Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காதலுக்கு மரியாதை..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: காதலுக்கு மரியாதை..!
Permalink  
 


rajkumar_s@Tcs On 15-02-2011 16:41:50:

//
காதலர் தினத்தை முன்னாள் காதலர்களான‌ பெற்றோர் ஆதரிப்பார்களா?//

வியாபார உத்தி இது, காதலர் தினம் வருடத்தில் ஒரு நாள் தான் வருமா என்ன?


// இழிசெயல்களில் ஈடுபடவே மறைவிடத்தையும் ஒளிப்பிடத்தையும் நோக்கி ஓடுகிறார்கள்..//

அதிக பீச்சுக்கு காற்று வாங்க போகவேண்டாம் சகோதரரே, அங்கே ஒளிப்பிடத்தில் இருப்பவர்கள் கா‍_ ஜோடிகள். அவர்களைப் பார்த்து ஏமாந்து விடவேண்டாம்

// சிவசேனா தொண்டர்கள்,"அன்னையர் தினத்தை ஏற்கிறோம்,நண்பர்கள் தினத்தையும் ஏற்கிறோம்,ஆனால் காதலர் தினத்தை எதிர்க்கிறோம்" என்கிறார்கள். //

எல்லாமே வியாபாரத்துக்கு தானே கொண்டாடுகிறார்கள்?

// காதலில் ஈடுபடும் இருவரில் அதாவது ஒரு ஆண் ஒரு பெண் இருவரில் ஒருவரிடம் நிச்சயமாக தீயநோக்கம் இருக்கிறது; //

முக்கியமாக ஆண்களிடமென்று சொல்லலாம், நம்பி ஏமாறும் பெண்கள் அதிகம்.

// உலகம் பரிமாறும் எந்தவொரு விருந்தின் ஆரம்பமும் இனிப்பாகத் தோன்றி கசப்புடன் முடியும்; இதற்குக் காதல் திருமணங்களும் விதிவிலக்கல்ல; சில விதிவிலக்குகள் ஒருபோதும் விதியாகி விடாது;.//

காதலிக்கும் போது எதிர்பாலரின் நிறைகளை மட்டுமே பார்த்து ஏதோ வானத்திலிருந்து வந்து விழுந்தவர்கள் போல மெச்சுவார்கள், திருமணத்தில் இயல்பான வாழ்க்கைக்கு வந்தவுடன் இவனு(ளு)ம் சராசரி மனிதன் தான் என்று தெரிந்த உடன் குறைகூறும் படலம் ஆரம்பிக்கிறது

// சதி நுழையுமானால் நிதியிழந்து மதியிழந்து தெருவில் நிற்கும் நிலை இருவரில் ஒருவருக்கு நிச்சயம் ஏற்படும்.//

முக்கியமானத விட்டுவிட்டீங்களே உயிரையும் சிலர் கற்பையும்.....

Chillsam@Tcs:

இயன்றவரை நடுநிலையுடன் சிந்தித்து எழுதியிருக்கிறேன்;தயவுசெய்து யாரும் பாராட்டவேண்டாமென்று ஆசையுடன் கேட்டுக்கொள்ளுகிறேன்..!

By- "முன்னாள் காதலன்,இந்நாள் தத்துவஞானி..!"



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

images?q=tbn:ANd9GcQs6ZOpCBRoaKT2IW-wTpUF7t4881N1PRdmhslX12mzjwF8RCxdimages?q=tbn:ANd9GcS3K5r2a4ad8_y-k_dpHsOX_m_vZMyL6pLIop0-rlLhGhF-6dZyoA


காதலுக்கும் காதலர்களுக்கும் கடற்கரைக்கும் என்ன சம்பந்தம்..?

images?q=tbn:ANd9GcR7MAjBwwiqUP1dmwYaC3M3NMC-8hxjNLF_m-PfCsssKvORSHSx

காதலுக்கும் முன்பும் பின்பும் சிந்தப்படுவது கண்ணீர் தானே..?
காதலின் பசி கண்ணீரின் ருசியில் தெரியும் தானே,அந்த கண்ணீருக்கும் கடல் நீருக்கும் சுவையில் தொடர்பு உண்டு தானே..?

இவ்வுலகில் வாழ்ந்து மறைந்த எண்ணற்றோரின் கல்லறைகளிலிருந்து காதலர்களின் கல்லறைகளையும் காதலுக்குக் காதலர்கள் கட்டிய கல்லறைகளையும் காதலருக்கு கட்டப்பட்ட கல்லறைகளையும் வேறுபிரித்தால் தெரியும் காதலின் மேன்மை..!




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் கதைக்க வந்திருந்த காதலர்களை விரட்டியடித்த சிவசேனா தொண்டர்கள்,"அன்னையர் தினத்தை ஏற்கிறோம்,நண்பர்கள் தினத்தையும் ஏற்கிறோம்,ஆனால் காதலர் தினத்தை எதிர்க்கிறோம்" என்கிறார்கள்.

images?q=tbn:ANd9GcSqoV96SVZwV0mJO6O20OysFLSBU3briQxPqJJ1TCMEoAqbjiI32Qimages?q=tbn:ANd9GcRPwwS5kaEMJOx73nLmagQfZrrc07TEooSyI-Kivc5ks187PuXS

காதலர் தினத்தை முன்னாள் காதலர்களான‌ பெற்றோர் ஆதரிப்பார்களா? அந்தரங்கத்தில் செய்யப்படும் அனைத்தும் பாவமே; மேலும் தீய நோக்கம் பாவம் என்று வேதம் கூறுகிறது; காதலில் ஈடுபடும் இருவரில் அதாவது ஒரு ஆண் ஒரு பெண் இருவரில் ஒருவரிடம் நிச்சயமாக தீயநோக்கம் இருக்கிறது; அவர்கள் தங்கள் சரீரத்தை அவமானப்படுத்தும் இழிசெயல்களில் ஈடுபடவே மறைவிடத்தையும் ஒளிப்பிடத்தையும் நோக்கி ஓடுகிறார்கள்; அதன் விளைவு முழுவதையும் பெண்ணே சுமந்தாக வேண்டும்; உலகம் பரிமாறும் எந்தவொரு விருந்தின் ஆரம்பமும் இனிப்பாகத் தோன்றி கசப்புடன் முடியும்; இதற்குக் காதல் திருமணங்களும் விதிவிலக்கல்ல; சில விதிவிலக்குகள் ஒருபோதும் விதியாகி விடாது; விதியில் சதி நுழையுமானால் நிதியிழந்து மதியிழந்து தெருவில் நிற்கும் நிலை இருவரில் ஒருவருக்கு நிச்சயம் ஏற்படும்.

images?q=tbn:ANd9GcTGIgPGVwecfP4P1zviNH_GtPtnnIHSh-EsBJeUwhBJStMmZCQddQimages?q=tbn:ANd9GcTXJcE2yTLFujEPO-2wLAYhmoZkObYECfEPJj21enyWh0cK83plug

காதலுக்கு மரியாதை செய்யவும் காதல் கோட்டையைக் கட்டவும் காதலில் தோற்றவர்கள் தேவை..!


images?q=tbn:ANd9GcTEHh71QgUDgzsVPFG6nh65gRAi6zDYdXFIASHLZ3fOGS5NVUB7hAimages?q=tbn:ANd9GcS_xi-zi56i8oZHjhF1qbKorSduI4nIxPlgvCiL8pTiOIB3CIls6Q

பின்குறிப்பு: இது என் சொந்த அனுபவமல்ல‌..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard