ஒவ்வொரு வார இறுதியும் நமக்கு விசேஷம் அல்லவா ? அவ்வாரத்தின் பாடுகளுக்கெல்லாம் ஆறுதல் தேடி அடைக்கலமாய் ஆண்டவரின் அன்பு பிரசன்னம் நோக்கி ஓடிவர ஆயத்தமாகிறோம். ஆறாம் நாளில் படைக்கப்பட்ட மனிதன் செயலாற்றிட ஆண்டவர் ஆறு நாட்களை நியமித்தார். ஏழாவது நாளையோ தம்முடைய மக்கள் தம்மோடு செலவிட விரும்பினார்.
அதன் பொருட்டே நாம் வாரத்திற்கு ஒரு நாளை ஓய்வுநாளாக நியமித்து ஆசரித்து வருகிறோம். இது பழைய ஏற்பாட்டின் ஓய்வு நாளைக் குறித்த பிரமாணத்துக்குட்பட்டதல்ல. மாறாக புதிய உடன்படிக்கையின் மக்கள் தங்கள் செயல்களை சரிபார்த்துக் கொள்ளவும் தங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளவும் ஏற்படுத்தப்பட்ட சபை கூடிவருதல் எனும் உன்னத அமைப்பாகும்.
வாரம் முழுவதும் அவரவர் வேலையில் மூழ்கியிருக்கும் நாம் ஒருவரையொருவர் நேரில் சந்தித்து நலன் விசாரிக்கவும் புதிய ஊழிய முயற்சிகளைக் குறித்து திட்டமிடவும் நம் வாழ்வின் முக்கிய தீர்மானங்களை எடுக்க உதவும் தேவாலோசனைகளைப் பெற்றுக் கொள்ளவுமாக சபையில் கூடுகிறோம். அதற்கு முன்பதாக நம்மை நாம் ஆயத்தப்படுத்திக் கொள்வதற்காகவே ஓய்வுநாளுக்கு முந்தைய நாளை ஆயத்த நாள் என்று வேதம் சொல்லுகிறது.
அதன்படி சபை கூடிவரும் நாளுக்கு முந்தைய நாளான சனிக்கிழமையன்று நாம் சபையில் கூடுகிறோமோ இல்லையோ தூர இடங்களில் வசிக்கும் நாம் இங்கே நம் கையிலுள்ள அலைபேசியின் வழியே சந்தித்து தக்கதான ஆலோசனைகளையும் ஜெபங்களையும் ஏறெடுக்க இருக்கிறோம். அதற்காகவே இந் நிகழ்ச்சி துவங்கப்படுகிறது.
**இணைவீர்.. இணைப்பீர்.. இது நம்முடைய குடும்ப சானல்..!
⭕#Live: #காத்திரு.. #எதிர்பார்த்திரு |
#ஆகாய்_விஜயகுமார் & #நிர்மலா #தம்பதி |
#ஆயத்த_ஆராதனை
#cfc_media #compassion #family #channel
#compassion_family_channel
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)