⭐ நான் இயேசுவின் மாமிசத்திற்கும் எலும்புகளுக்கும் உரியவன்.
⭐ கிறிஸ்துவின் ஜீவன் என் மாமிசத்தில் வெளிப்படுகிறது.
⭐ என் சரீரம் தேவனுடைய ஆலயம்
⭐ வாதை என் கூடாரத்தை( என் சரீரத்தை என் குடும்பத்தை) அணுகாது.
⭐ பொல்லாப்பு எனக்கு( என் குடும்பத்துக்கு என்னை சேர்ந்தவர்களுக்கு என் தேசத்தாருக்கு) நேரிடாது.
⭐ அவர் வேடனுடைய கண்ணிக்கும் பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் என்னை தப்புவிக்கிறார்.
⭐ அவருடைய தழும்புகளால் நான் சுகமாகி இருக்கிறேன்.
⭐ இயேசுவின் ரத்தம் என் மேலே தெளிக்கப்பட்டு இருக்கிறது.
⭐ இயேசுவின் நாமம் என் மேல் எழுதப்பட்டுள்ளது.
⭐ இயேசுவின் வார்த்தை என் இருதயத்தில் நிரம்பி உள்ளது.
⭐ நான் இயேசுவின் ரத்தத்திற்குள், நாமத்திற்குள், வார்த்தைக்குள் இருக்கிறேன்.
⭐ கர்த்தர் என் பெலன்
⭐ கர்த்தர் என் கேடகம்
⭐ கர்த்தர் என் துருகம்
⭐ கர்த்தர் என் கோட்டை
⭐ கர்த்தர் என்னை சூழ அக்கினி மதிலாய் இருக்கிறார் .
⭐ கர்த்தர் என்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காக்கிறார்.
⭐ நான் உலகத்தில் இல்லை கிறிஸ்துவுக்குள் தேவ ராஜ்யத்தில் உன்னதத்தில் அவரோடு இருக்கிறேன்.
⭐ கர்த்தருடைய வார்த்தை எனக்கு ஜீவனும் என் உடலுக்கெல்லாம் ஆரோக்கியம்.
⭐ என் சரீரத்தில் உள்ள 100 ட்ரில்லியன் செல்களிலும் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார்,.
⭐ நான் தேவனால் பிறந்தவன் அவருடைய வித்து எனக்குள் தரித்து இருக்கிறது.
⭐ இயேசு என்ற நீதியின் சூரியனின் செட்டைகளின் கீழ் இருக்கிற எனக்கு ஆரோக்கியமும் சுகமும் இருக்கிறது.
⭐ நான் எந்த சூழலிலும் பயப்படமாட்டேன். தேவன் எனக்கு பயமுள்ள ஆவியைக் கெடாமல் பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.
⭐ கர்த்தர் என் ஜீவனும் தீர்க்காயுசுமானவர்.
⭐ எனக்குள் ஜீவன் பரிபூரண ஜீவன், வாழ்வு எனக்கு உண்டு.
⭐ இயேசுவின் சரீரத்தை புசித்து ரத்தத்தை பானம் பண்ணுகிற எனக்கு நித்திய ஜீவன் உண்டு.
⭐ இயேசு பிதாவினால் பிழைத்திருக்கிறது போல நான் இயேசுவால் பிழைத்திருக்கிறேன்.
⭐ கர்த்தரின் கிருபை எனக்கு போதும்.என் பெலவீனத்தில் கர்த்தர் தம்முடைய பெலத்தை எனக்கு தருகிறார்.
⭐ அவர் என் நோய்களையெல்லாம் குணமாக்கி என் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு என்னை கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி நன்மையினால் என் வாயை திருப்தி ஆக்குகிறார். கழுகுக்கு சமானமாய் என் வயது திரும்ப வால வயது போல் ஆகிறது.
⭐ அவர் என்னை நீடித்த நாட்களால் திருப்தி ஆக்குகிறார்.
💥 பரிசுத்தவான்களுக்காக எனக்காக, எனக்குள் இருந்து வேண்டுதல் செய்கிற ஆவியானவர் , மற்றும் பிரதான ஆசாரியராகிய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வேண்டுதல் என்னை பாதுகாக்கிறது.
💥 இயேசுவின் இரத்தம் பேசுகிற நன்மைக்குள் நானும் என் குடும்பமும் தேசமும் சபையும் ஆரோக்கியமாய் உள்ளோம்.
Psalm 34:1 படி தினமும் இதை அறிக்கை செய்து பாவத்தையும் வியாதியையும் ஜெயிப்போம்
ஆமென்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)