கணிணியைப் பற்றிய அடிப்படை அறிவேதும் இல்லாத அக்காலத்தில் துவக்கிய இந்த கணக்கில் என்னருமை அங்கிள் எனக்கு எழுதிய இந்த குறுஞ் செய்தியை இப்போதுதான் பார்க்கிறேன். ஆனால் அங்கிள் நம்மோடு இப்போது இல்லை, கர்த்தருடைய இளைப்பாறுதலுக்குள் சென்றுவிட்டார்கள். அவர்கள் மரித்தும் என்னோடு பேசுகிறார்கள். இப்படியே நம் வாழ்வில் இன்னும் அறியாதவை அநேகம் உண்டு. எனவே எப்போதும் கற்கும் ஆவலுள்ளவர்களாய் இருப்போமாக, ஆமென்..!