இன்று நாம் வாழும் இவ்வுலகில் நம்மைச் சுற்றிலும் குற்றச் செயல்கள், அநீதி, இன, மத கலவரம் மற்றும் சண்டை ச்ச்சரவுகள் அதிகரித்து வருவதை காண்கிறோம். நேர்மை வீழ்ச்சியுற்று, தீமை வெற்றி பெறுவதைப் போன்று நாம் காணும் போது, நீதிக்கு இடமில்யோ என்று நாம் திகைத்துப் போகிறோம். சிலர் நம்பிக்கையின்றியும் போய் விடுகிறார்கள். ஆனால், இன்றைய வேதபாடம் கர்த்தர் தம் மக்களின் நீதிக்காக கட்டாயமாக உதவிகரம் நீட்டுவார் என்பதைத் தெளிவாக விளக்குகின்றது.
இந்த உவமை, நியாயாதிபதி ஒரு விதவையின் இடைவிடாத வேண்டுகோளுக்குச் செவிசாய்ப்பதை விளக்குகின்றது. ஆனால் கர்த்தர் தமது பிள்ளைகளின் சத்தத்திற்கு நிச்சயமாக செவிகொடுப்பார் அல்லவா? இந்த உவமையின் மூலமாக நாம் அறிவது என்னவென்றால் நேர்மையான நமது விண்ணப்பத்தைக் கர்த்தர் கேட்டு, தமது ஜனங்களைத் தப்புவிக்கவும் செய்வார். இந்த உவமை நமக்கு ஓர் ஆறுதலையும் தருகிறது. விசுவாசத்திலும் ஜெபத்திலும் தரித்திருக்கும் நாம் இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக அழைக்கப்பட்டிருக்கிறோம்.
எனவே, தற்கால உபத்திரவங்கள் நம்மை சஞ்சலப்படுத்தக் கூடாது. ஜெப ஊழியங்கள் கட்டாயமாக நடைபெற வேண்டும். துன்பமான சூழ்நிலை இருந்த போதிலும் கர்த்தர் தமது நீதியின்படி தமது ஜனங்களின் சத்தத்திற்குப் பதிலளித்து நியாயம் செய்வார். ஆனால் அது கர்த��தரின் நேரத்திலும் கர்த்தரின் வழியிலும் நடைபெறும், மனித ஞானத்தினாலாவது மனித யோசனையிலாவது அல்ல.
தியானிக்கும் தருணம்
கர்த்தர் தாமதிக்காமல், அவருடைய காலத்தில் நியாயம் செய்வார் என்று நம்புகிறீர்களா?
ஜெபங்கள்
சர்வ வல்லமையுள்ள கடவுளே, உம்மில் நான் நம்பிக்கை வைக்க எனக்குப் போதித்தருளும். நியாயத்திற்கு உமது ஜனங்களின் விண்ணப்பத்தைக் கேட்க நீர் எப்பொழுது ஆயத்தமாக இருக்கிறீர் என்பதை உணரச் செய்யும். ஆமென்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)