நம் மனதிலுள்ளவற்றை கர்த்தர் ஒருவரே அறிவார் என்றார் ஒரு சகோதரி. நான் சொன்னேன், அதுவும் உண்மை தான், பிரச்சினை என்னன்னா, இயேசப்பாவுக்கு மனசுல எதையும் வெச்சுக்க தெரியாதுங்க, என்னைப் போன்ற ஊழியர்களிடம் சொல்லிடுவார்.. ஏன்னா அவர் ரொம்ப ரொம்ப நல்லவருங்க என்றேன், இது எப்படியிருக்கு ?!
எனக்கு ரொம்ப இளகின மனசுங்க.. சின்ன வயசுல ஸ்கூலுக்கு கட் அடிச்சிட்டு சினிமாவுக்கு போயிட்டு அழுதுகிட்டே வெளியே வருவேன்... ஆமா, சினிமா எந்த சோகமான சீன் வந்தாலும் கண் கலங்கிடும்.. இப்பவும் அப்படிதான்... சினிமா இல்லைன்னாலும் ஊழியத்தில்.. சப்ஜெக்ட் தான் மாறியிருக்கு, மனம் மாறல.
இதை சொன்னதும் ஆமாமா... ரஜினி கூட இயேசுவைப் பற்றி ஏதோ நல்லதா சொன்னதாக வாட்சாப்ல வந்தது என்றார்கள்.. நான் சொன்னேன், ஆமாங்க.. ஆத்தா கோயில்ல கட்டிய அதே ஸ்பீக்கர்தான் மாதா கோயில்லயும் கட்டுவாங்க.. ஸ்பீக்கர் அதே தான், ஆனால் சரக்கு மட்டும் வேற.. இப்படிதான் சில ஆட்கள் எல்லா பக்கமும் போய் எதையாவது பேசிட்டு வருவாங்க.. அதற்கு ரஜினியும் விதிவிலக்கல்ல என்றேன். அதினால் தானோ என்னவே நம்ம செய்தியாளர்களையும் நாம் ஆங்கிலத்தில் ஸ்பீக்கர் என்றுதான் குறிப்பிடுகிறோம்.
சில பாடல்கள் உடனே நம் மனதில் பச்சக்கென்று ஒட்டிக் கொள்ளும் இரகசியமென்னவோ, வேறொன்றுமில்லை... சினிமா பாடல்களின் இசைக்கு பழகியிருக்கும் நம் மனதில் அதேபோன்ற இசைநயம் கிறிஸ்தவப் பாடல்களின் வடிவில் வந்தால் பிடித்து போகிறது. அதற்காகவே எல்லா முன்னணி கிறிஸ்தவ ஊழியர்களும் சினிமா கலைஞர்களை வைத்து பாடல்களை தயாரிக்கிறார்கள். அதன் நோக்கம் அவர்களுக்கு பிரபலமாகவேண்டும் இதிலிருந்து நாம் அறிவது என்னவெனில் அவர்கள் ஆண்டவருக்காக எதையும் செய்யாமல் தங்களுக்காகவே செய்கிறார்கள். ஆண்டவரைப் பற்றி மனிதர்களிடம் பேசுகிறவர்களும் பாடுகிறவர்களும் தற்புகழையே நாடுகிறார்கள் ஆண்டவரைப் பற்றி ஆண்டவரிடம் பாடுகிறவர்களை அவர் தன்னிடமே வைத்துக் கொள்ளுகிறார். நான் பாடும் பாடல்களை பல சமயம் ஆண்டவர் மட்டுமே கேட்கிறார். அதுதான் மெய்யான ஆராதனையாகும்.
மிகச் சிறந்த மனிதர்கள் இன்னும் பிறக்கவில்லை, மிகச் சிறந்த கதைகள் இன்னும் படமாகவில்லை, மிகச் சிறந்த நாவல்கள் இன்னும் அச்சேறவில்லை.
**குடைக்குள் மழை பெய்யாது. அதாவது குடைக்கு வெளியே பெய்யும் மழையைப் போன்றது நாம் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகள் எனில் ஆண்டவர் நமக்கு மறைவிடமாய் இருக்கிறார். அவருக்குள் மறைந்திருக்க வேண்டிய நாம் குடைக்கு வெளியே மழையைப் பற்றி அவரிடம் புகார் செய்யக்கூடாது. சிலருக்கு எச்சரிப்பாகவே நம்மை ஆண்டவர் வைத்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல. அதன்பொருட்டே ஆண்டவர் பின்வருமாறு சொல்லுகிறார்,
யோவான் 15:22 நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்துப் போக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை.