தாம் உயிர்த்தெழுந்தபின், இயேசு கிறிஸ்து கலிலேயாவில் உள்ள ஒரு மலையில் தமது சீஷர்களைச் சந்தித்தார். (28 10, 16-17) இயேசு தமக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் அதிகாரத்தைக் கொண்டு, “நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்” என்ற பிரதான கட்டளையைக் கொடுத்தார். இந்தப் புதிய சீஷர்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டு, தேவனுடைய கட்டளைகள் அனைத்துககும் கீழ்ப்படிய வேண்டுமென்று போதிக்கப் பட வேண்டும்.
இந்தக் கட்டளை, சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொண்ட ஆவிக்கேற்ற பிரகாரம் காணாமற் போன மக்களை ரட்சிப்பதற்கு மட்டுமல்ல, இதற்கும் மேலாக இந்தப் பகுதியின் முக்கிய திறவுகோல் என்னவென்றால், இவர்களை இயேசு கிறிஸ்துவுக்கு சீஷர்களாக்க வேண்டும் எனபதே. இந்தக் குறிப்பை நாம் கவனியாமற் போனால், அது இந்தக் கட்டளையின் முழுமையான விளைவையும் நாம் இழந்து போவதாக இருக்கும்
கிறிஸ்துவுக்குள் புதிதான விசுவாசிகளைக் கொண்டு வருவதுடன் திருச்சபை நிறுத்தி விடக் கூடாது (இதையும் செய்ய வேண்டும்). பெயரளவில் மட்டுமல்லாமல், உண்மையாகவே தேவனுடைய வார்த்தையின் போதனைகளுக்குக் கீழ்ப்படிகிற சீஷர்களாக்குவதில் எந்தச் சிரமமும் பாராமல் நாம் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.
இந்தப் பகுதி முழுவதிலும் எதிரொலிக்கும் கருப்பொருள் முழுமையான கீழ்ப்படிதல் என்பதே. ஏனென்றால் உலகத்தின் பாவங்களுக்காக இயேசு சிலுவையில் மரிக்க வேண்டும் என்ற, தேவனுடைய சித்த்த்திற்கு இயேசு மரண பரியந்தம் கீழ்ப்படிந்தார். வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரத்தையும் தேவன் அவருக்குத் தந்தருளினார். கலிலேயாவில் குறிப்பிட்ட ஒரு மலைக்கு வரும்படி இயேசு கூறியதற்குக் கீழ்ப்படிந்து சென்றதினால், அவர்கள் திருச்சபையின் வளர்ச்சிக்கு ஆதாரமான மையமாக விளங்கும் இந்தப் பிரதான கட்டளையைப் பெற்றுக் கொண்டார்கள். தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் சீஷர்களாக்குவதே இந்தக் கட்டளை.
இந்த தபசு நாட்களின் தியானத்தில் நாம் இயேசு கிறிஸ்துவின் உண்மையும் கீழ்ப்படிதலுமுள்ள சீஷர்களாக்கும்படி கற்றுக் கொள்வதற்கு நாம் தேவனுக்கு முன்பாய் தாழ்மையுடன் முயற்சி செய்வோமாக. அதே வேதாகமத்தில் நாம் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் வெளியில் சென்று எல்லா ஜாதிகளையும் சீஷர்களாக்குவோமாக.
நாம் கீழ்ப்படிதலுடன் மற்றவர்களுக்கு சுவிசேஷத்தை எடுத்துச் செல்லும் போது இயேசு எப்போதும் நம்மோடு இருக்கிறார் என்ற உறுதி நமக்குள்ளது
தியானிக்கும் தருணம்
சீஷராக்குங்கள் என்ற பிரதான கட்டளைக்கு நாம் கீழ்ப்படிந்திருக்கிறேனா? இதைச் செய்வதற்கு எனக்குத் தடையாக இருப்பது என்ன?
ஜெபங்கள்
நான் இயேசுவின் உம்ணமையான சீஷன் ஆகும் படியும், அவருக்காக மற்றவர்கள் சீஷராக்கவும் நான் கற்றுக் கொள்ளும் படி என் வாழ்க்கையை முற்றிலுமாக உமக்கு ஒப்புக் கொடுக்க உதவி செய்தருளும். கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.
⭕#Lent_Day_24 |
#லெந்துகாலம் (எ) #தவக்காலம் |
Sis.#Vimala_John
#cfc_media
#Compassion
#family #channel
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)