல்விகெத்சியாள்_ஷலோமி இணைகிறார். கலைகள் யாவும் நம் ஆண்டவரால் அருளப்பட்டதே யானாலும் ஒருசிலர் மாத்திரமே அதனை கர்த்தருக்காய் அர்ப்பணித்து சேவையாற்றுகின்றனர். அத்தகைய மாண்பை உடைய அருமை மகளோடு அவரால் பெருமைபெற்ற அன்பான அவருடைய தகப்பனாருடனும் அவர்களுடைய இசைக் குழுவுடனும் இன்றைய நிகழ்ச்சி அமைகிறது.
**இணைவீர்... இணைப்பீர்.. இது நம்முடைய சானல் !!!
#Live #மனம்விட்டு_உங்களுடன்_315 |
#Tamil_Christian_Testimony |
#Ms_keziashalomi #கெத்சியாள்_ஷலோமி
#இந்தியாவின்முதல்இளம்பெண்டிரம்ஸ்_கலைஞர்
#compassionfamilychannel
#chillsam #samuelchurchill
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
37 வயதுக்கு பிறகு இவர் வாழ்க்கையில் நடந்த அற்புத மாற்றங்கள் , மாயம் இல்லை மந்திரம் இல்லை எல்லாம் இயேசு கிறிஸ்து என்னும் நாமத்தினால் ... அவர்க்கென வாழ்ந்திட உயிர் தந்தவரே
சிலுவை சுமக்க பாக்கியம் தந்தவராம்!
நடந்த மாற்றம் என்ன ?
கடந்த காலம் கனிந்தது எப்படி?
எதிர்பார்ப்புகளோடு இணைந்திடுங்கள்!
இன்றைய விருந்தினர்:
Pr.பால் A.லவரண்டியன்,
நித்திய கன்மலை ஊழியங்கள் ,சென்னை
நாள்: 13.06.2021
நேரம்: மாலை 3 மணிக்கு
#Live #மனம்விட்டு_உங்களுடன் 308 |
#Tamil_Christian_Testimony |
#Pr_பால் A_ #லவரண்டியன் |
#Pr. #Paul_ A _ #Lavarandian |
#Eternal #Rock #Ministries |
#நித்திய #கன்மலை #ஊழியங்கள் #சென்னை
#cfcmedia #compassionfamilychannel
#chillsam #samuelchurchill
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நீருக்கு வீழ்ச்சியில்லை, ஆனாலும் அதை நீர்வீழ்ச்சி என்கிறோம். அது வீழ்ந்துபடாமல் எழுந்து படர்ந்து நிமிர்ந்து தாழ்ந்து வளைந்து நெளிந்து சென்று செல்லுமிடமெல்லாம் ஆரோக்கியத்தையும் செழிப்பையும் சுகவாழ்வையும் அள்ளித் தருகிறது.
நன்னீரும் மண்ணும் இணைந்து நிகழ்த்திடும் விந்தைகளே விந்தைதான்.. அவற்றுடன் வித்தான ஒன்று இணைந்து நடத்தும் ஜாலங்களால் ஜகமே சிலிர்க்குது, சந்தோஷப் பூக்கள் பூக்க சுந்தரக் கனிகளால் கனவுகளும் கவிகளாகிறது.
அவ்வாறுதானே கிறிஸ்துவினுடையோர்தம் வாழ்வும் என சொல்லி வைத்தனர், நம் நேச மணவாளன். நீ நதியாய் புறப்பட்டு மரமாய் வேர்கொண்டு கனியாய் களித்து வித்தாய் தாய்மண்ணில் ஊன்றப்பட்டு விண்ணில் பலனாக பலமாக எழவேண்டுமென்கிறார்.
இன்றும் இந்த 300-வது #மனம்விட்டு_உங்களுடன் சிறப்பு மைல்கல் நிகழ்ச்சியில் அலங்கரிக்கும் அன்பு சகோதரி ஹெலன் வின்சென்ட் அவர்கள் சிங்கப்பூர் தேசத்தில் காலூன்றி கர்த்தருடைய வல்லமையின் ஊடகமாய் திகழ்பவர். அவருடைய வாழ்வு இன்று நமது அரங்கில் இணைவோர்க்கு பாடுகளில் நல்பாடமாக விளங்கிட வாழ்த்தி வரவேற்கிறோம்.