Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எண்களை வைத்து கதை 12 வயது சிறுவன் அசத்தல்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
எண்களை வைத்து கதை 12 வயது சிறுவன் அசத்தல்..!
Permalink  
 


எண்களை வைத்து கதை 12 வயது சிறுவன் அசத்தல்

Tamil news paper, Tamil daily news  paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political  news, business news, financial news, sports news, today news, India  news, world news, daily news updateபாட்னா : பத்து இலக்கம் கொண்ட தங்களுடைய செல்போன் நம்பரைக் கூட நினைவில் வைத்துக் கொள்ள முடியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். ஆனால், 500 இலக்க எண்களை கூட ஒரு முறை பார்த்த மாத்திரத்தில் அப்படியே திருப்பிச் சொல்கிறான் 12 வயது சிறுவன்.
பல ஆண்டுகளுக்கு முன்போ, அல்லது பின்போ வரும் ஒரு தேதியைக் குறிப்பிட்டு அதன் கிழமையைக் கேட்டால் உடனடியாக சொல்லி விடுகிறான் அந்த சிறுவன். 30 முதல் 35 ஆங்கில வார்த்தைகளை ஒரு முறை பார்த்து விட்டு அப்படியே சிறிதும் பிசகாமல் கடகடவென ஒப்பிக்கிறான்.

பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த தேபசிஸ் சதாபதி மற்றும் சுஜாதா மிஷ்ரா தம்பதியின் ஒரே ஒரு மகன் சாஸ்வத். பாட்னாவில் உள்ள லயோலா உயர்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். இவன், உலக நினைவாற்றல் சாம்பியன் பட்டத்தை பெறுவதே தனது லட்சியம் என்று கூறுகிறான். வேர்ல்டுமெமரி சாம்பியன்ஷிப் டாட் காம் சார்பில் ஆன்லைனில் நடத்தப்படும் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு முதலில் தகுதித் தேர்வு மற்றும் தேசிய அளவிலான தேர்வுகளில் முதலில் வெற்றி பெற வேண்டும். சாஸ்வத் அதற்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறான்.

இதுகுறித்து சாஸ்வத் கூறியதாவது: ‘‘இரண்டாம் வகுப்பு படிக்கும் போது, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் நினைவாற்றல் பயிற்சி வழங்கி வரும் வெங்கட் கசிபட்லா ஆப் மெமரி விஷன் நிறுவனம் டெல்லியில் பயிற்சி வழங்குவதாக அறிந்தேன். அதில் நான் பங்கேற்றபோது, நினைவாற்றலை வளர்த்துக் கொள்வது குறித்து சிறப்பான பயிற்சி வழங்கப்பட்டது. நான் நினைவாற்றலுக்கு அடித்தளமாக ரிஜிஸ்ட்ரேஷன், ரிடென்ஷன் மற்றும் ரீகால் ஆகிய 3 ஆர்களை நம்புகிறேன். எண்களை சுலபமாக நினைவில் வைத்துக் கொள்ள சிஒஎம்பிஎஸ் என்ற பார்முலாவை வைத்துள்ளேன்.

இதன்படி இரட்டை இலக்க எண்களை கலர்புல், மூவிங், பிக் மற்றும் ஸ்ட்ரேஜ் (சிஓஎம்பிஎஸ்) ஆக மாற்றி அதை கதையாக்கி கொள்வேன். இதன்மூலம் நினைவில் வைத்துக் கொள்வது எளிது.

152634577 8909876543226753917 என்ற நம்பரைக் கூட ஒரு கதையாக மாற்றிக் கொள்ளலாம். ஒரு நாற்காலியும் சிபியுவும் கடலில் குதித்த மவுசை கண்டுபிடிப்பதில் ஈடுபடுகின்றன. பின்னர் யானையாக வெளிவரும் அது சாலைகளில் செல்லும் கார்களை சாப்பிட்டு விடுகிறது. இதுதான் கதை. இவ்வாறு சாஸ்வத் கூறினான்

Courtesy:http://www.dinakaran.com/specialdetail.aspx?id=1030&id1=22


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard