#மல்கியா தீர்க்கதரிசியின் காலத்தில், இஸ்ரவேலர்கள் தம்மைச் சூரையாடியதாகக் குற்றஞ் சாட்டியுள்ளார் (3.8,9). இது ஒரு விபரீதமான குற்றச்சாட்டு. இஸ்ரவேலர்களுக்கு, தாங்கள் எவ்வாறு கர்த்தரைக் கொள்ளையடித்தார்கள் என்பதை அறியமுடியவில்லை (3. பதில்: மல்கியா தீர்க்கதரிசியின் காலத்தில் இஸ்ரவேலர்கள் தேவனை சூரையாடியதாக குற்றஞ் சுமத்துகிறார் (3:8, 9) இது ஒரு கடுமையான குற்றச்சாட்டு. ஆனால், இஸ்ரவேலர்களுக்கோ, அவர்கள் எப்படி தேவனைச் சூரையாடினார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடியவில்லை (3. பதில்: ஆசரிப்புக் கூடாரத்திற்குச் செலுத்த வேண்டிய தசம பாகத்தையும் நன்கொடைகளையும் சுருக்கிக் கொண்டார்கள் (மீட்டுக் கொள்ளுதல்) – தானியம், திராட்சரசம், எண்ணெய், முதலாவதாக காய்க்கும் கனிவகைகள்). இந்தத் தசமபாகக் காணிக்கைகள் ஆசரிப்புக் கூடாரத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும். லேவியர்களாகிய ஆசாரியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்பவை ஆகும் – இவை முறையே செலுத்தப் பட்டால்தான் ஆசாரியர்கள் தங்கள் தொழிலைக் கவனிக்கமுடியும். இஸ்ரவேலர்கள் இந்த்த் தசமபாகத்தை அலட்சியப்படுத்தியதால் ஆசரிப்புக் கூடாரப் பணிகளைச் செய்ய வேண்டிய லேவியர்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைச் சந்திக்க வயல்களுக்குச் சென்று விவசாயம் செய்தனர். நெகேமியா காலத்திலும் இதே நிர்பிசாரம் காணப்பட்டது. (நெக.13:10-14) எனவே, தேவன் இஸ்ரவேலர்களிடம் எரிச்சலை வெளிப்படுத்தினார்.
ஆனாலும் கர்த்தர் இஸ்ரவேலர்களிடம் பொருமையையும் கிருபையையும் வெளிப்படுத்துகிறார். தம்முடைய கிருபையை அனுபவிக்கத் தம்மை சோதித்துப் பார்க்குமாறு இஸ்ரவேலர்களுக்குச் சவால் விடுகிறார். “நீங்கள் மனஸ்தாப்ப்பட்டு உங்கள் தசம பாகத்தைச் செலுத்தினால், என்னுடைய சாபத்தை அகற்றுவேன்” என்று கூறுகிறார். “தானியங்களை அழித்துப் போடும் பூச்சுப் புழுக்களை தடுத்து நிறுத்துவேன், வானங்களின் பலகணிகளைத் திறந்து, இடங் கொள்ளாத மட்டும் தானியங்களை விளைவிக்கும் வகையில் மழையைக் கொட்டுவேன்; எல்லா தேசத்தாரும் என்னுடைய ஆசீர்வாத்த்தைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள் என்கிறார் (3:10-12).
நம்முடைய கர்த்தரைப் பற்றிய எப்படிப்பட்ட வர்ணனை இது! ஆனால் நாமும் அவருடைய ஆசீர்வாத்த்தில் கிடைத்த பெலனின் தசமத்தை அவருக்குக் கொடுக்க வேண்டும். தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நமக்குத் தந்தருளினதன் மூலம் அவருடைய தயாளத்தை வெளிப்படுத்தியது போல, நாமும், அதற்கு ஈடான செயலின் மூலம் அத்தகைய தயாளத்தைப் பிரதிபலிக்க வேண்டும். (எபே.1:3). நிச்சயமாகவே, நம்மால் ஆன அனைத்தையும் அவருக்குத் திரும்பக் கொடுக்க விரும்புவோம். நமது பணம் மட்டுமன்றி, ஜீவனையும்கூட கொடுக்க விரும்புவோம் (ரோமர் 12.1). தேவனும், அதற்குப் பதிலாக மேலும் நம்மை ஆசீர்வதிக்கக் காத்திருக்கிறார். சரீரம் அல்லது பொருள் வசதியில் மட்டும் நம்மை ஆசீர்வதிக்கிறவர் அல்லர். ஆவியின் பிரகாரமும் அது அமையலாம். நமது உண்மையுள்ள உள்ளத்தோடு வழங்கும் யாவற்றுக்கும் நம்மை ஆசீர்வதிப்பார் என்றும் நம்பலாம். மேலும் நம்மைப் பயன்படுத்தி தேவன் தமது மகிமையைப் பிறருக்கு வெளிப்படுத்தவும் கூடும்.
தியானிக்கும் தருணம்
நீயும் தேவனைச் சூரையாடுகிறாயா?
ஜெபங்கள்
பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய தயாளத்திற்காக உம்மைத் துதிக்கிறோம். எங்கள் திருநாடாகிய மலேசியாவில் எங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறோம். மேலும் அதிகமாகத் தர வாஞ்சையாகவும் உள்ளீர். சிறப்பாக உம்முடைய திருக்குமாரன் இயேசுவுக்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறோம். அவர் மூலமாகவே நாங்கள் ஆவியின் பிரகாரம் ஆசீர்வதிக்கப் பட்டோம். அதனை எங்கள் தயாள ஈகையின் மூலம் வெளிப்படுத்த உதவியருளும். செல்வத்தினால் மட்டுமன்றி எங்கள் ஒட்டு மொத்த ஜீவியத்தையும் ஆசீர்வதியும். உமது ஆசீர்வாத்த்தை வாஞ்சிப்பதோடு, உம்முடைய நற்கிரியைகளைப் பறைசாற்றுவதன் மூலம், இன்னும் அநேகர் உமதண்டைக் கிட்டிச் சேரவும் ஜெபிக்கிறோம். ஆமென்.
⭕#Lent_Day_13 |
#லெந்துகாலம் (எ) #தவக்காலம் |
Sis.#Vimala_John
#cfc_media
#Compassion
#family #channel
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)