-இந்த வசனத்தை நீதிமானாகிய ஷீமா என்ற யூதன் அனுதினமும் ஓதுகிறான் என்பதை நாம் அறிவோம். இதன் மையக் கரு, நமது தேவனாகிய கர்த்தர் சர்வ வல்லமையானவர். அவர் மனம் இறங்கி, இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து விடுதலையாக்கினார். அடிமைப் படுத்தப்பட்ட அத்தேசத்தில் இருந்து, ‘பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தை அவர்களுக்குத் தந்தருளினார் (6.3).
வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தில் பிரவேசிக்கப் போகிறோம் என்ற நம்பிக்கையில், மோசே, அறியாமையில் மூழ்கியிருக்கிற தேவ ஜனங்களிடம் அவருடைய கட்டளைகளுக்குப் பணிந்து, அனைத்துக் காரியங்களும் கைகூடும்படி, பயபக்தியோடு வாழ வேண்டும் என்று ஆலோசிக்கிறான் (6.1-2). தங்கள் பிள்ளைகள் மீது உள்ள கடப்பாடுகளையும் கண்கானிப்பையும் நினைவுறுத்துகிறார். கர்த்தரின் வழியில் குடும்பத்தாரை நடத்துவதன் மூலம் அவர்களை நேசிக்க வேண்டும் என்று நினைவுறுத்துகிறார். பிள்ளைகள் உள்ளத்தில் கர்த்தரின் கட்டளைகள் ஆழமாகப் பதியும் அளவுக்கு, அவர்கள் அதிகாலையில் எழுந்தது முதல், இரவில் படுக்கைக்குச் செல்லும் வரைக்கும் பேச வேண்டும். அதாவது, அவர்களின் அன்றாட வாழ்வில் அப்பியாசங்களில் அதுவும் ஒன்றாக அமைய வேண்டும். கர்த்தரின் தீர்மானங்களை நினைத்தருளும் பொருட்டு, அடையாளங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சுறுக்கமாக, யூத பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும், பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் உபதேசிக்க வேண்டும். அவர்கள் தங்கள் கடமையில் தவறாதவர்களாகவும், ஒழுக்கமுடையவர்களாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும்.
அவ்விதமே, நாமும் முதலாவது கடமையாகக் கர்த்தரை நேசிப்பதோடு, தொடர்ந்து, நமது பிள்ளைகளுக்கும் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் விசுவாசத்தை உபதேசித்து, அவர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். நமது பிள்ளைகள், நம்முடைய பொறுப்பில் தேவனால் ஒப்படைக்கப் பட்டவர்கள். எனவே, கர்த்தருடைய சித்தத்தையும் வழிகளையும். நமது வாழ்வின் கடமையாக உபதேசிக்க வேண்டும். நல்லவரான கர்த்தரைப் பற்றி பிள்ளைகள் முதலாவது கேள்விப்படும்போது, அவர்கள் தொடர்ந்து அவருடைய அனுபவத்தில் வளர்வார்கள். பிரதியுத்திரமாக, தங்கள் பிள்ளைகளுக்கும் அதே கடமையைத் தொடர்வார்கள்.
தியானிக்கும் தருணம்
எந்த அளவுக்கு முழு இருதயத்தோடும், முழு பெலத்தோடும், கர்த்தரின் கட்டளைகளையும் அவரின் சிலாக்கியங்களையும் நமது பிள்ளைகளுக்கு. உபதேசித்து வந்திருக்கிறோம்? நீங்கள் பிள்ளைகளை அறியாதவர்களாய் இருந்தால், மற்ற பிள்ளைகளையாவது ஆன்மீகத்தில் வளர்க்கலாம் அல்லவா.
ஜெபங்கள்
பரலோகத் தந்தையோ, எனது பிள்ளைகளை உம்மிடம் பயபக்தியுள்ளவர்களாய் வளர்க்க வாஞ்சையையும், வைராக்கியத்தையும் தரவேண்டுமென்று வேண்டுகிறேன். என் ஜீவியம் அவர்களுக்கு ஒரு நல்ல சாட்சியாகத் திகழ்ந்து, அதன் மூலம் அவர்கள் உம்மைத் தேவனாகக் கண்டு, தங்கள் ஆண்டவராகவும் இரட்சகராகவும் சொந்த வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ள கிருபை தாரும். ஆமென்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)