Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுவானவர் பிரதான தூதனாகிய மிகாவேலின் அவதாரமா.?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இயேசுவானவர் பிரதான தூதனாகிய மிகாவேலின் அவதாரமா.?
Permalink  
 


இவ்வளவு விவரமா இருக்கவனுங்கள என்ன செய்யமுடியும்? சுந்தர் போன்றவர்களை வஞ்சிக்க இதுபோதாதா..? அழகா ஸ்கெட்ச் போட்டு வேலை செய்யறானுங்க‌...இப்போதைக்கு நம்மால் வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறேதும் செய்யமுடியாது என்ற நிலை;ஆனாலும் நம்முடைய தமிழ் கிறித்தவத்துக்குள் ஊடுறுவியிருக்கும் இதுபோன்ற புல்லுருவிகளிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும்;ஒரு முகமதியனைக் கலந்து அவனோடு விருந்துண்ணலாம்,காரணம் அவன் இன்னான் என்பதை அவன் குல்லா காட்டிவிடும்;ஒரு இந்துவுடன் வியாபாரம் செய்யலாம்,ஏனெனில் அவனுடைய முன்நெற்றியில் அதற்கான அடையாளம் காணப்படும்;ஆனால் இதுபோன்ற இனதுரோகிகளை (மேசியாவின்) எதிரிகளை எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ளவோ சகித்துக்கொள்ளவோ அவனிடம் கிறித்துவின் குணாதிசயங்களை வெளிப்படுத்தவோ முடியாது,அது கூடாது;மாதாவை தெய்வநிலையில் வைத்து தொழும் கத்தோலிக்கர்களின் பெலவீனம் அதனைப் பார்த்தவுடனே தெரிகிறது;ஆனால் சிந்தையில் மாசுபட்ட விபச்சாரிகளான இரஸலின் சிஷ்யக்கோடிகளைக் கண்டதும் காத தூரம் காதைப் பொத்திக்கொண்டு ஓடிவிடவேண்டும்;அவர்களைக் குறித்து மனதை மயக்குகிறவர்கள் என்று அப்போஸ்தலன் எச்சரிக்கிறான்;கிறித்தவர்களே ஜாக்கிரதை...ஓநாய் கூட்டமே வருகிறது...அது கூட்டமாய் வருகிறது..!

பிரதான தூதனாகிய மிகாவேல் யார் ? (Dino (a) Roshan)

மிகாவேல் என்றழைக்கப்படுகிற ஆவி சிருஷ்டியைப் பற்றி பைபிள் அதிகமாக குறிப்பிடுவதில்லை. ஆனால் அப்படி குறிப்பிடப்பட்டுள்ள வசனங்கள், மிகாவேல் மும்முரமாய்ச் செயல்பட்டு வருவதாக சொல்கின்றன. பொல்லாத தூதர்களோடு அவர் போரிட்டுக் கொண்டிருப்பதாக தானியேல் புத்தகம் சொல்கிறது; சாத்தானோடு விவாதித்துக் கொண்டிருப்பதாக யூதாவின் நிரூபணம் சொல்கிறது; பிசாசோடும் அவனுடைய பேய்களோடும் யுத்தம் பண்ணிக்கொண்டு இருப்பதாக வெளிப்படுத்தல் புத்தகம் சொல்கிறது. ''கடவுளுக்கு நிகர் யார்''? என்ற தம் பெயரின் அர்த்தத்துக்கு ஏற்ப, மிகாவேல் யெகோவாவின் ஆட்சியை ஆதரித்து, கடவுளுடைய எதிரிகளோடு போரிடுகிறார். அப்படி என்றால், மிகாவேல் யார் ?

சில சமயங்களில், ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்களினால் சில நபர்கள் அறியப்படுகிறார்கள். உதாரணமாக, முற்பிதாவான யாக்கோபுவுக்கு இஸ்ரவேல் என்ற பெயரும் இருந்தது. அப்போஸ்தலன் பேதுருவுக்கு சீமோன் என்ற பெயரும் இருந்தது.(ஆதியாகமம் 49:1,2 / மத் 10:2 ) அதுபோலவே, இயேசு கிறிஸ்துவின் மற்றொரு பெயர்தான் மிகாவேல் என்று பைபிள் சுட்டிக்காட்டுகிறது; பூமிக்கு வருவதற்கு முன்னும், பரலோகத்துக்குச் சென்ற பின்னும் அவருடைய பெயர் அதுதான். இந்த முடிவுக்கு வருவதற்கான வேதபூர்வ காரணங்களை இப்போது நாம் சிந்திப்போம்.

பிரதான தூதன். மிகாவேலை 'பிரதான தூதன்'' என்று கடவுளுடைய வார்த்தை குறிப்பிடுகிறது. (யூதா 9 ). இதன் அர்த்தம் ''தலைமைத் தூதன்''  என்பதாகும். பைபிளில், பிரதான தூதன் என்றவார்த்தை ஒருமையில் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது, பன்மையில் ஒருபோதும் கொடுக்கப்படவில்லை. எனவே, அப்படி ஒரேயொரு தூதன் மட்டுமே இருக்கிறார் என்பதை இது காண்பிக்கிறது. அதோடு, இயேசு பிரதான தூதனின் ஸ்தானத்தோடு சமந்தப்படுத்தி பேசப்படுகிறார். உயிர்தெழுப்பப்பட்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து 1 தெசலோனிக்கேயர் 4:16 இவ்வாறு சொல்கிறது: ''ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும் (அதாவது, குரலோடும்), தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்'':.  இவ்வாறு இயேசுவின் குரல் பிரதான தூதனுடைய குரலாக இருக்கிறதென விவரிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இயேசு பிரதான தூதனாகிய மிகாவேல் என்பதை இந்த வசனம் சுட்டிக் காட்டுகிறது.

சேனைத் தலைவர். ''மிகாவேலும் அவரைச் சேர்ந்த தூதர்களும் வலுச்சர்ப்பதோடே யுத்தம் பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச் சேர்ந்த தூதரும் யுத்தம் பண்ணினார்கள்'' என்று பைபிள் தெரிவிக்கிறது (வெளிப்படுத்தல் 12 :7). ஆகவே, விசுவாசமிக்க தேவ தூதர்களின் சேனைக்கு மிகாவேல் தலைவராக இருக்கிறார். அதே வெளிப்படுத்தல் புத்தகத்தில், தேவ தூதர்களின் சேனைக்கு இயேசு தலைவராக இருக்கிறார் என்று விவரிக்கப் பட்டிருக்கிறது. (வெளிப்படுத்தல் 19 :14 -16 ) ''கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடு'' வருவதாக அப்போஸ்தலர் பவுலும் தெளிவாய்க் குறிப்பிடுகிறார். (2 தெசலோனிக்கேயர் 1 :8 ) ஆக, மிகாவேல் மற்றும் 'அவரைச் சேர்ந்த தூதர்கள்' பற்றியும் இயேசு மற்றும் 'அவருடைய தூதர்கள்' பற்றியும் பைபிள் சொல்கிறது (மத் 13 :41 /16 :27 /24 :31  ::::: 1 பேதுரு 3 :2 ). பரலோகத்தில், விசுவாசமிக்க தேவதுதர்களான இரண்டு வெவ்வேறு சேனைகள் இருப்பதாக, அதாவது மிகாவேலைத் தலைவனாக கொண்ட ஒரு சேனையும், இயேசுவைத் தலைவராக கொண்ட வேறொரு சேனையும் இருப்பதாக கடவுளுடைய வார்த்தையில் எங்குமே குறிப்பிடப்படவில்லை; எனவே பரலோக இஸ்தானத்தில் உள்ள இயேசு கிறிஸ்துதான் மிகாவேல் என்ற முடிவுக்கு வருவது நியாயமாகவே இருக்கிறது. அடுத்து வேதத்தில் இருந்து சில வசனங்களை எடுத்து பொய்யாக, புரியாமல் போதிக்கும் ஒரு சில துர்உபதேசம் கொண்ட தளத்தின் கேள்விகளை எனது அடுத்த பதிவுகளில் ஆராய்வோம்.....

இந்த மிகாவேலின் பெயர் பைபிளில் ஐந்து தடவைகள் மாத்திரமே காணப்படுகிறது. இந்தப் பெயரைக் கொண்டுள்ள அந்த மகிமையான ஆவி ஆள், ''பிரதான அதிபதிகளில் ஒருவன்'', ''உன் (தானியேலின்) ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதி'' எனவும் ''பிரதான தூதன்'' எனவும் குறிப்பிடப்படுகிறார். (தானி 10:13; 12:1; யூதா 9). மிகாவேல் என்பதன் பொருள் ''கடவுளைப்போன்றவர் யார்?” என்பதாகும். இவ்வாறு இந்தப் பெயர் மிகாவேலை, “யெகோவாவின்  ஈடற்றப் பேரரசை உறுதியாய் கடைப்பிடித்து நிற்பதிலும், கடவுளுடைய சத்துருக்களை அழிப்பதிலும் தலைமை தாங்குவார்” என சந்தேகம் இல்லாமல் குறித்துக் காட்டுகிறது.

1 தெசலோனிக்கேயர் 4:16-இல், உயிர்த்து எழுவதை தொடங்குவதற்கு இயேசு கிறிஸ்து கொடுக்கும் கட்டளை '' பிரதான தூதனுடைய சத்தம்'' என விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் யூதா 9-இல் இந்தப் பிரதான தூதன் மிகாவேல் எனச் சொல்லிருக்கிறது. இயேசுவின் கட்டளைக்குரிய சத்தத்தை, அதிகாரத்தில் குறைந்தவரான ஒருவருடைய சத்தத்துக்கு ஒப்பிடுவது தகுதியாய் இருக்குமா? அப்படியானால், நியாயமாகவே, அந்தப் பிரதான துதனான மிகாவேல் இயேசு கிறிஸ்துவே. (கவனத்தைக் கவருவதாய், ''பிரதான தூதன்'' என்ற சொற்றொடர் வேத எழுத்துக்களில் பன்மையில் ஒருபோதும் காணப்படுகிறதில்லை; இவ்வாறு ஒரே ஒருவரே அவ்வாரிருக்கிறார் எனக் குறிப்பாய் உணர்த்துகிறது).

வெளிப்படுத்தல் 12:7-12-இல், கிறிஸ்துவுக்கு அரசதிகாரம் அளிப்பதன் சம்பந்தமாக, மிகாவேலும் அவனுடைய தூதர்களும் சாத்தானுக்கு எதிராகப் போர்செய்து அவனையும் அவனுடைய பொல்லாத துதர்களையும் பரலோகத்தில் இருந்து வெளியே தள்ளிப் போடுவார்கள் என சொல்லியிருக்கிறது. பின்னால் இயேசு பரலோக சேனைகளை இவ்வுலக ராஜ்யங்களுக்கு எதிராக போர் செய்வதில் தலைமை வகித்து நடத்துவதாக சித்தரித்துக் காட்டுகிறது (வெளி. 19:11 -13). அப்படியானால், ''உலகத்தின் அதிபதி'' என்று தாம் விவரித்த பிசாசான சாத்தானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பவரும் இயேசுவே என்பது நியாயமாய் இருக்கிறது அல்லவா ? (யோவான்  12 :31 ). தானியேல் 12:1-இல் அதிகாரத்துடன் செயல்படும்படி ''மிகாவேல் எழும்பி நிற்பது'' ''யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்கால மட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலத்தோடு சமந்தப்படுத்தி இருக்கிறது. இது, கிறிஸ்து, பரலோகத் தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுபவராக ராஜ்யங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கையில் அவற்றின் அனுபவத்துக்கு நிச்சயமாகவே பொருந்தும். ஆகையால், கடவுளுடைய குமாரன் தாம் பூமிக்கு வருவதற்கு முன்னால் மிகாவேல் என அறியப்பட்டார் எனவும், மேலும் அவர் கடவுளுடைய மகிமைப்படுத்தப்பட்ட ஆவிக் குமாரனாக இப்பொழுது வாசம்செய்கிற பரலோகத்துக்கு திரும்பிச் சென்ற முதற்கொண்டும் அவ்வாறு அறியப்படுகிறார் எனவும் அத்தாட்சி குறித்துக் காட்டுகிறது.
 
திருத்துவத்தின்  பாகமாய்   இருப்பதாகச் சொல்லப்படுவோர் எல்லோரும் நித்தியர், ஒருவருக்கும் தொடக்கம் கிடையாதென பைபிள் போதிக்கிறதா?

மேலே கூறிய தலையங்கத்துக்கு பொருத்தமாகவும், என் நண்பர்களின் பல கேள்விகளை கருத்தில் கொண்டும் கொலோ. 1 :15 ,16 என்ற வசனத்தை ஆதாரமாக எடுத்து பதில் சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.  அடுத்து இந்த தளத்து நிர்வாகியாகிய  ''பெரியன்ஸ்'' என்பவர்   இதன் விளக்கத்தை  ''கிறிஸ்து சிருஷ்டிப்பின் ஆதியானவர்''!!  என்ற திரியில் மிகவும் அழகாகவும் , விவரமாகவும் விளக்கியுள்ளார். அடுத்து இதன் மேலதிக தகவலாக சில கிரேக்க வார்த்தைகளை ஆராய்ந்து பார்த்து விளக்கத்தை பெறுவது இன்னும் அதிகமான நம்பகத் தன்மை வாய்ந்ததாக இருக்கும்.

கொலோ. 1 :15 ,16 .... ''அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.  ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய''

என்ன கருத்தில் இயேசு கிறிஸ்து ''சர்வ சிருஷ்டிக்கும் முதற் பேறுமானவர்'' என்று எழுதப்பட்டு இருக்கு?

(1 ) ''முதற் பேறு'' என்பது இங்கே பிரதான, மிக அதிக மேம்பட்ட, மிக அதிக மேன்மை வாய்ந்த என்பதைக் குறிக்கிறது எனவும், இவ்வாறு கிறிஸ்து சிருஷ்டிப்பின் பாகமல்ல, ஆனால் சிருஷ்டிக்கப் பட்டவர்களோடு சம்மந்தப்பட்டதில் மிக அதிக மேன்மை வாய்ந்தவர் என விளங்கிக் கொள்ளப் படவேண்டும் எனவும் திருத்துவ கோட்பாட்டாளர் சொல்கின்றனர். அவ்வாறிருந்தால், மேலும் திருத்துவக் கோட்பாடு உண்மையாய் இருந்தால், பிதாவும் பரிசுத்த ஆவியும் சர்வ சிருஷ்டிக்கும் முதற்பேறானவர்கள் என்று ஏன் சொல்லப்படவில்லை? பைபிள் இந்தச் சொற்களை குமாரனுக்கு மாத்திரமே பயன்படுத்துகிறது.''முதற்பேறு'' என்பதன் வழக்கமான அர்த்தத்தின்படி, யெகோவாவின் குமாரர்களடங்கிய குடும்பத்தில் இயேசு எல்லாரிலும் மூத்தவர் என அது குறிக்கிறது.

(2) கொலோ. 1 :15 .க்கு முன்னால் ''முதற்பேறான'' என்ற இந்தச் சொற்றொடர் 30 க்கும் மேற்பட்ட தடவைகள் பைபிளில் காணப்படுகிறது. உயிருள்ள சிருஷ்டிகளுக்கு அது பயன்படுத்துகிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதே அர்த்தத்திலே பயன்படுத்தி உள்ளது. --- அதாவது அந்த முதற்பேறு அந்தத் தொகுதியின் பாகம் என்பதாகும். ''இஸ்ரவேலின் முதற்பேறானவன்'' இஸ்ரவேலின் குமாரரில் ஒருவனே; ''பார்வோனின் முதற்பேறானவன்'' பார்வோனின் குடும்பத்தில் ஒருவனே;  ''மிருகத்தின் முதற்பேராக'' இருப்பவை மிருகங்களே. அப்படியானால், கொலோ. 1:15 இல் அதற்கு வேறுபட்ட அர்த்தத்தை குறித்துக் காட்டும்படி சிலரை செய்விப்பது எது? அது பைபிள் பயன்படுத்தும் முறையா அல்லது அவர்கள் ஏற்கனவே கொண்டுள்ளதும் அதற்கு நிருபணத்தை தாங்கள் தேடுவதுமாகுமா?

(3 ) கொலோ. 1 :16 ; 17 இல் ''அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது ......சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப் பட்டது.'' என்று சொல்லி இருப்பது, இயேசுவையே சிருஷ்டிக்கப்படவில்லை என தவிர்த்து வைக்கிறதா? ''சகலமும்'' என்று இங்கே மொழிபெயர்த்துள்ள கிரேக்க சொல் பான்ட்டா என்பதாகும். இது பஸ் என்பதன் உருமாற்றமாகும் (மிகுதி சேர்க்கப்பட்டு மாறியது) லூக்கா 13:2 இல்; ''மற்ற ...எல்லா'' என மொழிபெயர்த்திருக்கின்றது. JB ''மற்ற எவரை'' என்றிருக்கிறது. NE  ''வேறு எவரை'' என்று சொல்லி இருக்கிறது. (மேலும் NE இல் லூக்கா 21:29-ஐயும் JB இல் பிலிப்பியர் 2 :21-ஐயும் பாருங்கள்). குமாரனைப் பற்றி பைபிளில் சொல்லி இருக்கும் மற்ற எல்லாவற்றுடனும் பொருந்த, NW கொலோ. 1 :16 ; 17 இல் பான்ட்டா என்பதற்கு அதே அர்த்தத்தையே கொடுக்கிறது. இவ்வாறு அதில் ஒரு பகுதியாக; ''அவரைக் கொண்டு மற்ற எல்லாக் காரியங்களும் சிருஷ்டிக்கப்பட்டன ..... மற்ற எல்லாக் காரியங்களும் அவர் மூலமாயும் அவருக்காகவும் சிருஷ்டிக்கப்பட்டன'' என்று வாசிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் சிருஷ்டிக்கப்பட்டவராக, கடவுள் சிருஷ்டித்த சிருஷ்டிப்பின் பாகமாகக் காட்டப்படுகிறார்.

வெளிப். 1 :1 / 3 :14 ''இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுத்தல், இதைக் கடவுள் அவருக்குக் கொடுத்தார்'' (RS ) ''லாவோதிக்கா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும்,தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாய் இருக்கிற (கிரேக்கில், ஆர்கி) ஆமென் என்பவர் சொல்கிறதாவது''.
(KJ ;DY ;CC ;மற்றும் NW ; அவற்றோடு மற்றவற்றிலும், இவ்வாறு இருக்கிறது) இந்த மொழிபெயர்ப்பு திருத்தமானதா?
இங்கே குமாரன் 'கடவுளுடைய சிருஷ்டிப்பை தொடங்கினவர்' எனவும், அவரே அதன் 'ஆதி மூலகாரணர்' எனவும் பொருள்படுகிறது என்ற கருத்தைச் சிலர் ஏற்கின்றனர். ...

ஒக்ஸ்போர்ட், 1968  , பக்கம், 252 - இல் சொல்லப்பட்டபடி நியாயமுறைப்படியான முடிவு என்னவெனில், வெளிப்படுத்தல் 3 :14 இல்  குறிப்பிடப்பட்டுள்ளவர் சிருஷ்டிக்கப்பட்டவர், கடவுளுடைய சிருஷ்டிப்புக்களில் முதல்வர், அவருக்கு ஒரு தொடக்கம் இருந்தது என்பதே. இதை நாம் நீதிமொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.   இங்கே, பைபிள் உரை ஆசிரியர்கள் பலர் ஒப்புக்கொள்கிறபடி, நீதிமொழிகள் 8 :1 இன் வசனமாகிய ''ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? புத்தி சத்தமிடுகிறதில்லையோ''? இங்கே ''ஞானம்'' என்ற சொல் இயேசுவையே குறிக்கின்றது.  அதனை தொடர்ந்து நீதிமொழிகள் 8:22-30  வரை உள்ள வசனம் இவ்வாறு வாசிக்கிறது.
22. கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்.
23. பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்பண்ணப்பட்டேன்.
24. ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
25. மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,
26. அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.
27. அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும்,
28. உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும்,
29. சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்,
30. நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.
ஆகவே இந்த வசனங்களின்படியும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவரும்,   தேவனின் மகனாகவும் இயேசு திகழ்கிறார் என்று நியாயம் ஆகின்றது. நன்றி

கிறித்தவ சமுதாயத்தைச் சேர்ந்த அனைத்து அடியவர்களையும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்ளுகிறேன்,ஒரே ஒரு கேள்வியினால் இவர்களை அடையாளங் கண்டு கொள்ளுங்கள்;அந்த கேள்விக்கு அவர்கள் பதிலளிக்காவிட்டால் தொடர்ந்து வேறொன்றையும் அவர்களுடன் பேசவோ விவாதிக்கவோ வேண்டாம்...அந்த பொன்னான கேள்வி என்னவென்றால்,"இயேசுவானவர் தொழத்தக்க தெய்வமா" என்பதே; இதனை ஏற்றுக்கொள்ளாமல் கிறித்தவ போர்வையில் யார் வந்தாலும் அவனுக்கு கொடுக்கும் மரியாதையைவிட வாலாட்டி பிழைக்கும் நாய்க்கு அதிக மரியாதையைக் கொடுப்பேன்;

சுந்தர் எனும் பொறம்போக்கு சாந்தசொரூபி வேடமிட்டுக் கொண்டு நக்கலாக காழ்ப்புணர்ச்சியுடனும் மதப்புடனும் இன்றைக்கு என்னைக் குறித்து நேரடியாக நாயுடன் ஒப்பிட்டு எழுதியிருக்கிறது.. // நாய்  குறைக்கிறது என்று  நாமும் அதைப்போல குறைத்து நாயாவதைவிட குறைந்த பட்சம் அமைதி காத்து மனுஷனாகவாவது இருக்க பழகவேண்டும் என்பது இயேசுவின் வார்த்தைக்குள் என்னுடைய கருத்து.// அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளுகிறேன்,ஆம் திருடனைப் பார்த்து நாய் குரைக்கும் என்பது தெரிந்தது தானே..?

சுந்தர் போன்று போலியான ஒரு நட்புணர்வுடன் (மேசியாவின்) எதிரிகளுடன் உறவாடவோ நிதானமாக விவாதிக்கவோ நமக்கு அவசியம் இல்லை;எனவே கடுமையாக எதிர்க்கிறோம்;இரண்டில் ஒன்று பார்த்துவிடுவோம்.ஏதுமறியாதோர்க்கு மட்டுமே நிதானமாகக் கற்பிக்கமுடியும்;இவர்களைப் போல வஞ்சிக்கும் சாத்தான்களை முளையிலேயே கிள்ளியெறியவேண்டும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// இயேசுவின் போதனைகளின்படி, கற்பனைகளின்படி நடப்பதுதான் பிதாவின் சித்தம். ஆனால் நம்மில் அனேகர், இயேசுவின் கற்பனைகளின்படி நடப்பதற்குத் தீவிரப்படாமல், இயேசுவை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே எனச் சொல்லத்தான் தீவிரப்படுகிறோம். குறிப்பாக “உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரையே ஆராதனை செய்வாயாக” எனக் கூறின அவரது வார்த்தைக்கு எதிராக, அவரையே ஆராதிக்கவும் தீவிரப்படுகிறோம்.//

மேய்ச்சல் அற்றுப் போன, (மேசியாவின்) எதிரிகளே,மற்ற தீர்க்கதரிசிகள் புனிதர்களைப் போலவே இயேசுவானவரையும் அவன் இவன் என்று ஒருமையிலேயே அழைக்கலாமா என்றும் சொல்லிவிட்டால் கொஞ்சம் வசதியாக இருக்கும்..!





__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Anbu@
  • மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
இவ்வசனம் ஒரு வாக்குத்தத்தமாகவும் உள்ளது, எச்சரிக்கையாகவும் உள்ளது.

பரலோகத்திலுள்ள பிதாவின் சித்தப்படி செய்பவன் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான் என்பது ஒரு வாக்குத்தத்தமாக உள்ளது. அதேவேளையில் பிதாவின் சித்தப்படி செய்பவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பான் எனச் சொல்வதால், பிதாவின் சித்தப்படி செய்யாதவன் பரலோகராஜ்யம் பிரவேசிக்கமாட்டான் எனும் எச்சரிக்கையும் இவ்வசனத்தில் அடங்கியுள்ளது.

பிதாவின் சித்தம் என்பது என்ன? அதாவது மனிதன் என்ன செய்யவேண்டும் என பிதாவானவர் விரும்புகிறார், அல்லது எதிர்பார்க்கிறார்?

பழையஏற்பாட்டுக் காலத்தில் மோசே மூலம் அவர் சொன்ன கற்பனைகள் மற்றும் கட்டளைகளின்படி மனிதன் நடப்பதுதான் அவரது விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் இருந்தது; ஆனால் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் அவரது எதிர்பார்ப்பு மற்றும் விருப்பம் என்னவென்பதை அதே மோசே மூலம் அப்போதே சொல்லிவிட்டார். பின்வரும் வசனங்களில் அதைப் பற்றிய கட்டளை காணப்படுகிறது.

  • உபாகமம் 18:18,19 உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.
இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசி யார் என்பதை அறிய பின்வரும் வசனங்களைப் படிப்போம்.
  • அப்போஸ்தலர் 3:22-26 மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச்சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக. அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றான். சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள்.
  • நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடே பண்ணின உடன்படிக்கைக்கும் புத்திரராயிருக்கிறீர்கள். அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.
மோசே மூலம் தேவன் முன்னறிவித்த தீர்க்கதரிசி இயேசுவே என இவ்வசனங்கள் மூலம் அறிகிறோம். அந்த இயேசுவுக்கு நாம் செவிகொடுக்க வேண்டும் என்பதே பிதாவின் விருப்பம் மற்றும் எதிர்பார்ப்பு. மாத்திரமல்ல, இயேசுவுக்கு செவிகொடாதவன் நிர்மூலமாக்கப்படுவான் என எச்சரிக்கவும் செய்துள்ளார்.

இயேசுவுக்கு நாம் செவிகொடுக்க வேண்டும் எனும் தமது சித்தத்தை பின்வரும் வசனத்திலும் பிதாவானவர் கூறியுள்ளார்.
  • மத்தேயு 17:5 அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
எனவே, இயேசுவுக்கு நாம் செவிகொடுப்பதுதான் பிதாவின் சித்தம். அந்த சித்தத்தின்படி செய்யாதவன் நிச்சயம் பரலோக ராஜ்யம் போகமாட்டான்.

இயேசுவின் போதனைகளின்படி, கற்பனைகளின்படி நடப்பதுதான் பிதாவின் சித்தம். ஆனால் நம்மில் அனேகர், இயேசுவின் கற்பனைகளின்படி நடப்பதற்குத் தீவிரப்படாமல், இயேசுவை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே எனச் சொல்லத்தான் தீவிரப்படுகிறோம். குறிப்பாக “உன் தேவனாகிய கர்த்தர் ஒருவரையே ஆராதனை செய்வாயாக” எனக் கூறின அவரது வார்த்தைக்கு எதிராக, அவரையே ஆராதிக்கவும் தீவிரப்படுகிறோம்.

இயேசுவின் வார்த்தைக்கு எதிராக நடப்பவர்கள் நிர்மூலமாவார்கள் என மோசே மூலம் தேவன் சொன்னார்; இயேசுவுக்கு செவிகொடாததன் மூலம் பிதாவின் சித்தப்படி செய்யாதவர்கள் பரலோக ராஜ்யம் பிரவேசிக்கமாட்டார்கள் என இயேசு கூறியுள்ளார். இவ்வளவாய் வேதாகமம் நம்மை எச்சரித்துங்கூட, நம்மில் அனேகர் துணிகரமாக இயேசுவின் வார்த்தைகளை புறக்கணித்து வருகிறோம். இப்படிப்பட்ட நாம் நிச்சயமாக பரலோக ராஜ்யம் பிரவேசிக்க இயலாது என்பதை அறிவோமாக.


Reply from Chillsam:

  • "சர்ப்பத்தின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது. பாம்பாட்டிகள் விநோதமாய் ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்திற்குச் செவிகொடாதபடிக்குத் தன் காதை அடைக்கிற செவிட்டு விரியனைப்போல் இருக்கிறார்கள்."(சங்கீதம்.58:4 ,5 )
சில வசனங்களை நாம் இப்போதே எடுத்து சேமித்துவைக்கவேண்டியதாக இருக்கிறது;இல்லாவிட்டால் (மேசியாவின்) எதிரிகள் துணிகரங் கொண்டு இவற்றை நமக்கெதிராக ஏவுவார்கள்;மேற்கண்ட வசனத்தைப் போலவே நாமும் எவ்வளவு தான் வெவ்வேறு முறைகளில் விதம்விதமாக முயற்சித்தாலும் (மேசியாவின்) எதிரிகள் கொஞ்சமும் அசைந்து கொடுக்காமலும் நமக்கு தகுந்த பதிலைக் கொடுக்காமலும் தொடர்ந்து நம்முடைய நம்பிக்கைகளை அவதூறு செய்துகொண்டிருக்கிறார்;இதோ மிக அண்மையில் சில மணி நேரங்கள் முன்பாகக் கூட எத்தனை தைரியமாக இயேசுவானவரை தரந் தாழ்த்தி ஒரு மனுஷன் எழுதியிருக்கிறான் என்றால் கிறித்தவ மக்கள் கிறித்துவைப் போல நீடிய பொறுமையுடையவர்களாக இருக்கும் தைரியத்தில் தானே..? இவனையெல்லாம் எதிர்த்து எழுதி மானம் போகிற மாதிரியும் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகிற மாதிரியும் நாலு கேள்வி கேட்கவே தோன்றுகிறது;ஏனெனில் அத்தனை அக்கிரமத்தையும் செவிட்டு விரியனைப் போன்ற பாவனையுடன் அத்தனை நைச்சியமாக எழுதி பதித்துவிட்டு தூங்கப்போய் விட்டான்;இதற்கு நாங்கள் பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருக்கவேண்டும் அல்லவா? அது எப்படி முடியும்? அவன் தான் தீர்ப்பே எழுதிவிட்டு போய்விட்டானே? இனி யார் தீர்ப்பு செய்யமுடியும்? ஜைனுல் ஆபிதீன் இயேசுவை தீர்க்கதரிசி- அதாவது நபி என்று சொல்வதற்கும் இவன் சொல்வதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

பின்குறிப்பு: வேதத்தில் கூறப்படும் பரிசுத்தவான்களையே நாம் அவன், இவன் என்று தான் குறிப்பிடுகிறோம்;எனவே அதைவிட அதிகமான மரியாதையை யாருக்கும் கொடுக்க எனக்கு மனமில்லை;மன்னிக்கவும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
இயேசுவானவர் பிரதான தூதனாகிய மிகாவேலின் அவதாரமா.?
Permalink  
 


இந்த திரிக்கும் தலைப்புக்கும் காரணமாக அமைந்திருப்பது வழக்கம் போல (மேசியாவின்) எதிரிகளே;அவர்கள் கூட்டத்தில் புதிதாக இணைந்திருக்கும் தீவிர யெகோவா சாட்சி வெறியனான தேனீர் பூக்கள் எனும் எருக்கம்பூவானது மகா தீவிரமாக இயேசுவின் தெய்வத்துவத்தை தூஷித்தும் அவரை தேவையில்லாமல் பிரதான தூதனாகிய மிகாவேலுடன் ஒப்பிட்டும் எழுதிவருகிறது;அவர்கள் நெருப்புடன் விளையாடுவதை அறியாமல் தங்களுக்கும் தங்கள் சந்ததிக்கும் குழி தோண்டிக்கொண்டிருக்கிறார்கள்;அவர்கள் பாதாளமும் காரிருளும் இல்லையென்று சாதிப்பதால் அதைச் சொல்லியும் நாம் அவர்களை திருத்தமுடியாது;அவர்கள் சாமர்த்தியத்தை அவர்கள் பார்க்கட்டும்,நம்மால் இயன்றதை நாம் செய்வோம்;கர்த்தருடைய நாமத்தினால் நாம் மேற்கொள்ளுவோம்...

images?q=tbn:ANd9GcR1S6jTrxz6qgMHlig2YRepOfJXSDeC5PtZz9-HDO_5p4byXi8ktA220px-Guido_Reni_031.jpgimages?q=tbn:ANd9GcQsgEwhsMLmmdqFQU3EghtNFyLntl7bKW6VwLtRhbeXeP7WAz7K

http://en.wikipedia.org/wiki/Michael_%28archangel%29


எனது நேரங்கள் முழுவதுமே (மேசியாவின்) எதிரிகளுக்கு பதில் சொல்லுவதிலேயே சென்றுவிடுவதால் போதனையாக எதையும் எழுதமுடியவில்லை;எனவே இந்த குறிப்பிட்ட திரியை வித்தியாசமாக அமைத்துள்ளேன்;அதாவது பதில் சொல்லுவதுபோலவும் போதனையாகவும்;இதன் சிறப்பு என்னவெனில் போதனைக்கு இடையே (மேசியாவின்) எதிரிகளைக் குறித்த விமர்சனங்கள் இருந்தாலும் தாக்குதல்கள் இருக்காது; நான் செய்வதை எப்போது இன்னொருத்தன் காப்பியடிக்கிறானோ அப்போது நான் செய்வதை மாற்றிவிடுவேன்;அதுவே மாஸ்டர்ஸுக்கு மேன்மை;அதாவது நான் அடிக்கடி பயன்படுத்தும் துருபதேசம் எனும் வார்த்தையை நமக்கெதிராகவே பயன்படுத்த (மேசியாவின்) எதிரி துவங்கிவிட்டதால் இனி நான் அந்த வார்த்தையைத் தவிர்த்து இனி துருபதேசக்காரர்களை (மேசியாவின்) எதிரிகள் என்ற சொல்லால் அழைக்க இருக்கிறேன்;ஏனெனில் நான் அவர்களை துருபதேசம் என்றும் அவர்கள் என்னை துருபதேசம் என்றும் மாறி மாறி குறிப்பிட்டுக் கொண்டிருந்தால் வாசகர்களுக்கு சலிப்பும் சோர்வும் குழப்பமும் ஏற்பட வாய்ப்பாகும்;இனி நம்மை துருபதேசக்காரர்கள் என்று சொல்லும் உரிமையை அவர்களுக்கு விட்டுக் கொடுத்து நாம் அவர்களை (மேசியாவின்) எதிரிகள் என்று குறிப்பிடுவோம்;இந்த வார்த்தையையும் அவர்கள் பயன்படுத்தத் துவங்கினால் இதையும் நிறுத்திவிட்டு இன்னொரு புதிய வார்த்தையால் அவர்களை கௌரவப்படுத்தலாம்;அடியேன் பயன்படுத்தும் எந்தவொரு வார்த்தைக்கும் நான் காப்பிரைட் எடுத்துவைக்கவில்லை;அவைகள் அனைவருக்கும் பொதுவானதே;ஆனாலும் அடியேன் அதிகமாகப் பயன்படுத்தும் வார்த்தைகளையே (மேசியாவின்) எதிரிகள் நமக்கெதிராக பயன்படுத்துவது அவர்கள் மண்டையில் சரக்கு இல்லையென்பதையும் அவர்களது புத்தி துருபதேசத்தினால் மழுங்கிவிட்டதென்பதையுமே காட்டுகிறது.


முதலில் கோவை பெரியன்ஸ் இளங்கோவுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்;ஏனெனில்...
காட்டுக்கு தன்னைப் புதிய இராஜாவாக நிறுத்தி பாரம்பரியமாக இராஜாவாக இருந்த சிங்கத்தையே மிரள வைத்த நரியானது சாயத் தொட்டியில் விழுந்து எழுந்ததால் பெற்ற தனது புதிய மிரட்சியான தோற்றம் காட்டில் மழைபெய்ததும் கலைந்தது போலவும் பிறகு உயிர்தப்ப ஓடியது போலவும் உங்களுக்கும் சம்பவிக்கும் நாள் நெருங்குகிறது;மேலும் அதிர்ச்சிகரமான மற்றொரு செய்தி என்னவென்றால் நீங்கள் தற்போது உறவாடிக் கொண்டிருக்கும் தேனீர் பூக்கள் எனும் எருக்கம்பூவானது யேகோவா சாட்சிக் கூட்டத்திலிருந்து மலர்ந்த மலராக்கும்;ஆனால் நீங்கள் என்ன சொன்னீர்கள்,அவர்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை'யென்பதாக;இதிலிருந்து நாங்கள் அறிந்துகொண்டது யாதெனில் நீங்கள் போட்ட வேடம் கலைந்துவிட்டது;இதனை முன்னரே நீங்கள் செய்திருந்தால் நாங்கள் இத்தனை கஷ்டப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை;நீங்கள் மூடிமறைத்துப் பேசவும் உங்கள் சூழ்ச்சியினை அறிந்த நான் உங்கள் சுயரூபத்தை வெளியே கொண்டு வர உங்களைக் கோபப்படுத்தி எழுதி உங்களைத் தனிமைப்படுத்தவும் தற்போது உங்கள் சாயம் எல்லாம் வெளுத்து நீங்கள் முழுவதுமே  (மேசியாவின்) எதிரி என்பதை எல்லோருக்கும் தெரியப்படுத்த நான் இவ்வளவு சிரமப்பட்டேன்;கொஞ்சம் பின்னோக்கிப் பாருங்கள் ஐயா,கடந்த ஒருவருடம் முன்பு வரை நீங்கள் எந்த இடத்திலும் இயேசு தொழத்தக்கவரல்ல என்றும் அவர் முன்பு ஒரு காலத்தில் பிரதான தூதனாகிய மிகாவேல் தூதனாக இருந்தவர் என்றும் அவர் சிருஷ்டிகளை சிருஷ்டிப்பதற்காகப் பிதாவினால் சிருஷ்டிக்கப்பட்டவர் என்றும் வெளிப்படையாக எழுதியதே இல்லை;ஆனால் உங்களைப் போன்றவர்களிடம் நான் ஏற்கனவே பழகி விவாதித்த அனுபவத்தினால் உங்கள் சூழ்ச்சிகளைப் போட்டு உடைத்தேன்;இதனால் உங்கள் செயல்பாடுகள் முடக்கப்பட்டது;அதின் காரணமாக உங்கள் ஆட்களின் கோபம் முழுவதும் என்னை நோக்கி பாய்ந்தது;எனது நண்பர்களும் கூட என்னைப் புரிந்துகொள்ளாமல் என்னுடைய வைராக்கியத்தைப் பாராட்டாமலும் எனக்கு உதவிசெய்யாமலும் இருந்து அவர்களும் உங்களோடு சேர்ந்துகொண்டு என்னை தூஷித்தார்கள்;உங்கள் கூட்டணியின் மற்றொரு தொங்கு சதையான பெரியவர் அன்பு அவர்களை நான் ஆரம்பத்தில் தவறாக கணித்துவிட்டேன்;அவர் கற்பனையைப் பிரதானப்படுத்தி போதிக்கும் ஏழாம் நாள் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்று எண்ணினேன்;ஆனால் போகப் போகவே எனக்கு தெரியவந்தது,அவரும் இயேசுவை மறுதலிக்கும் உங்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர், என்பது.


எல்லாம் போகட்டும்,இனி நேர்த்தியானதொரு புதிய கோணத்தில் உங்களோடு போராடுவேன்;அதன் அடுத்தக்கட்ட விளைவையும் பார்க்கவே  போகிறீர்கள்;அதன் ஆரம்பமே இது...

(தொடரும்)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard