Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆவிகளின் உலகம்..!


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
RE: ஆவிகளின் உலகம்..!
Permalink  
 


சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு பதித்த போதகர் அவர்களுக்கு நன்றி

__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இன்று ஒரு குடும்பத்தை சந்திக்கச் சென்றிருந்தேன்;அந்த வீட்டின் மகள் கடந்த சில மாதங்கட்கு முன்பு கணவனால் அடித்துவிரப்பட்டு கண்ணீருடன் வந்திருந்தாள்;ஆலோசனை கூறி ஜெபித்து வந்தேன்;இன்றைக்கு போன் செய்த அவளுடைய தாயார் தனது மகள் கர்ப்பமாக இருக்கிறாள்,இது ஐந்தாவது மாதம் என்று சொன்னபோது உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது;திருமணமாகி ஒரு வருடம் கூட ஆகவில்லை;அதற்குள் மீண்டும் மீண்டும் பிரச்சினை என்று அவள் அடிவாங்கிக் கொண்டு வருவதும் அவர்கள் செய்ததாகக் கூறும் கொடுமைகளைக் கேட்டபோது இவர்கள் தேவ சந்நிதானத்தில் உடன்படிக்கை செய்து இணைந்தார்களே, இவர்கள் எப்படியும் சேர்ந்து வாழவேண்டுமே என்று ஜெபித்துக்கொண்டிருந்தேன்; தற்போது அந்த இளம் தம்பதியினர் மீண்டும் இணைந்திருப்பது அதிக சந்தோஷம்;தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கவே தேவன் கர்ப்பத்தின் கனியைக் கொடுக்கிறார் போலும்..!

images?q=tbn:ANd9GcSwV09enzskcr3zzFdRh4kkTG8mbmYp5B_GCvPniWSTAHbpPRrdimages?q=tbn:ANd9GcRC33AdWkat0m7cDknyHZqYVkKL0jtPelnySEvoZbhUa_K1cZFx

இவள் கருவை சுமந்துகொண்டு வீராப்பாக வந்து அம்மா வீட்டில் அமர்ந்துகொண்டாள்;அம்மாவோ வீராவேசமாக போலீஸ், பஞ்சாயத்து என்று போகாமல் நான் சொன்னவண்ணமாக அமைதியாக ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்;இதனிடையே மாப்பிள்ளையின் தகப்பனாரின் நினைவுநாள் வந்தது;ஒப்பு
‌வாக ஏற்கனவே மனதளவில் ஆயத்தமாக இருந்த பெண்வீட்டார் அந்த நினைவுகூட்டத்துக்குச் சென்று பகைமறந்து கட்டியணைத்து கரு உருவான சேதியைச் சொன்னதும் மாப்பிள்ளைக்கு சந்தோஷம் பிய்த்துக்கொண்டது;தன் வாழ்க்கை இனி கேள்விகுறிதானோ என்று கலங்கியிருந்த பெண்ணுக்கு தாங்கொண்ணா சந்தோஷம்;ஏனெனில் அவளுடைய திருமண வயதைக் கடந்து சுமார் 31 வயதில் தான் திருமணமே நடந்தது;இந்நிலையில் ஏற்பட்ட தொடர் போராட்டங்கள் மற்றும் உறவு மாற்றங்களை அவளால் எளிதில் சமாளிக்கமுடியவில்லை;இனி ஆண்டவர் அனைத்தையும் பார்த்துக்கொள்ளுவார்.

அந்த கர்ப்பஸ்திரீயை இன்று சந்தித்து ஆலோசனை கூறி ஜெபித்தபோது வெளிப்பட்ட  எனது சிந்தனையையே இங்கு பகிர்ந்துகொள்ளுகிறேன்...

இந்த உலகம் முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது என்று வேதம் கூறுகிறது;அதாவது இந்த உலகில் மிருகத்தின் ஆவியும் மனிதனின் ஆவியும் எல்லாவற்றுக்கும் மேலாக பிசாசின் ஆவியும் இணைந்து ஆட்சிபுரிகிறது;இப்படிப்பட்ட உலகில் நாம் வெளியே சென்று வீட்டுக்குள் வருவதற்குள் அல்லது தேவனுடைய சமூகத்துக்கு வருவதற்குள் இந்த மூன்று ஆவிகளுடனான போராட்டத்தைக் கடந்துவரவேண்டியதாகிறது.

images?q=tbn:ANd9GcT72IKhX_Nlqwggcnk4scgGXGQDwbv_nQvnupnA17j52I5HiQ9UYQ

எந்தவொரு சாதாரண மனுஷனும் தன்னுடைய சுயபெலத்தினால் இம்மூன்று ஆவிகளில் ஒன்றையும் எதிர்த்து மேற்கொண்டு உருப்படியாகத் திரும்புவது என்பது இயலாத காரியமாகும்;அப்படியானால் இம்மூன்றும் இணைந்து ஒரு மனுஷனைத் தாக்கினால் அவன் என்ன செய்வான்? நிச்சயமாகவே வீழ்ந்தே போவான்; வீழ்த்தப்படுவதென்பது என்ன? அவனும் அதிலொன்றைப் போல மாறிவிடுவான்;என்ன நடக்கும்? சாதாரணமான மனுஷன் மிருகத்தைப் போல நடந்துகொள்ளுவான்;நம்மைச் சுற்றிலுமுள்ள‌ அனைத்து உறவுகளுமே நல்லவர்கள் தான்,ஆனால் அவர்களை ஏவிவிட்டு நமக்கெதிராக செயல்படவைப்பது பிசாசின் ஆவி;அது மிருகத்தின் ஆவியுடன் இணைந்து தேவனற்ற மனுஷனின் மூர்க்கத்தனத்துடன் நம்மைத் தாக்கும்போது நாம் துன்பப்படுகிறோம்.

images?q=tbn:ANd9GcQx82mhWtc-CjnF-um-2lVvEVK3C8S1mWBUKJAx0rWNCX1PIj-j6A

ஆடு ஒருபோதும் கடிக்கிறதில்லை;நாய் ஒருபோதும் முட்டுகிறதில்லை; நாய் கடிக்கும் என்பதும் ஆடு சமயத்தில் முட்டும் என்று அறிந்திருக்கும் நாம் ஆட்டினை தைரியமாக நெருங்குகிறோம்;ஆனால் நாயானது நம்முடைய செல்லப்பிராணியாகவே இருந்தாலும் அதனிடம் ஜாக்கிரதையாகவே இருக்கிறோம்;அதன் குணம் எப்போது மாறும் என்று நம்மால் கணிக்கவே முடியாது;ஆனால் ஆட்டின் குணத்தைக் குறித்து நாம் நன்கு அறிந்திருக்கிறபடியால் அச்சம் கொள்ளுகிறதில்லை.

images?q=tbn:ANd9GcTvHZoaRxXeS6ZDlWPB1EpR78uGBCw0Jlx3LQk0xCnKAQS9bU9tZX9M46jd

அதுபோலவே இந்த உலகில் கர்த்தரை சார்ந்து வாழ்கிற நாம் எப்போதும் தன் குணம் மாறாத ஆட்டைப் போலவே இருந்திடவேண்டும்;அப்போது தான் நல்ல மேய்ப்பனாகிய இயேசுகிறித்துவினால் போஷிக்கப்பட்டு அவருடைய கைக்குள்ளான ஆடுகளாக அவருடைய மந்தைக்கு நாம் தகுதியானவர்களாக இருந்திட இயலும்;அதுவே நமக்கு பாதுகாப்பு.

நாய்களுக்கு மேய்ப்பன் இல்லை;எனவே அவைகளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் எச்சரிக்கவும் வேதம் போதிக்கிறது; அவைகளுக்குக் கட்டுப்பாடோ ஒழுங்கோ கிடையாது; ஆனால் ஆடுகளுக்கு மேய்ப்பன் உண்டு,ஒழுங்குகள் உண்டு;கட்டுப்பாடுகள் உண்டு;நாம் ஆடுகளைப் போலிருந்து அவற்றைப் போல சார்புதன்மையுள்ளவர்களாக இருந்திடவேண்டும்;

மிருகம் என்று சாதாரணமாக நாம் நினைத்தாலும் அதன் வாழ்க்கை முறையும் பழக்கவழக்கங்களும் ஒருபோதும் மாறுகிறதில்லை; அதுபோலவே நம்முடைய சூழ்நிலையானது எவ்வளவு தான் நம்மை அழுத்தினால் நம்முடைய குணமும் பண்பும் மாறவே கூடாது;நாம் நாமாகவே இருப்போம்;எதிரியை தேவ ஆவியுடன் எதிர்கொள்ளுவோம்; எதிரியின் மூர்க்கவெறியினாலும் பல்வேறு லௌகீக கவலை மற்றும் தீய ஆவியினால் பாதிக்கப்படாதிருக்க தேவ ஆவியின் ஐக்கியத்தைக் காத்துக்கொள்ளுவோம்.

ஜெபம்: எங்களை அதிகமாக நேசிக்கிற பரலோகப் பிதாவே நாங்கள் எப்போதும் உம்முடைய ஆவியினால் நடத்தப்பட இரக்கம் பாராட்டும்; வேதனை உண்டாக்கும் வழிகளையும் உறவுகளையும் தூரமாக்கும்; நாங்கள் தேவனுடைய பிள்ளைகளுக்குரிய சாயலைத் தரித்துக்கொண்டு எமது உறவுகளை உமக்குள்ளிருந்து நேசிக்க உதவிசெய்யும்; இயேசுகிறித்துவின் நாமத்தில் பிதாவே,ஆமென்.





__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard