Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒட்டகத்தை நினைத்துக் கொண்டு...


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: ஒட்டகத்தை நினைத்துக் கொண்டு...
Permalink  
 


அரசாங்கம் பொறம்போக்குகளை எப்படியாவது ஒழுங்குபடுத்தி பட்டா கொடுக்கவே விரும்புகிறது அல்லது பொறம்போக்குகள் காலிசெய்யப்படவேண்டும் அல்லவா? அதுபோலவே எந்தவொரு அமைப்புக்கும் கட்டுப்படாமல் தாந்தோன்றித் தனமாக செயல்படுவோராலேயே இத்தனை குழப்பங்களும் வந்தது;நான் எந்த சபைக்கும் கட்டுப்படமாட்டேன்,என் சபை பரலோகத்தில் மாத்திரமே இருக்கிறது என்போருக்கு ரேஷன் கார்டும் குடும்ப அமைப்பும் தேவையில்லையே..! தேசாந்தரிகளாக‌ சிவாச்சாரியார்கள் என்ற போர்வையில் கஞ்சா அடித்துக்கொண்டு கங்கைக் கரையின் பிணங்களைத் தின்று வாழட்டுமே..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

ஊழியத்துக்காக அர்ப்பணித்து வேதகலாசாலைக்குப் போகாமலே குறுக்கு வழியில் அப்போஸ்தலராகத் துடிக்கும் ஒரு தம்பியிடம் இன்று பேசிக்கொண்டிருந்தேன்; அவர் சபையிலுள்ள தாறுமாறுகளால் பாதிக்கப்பட்டவராக இருந்தபடியினால் சபைக்குட்படாத ஒரு ஊழியத்தை அமைப்பதில் ஆர்வமாக இருந்தார்;

நான் சொன்னேன், நீ குறைகளைக் குறித்து மாத்திரமே பேசிக்கொண்டிருக்கிறாய்,ஆனால் நிறைவை விரும்புகிறாய்; பரிசுத்தத்தை வாஞ்சிக்கும் நீ ஓயாமல் அசுத்தமான காரியங்களைக் குறித்து மாத்திரமே கோபத்துடன் பேசிக்கொண்டிருக்கிறாய்; இந்தியாவிலும் ஊழலைக் குறித்து மாத்திரமே பேசிக்கொண்டிருப்பதால் ஊழல் ஒழிந்துவிடுமா, என்ன? அதேபோல நீ நன்மையை விரும்புகிறவனாக இருந்தால் அதைக் குறித்துமாத்திரமே பேசு; பரிசுத்தம் விரும்பினால் அதைக் குறித்து மாத்திரமே பேசு;நீ வெறுக்கும் தீமை அகற்றப்படவேண்டுமானால் நன்மையானவைகளின்மீது நாட்டம் கொள்; ஒரு பிரச்சினையாக கோட்டுத் துண்டை சிறியதாக்க அதன் அருகில் ஒரு பெரிய கோட்டுத் துண்டைப் போடுவதே எளிமையான வழி என்று கூறினேன்;இது என்னுடைய இன்றைய அனுபவம்.

@Santhosh.West mambalam



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


கடந்த 09.02.2011 புதன்கிழமையன்று மாலையில் சந்தித்த நான் ஒரு சகோதரி அண்மையில் பல் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள்;சாதாரண ஈறு பிரச்சினைக்காக ரூபாய் மூவாயிரம் செலவழித்திருக்கிறார்கள்; அவர்களுடைய மாத சம்பளமே 3000 ரூபாய் தான் இருக்கும்;ஆனால் அரசாங்க மருத்துவமனையில் சரியான வைத்தியம் கிடைக்காததால் ஏழைகளும் சிரமத்துடன் இதுபோல செலவு செய்கிறார்கள்;அவர்கள் தனது மருத்துவ சீட்டை என்னிடம் காட்டியபோது அதிலிருந்து ஒரு கருத்து வெளிப்பட்டது;அதனை இங்கே பகிர்ந்துகொள்ளுகிறேன்.

அந்த பல் மருத்துவரின் சீட்டின் பின்புறத்தில் பல் மருத்துவம் செய்துகொள்ளுவோர் கடைபிடிக்கவேண்டிய குறிப்புகளாக சில காரியங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது;அதில் முதல் இரண்டு குறிப்புகள் என்னைக் கவர்ந்தது;முதலாவது பல்லைப் பிடுங்கியவுடன் பஞ்சை சில மணி நேரங்கள் வாயில் வைத்திருக்கவேண்டும்; அந்த நேரத்தில் வாயில் சுரக்கும் உமிழ்நீரை உமிழக்கூடாது; இது சற்று கடினமானதும் சற்று சங்கடமாகவும் தோன்றியது.

உமிழ்நீர் என்பது இயல்பாகவே சுரக்கக்கூடியது;அதிலும் வாய் நிறைய பஞ்சை (பஞ்சு மிட்டாய் அல்ல‌..!) இரத்தம் சொட்ட சொட்ட வைத்துக்கொண்டு சுரக்கும் உமிர்நீரை துப்பாமலும் விழுங்காமலும் எப்படி இருக்கமுடியும்;அதுவும் சுமார் 4 முதல் 6 மணி நேரங்கள்..?

இதைப் படித்ததும் எனக்கு நண்பர்களின் தளத்தில் படித்த ஒட்டகம் கதை ஞாபகத்துக்கு வந்தது;அதைச் சொன்னதும் அந்த சகோதரி வலியையும் கவலைகளையும் மறந்து சிரித்தார்கள்;தொடர்ந்து அது தொடர்பான ஒரு சத்தியத்தைச் சொல்லி ஜெபித்து விடைபெற்றேன்.

images?q=tbn:ANd9GcTHWw1G503kyc3yrodTqe9k9pdAQKUZD0kM-AdbXOP9LEB7d8fIyA

ஒரு குடியானவன் தனக்கு இருந்த
ஒரு தீராத பிரச்சினை தீரவேண்டி உள்ளூர் பரம்பரை மருத்துவரிடம் சென்றானாம்;அவர் குடியானவனை சோதித்துவிட்டு ஒரு லேகியத்தைக் கொடுத்து இதை காலையுய் மாலையும் சாப்பிட்டு வரவும்;முக்கியமாக ஒரு விஷயம் இதை உட்கொள்ளும்போது ஒட்டகத்தை நினைக்கக்கூடாது என்று கூறிவிட்டார்;குடியானவன் தவித்துப்போனான்,அது எப்படிங்கையா,என்றால் அது அப்படித்தான், என்றார் மருத்துவர்.

நெஞ்சு நிறைய பாரத்துடன் சென்ற குடியானவன் மேலும் தீராத குழப்பத்துடன் வந்து சேர்ந்தானாம்.அவன் பிரச்சினை தீர்ந்ததோ இல்லையோ இந்த உலகில் நாம் தீர்க்க விரும்பும் எந்தவொரு பிரச்சினையும் இப்படியே நம்மை அலைக்கழிக்கிறது.பிரச்சினைக்காக லேகியம் சாப்பிடவேண்டும்;லேகியத்தை சாப்பிடும்போது ஒட்டகத்தை நினைக்கக்கூடாது என்பது எத்தனை கடினமான காரியம் அல்லவா? அடிப்படையற்ற இதுபோன்ற ஆலோசனைகளைக் கூட நம்புவதற்கு ஆயத்தமாக இருக்கும் நாம் ஜீவனுள்ள தேவன் சொல்லும் நன்மையான காரியங்களை நம்புவதற்கும் அதனை விசுவாசிப்பதற்கும் தயங்குகிறோமே காரணம் என்ன‌?

images?q=tbn:ANd9GcRdbmqrrYt7N8bpDIOHAVchnBjXZ_PLL0L8Y-X4X8FLSn7xFLexGQimages?q=tbn:ANd9GcQS_QIjKqpzjvMMQ30JQIrHsprtTGEuhXnFg2NI-OfKwEGtrhxhtA

அதுவே மாயை..! விசுவாசம் என்பதை மலையை பெயர்க்கும் காரியமாக நான் கணித்து மலைத்துப்போவதால் சிறு குன்றும் மாபெரும் மலையைப் போலக் காட்சியளிக்கிறது; விசுவாசத்துக்கு ஆதாரமானது தேவன் மீதான அன்புதானே;நாம் நேசிக்கும் யாரையும் நம்புகிறோம்;நமக்கு அருமையானவர்கள் தேவையென்று வந்து நின்றால் நம்பிக்கையின் காரணமாக மட்டுமல்ல, அவர்கள் மீது நாம் வைத்திருக்கும் அன்பின் காரணமாக நமக்கு அருமையான விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக்கொடுத்துவிடுகிறோம்; அதுபோல நட்புக்காக தாலிக் கொடியையே கழற்ற்சிக்கொடுத்தோரும் பல இலட்சம் ரூபாய் கடன் பத்திரத்தில் ஜாமீன் கையெழுத்து போட்டுக்கொடுத்தோரும் எத்தனையோ பேருண்டு.

images?q=tbn:ANd9GcReHbQLvFaQkEbndyhLu7AY0waZFufgIakdKj0HKRXIiX-6a1iEzQimages?q=tbn:ANd9GcRDImhKO1Ou36Suc2yIN-O_OfdHhqYNrw_rhn1g5HKceZEr5Eh2

ஆனால் ஆண்டவர் நம்மிடம் எதுவும் கேட்கவில்லை;நமக்கு அவர் தருவதாகச் சொல்லுவதையே நம்புவதற்குக் கடினமாக இருக்கிறது;காரணம் நமக்கும் அவருக்கும் இடையே இருக்கும் மாயையான இடைவெளி தான்; நாம் ஆண்டவரை நம்புவதற்கும் விசுவாசிப்பதற்கும் தேவையானது கள்ளங்கபடமற்ற தூய்மையான அன்பே; அந்த அன்பும் கூட சாதாரணமாக ஏற்பட்டு விடாது.

நாம் வாழும் இந்த உலகில்  விரும்பி பயன்படுத்தும் பொருட்களைக் குறித்து சற்று யோசித்துப்பார்த்தால் அந்த பொருட்கள் நம்மிடம் எப்படி வந்தது? நாம் அவற்றை வாங்குவதற்கு திட்டமிட்டு செலவு செய்து வாங்கி நம்முடையதாக்கிக்கொண்டோம் அல்லவா? அதற்குக் காரணம் என்ன, நம்முடைய தேவையும் நாம் அந்த பொருளைக் குறித்து கேள்விப்பட்டு நம்பிய காரியங்கள் தானே?

images?q=tbn:ANd9GcTFkGYiS-NDAEHd5QdVAj-GYtUk99nOIAUIpn63hYIeurljWvbv4gimages?q=tbn:ANd9GcTsBJR3L-3O2CFthBKHn3YyJUavV_mxFb_nxU4aBw0t1BZFp17uqw

அதுபோலவே நாம் தேவனை நேசிப்பதற்கு அவரைக் குறித்த நல்ல கருத்துக்கள் காரணமாக இருக்கிறது; அந்த கருத்துக்களால் நம்முடைய மனமும் சிந்தையும் நிரம்பும்போது அன்பு உருவாகிறது;அன்பு அவர்மீதான விசுவாசமாகவும் நாம் விரும்புவதை பெற்றுக்கொள்வோம் எனும் நம்பிக்கையாகவும் மாறுகிறது.

images?q=tbn:ANd9GcT-5hTtSG7cvJLaLq3RNoHmF6XlVEydYxp0RuDSY2yzLYXnv8Z7

"நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.

நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம். (யோவான்.5:14,15)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard