Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழக இளைஞர் உதய குமார் கைவண்ணத்தில் இந்திய ரூபாய்க் குறியீடு!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
தமிழக இளைஞர் உதய குமார் கைவண்ணத்தில் இந்திய ரூபாய்க் குறியீடு!
Permalink  
 


இந்திய ரூபாய்க்கு  சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய‌ ஒரு குறியீடு கிடைத்திருப்பதும் அதனை வடிவமைத்தவர் தமிழர் என்பதும் நமக்கெல்லாம் மிகவும் பெருமைக்குரிய செய்தியாகும்;

இந்தசெய்தியும் விவரமும் அறியாதோர் அநேகர் இருப்பதால் நாமும் நம் பங்குக்கு அதைக் குறித்த செய்தியைப் பதித்து வைக்கிறோம்;இது நம்முடைய தளத்தின் வாசகர்களுடைய வசதிக்காகவே.


தமிழக இளைஞர் உதய குமார் கைவண்ணத்தில் இந்திய ரூபாய்க் குறியீடு!

I_755.jpgஜூலை 15, 2010 :௦ தமிழக இளைஞர் உதய குமார் கைவணத்தில் உருவாகியிருக்கிறது, இந்திய ரூபாய்க் குறியீடு! இந்திய ரூபாய்க்கான புதிய அடையாளக் குறியீட்டை, மத்திய அமைச்சரவை இன்று இறுதி செய்து ஒப்புதல் அளித்தது.

நாட்டின் பாரம்பரியம், கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இந்திய ரூபாய்க்கு குறியீடு வடிவமைக்க போட்டி அறிவிக்கப்பட்டது. குறியீட்டை வரைந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடம் இருந்து அரசுக்கு விண்ணப்பங்கள் வந்தன.

அதில் இருந்து தேர்ந்தெடுத்து, இறுதி செய்யப்பட்டுள்ள இந்திய ரூபாய்க் குறியீட்டை வடிவமைத்தவர், தமிழகத்தைச் சேர்ந்த டி.உதய குமார் (வயது 32). அரசு ஏற்கெனவே அறிவித்தபடி, அவருக்கு ரூ.2.5 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.

( இந்திய ரூபாய்க் குறியீடு குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள... இந்திய ரூபாய்க்கு புதிய அடையாளக் குறியீடு : மத்திய அமைச்சரவை ஒப்புதல் )

சென்னையில் பிறந்து வளர்ந்த உதய குமார், அண்ணாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை ஆர்க்கிடெக் படித்தவர். பின்னர், மும்பை ஐ.ஐ.டி.யில் டிஸைனிங்கில் பி.எச்டி பயில்பவர். தமிழ் எழுத்துருக்கள் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார்.

I_756.jpg"நான் வடிவமைத்த குறியீடு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.

நீண்ட நாட்கள் சிந்தித்து, இந்த குறியீட்டை உருவாக்கினேன். தேவனகிரி எழுத்துருவில் இருந்து 'ரா' (Ra)-வை எடுத்து, அதில் நமது தேசியக் கொடியைக் கலந்தேன். குறியீட்டின் மேல்பகுதியில் இந்தியத் தன்மை மிகுந்திருக்கும். பிறகு, ரோமன் எழுத்தான ஆர் (R)-ஐயும் இணைத்தேன், அதன்மூலம் சர்வதேசத் தன்மை கிடைக்கும் என்பதற்காக," என்று கூறியிருக்கிறார் உதய குமார்.

இந்திய ரூபாய்க்கு குறியீடு தந்துள்ள உதய் குமாருக்கு தனது விருப்பப்படியே ஆசிரியர் பணி கிடைத்துள்ளது. அவருக்கு, கவுகாத்தி ஐ.ஐ.டி.யில் உதவிப் பேராசிரியராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

உதய குமார் அனுப்பிய குறியீடு, தெரிவுப் பட்டியலில் முதல் 5 இடத்தைப் பிடித்தவுடன், டெல்லியில் இருந்து அவருக்கு அழைப்பு வந்தது. அதையடுத்து, நேரில் தான் வடிமைத்த குறியீடு தொடர்பான விளக்கத்தை அளித்திருக்கிறார். தனது குறியீட்டில் இந்திய பாரம்பரியத்தையும், சர்வதேசத் தன்மையையும் இரண்டறக் கலந்ததே உதய குமாருக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.

http://www.vikatan.com/news/news.asp?artid=4073

இது ஒரு பத்திரிகையின் செய்தி,
மற்றொரு பத்திரிகையின் செய்தி பின்வருமாறு:



17udayakumar.jpg


புது தில்லி,​​ ஜூலை 16:​ இந்திய ரூபாய் குறியீடு வடிவமைத்ததன் மூலம் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார் டி.​ உதயகுமார்.​ ​சர்வதேச
அளவில் இந்திய நாணயத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில் குறியீடு அமைய
வேண்டும் என்றும் உரிய டிசைனை அனுப்பலாம் என மத்திய அரசு
அறிவித்திருந்தது.​ சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வடிவமைப்பை
அனுப்பியிருந்தனர்.​ இதில் 5 வடிவங்களை ரிசர்வ் வங்கி துணை கவர்னர் உஷா
தோரட் தலைமையிலான குழு தேர்வு செய்தது.​ இதில் உதயகுமார் அனுப்பிய
வடிவமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.​ இதற்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை
ஒப்புதல் அளித்தது.​ ​திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உதயகுமார்
இப்போது குவாஹாட்டியில் உள்ள ஐஐடி-யில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி
வருகிறார்.​ வடிவமைப்பு சார்ந்த படிப்பு முதல் முறையாக இந்த ஐஐடி-யில்தான்
தொடங்கப்பட்டது. ​ அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியலில் வடிவமைப்பு பிரிவில் பட்டம் பெற்ற ​ மும்பை ஐஐடி-யின் முன்னாள் மாணவராவார்.​ ​ஓராண்டுக்கு
முன்பு இந்த வடிவமைப்பை உருவாக்கி அளித்ததாகவும்,​​ இப்போது தேர்வு
செய்யப்பட்டுள்ளதாகவும் மகிழ்ச்சி ததும்பக் குறிப்பிடுகிறார் உதயகுமார்.​
இந்த வடிவமைப்பின் மூலம் இவருக்கு பெரும் புகழும் ரூ.​ 2.5 லட்சம் ரொக்கப்
பரிசும் கிடைத்துள்ளது.இவர் தமிழ் எழுத்து வடிவ வளர்ச்சி குறித்த ஆராய்ச்சி ​(பிஹெச்டி)​ கட்டுரையையும் தாக்கல் செய்துள்ளார்.​ இந்தக்
கட்டுரையும் இவருக்குப் புகழைத் தேடித் தரும் என உறுதியாக நம்புகிறார்
இவரது தந்தை தர்மலிங்கம்.​ இவர் ரிஷிவந்தியம் தொகுதியின் திமுக முன்னாள்
சட்டப் பேரவை உறுப்பினராவார்.சர்வதேச அளவில் இனி இந்திய ரூபாய்
என்றாலே எல்லோருக்கும் நினைவில் வரக்கூடிய இந்த வடிவமைப்பை ஒரு தமிழர்
உருவாக்கியிருப்பது தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்ப்பதாகும்.​
குறியீடு வடிவமைப்பில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்ட மற்ற
நான்கு பேருக்கும் தலா ரூ.​ 25 ஆயிரம் ஆறுதல் பரிசு அளிக்கப்படும் என
மத்திய அரசு அறிவித்துள்ளது.குறியீடு பெற்றதன் மூலம் அமெரிக்காவின்
டாலர்,​​ பிரிட்டனின் பவுண்ட்,​​ ஜப்பானின் யென் மற்றும் ஐரோப்பாவின் யூரோ
கரன்சிகளுக்கு அடுத்தபடியாக இந்திய ரூபாயும் இடம்பெறும்.

http://usetamil.forumotion.com/-f5/----t6562.htm


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard