மாற்கு 12.41-44-ல் இயேசு ஒரு கைம்பெண்ணை தியானமான காணிக்கையாளர்களுக்கு ஒப்படுகிறார். மற்றெல்லாரையும் விட இவளே அதிகமான காணிக்கை வழங்கியதாக் கூறப்படுகிறது (மாற்கு 12:43) அவள் வழங்கிய இரண்டு செப்புக் காசு செல்வந்தர்கள் வழங்கியதற்கு முன்பாக அற்பமானவைதான். ஆனால், அவளுடைய நிலைமையில் அது மிகப் பெரிய மதிப்பைக் கொண்டிருக்கிறது. தனக்கு இருந்த்தில் மிஞ்சியது அந்த இரண்டு காசுகள் மட்டும்தான் – தனக்கு இருந்தவை எல்லாவற்றையும் கொடுத்து விட்டாள்! (மாற்கு 12:44). ஓர் ஏழைக் கைம்பெண்ணான அவள் வேலையில்லாமலும் சுயேச்சையான வருமானம் இல்லாமலும் இருந்திருப்பாள். எனவே, அந்த காசுகளுக்கு ஈடான வருமானத்தை மீட்டுக் கொள்வதற்கு வேறு வழியே இல்லை. தனக்கு இருந்த எல்லாவற்றையும் கொடுத்த பிறகு, தனது அடுத்த வேளை ஆகார தேவைக்கு எங்கே போவாள்?
தேவாலயத்திற்கு வந்து போகிறவர்கள், தங்கள் செல்வத்தைப் பிறருக்கு காட்டும் தோரணையில் காணிக்கை செலுத்தியிருப்பார்கள். ஆனால், அந்த கைம்பெண்ணோ ஆராவாரம் இல்லாமல், தன் காணிக்கையைச் செலுத்தினாள். இந்தத் தெள்ளந் தெளிவான வேறுபாடு கர்த்தருக்குக் காணிக்கை செலுத்துவதில் செல்வந்தர்களின் மனநிலையையும் கைம்பெண்ணின் மனநிலையையும் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.
இந்த வேத வசனம், முழு இருதயத்தோடும், சுயநலன் கருதாமலும், வழங்கப்படும் காணிக்கையின் மதிப்பை, காசுகளுக்கு உலகம் கொடுக்கும் மதிப்பை விடப் பெரிதாக இயேசு மதிக்கிறார். அவளுடைய காணிக்கை தேவன் தன் தேவைகளைப் பார்த்துக் கொள்வார் என்ற விசுவாசத்தோடு தன்னையே பூரணமாகத் தேவனிடத்தில் கொடுத்து விட்டாள் என்பதைக் காட்டுகிறது. அந்த இரண்டு செப்புக் காசுகளும் அவளுடைய சீடத்துவத்தையும் ஆவிக்குரிய மன நிலையையும் வெளியரங்கப்படுத்தி விட்டது.
நமது காணிக்கை நமது உள்ள யோசனைகளை வெளிப்படுத்துகிறது. நமது உள்ளம் எதற்கு அதிக மதிப்பைத் தருகிறது என்பதைப் புரிய உதவுகிறது. எனவே, அடுத்த முறை நமது பணத்தைச் செலவு செய்யும்போது, சீர்தூக்கிப் பார்ப்போம். காணிக்கை செலுத்தும் வாஞ்சை உலக கவலைகளில் இருந்து பிரித்து, நித்திய ஆசீர்வாதத்தைத் தருவதோடு, அழியாத இலட்சியமான பரலோக சிந்தனைக்கு உயர்த்துகிறது.
தியானிக்கும் தருணம்
நீ எப்போது தேவ காரியத்திற்கு அல்லது தேவைப்படும் ஒருவருக்கு அளவில்லாமல் கொடுத்தாய்? பிறர் அறியாமலும் உணராமலும் நாம் காணிக்கை செலுத்துவோமா?
ஜெபங்கள்
பரலோக பிதாவே, நீர் வெகுமதியாக தந்தவைகளுக்காக ஸ்தோத்தரிக்கிறோம் – ஜீவனையும், நேரத்தையும், தாலந்தையும், ஆஸ்திகளையும் தந்தீர். எங்களுக்கு உண்டான எல்லாம் உம்மிடத்தில் இருந்து வந்தவை. உம்முடைய ஈவுகளை ஞானத்தோடு வழங்கவும் தயாளத்தோடு பகிர்ந்து கொள்ளவும் உதவும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.
⭕#Lent_Day_14 |
#லெந்துகாலம் (எ) #தவக்காலம் |
Sis.#Vimala_John
#cfc_media
#Compassion
#family #channel
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)