Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மூத்த அப்போஸ்தலர் செல்லத்துரை ஐயா அவர்கள் மகிமைக்குள் பிரவேசித்தார்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: மூத்த அப்போஸ்தலர் செல்லத்துரை ஐயா அவர்கள் மகிமைக்குள் பிரவேசித்தார்..!
Permalink  
 


நான் சிறுவயதிலிருந்தே இயற்கையில் ஒரு அதிசயத்தை கவனித்து வருகிறேன்; முக்கிய தலைவர்களின் மரணத்தின் போது மழை பெய்யும்; இதற்கு பல உதாரணங்களைக் கூறமுடியும்; இறந்த தலைவர்களின் மீது அன்பு கொண்டோர் சொல்வர்,"வானமும் அழுகிறதே" என்பதாக‌.

அதற்கேற்ப நம்முடைய மூத்த அப்போஸ்தலர் பாஸ்டர் செல்லத்துரை ஐயா அவர்களின் மரணத்தின் போதும் இந்த அடையாளம் நிறைவேறியது; மற்றொரு அதிசயம் என்னவென்றால், அன்னாரது நல்லடக்க ஆராதனை நடைபெற்ற பிற்பகல் 02:30 மணி முதல் மாலை சுமார் 5 மணி வரை வானம் அமைதலாக இருந்தது; அவரது சரீரத்தை அடக்கம் செய்துவிட்டு வீடு திரும்பியிருப்போம், அதற்குப் பிறகு மீண்டும் மழை துவங்கியது; சகோதரர் டிஜிஎஸ் அவர்களின் மரணத்திலும் இதே அடையாளங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு விதையை விதைக்கும் முன்பும் மழை வந்து பூமியை நனைக்கும்; விதைத்தபிறகும் மழை பெய்யும்; அதன் பலனாகவே அந்த விதையானது வேர்கொண்டு எழும்பும்; அதுபோலவே நாம் சொல்லுவோம், "நாங்கள் சரீரத்தை புதைக்கவில்லை,விதைக்கிறோம் " என்று; அதற்கேற்ப பெய்து கொண்டிருந்த மழை அதிசயமாக நின்றது, அன்னாரை அடக்கம் செய்து திரும்பியதும் மீண்டும் மழை தொடர்ந்தது.

இதைக் குறித்த தங்கள் தனிப்பட்ட அனுபவங்களை தள நண்பர்கள் பகிர்ந்துகொள்ளவும்; இதெல்லாம் மூடநம்பிக்கை என்றோ, ஏக சம்பவம் (coincidence) என்றோ புறக்கணிப்போர் அமர்ந்திருக்கவும்; நாமெல்லாருமே நம்முடைய சூழ்நிலையிலிருந்தே தேவ சித்தத்தையும் நடந்துதலையும் அறிகிறோம் என்ற குழந்தையுள்ளம் கொண்டோர் மட்டும் இதில் பங்கேற்று தத்தமது கருத்தைப் பகிரலாம்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

மூத்த அப்போஸ்தலர் பாஸ்டர் செல்லத்துரை ஐயா அவர்களின் நல்லடக்க ஆராதனையில் இந்திய சுவிசேஷ திருச்சபையின் பிரதிநிதிகள் தேவபிதா எந்தன் மேய்ப்பனல்லோ என்ற அருமையான பாடலைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

மூத்த அப்போஸ்தலர் பாஸ்டர் செல்லத்துரை அவர்களின் நல்லடக்க ஆராதனையின் சில காட்சிகள்...

071220103163.jpg

அப்போஸ்தல ஐக்கிய சபையின் முகப்புத் தோற்றம்


071220103150.jpg

ஆராதனையில் பங்கேற்றோர்


071220103151.jpg

ஆராதனையில் பங்கேற்ற போதகர்கள் வரிசை


071220103146.jpg

071220103147.jpg

071220103148.jpg

071220103158.jpg

பெங்களூரிலிருந்து விசேஷமாக தருவிக்கப்பட்ட சவப்பெட்டி

071220103154.jpg

071220103156.jpg

பெங்களூரிலிருந்து விசேஷமாக தருவிக்கப்பட்ட இறுதி அலங்கார சொகுசு ஊர்தி


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

சகோதரி எஸ்தர் இரத்தினராஜ் அவர்கள் ஒரு இந்து பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்;கிறித்துவின் மீது கொண்ட விசுவாசத்தின் காரணமாக வீட்டாரால் துரத்தப்பட்டு இன்று வரையிலும் சபையினரால் ஆதரிக்கப்பட்டு வருபவர்;அவர் தனது ஆரம்ப கால விசுவாசத்துக்கு ஊட்டமாக இருந்த அப்போஸ்தலர் P.S.செல்லத்துரை ஐயா அவர்களது இறுதி அடக்க ஆராதனையின் போது பகிர்ந்துகொண்ட சாட்சி.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Senior Chennai Pentecost Leader Rev, P.S.Chelladurai F/O Rev. Sam P. Ch expired at 7.15 p.m. Sunday (5/12). He is 88 yrs.His Funeral service tomorrow 2.30 p.m.at AFT church, Purasavakkam. Burial at 4.30 p.m. at Kilpauk. www.revsam.org
Pls Fwd to all...Thank You..!

PSC4.png

Pastor P. S. Chelladurai - The founder of AFT Church and father of Rev. Sam P. Chelladurai, passed into glory on 05-12-2010 at 07:15pm in Chennai. The funeral service will be held at 02:30pm in AFT Church on Tuesday (07-12-2010). Burial will be in Kilpauk Cemetery at 04:30pm. The service will be webcast LIVE.


பெந்தெகொஸ்தே இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் மூத்த அப்போஸ்தலருமான செல்லத்துரை ஐயா அவர்கள் மகிமைக்குள் பிரவேசித்தார்; நேற்று மாலை 07:15 க்கு அவருடைய உயிர் பிரிந்தது; நாளை மாலை 04:30 மணிக்கு அவருடைய நல்லடக்கம் சென்னையில் வைத்து நடைபெறுவதாக அறிகிறோம்.

ஐயா அவர்கள் தனது 88 வது வயது வரையிலும் நல்ல நினைவாற்றலுடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது;அவர்கள் தனது விசுவாசத்தைத் தூண்டும் போதனைகளால் அநேகரை எழுப்பியதுடன் தனது பிள்ளைகளின் பிள்ளைகளையும் அவர்தம் சந்ததியையும் கண்டு ஒரு முழுமையான வெற்றிகரமான கிறித்தவ ஜீவியத்தை நிறைவேற்றினார்.

அவர் தனது துணைவியாருடன் கொண்டிருந்த உத்தமமும் சமாதானமும் நிறைந்த‌ இல்வாழ்க்கை மிகவும் போற்றுதற்குரியது; இளந்தலைமுறையினர் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியானது;பிரபல போதகர் சாம்.P.செல்லத்துரை அவர்கள் அன்னாரது மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்த்தருடைய வருகையில் நாம் அவரை சந்திப்போம் என்ற விசுவாசத்துடன் நம்முடைய சபையின் தலைவருக்கு நமது இறுதி மரியாதையினை செலுத்துகிறோம்;அவர்மூலமாக நாம் கற்றுக்கொண்ட நல்ல விசுவாச போதனைகளுக்காக ஆண்டவருக்கு துதி செலுத்துகிறோம்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard