இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்திய இரவிலே என்ன நடைபெறப் போகிறது என்பதை அறிந்ததால் அவர் துக்கப்பட்டு வியாகுலப்பட்டார். வேதனை நிறைந்த அந்த சமயத்திலே தனக்கு அருமையானவர்கள் தன் அருகே இருக்க வேண்டுமென விரும்பினார். (26:38) ஆனாலும் அவர்களை விட்டுச் சிறிது தூரம் சென்று (26:39) பரலோக தந்தையிடம் தன் வியாகுலத்தைத் தெரிவிக்கிறார்.
இயேசு கிறிஸ்து இந்தப் பாத்திரம் தன்னை விட்டு நீங்க வேண்டும் என்று மறு முறை ஜெபித்தார். (26:39,42,44). ஆனாலும் ஒவ்வொரு முறையும் தன் சித்தப்படி நடைபெறாமல�� பிதாவின் சித்த்த்திற்கே தம்மை ஒப்புவித்தார். அவருடைய வேண்டுதலைப் பிதாவிடம் தெரிவித்தார். ஆனாலும் இறுதியில் பிதாவின் சித்தமே நிறைவேற வேண்டுமென கேட்டுக் கொண்டார். சில நண்பர்கள் இதனை ‘மாறுபாடான அறிக்கை’ என்று விமர்சிப்பர்; அல்லது ‘விசுவாசமின்மையை’த் தெளிவாகப் பிரதிபலிக்கிறது என்றும் கூறுவர்.. ஆனாலும் இது ஓர் உண்மையான விசுவாசம் – நமது விண்ணப்பத்தை பிதாவானவர் அறிந்து கொள்வதற்கு மட்டுமல்லாமல், விளைவுகள் இன்னதென்று நம்மை விட அவருக்கே நன்கு தெரியும் என்பதை நாமும் அறிந்திருக்கிறோம் என்பதை இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.
தந்தையின் விருப்பத்தையே திருக்குமாரன் ஏற்று தம்மைப் பலியாக ஒப்புவிக்க வேண்டியதாய் இருந்த்து. அவ்வண்ணமே, திருக்கும��ரனும் கீழ்ப்படிதலோடு, விசுவாசிகளாகிய நமது பாவங்கள் மன்னிக்கப்படும் பொருட்டு, சிலுவையில் அறையப்படும் பொருட்டு, சிலுவை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்தார். மேலோட்டமாக வாசித்தால் இயேசுவின் வியாகூலம் நிரம்பியிருந்த்து (26:38) என்று காண்பீர்கள்.. பலர் மரிக்கும் தருவாயில் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், இயேசுவோ, தேவனுடைய பாத்திரத்தில் அருந்த வேண்டியதாய் இருந்த்தால் வியாகூலப் பட்டார் (26:39) – பாவத்தை எதிர்த்துப் போராட்டுவது அது.. இயேசு தனது உயிரை இழக்கப் போவதில்லை. ஆனால், நமது சார்ப்பாக பாவ மன்னிப்பைப் பெரும் பொருட்டு, எல்லா தண்டனைகளின் வேதனைகளையும் ஏற்றுக் கொண்டார். இது நிச்சயமாக தாங்க முடியாத வியாகூலத்தைத் தந்திருக்கும்.
ஜெபிக்கும்போது நாமும் இயேசவைப் போல் விசுவாசத்தோடு ஜெபிப்போமாக – நமது தேவைகளை பிதாவின் சித்த்த்தின் படி நிறைவேறும் படியாக ஒப்புக் கொடுத்து விடுவோம். அதே வேளையில், பிதாவுக்குக் கீழ்ப் படிந்து, திருக்குமாரன் இயேசு சிலுவையில் அறையப்படுவதற்குப் ஒப்புக் கொடுத்த தியாகத்தை மனதில் பதித்துக் கொள்வோம்.
தியானிக்கும் தருணம்
எந்த அளவுக்கு உன்னுடைய விருப்பத்தை தேவனுடைய சித்த்த்திற்கு ஒப்புக் கொடுக்கத் தயாராய் இருக்கிறாய்? கர்த்தரின் சித்தம் நமது ஜீவியத்தில் நிறைவேற வழிவிடும் அளவுக்கு அவரை விசுவாசிக்கிறாயா?
ஜெபங்கள்
இயேசுவின் சிலுவை தியாக முன்னுதாரணத்திற்காக ஸ்தோத்தரிக்கிறோம், கர்த்தாவே. எங்கள் பாவத்தின் நிமித்தம், அவர் உமது சித்த்த்தின�� படி தம்மை ஜீவ பலியாக ஒப்புவித்தார். நாங்களும் அவ்வண்ணமே எங்கள் சிலுவையைச் சுமந்து உமது பாதையில் ஜீவிக்க வழிநடத்தும். ஆமென்.
தனி தியானம்: பரிசீலிக்க நேரத்தை ஒதுக்குங்கள்
உன் தனி ஜெபத்தைப் பற்றி கர்த்தர் உன் உள்ளத்தில் உணர்த்தியது என்ன?
உன் ஜெப ஜீவியத்தை மேம்படுத்த எத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைக் கடைபிடிக்க முடியும்?
உன் சொந்த சபையில் ஒரு ஜெப வீரனாகத் திகழ நீ என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளாய்?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)