பருவமெய்திய பதின்ம வயதுடைய பிள்ளைகள் இயல்பாய் வளரத் துடிக்கும் கொடியைப் போல் படர்ந்து செல்ல முட்டுக்கட்டையாய் தாய்மார் இருப்பதாக பல பிள்ளைகள் சோர்ந்து போவதுண்டு. சில கட்டுப்பாடுகள் அவர்களுக்கு அவமானமும் சங்கடமுமாய் இருப்பதுண்டு. ஆனால் அந்த பருவத்தைக் கடந்துவந்த தாய்மாருக்கு மட்டுமே பிள்ளைகளின் வேகம் அது விவேகமின்றி சென்றுவிட்டால் நேரும் விளைவுகள் தெரியும். எனவே பிள்ளைகள் தங்களை கசந்துகொண்டாலும் ஓயாது அரற்றிக் கொண்டே இருப்பது தாய்மாரின் சுபாவமாகியிருக்கும்.
ஒரு செயல் அது அவர்களை ஈடுசெய்ய இயலாத இழப்புக்கு நேராய் நடத்திவிடுமென்று அறியாமலே அதில் தீவிரமாய் சென்று வீழ்ந்துபடும் இளங் குமரிகளின் கண்ணீர் அது அந்தரங்கமாய் பெருகும் உச்சத்தில் சில பிள்ளைகளை தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்ளவும் நேருகிறது. இதையெல்லாம் ஆரம்பத்திலேயே தடுத்து முளையிலேயே கிள்ளியெறிவதே அறிவுடைமையாகும் என்ற வகையில் தேவபக்தியானது இளம் பிள்ளைகளுக்கு மாபெரும் கவசமாயிருப்பதை கிறிஸ்தவம் சொல்லிவருகிறது.
அதில் பழகுவதற்கே பரிசுத்த வேதாகமம் நம் கரங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜெபமெனும் வல்லாயுதமும் நம்மோடு உண்டு. அதனை வலியுறுத்தும் ஆலோசனைகளோடு கள நிலவரத்தை ஒட்டி தாங்கள் கேள்விப்பட்ட சம்பவங்களைப் பிணைத்து தன் மகள்களுக்கு ஆலோசனை கூறி அதன்வழியே சமுதாயத்தில் எங்கும் பரவியிருக்கும் மற்ற பிள்ளைகளுக்கும் உதவிசெய்ய அருமை தாயார் ஏஞ்சல் சந்தோஷ் அவர்கள் தனது மகள்கள் ஹெப்ஸி மற்றும் பியூலாவுடன் இணைகிறார்.
**இந்த புத்தம்புது நிகழ்ச்சியில் இணையும் பிள்ளைகள் தங்கள் தோழிகளையும் இணைத்து தங்கள் மனதில் எழும் ஐயங்களையும் பிரச்சினைகளையும் காமெண்ட்டில் எழுதி தகுந்த ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
💓#Live: #Teenager's #Care -3|
#சின்னஞ்சிட்டுக்குருவியே |
#வளரிளம்வாலிபப்பிள்ளைகளுக்குதாய்மாரின்ஆலோசனை
#Beulah #hepzi #angelsanthosh
#Compassionfamilychannel #cfcmedia
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)