அந்த சீஷனின் கேள்விக்கு இயேசுவின் பதில் எதுவாக இருக்கும் என்று எதிர்பாப்ப்போம் அல்லவா? நாம் அமர்ந்திருக்க வேண்டுமா? முழங்கால் படியிடவா? 30 நிமிடங்கள் ஜெபம் செய்வதா? சில ஆராதனை ஒழுங்கு முறைமைகளைக் கடைபிடிப்பதா? இயேசுவின் மறுமொழி மிக ஆழமானது.
அவரது முதல் பதில் ஜெபத்திற்குக் கொடுக்கப்படும் விசேஷத் தன்மையை நமக்கு வெளிப்படுத்துகிறது. “பிதாவே” என்று அழைக்கும் அந்த ஜெபம் சர்வ வல்லமை பொருந்திய தேவன் நமக்கு அன்பைக் காட்டும் தந்தையாக நினைவு படுத்துகின்றது. அவர் நமது தினசரி வாழ���க்கையில் பங்கு பெறுவதுடன் அவரது பிள்ளைகளாகிய நம்முடன் அன்பான உறவு கொள்ளவும் தேடி வருகிறார்.
அவரது பிள்ளைகள் எப்படி ஜெபிக்க வேண்டும்? முதலாவது நம் உள்ளத்தில் கர்த்தருக்கு இடம் கொடுத்து, வாழ்க்கையில் அவரது நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவதாகும். அவர் மக்களின் இருதயத்தைத் தன் பக்கமாகத் திருப்பி, அவர் தூய கடவுள் என்று அறிமுகப்படுத்துவார். இது அவரது மகிமை பொருந்திய இராஜ்யம் வரும் என்கிற வாக்குத் தத்ததை நமக்கு நிறைவேற்ற ஏதுவாக இருக்கும். இது தான் இந்த உலகமும் நாமும் இறுதி நாட்களில் அவரது மகிமையைக் காணும் காலமாகும்.
எனவே, நாம் அவரிடம் நமது தேவைகளைக் கேட்போம். நமது தினசரி தேவைகளை அவரிடத்தில் கூறுவோம். சோதனை காலங்களில் பாவத்திற்கு உட்படாமல் நம்மைப் பாதுகாக்க நாம் பிறரை மன்னிக்கக் கூடிய குணங்களைப் பெறவும் நாம் ஜெபிப்போம்.
மேலும் பரலோகக் கதவை விடாமல் துணிவுடன் தேடவும், தட்டவும் நாம் கேட்போமாக. பாவிகளாகிய நாம் நமது பிள்ளைகளுக்கு நல்லதைக் கொடுக்கும் போது பரம தந்தையான அவர் நமக்குப் “பரிசுத்த ஆவியைக்” கொடுப்பது நிச்சயம் என்று இயேசு கிறிஸ்து உறுதியளிக்கிறார். பரிசுத்த ஆவியாகிய இநுத வரம் கர்த்தரின் இராஜ்யத்தில் அவரோடு நாம் எப்பொழுதும் வாழும் அந்த நம்பிக்கைக்காக ஜெபிக்க உதவுகிறது.
தியானிக்கும் தருணம்
இயேசு கிறிஸ்து இந்த ஜெபத்தைப் போதிக்கும் போது, நாம் வீண் வார்த்தைகளைப் பேசமாமல். நமது. வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதற்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. நீங்கள் எதனைக் கடைபிடிக���கப் போகிறீர்கள்?
ஜெபங்கள்
எங்கள் பிரியமான பரலோகத் தந்தையே, நாங்கள் எவ்வாறு ஜெபத்தில் பங்கு பெற வேண்டும் என்றும், ஒருவருக்கொருவர் உற்சாகப்படத்தி ஜெபிக்க உதவி செய்யும். அறியாதவர்களிடம் உம்மைப் பற்றி அறிவித்து அவர்களுக்காக ஜெபித்து உமது இராஜ்யத்தின் நோக்கத்தை நிறைவேற்ற எங்களுக்கு உற்சாகமான ஆவியைத் தாரும்.. அநேகர் உம்மை மகிமைப்படுத்த ஜெபிக்கிறோம். எங்களது தினசரி தேவைகளுக்காகவும், மன்னிப்பிற்காகவும் உம்மையே நாங்கள் நன்றியுடன் சார்ந்திருக்க்க் கிருபை செய்யும். இந்த மன்னிக்கும் தன்மையை நாங்கள் உம்மிடம் பெற்றுக் கொண்டது போல், எங்களின் பகைவர்களையும் நாங்கள் மன்னிக்கும் பண்பை எங்களுக்கத் தாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)