Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "இளம் பங்காளர் திட்டம்" எனும் மோசடி திட்டம்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: "இளம் பங்காளர் திட்டம்" எனும் மோசடி திட்டம்..!
Permalink  
 



ஒரு நிர்வாணத்தை வெளியரங்கமாக்கி விட்டு, அதற்குரிய விளக்கத்தையும் தெளிவையும் கொடுக்காமல் இருக்கும் கொஞ்ச நஞ்ச விசுவாசத்தையும் கெடுத்துவிட்டு அடுத்த நிர்வாணத்தை வெளியரங்கமாக்க துணிகரமாக ஓடுவதும் என்னைப் பொறுத்த வகையில் மலம் கலந்த அறுசுவை உணவே, அதை உண்பவர்களுக்கு நிர்வாணம் வேண்டுமானால் இரசிக்கக்கூடியதாக இருக்கும், ஆனால் படிப்பவர்கள் இரட்சிக்கப்படுவார்களா? என்பது கேள்விக்குறிதான்

ஊமையோ படிக்காதவனோ காதுகேளாதவனோ கூட சிலுவைபோன்ற ஒரு குறியை வரைந்துகாட்டினாலே அது இயேசுவையும் அவருடைய தியாகத்தையும் குறிக்கிறது என்று உணர்ந்து கொள்ளுவான்;அந்த அளவுக்கு கிறித்துவின் தியாகம் மனுக்குலத்தின் பெரும்பாலான மட்டங்களில் ஊடுறுவியிருக்கிறது;இதற்கு மாறாக உபதேசிக்கப்படும் எதுவுமே மலங்கலந்த உணவாக இருக்கும்போது அதுமுழுவதுமே புறக்கணிக்கப்படவேண்டியதாகும்; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாக இருக்கிறது; ஒத்தூதி ஒளியச் செய்வதே நிர்வாணமாக இருக்கிறது; கிறித்துவின் பந்தியிலும் பேலியாளின் பந்தியிலும் மாறிமாறி தனது பங்கை உறுதிசெய்துகொள்ள நினைக்கும் யூதாஸுகளை அடையாளம் காட்டும் பணியில் இன்னும் தீவிரமாகவே செயல்படுவோம்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Vijay@Tcs:

// அப்படிச் சொல்லுபவர்கள் கடைசி காலமாகிய இன்று அநேகர் இல்லை. ”நானே கிறிஸ்து” என்று என்று இயேசு தன்னைக் குறித்தே சொல்லுகிறார். அதாவது அவர்கள் “இயேசுவே கிறிஸ்து” என்றுதான் சொல்லுவார்கள்..//


நண்பர் விஜய் அவர்களே, நீங்கள் ஆண்டவரை மிகவும் நேசிப்பதால் வேண்டாதவற்றைப் பார்க்கிறதில்லை;ஆனால் நான் பார்த்து தொலைக்கிறேனே, என்ன செய்வது? அடியேன் மேற்கோள் காட்டியிருக்கும் தங்கள் வரிகளில் இன்றைக்கு யாரும் தங்களைக் கிறிஸ்து என்று சொல்லிக்கொள்வதில்லை என்கிறீர்கள்; ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் தங்களையே கிறித்து என்று மட்டுமல்ல, கிறித்துவுக்கு மேலாகவும் சொல்லிக் கொள்ளுகிறார்கள்; அதன் காரணமாகவே அவர்களால் தூதர்களையெல்லாம் சந்திக்கமுடிகிறதாம்..! நீங்கள் சலித்துக்கொள்ளாவிட்டால் சொல்கிறேன்,அவர்கள் வேறு யாருமல்ல,ஏஞ்சல் டிவி கூட்டத்தாரே..!

கோல்டா ஆதாரம் கேட்பார்,என்னிடம் ஆதாரம் இல்லை,ஆனால் நான் சொல்வது உண்மை என்பது எனது மனசாட்சிக்குத் தெரியும்;அந்த செய்தி ஆங்கிலத்தில் ஒரு இளம் போதகரால் வழங்கப்பட்டது; தமிழர்கள் யாரும் அதனை கவனித்திருக்க வாய்ப்பில்லை; கத்தோலிக்கம் எப்படி வட்டார வழக்கங்களைக் கொண்டே மதத்தை ஸ்தாபித்ததோ அதுபோலவே இந்த போக்கிலிகள் நம்முடைய ஜனத்தின் பெலவீனத்தை எடைபோட்டு நாடிபிடித்து அதற்கேற்ப நயமாகப் பேசி மக்களை ஏய்த்து மாய்க்கிறார்கள்..!

இந்த திருடர்களுக்கு துணைபோகும் அனைவரும் கூட்டுக்களவாளிகளே..! தேவ சித்தம், ஊழியம் என்று சந்தோஷ் எழுதுபவை அடிப்படையற்ற கூற்றாகும்;ஆண்டவர் தமது வேலையை செய்து முடிக்க இஸ்ரவேலரையே எப்போதும் சார்ந்திருக்கவில்லை;அவர் அசீரியனிலிருந்தும் பாபிலோனிலிருந்தும் ஏன் ரோமிலிருந்தும் கூட தமது நோக்கத்தை செய்து முடித்தார்; இதுபோல பசப்புவதால் நாங்கள் அவர்களையெல்லாம் நம்பிவிடமாட்டோன்;திருடனுக்கும் கொலைக்காரனுக்கும் காரோட்டும் அப்பாவி ஓட்டுநரும் கூட குற்றவாளி தானே..?

pgolda Wrote on 21-02-2011 21:23:29:

// கோல்டா
ஆதாரம் கேட்பார்,என்னிடம் ஆதாரம் இல்லை,ஆனால் நான் சொல்வது உண்மை என்பது எனது மனசாட்சிக்குத் தெரியும்;அந்த செய்தி ஆங்கிலத்தில் ஒரு இளம் போதகரால் வழங்கப்பட்டது..//

Who? ஆதாரம் இல்லாமல் ஏன் எதையும் சொல்றிங்க பிரதர் ஸில்லி சாம்!

எனது பெயர் சில்சாம் என்று தெளிவாகவே குறிப்பிட்டுள்ளேன்;இந்த (ஸில்லி ) கிண்டல் கேலியெல்லாம் என்னிடம் வேண்டாம்;நான் முன்வைத்திருக்கும் கருத்துக்கு எதிர்கருத்து இருந்தால் அதை மட்டும் பதிக்கவும்;வீணாகப் பிரச்சினை பண்ணினால் எனக்கும் பிரச்சினை பண்ணத் தெரியும் என்பதை கர்வத்துடன் சொல்லிக்கொள்ளுகிறேன்... ஆம்,பிரச்சினை பண்றவங்களுக்கு எப்படியெல்லாம் பிரச்சினை கொடுக்கமுடியுமோ அப்படியெல்லாம் பிரச்சினை கொடுத்து வருகிறேன்;ஆம் அதுவே எனது பொழுதுபோக்கு; இப்படியாக என்மீது தனிப்பட்ட முறையில் என்ன குற்றச்சாட்டு வைத்தாலும் மதிப்பீடு செய்தாலும் அவையெல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளுகிறேன்;ஆனால் நான் பகிரங்கப்படுத்தும் உண்மைகளை மட்டும் விலைபேசவேண்டாம்...விழிப்புணர்வு உண்டாக்கும் நோக்கத்துடன் நேரமெடுத்து பதிக்கப்படும் கருத்துக்களை நீர்த்துப்போகச்செய்யும் எந்தவொரு முயற்சியையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

chillsam Wrote on 13-02-2011 08:12:17:

// ஆனால் உங்களைப் போன்றோருடைய கருத்து என்னவென்றால், ரோட்டில் முள் கிடக்கட்டுமே நீங்கள் ஒதுங்கிப் போங்கள் என்பதாகவே இருக்கிறது  //

rajkumar_s Wrote on 13-02-2011 20:24:12:

அன்பு ஐயா, தாங்கள் என்னுடைய கருத்தை தவறாகப் புரிந்து கொண்டதாக நினைக்கிறேன். என்னுடைய கருத்து என்னவெனில் மறந்தும் கூட ஊழியர்களை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதாகும், ஒருவரை முன்மாதிரியாகக் கொள்ளக்கூடாது என்றால் அவர் நடவடிக்கைகளை கவனிக்கக் கூடாது காரணம் அவர்களுடைய நடவடிக்கைகளை நாம் ஆராய்ந்தால் ஒருவேளை அது நம்மையும் அறியாமல் தொற்றிக்கொள்ளுமோ என்ற அச்சம் தான். ஆகவே (ஊழியர்கள் மட்டுமல்ல என்னையும் சேர்த்து அனைத்து மனிதர்களையும் தான்) துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்ற பழமொழியின் படி விலகியோடிவிடுகிறேன்.


chillsam Wrote on 13-02-2011 08:12:17:

எந்த ஊழியரையும் ஆராய்வதோ குற்றப்படுத்துவதோ நம்முடைய பணியல்ல;அதுபோன்ற தீய‌நோக்கம் என்னைப் போன்றோருக்கு ஒருபோதும் கிடையவே கிடையாது;இதனால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை; பலருடைய வெறுப்பே பரிசாகக் கிடைக்கிறது;

இதை நான் ஒப்புக்கொள்கிறேன் அனேக முறை நானே இதற்காக உங்களை எதிர்த்திருக்கிறேன். இதற்கு காரணம் தாங்கள் சொல்லவருவது சிறப்பானதாக இருந்தாலும் சில கொக்கரிக்கும் வார்த்தைகளும்(சமீபகாலமாக சாந்தமாக எழுதி படிப்பவர்களுக்கு வெறுப்புண்டாகாத வகையில் எழுதுவதற்காக தேவனுக்கு நன்றிகள்), சரியான ஆதாரமில்லாமல் எழுதுவதாலும், எது சரி என்று (எனக்குத் தெரிந்த வகையில்) அதாவது சரியானதை அடையாளம் காட்டாததாலும் தான் எதிர்த்தேன்.

இதற்கு காரணம் ஒன்று நம்முடைய இருதயத்தில் சரி என்று பதிவாகியிருக்கும் போது, அது தவறு என்று அறியவரும் போது, அப்படியானால் சரி எது என்று அறியத் தூண்டப்படுவோம், அப்படி ஒன்று சுட்டிக்காட்டப்படாமல் போகுமானால் விசுவாசிகள் இன்னும் அதிகமாக குழம்பிப் போய் விடுவார்கள். இது என்னுடைய தனிப்பட்ட தாழ்மையான கருத்து தவறு இருந்தால் சொல்லுங்கள் மாற்றிக்கொள்ளுகிறேன்.

chillsam Wrote on 13-02-2011 08:12:17:

நான் ஆரம்பம் முதலாக நிர்ணயித்துக்கொண்ட விவாதப் பொருளானது ஆரோக்கிய உபதேசம் என்பதாகவே இருக்கிறது;வேதம் இப்படி சொல்லுகிறதே தலைவர்கள் இப்படி நடந்துகொள்ளுகிறார்களே அவர்களைப் பின்பற்றும் திரள்கூட்டத்துக்கு அவர்கள் உத்தரவாதம் தருவார்களா என்றே புலம்புகிறோம்.

இதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது, காரணம் எல்லோரும் செய்யும் தவறை நீங்களும் செய்கிறீர்கள். நமதாண்டவர் தம்முடைய சீஷர்களை நோக்கி உலகமெங்கும் போய் சகல ஜாதிகளையும் சீஷர்கள் ஆக்குங்கள் என்று சொன்னார். ஆனால் இன்று யார் இயேசுவின் சீஷர்களாக இருக்கிறார்கள்? எல்லாரும் விசுவாசிகளாக (போதகர்களுக்கு) அல்லவா இருக்கிறார்கள்

இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால் இன்னும் எத்தனை பேர் இரட்சிக்கப்பட்டு பலவருடங்கள் கழித்தும் பிரசங்கக் குறிப்புகள் எழுதுவதைப் பார்க்கிறோம்? இன்னும் அடிப்படை போதகங்களில்(எபி5:12) தடுமாறும் எத்தனை(என்னையும் சேர்த்து) பேரைப் பார்க்கிறோம்? இன்னும் சீஷத்துவத்தில் பாலுண்ணும் குழந்தைகளாக இருப்பதால் தானே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவர்களாக (எபி5:13)இருந்து இடைத்தரகர்களை (துர் உபதேச ஊழியர்கள்) நாட வேண்டியிருக்க்கிறது?

இன்று நீங்கள் விசுவாசிகளுக்கு விழிப்புணர்வு கொடுத்தால் சரியானது போல் தோன்றினாலும் அது சரியானது இல்லை மாறாக இப்படி யோசியுங்கள்... விழிப்புணர்வு தேவைப்படும் நபர்களே விழிப்புணர்வு ஊட்டுபவர்களாக (எபி5:14)மாறிவிட்டால்...?

இருட்டாக இருந்தால் தானே விளக்கு தேவை? எல்லாமே விளக்காக சுடர்விடுமானால் எதற்கு விளக்கு தேவை? அதாவது எல்லாருமே வேதம் வாசிப்பதிலும் தேவனோடு உறவாடுவதிலும் ஜெபிப்பதிலும் நிலைத்திருந்தால் போதுமே போலிகளின் பொறிகளில் விட்டில் பூச்சிகள் விழுந்து மாள்வது நின்று போகுமல்லவா?

ஆகவே இன்றைய கிறிஸ்துவர்களுக்கு தேவை விழிப்புணர்வு(ஆரோக்கிய) உபதேசமல்ல.... சீஷத்துவ உபதேசம்.... சீஷத்துவ ஊழியம்....

வாருங்கள் உலகமெங்கும் புறப்பட்டு போய் சகல ஜாதிகளையும் சீஷர்கள் (வெற்று விசுவாசிகள் அல்ல) ஆக்குவோம்...

இது என்னுடைய தனிப்பட்ட தாழ்மையான கருத்து தவறு இருந்தால் சொல்லவும் மாற்றிக்கொள்கிறேன்


Chillsam:

நண்பர் இராஜ்குமார் அவர்களைடைய கருத்தை வாசித்ததும் தொடரும் குறள்மொழி என் மனதில் தோன்றியது; இதோ அதனை கவனிப்போம், "இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு" ‍இதன் பொருள் மற்றும் சொல்லப்பட்ட சூழ்நிலை வேறாக‌ இருந்தாலும் நம்முடைய விவாதத்தில் பார்த்தால் ஆத்தும ஆதாயம் அதாவது சீஷத்துவ பணி என்பது சந்தேகமில்லாமல் அதுவே சிறந்தது; ஆனால் எதைச் சொல்லி ஆத்துமாக்களை ஆதாயம் செய்கிறீர்கள் என்பதைவிட அவர்களை எவ்வாறு தக்க வைக்கிறீர்கள் என்பதே பெரும் போராட்டமாகும்; அதற்கு உதவுவதே ஆரோக்கிய உபதேசம்; ஆரோக்கிய உபதேசத்துக்கு விரோதமானதும் குழப்பம் விளைவிப்பதுவும் துருபதேசம் அல்லது கள்ள உபதேசம் எனப்படுகிறது.

தற்காலத்தில் அனைவரும் அதாவது (மேசியாவின்) எதிரிகளும் சீஷத்துவ பணியினை மேற்கொள்ளுகின்றனர்; நான் சென்று வந்த சில தளங்களிலிருந்து யெகோவா சாட்சியினரின் புத்தகங்களையும் மார்மனிஸ்ம் சம்பந்தமான புத்தகங்களையும் மேலும் ஏழாம் நாள் காரர்களின் புத்தகங்களையும் ப்ரன்ஹாம் எனும் பிரபலமான கள்ளத்தீர்க்கதரிசியின் புத்தகங்களையும் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறேன்; அவற்றைக் குறித்து நான் சம்பந்தப்பட்டவரிடமிருந்து எடுத்துக்கொண்டு வரும்போது, அவற்றை ஏன் படிக்கக்கூடாது என்பதற்கான‌ நியாயமான காரணம் சொல்ல வேண்டுமல்லவா? அல்லது அவற்றைப் படித்த பாதிப்பில் என்னிடம் சுற்றி வளைத்து கேள்விகளை அடுக்கும் உங்கள் சீஷனுக்கு நான் தகுந்த பிரதியுத்தரம் சொல்ல வேண்டுமல்லவா?

பொருளை விற்பது மாத்திரமே உங்கள் வேலை என்றால் அந்த பொருளை விற்றதால் உண்டான குப்பைகளை யார் அகற்றுவது? உதாரணத்துக்கு கோயம்பேடு மார்க்கெட்டுக்குச் சென்று பாருங்கள்..!

எனவே சீஷத்துவ பணியில் அயராது போராடும் உங்களைப் போன்றோரும் சபைக்கு அவசியம்; அறிவூட்டி செறிவூட்டும் பணியிலிருக்கும் ஆரோக்கிய உபதேசிகளும் அவசியமாகும்.

தவறை அடையாளம் காட்டுவது மாத்திரமே நம்முடைய வேலையல்ல, சரியானது எது என்பதைக் கூறுவதும் நம்முடைய பொறுப்பாகும்; தவறானதை அடையாளங் காண உதவும் வேதம் சரியானதற்கொரு சரியான உதாரணமாகும்; வேதத்தையே சரியான மாற்றாக அடையாளம் காட்டுகிறோம்;ஒரு மனிதனையல்ல‌; வேத வாக்கியங்களை ஒரு மனுஷன் ஆராயத் துவங்கிவிட்டால் அவன் மனுஷ போதகங்களுக்கு ஒருபோதும் செவி சாய்க்கவே மாட்டான்; இங்கே பெருகியிருக்கும் அனைத்து பிரச்சினைக்கும் அடிப்படை காரணம் வேத வார்த்தைகளைக் குறித்த கரிசனையில்லாமையே; காரணம்,கள்ள உபதேசிகள் ஒரு போதும் வேதத்தை வாசிக்க அனுமதிப்பதேயில்லை; வேதத்தை வாசிப்பது என்பது வியாக்கியானம் செய்வதல்ல; இயல்பாக வாசிப்பது; வியாக்கியானம் செய்யும்போதே பல்வேறு குழப்பங்கள் வருகிறது அல்லவா?

ஒரு பிரபலமான மிஷினரி இயக்கத்தின் ஸ்தாபகர் மிக எளிமையாக தனது விசுவாசத்தை இப்படியாக அறிக்கையிடுகிறார், "வருகையைக் குறித்த பல்வேறு இரகசியங்களை ஆராய்ந்து எனக்கு பிரயோஜனம்? நாம் எதிர்பார்த்திருக்கும் இரட்சகர் வந்தால் என்னை அவருடன் அழைத்துச் செல்லப்போகிறார்,அவர் வருவதற்குள் நான் மரித்தால் அவரிடம் போகப்போகிறேன்,இதில் ஏன் வேண்டாத சர்ச்சைகள் " என்பதாக‌.

நான் இங்கே விவாதிக்கும் எந்தவொரு சர்ச்சைக்குரிய காரியத்தையும் குறித்து அவரிடம் எதுவும் பேசவே முடியாது; காரணம் இதில் அவருக்கு ஆர்வம் இல்லை; இப்படியும் சிலர் இருக்கிறார்கள்; இதில் நான் யாரையும் உயர்த்தியும் தாழ்த்தியும் கருத்து கூறவிரும்பவில்லை.

மற்றவை பிறகு.!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Quote@Tcs:ஊழியர்களைக் குறித்து ஆராய்வதே அருவருப்பானது என்று@ நினைக்கிறவன் நான்.

நண்பர் இராஜ்குமார் அவர்களைப் போன்ற மென்மையான இதயம் கொண்டவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது யாதெனில் எந்த ஊழியரையும் ஆராய்வதோ குற்றப்படுத்துவதோ நம்முடைய பணியல்ல;அதுபோன்ற தீய‌நோக்கம் என்னைப் போன்றோருக்கு ஒருபோதும் கிடையவே கிடையாது;இதனால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை;மாறாக பலருடைய வெறுப்பே பரிசாகக் கிடைக்கிறது;ஆனால் நான் ஆரம்பம் முதலாக நிர்ணயித்துக்கொண்ட விவாதப் பொருளானது ஆரோக்கிய உபதேசம் என்பதாகவே இருக்கிறது;வேதம் இப்படி சொல்லுகிறதே தலைவர்கள் இப்படி நடந்துகொள்ளுகிறார்களே அவர்களைப் பின்பற்றும் திரள்கூட்டத்துக்கு அவர்கள் உத்தரவாதம் தருவார்களா என்றே புலம்புகிறோம்.

ஆனால் உங்களைப் போன்றோருடைய கருத்து என்னவென்றால், ரோட்டில் முள் கிடக்கட்டுமே நீங்கள் ஒதுங்கிப் போங்கள் என்பதாகவே இருக்கிறது; இது நம்முடைய பொறுப்பின்மையையே காட்டுகிறது;ஒரு திரைப்பட நகைச்சுவைக் காட்சியில் "இது உங்கள் சொத்து" என்று அரசு பேருத்தில் போட்டிருக்கும்,அதையே காரணம் காட்டி ஒருத்தன் விலைபேசி விற்றுவிடுவான்; அதுபோன்ற ஊழியத்தையே என் தலைவர்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

தமிழ்க் கிறித்தவ தளத்தில் திரு.இராஜ்குமார் அவர்களின் வாக்குமூலம்..!

pgolda Wrote on 05-02-2011 20:09:23:

// சகோ. அற்புதம் கூட பக்கத்தில் இருந்து பார்த்து நிறைய ஆதாரம் collect பண்ணி வைத்திருப்பதாக சொன்னாரே! //


மத்தவங்க collect ‍ பன்னி வச்சிருக்க ஆதாரம் எல்லாம் தெரியாது, எனக்கே ஏற்பட்ட ஒரு அனுபவத்தை ஆதாரமாக இங்கே சொல்லாம் என்று நினைக்கிறேன்.

2007 ஆம் ஆண்டு எனக்குப் பதவி உயர்வு வேண்டும் என்று மிக பலமாகப் போராடினேன்,(காரணம் தொடர்ந்து 2 வருஷம் (target‍ ‍ஐ முடிப்பதில்) தமிழ் நாட்டிலேயே முதலாவதாக வந்தேனாக்கும்). ஆனால் சிலருடைய கள்ளத்தணத்தாலும் என்னுடைய மேலதிகாரிகளின் சுய நலத்தாலும் (No1 Barnch என்ற பெருமை போய்விடுமோ என்று பயந்ததினால் என்று பின்னர் தெரிந்து கொண்டேன்). பதவி உயர்வு மறுக்கப்பட்டது

வாழ்க்கையை வெறுத்த நான் பல பூசைகளைச் செய்தேன். பலன் இல்லை வல்லமையான ஊழியர் ஒருவரின் கூட்டத்துக்கு கடைசி முயற்சியாக சென்றேன். உண்மையாக கண்ணீர் விட்டு ஜெபித்தேன்(முதல் முறையாக), அடுத்த ஒரு மாதத்துக்குள் நான் வெறுத்த அதே நிறுவனத்திலிருந்து ஒரு அழைப்பு புதிதாக ஒரு பதவியை உருவாக்கியிருக்கிறோம் அதற்கு நீதான் சரியானவன் என்று நினைக்கிறோம் என்று வந்தது அது.

நான் போராடிக் கேட்டதை விட 3 மடங்கு உயர் பதவி அது ஆச்சரியப்பட்டு எனக்கு வந்த letter ‍ ஐயும், Appointment letter ‍ ஐயும் தூக்கிக் கொண்டு கூட்டம் நடந்த இடத்திற்கு ஓடினேன். எழுதிக் கொடுங்கள் என்றார்கள்

எழுதிக் கொடுத்தேன், பிறகு வந்துவிட்டேன். 15 நாள் கழித்து ஒரு அங்கிருந்து ஒரு போன் உங்கள் சாட்சியைப் படித்த ‍‍‍‍_______ உங்களை சந்திக்க விரும்புகிறார். ___ தேதியில் ‍‍___ மணிக்கு நெரில் வரவும்.


மிகுந்த சந்தோஷம் அடைந்தேன், சந்தித்தேன் எனக்காக ஜெபித்தார். இன்று வரை அவர் என்ன சொல்லி ஜெபித்தாரோ அதுதான் என் வாழ்க்கையில் நடந்து வருகிறது.

அவருடைய அடுத்த கூட்டத்தில் சாட்சி சொல்ல அழைக்கப்பட்டேன்,

சாட்சி நேரத்திற்கு முன்னால் ஒரு அம்மா வந்தார் உன் சாட்சி என்ன என்றார் சொன்னேன், இப்படிச் சொன்னால் நல்லா இல்ல நீ படிச்சு முடிச்சு 2 வருசமா வேலையில்லாம கஷ்டப்பட்ட இங்க வந்து ஜெபிச்சதனாலால உனக்கு வேல கெடச்சது உன் முதல் மாச சம்பளத்தை ‍______‍ திட்டத்திற்கு கொடுப்பேன் என்று சொல் என்று அறிவுரை கூறினார்.


முதல் முறையாக மேடையேறுவதாலும், முன்னால் இருந்த ஆயிரக்கணக்கான மக்களைப் பார்த்த பயத்தாலும் எனக்கு நாக்கெல்லாம் வரண்டு போய்விட்டது. பயத்தில் அந்த அம்மாள் சொல்லிக்கொடுத்தெல்லாம் மறந்துவிட‌

என் உண்மை சாட்சியை சொல்லிவிட்டு மேடயை விட்டு இறங்கி முன் வரிசையில் அமர்ந்து கொள்ள என்னை அழைத்து சாட்சி சொல்ல டிரைனிங் கொடுத்தவரிடம் இந்த கூட்டத்தின் C.D. ‍‍ வேண்டும் என்று கேட்க,

சீ.டி.யும் சில நாட்களில் வந்து சேர்ந்தது, ஆனால் அதில் என்னுடைய சாட்சி மட்டும் காணாமல் போயிருந்தது

நன்றி


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

புரியலே கொல்வின்,சோர்ந்துவிட்டீர்களோ..?
மனசைவிட்டு ஏதாவது சொல்லுங்களேன், Please..!

தினகரன் குடும்பத்தினர் மீதுள்ள மதிப்பில் அவர்களின் குறைபாடுகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள் என எண்ணுகிறேன்

//என்னைப் போன்றோர் மிகப் பெரிய ஸ்தாபனங்களை எதிர்ப்பதைவிட சிறுகுழுக்களிடமிருந்து ஒரு சில அப்பாவிகளை மீட்பதையே பிரதானமாகக் கருதுகிறோம்;//

பெரிய குழுவினரை எதிரப்பதை விட சிறுகுழுவினரை எதிரப்பது உசிதமானது எழுதியிருக்கீறீர்களே அதைதான் கூறினேன்.

இவர்களின் தீரக்கதரிசனங்கள், தவறான உபதேசங்கள் குறித்து கண்டும் காணாது பல தடவைகள் விட்டுவிடுகிறீர்களே!.




__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

நண்பரே தங்கள் பங்களிப்புக்கு நன்றி; தங்கள் கருத்து எனக்கு நேராகவே வந்தது என்ற எண்ணத்தில் சில கருத்துக்களை முன்வைக்கிறேன்;நான் எழுதியுள்ள எனது அனுபவத்தை மீண்டும் வாசித்துப் பாருங்கள்;அதில் அவிசுவாசத்துடன் இளம் பங்காளர் திட்டத்தில் எனது சகோதரர் இணைந்ததாக ஏதாவது எழுதியிருக்கிறேனா..? அரசாங்கத்தின் இலவசத் திட்டங்களுடன் நம்முடைய கிறித்தவ விசுவாசத்தை எப்படி ஒப்பிடுகிறீர்கள் என்று சற்று விளக்கினால் நல்லது.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 6
Date:
"இளம் பங்காளர் திட்டம்" எனும் மோசடி திட்டம்..!
Permalink  
 


சகோதரரே உங்களுக்கு ஓன்று சொல்லிக்கொள்ளுகிறேன் அரசாங்கத்திலிருந்து இலவச வேட்டி சட்டை தாராங்க என்றால் டோக்கன் வாங்க ஒரு பத்து ரூபா கட்ட சொன்னால் எதுவும் கேட்பதில்லை அன்றோ? ஆனால் ஒரு ஊழியர் கர்த்தருடைய நாமத்தினால் இளம் பங்காளர் திட்டம் போன்ற பொன்னான திட்டங்களுக்கு மட்டும் வசனத்தை தேடுகிறாயே அங்கே வேட்டி சட்டை கிடைப்பது மாயையான கன்களினால் கண்டு விசுவாசிக்கின்றையல்லவா? இங்கயும் உனக்கு உன் விசுவாசத்தின்படி உனக்கு தேவன் சகோதரர் D G S முலம் உரைத்த ஆசிர்வாதங்களை கட்டளைய்டுவார் இதனையும் விசுவாசிக்கவும்.

images?q=tbn:ANd9GcSXQD3S0rRbwyppeBpvhgm6QnpLWx65b_pooag4NPSmyW0wDhz5q2ozUMqY-A


__________________
navarajan


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: "இளம் பங்காளர் திட்டம்" எனும் மோசடி திட்டம்..!
Permalink  
 


புரியலே கொல்வின்,சோர்ந்துவிட்டீர்களோ..?
மனசைவிட்டு ஏதாவது சொல்லுங்களேன், Please..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 


//என்னைப் போன்றோர் மிகப் பெரிய ஸ்தாபனங்களை எதிர்ப்பதைவிட சிறுகுழுக்களிடமிருந்து ஒரு சில அப்பாவிகளை மீட்பதையே பிரதானமாகக் கருதுகிறோம்;//
நல்ல வாக்குமூலம் மிக்க நன்றி.


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// உங்கள் சகோதர‌ருக்கே இது விடயத்தில் ஆலோசனை சொல்ல முடியாத நீங்கள் பிறருக்கு எப்படி இத்தகைய மோசடித் திட்டங்கள் குறித்து அறிவுரை கூற இயலும் என நினைக்கிறீர்கள்.... முதலில் சொந்த சகோதரனை இரட்சிப்புக்குள் வழிநடத்துங்கள். பின்னர் பால் தினகரன் குடும்பத்தின் மோசடிகளை எழுதுங்கள். அதற்கு பின் மற்றவர்களை பற்றி பிறகு பார்க்கலாம். //

கொல்வின் அவர்களே, நான் எனது சகோதரரைக் குறித்து எழுதியதைக் குறித்து வருந்தும் அளவுக்கு செய்தியின் மையத்தை விட்டு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறீர்கள்; இங்கே நான் எனது சகோதரரை விவாதப் பொருளாக்க விரும்பவில்லை; அது என் தனிப்பட்ட குடும்ப விவகாரமாகும்; எனவே நமது எல்லைகளைக் குறித்து கவனமாக இருப்போம்; எனது சகோதரரை இரட்சிப்புக்குள் வழிநடத்துவதில் எனக்கு இருக்கும் அக்கறை வேறு யாருக்கு இருக்கமுடியும்? முதலில் உன்னை இரட்சித்துக் கொண்டு பிறகு எங்களையும் காப்பாற்று என்று சிலுவையிலறையப்பட்ட இயேசுவானவரை இகழ்ந்தவர்களின் தொனி உங்கள் எழுத்துக்களில் தெறிக்கிறது.

நான் எடுத்துக்கொண்ட பிரச்சினையும் சொல்லவந்த செய்தியும் இளம் பங்காளர் திட்டம் நல்லதா கெட்டதா என்பதல்ல என்பதை எனது கட்டுரையிலேயே சொல்லிவிட்டேன்; ஆனால் இதனை அனுபவப் பாடமாக‌ மாத்திரம் கொள்ளாமல் விவாதமாகவும் யாரோ சிலரை தூஷிக்கவும் பயன்படுத்துவது முறையல்ல; நான் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டது போல இயேசு அழைக்கிறார் ஊழியம் கிறித்தவர்களை நம்பி நடைபெறவில்லை; அதன் ஆதரவாளர்களில் பெரும்பகுதியானவர்கள் வேற்று மார்க்கத்தைச் சார்ந்தவர்களாவர்; அல்லது முறைப்படுத்தப்படா மார்க்கத்தைச் சார்ந்தவர்கள்.

ஒரே நாளில் ஒரு சட்டத்தின் மூலமோ அல்லது ஏதோ ஒரு கலவரத்தின் மூலமோ ஒரு ஊழியத்தையே அழித்துவிடமுடியும் என்றா எண்ணுகிறீர்கள்? அப்படியானால் ஆதாமை அன்றைக்கே அழித்துவிட்டு வேறு நல்ல உலகை ஆண்டவர் படைத்திருக்கலாமே? இன்னும் நோவாவின் குடும்பத்தையுங் கூட காப்பாற்றியிருக்க வேண்டிய அவசியமில்லை;நோவாவுக்குக் கர்த்தருடைய கண்களில் கிடைத்த கிருபை அதற்கு முழு தகுதியுமில்லாத அவருடைய மூன்று பையன்களுக்கும் அவர்தம் மனைவியருக்கும் கிடைத்ததல்லவா?

நாம் இங்கே ஏற்படுத்த முயற்சிப்பது கருத்தாக்கத்தையும் கருத்தொற்றுமையையுமே; கலகத்தையும் கலக்கத்தையும் கலவரத்தையுமல்ல‌.

இங்கே எங்கள் சமுதாயத்தில் தங்கள் சம்பாத்தியத்தை பல்வேறு வகைகளில் மக்கள் செலவிடுகின்றனர்; பெரும்பகுதியான பணமானது கேளிக்கைகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் பூஜைகளுக்குமே செலவிடப்படுகிறது; சேமிப்பு என்பதைவிட பெருமைக்காக கடன் வாங்கி செலவிட்டு பிறகு அதன் பாதிப்பினால் புலம்புவோர் அதிகம்; யாருக்கும் யார் மீதும் அக்கறை கிடையாது; அவர்கள் சேமிப்புக்காகத் தேர்ந்தெடுக்கும் முறைகளும் நேர்மையானதாக இல்லாததால் அதிலும் நட்டங்களும் குழப்பங்களும் தோல்விகளுமே ஏற்படுகிறது.

உதாரணத்துக்கு ஒரு சாதாரண சுமை சுமக்கும் கூலியாள் வீட்டில் கூட டிவி எனும் பொழுதுபோக்கு சாதனம் இருக்கிறது;அதற்கு மாத்திரமே ஒரு மாதத்துக்கு சராசரியாக ரூபாய் 250 செலவிடப்படுகிறது;வாராவாரம் சாமி பூஜைக்கு மாத்திரமே குறைந்தது 100, ஆக மாதத்துக்கு 400 ரூபாய் ஆகிவிடும்;அதிலும் குடும்பமாக எங்காவது அருகிலிருக்கும் ஒரு கோவிலுக்கு சென்று வந்தாலும் எப்படியும் குறைந்த பட்சமாக 2000 ரூபாய் ஆகிவிடும்;மேலும் ஸ்பெஷல் நேர்த்தி கடன், புண்ணிய க்ஷேத்திர பயணம் மற்றும் தான தர்மங்களுக்கென்று ஒரு வருடத்துக்கு சுமார் 10,000 ரூபாய் செலவிடுகிறோம்;அதற்கும் மேலாக ஜாதகம் ஜோதிடம் குறிகேட்டல் பரிகாரப் பூஜைகள் என திடீர் செலவுகளும் 5000 ரூபாய்க்கு குறையாமலும் அதிகப்பட்சம் 50,000 ரூபாய் வரையிலும் ஆகிறது;இதையெல்லாம் தவிர வீட்டுத் தலைவரின் சந்தோஷ செலவுகள் மதுபானம் மற்றும் இத்தியாதி செலவுகளுக்கு ஒரு மாதத்துக்கு எப்படியும் 5000 ரூபாய் தேவைப்படும்; இன்னும் மருத்துவ செலவுகள் - விபத்துகளால் உண்டாகும் செலவுகளையும் கணக்கில் கொள்ளவேண்டும்; இவ்வளவும் ஜீவாதார செலவுகளான உணவு இருப்பிடம் உடை மற்றும் பிள்ளைகளின் கல்வியையும் எதிர்காலத்தையும் கணக்கில் கொள்ளாத செலவினங்கள்; இதுவே இன்றைய சாமான்ய கூலியாளின் வாழ்க்கை முறை..!

இந்த செலவுகளையும் சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்து மாண்டு போவோர் எத்தனை பேர், அல்லது இதிலிருந்து மீள விபச்சாரம் மற்றும் திருட்டு, இலஞ்சம் ஆகிய கீழ்த்தரமான வாழ்க்கை முறையை நோக்கி நழுவிச் செல்வோர் எத்தனை பேர்?

இப்படிப்பட்டவர்களே கிறித்தவ ஊழியர்களின் இலக்கு;இவர்களுடைய வாழ்க்கையில் பெறும் சிறு நம்பிக்கை கீற்றுங் கூட காலாகாலத்துக்கும் அவர்களை கிறித்தவ ஊழியர்களின் பின்னே போக வைத்துவிடுகிறது.


சரி,மறுபுறத்தில் ஒரு ஊழிய ஸ்தாபனத்தை நடத்திச் செல்ல தங்கள் பேர் புகழைக் காப்பாற்றிக் கொள்ள நிறைய பணம் வேண்டும்;எனவே தங்களால் ஈர்க்கப்பட்ட மக்களிடமிருக்கும் பணத்தைக் குறிவைத்து திட்டங்களை தயாரிக்கிறார்கள்;ஏனெனில் ஒரு சபைக்குக் கட்டுப்பட்டவர்கள் தங்கள் சபையை தங்கள் சம்பாத்தியத்தினால் தாங்குவார்கள்;ஆனால் சபைக்குட்படாமலும் மதம் மாற விரும்பாமலும் இறைவன் அருள் மாத்திரம் இருந்தால் மட்டும் போதும் என்று எண்ணும் புதியவர்கள் முழு சத்தியத்தை அறியும்வரை அவர்களுக்கான தற்காலிக பராமரிப்பு ஸ்தலம் தேவைப்படுகிறது;அப்படிப்பட்ட இடைவெளியை அதாவது இயேசுவின் அற்புத சக்தியை உணர்ந்தும் அவருடைய தெய்வீகத் தன்மையை அறிந்தும் உடனடியாக மதம் மாற விரும்பாதவர்களின் தேவையை இதுபோன்ற சுயாதீன ஊழியங்கள் நிரப்புகிறது;இது சரியா தவறா என்று நான் தீர்ப்பு செய்யவில்லை;ஆனால் அதுவே தற்போதய நிலவரம்; சரி,இதுபோன்ற தற்காலிக முகாம்களும் (அகதிகள் முகாம் என்றே வைத்துக்கொள்ளுவோம்..!)  இராதிருந்தால் நிலைமை என்னவாகும்?

எனவே சீர்திருத்தல் நிறைவேறும் வரைக்கும் இயேசு அழைக்கிறார் ஊழியமும் தன் பங்கை நிறைவேற்றும்;அந்த ஊழியத்தின் தேவைகளுக்காக புதுப்புது திட்டங்களை யோசித்து ஆண்டவர் பெயரால் அறிவிக்கிறார்கள்;அதில் அவரவர் விரும்பி இணைகிறார்கள்; யாரும் மிரட்டவோ வற்புறுத்தப்படவோ இல்லை; நம்பிக்கை பெருகும் அளவுக்கு பணமும் பெருகுகிறது; பணம் பெருகினால் வழக்கமாகவே பெருகக்கூடிய பெருமையும் ஏனையோரின் பொறாமையும் தவிர்க்க இயலாத அளவில் பெருகுகிறது.

உதாரணமாக இளம் பங்காளர் திட்டத்துக்காக ஒரு குடும்பம் ஒரு பிள்ளைக்காக செலுத்தும் மாதா மாதம் செலுத்தும் 100 ரூபாய்க்கு அல்லது வருடத்துக்கு 1200 ரூபாய்க்கு மாதா மாதம் அஞ்சல் செலவுக்கும்  மற்றும் அலுவலக செலவுக்கும் எப்படியும் ஒரு வருடத்துக்கு 500 ரூபாய் செலவிடப்படும்; மறுபுறத்தில் இந்த குடும்பத்துக்கு ஒருவித ஆத்மதிருப்தி ஏற்பட்டதன் காரணமாக சற்று சௌகரியமாகவும் மனோ தைரியத்துடனும் வாழ்கிறார்கள்;அவர்கள் முன்பு செய்து வந்த எத்தனையோ பூஜைகளிலிருந்தும் அது சம்பந்தமான செலவுகளிலிருந்தும் விடுதலை கிடைத்துவிட்டதே அவர்களுக்கு பெரும் சந்தோஷம்.

மேலும் இயேசு அழைக்கிறார் எனும் ஸ்தாபனம் ஒரு சமுதாயம்  (Community) போல உருவாகியிருப்பதால் அதில் தானும் ஒரு உறுப்பினர் என்பதையும் அவர்களுடைய காலண்டரோ டைரியோ தன் வீட்டில் இருப்பதை
யும் அவர் பெருமையாக நினைக்கிறார்.

எல்லா அரசியல்வாதியும் மக்களுக்கு சேவை செய்வதற்காகவே தான் இருப்பதாகக் கூறினாலும் எல்லோரும் அப்படியில்லை என்பதற்காக அரசியல் அமைப்பையே குற்றஞ் சொல்லுவோமா?

இப்படியே நீதிமன்றங்களும் காவல் நிலையங்களும் அநீதியினாலும் கொடுமையினாலும் நிறைந்திருப்பதால் அவற்றை மூடிவிடமுடியுமா?

அதுபோலவே கிறித்துவின் இராஜ்யத்தில் ஒவ்வொரு ஊழிய ஸ்தாபனத்துக்கும் ஒரு சிறப்பான இடமும் விசேஷித்த தன்மையும் உண்டு;ஆனாலும் அவனவனுக்குரிய புகழ்ச்சி கர்த்தருடைய நாளில் விளங்கும்;அதுவரை ஊழியத்துக்காகப் பணம் சேகரிப்பதையோ புதிய திட்டங்களை அறிவிப்பதையோ தவறு என்று சொல்லமுடியாது;ஆனால் அதில் வெளிப்படைத் தன்மையும் பொதுத் தன்மையும் இல்லாததையே கண்டிக்க வேண்டும்.

போர்க்காலங்களிலும் இயற்கை சீற்றங்களின் போதும் அரசாங்கமே மக்களிடம் பணம் கேட்கிறது;அதுபோல ஊழிய ஸ்தாபனங்கள் தங்களிடம் எவ்வளவு தான் பணமிருந்தாலும் அவற்றை அசையா சொத்துக்களாகப் பதுக்கிவிட்டு, "என்றும் பரதேசியாக" பொதுமக்களிடம் பிச்சைகேட்டு நிற்பது வெட்கக்கேடானது; அதற்குக் காரணம் அவர்கள் தங்கள் சேமிப்பு குறையாமலும் இன்னும் பணம் சேர்க்கவும் வெறி கொள்ளுகிறார்கள்; தங்களிடம் குவியும் பணத்துக்கு தங்களையே அதிகாரிகளாக நினைத்துக்கொள்ளுகிறார்கள்; இதனைக் கண்டிப்பதால் இவர்கள் திருந்தப்போவதில்லை என்பதுடன் யாருக்கும் அடங்காமல் இவர்களிடம் அதிசயமாக அடங்கிவிட்ட புது விசுவாசி தடுமாறிப்போகிறார்; எனவே ஒரு குறிப்பிட்ட ஸ்தாபனத்தின் அபிமானியாக இருப்பவரை தடாலடியாகத் திருப்ப முயற்சிக்காமல் வேறு சில வழிமுறைகளைப் பின்ப‌ற்றியே திருப்பவேண்டும்.

இறுதியாக என்னுடைய பணியானது,வெளிப்படையாகத் தெரியும் மோசடியையும் எதிரியையும் சற்று தாமதமாகவும் சூழ்ச்சியுடன் மந்தையை சிதறடிக்க வெளியிலிருந்து ஊடுறுவும் எதிரியை தீவிரமாகவும் எதிர்க்கிறேன்.

கத்தோலிக்கமோ இஸ்லாமோ அல்லது வேறெந்த மார்க்கமோ வெளிப்படையாகத் தெரியவரும் எதிர் அமைப்புகளானால் உள்ளே இருந்து குழப்பமான இறையியல் கொள்கைகளையும் சம்சயங்களையும் தோற்றுவிக்கும் சிறுகுழுக்கள் மிகவும் ஆபத்தானவை.

என்னைப் போன்றோர் மிகப் பெரிய ஸ்தாபனங்களை எதிர்ப்பதைவிட சிறுகுழுக்களிடமிருந்து ஒரு சில அப்பாவிகளை மீட்பதையே பிரதானமாகக் கருதுகிறோம்;


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

உங்கள் சகோதருக்கே இது விடயத்தில் ஆலோசனை சொல்ல முடியாத நீங்கள் பிறருக்கு எப்படி இத்தகைய மோசடித் திட்டங்கள் குறித்து அறிவுரை கூற இயலும் என நினைக்கிறீர்கள்.

பால் தினகரன் மோடிப் பேர்வழி. அவரது தந்தையும் அவ்வாறானவரே! பரலோகத்திற்கு போய்விட்டு வருகிறவர்களாச்சே!.ஆண்டவருக்கு ஆலோசனை சொல்லும் கமிட்டியில் இவரின் தந்தை தலைவராக இருக்கிறார்.


பால் தினக்கரனின் 2011 தீரக்கதரிசனங்களை வாசிக்கவில்லையா? இது இவ்வளவு கேலிக்கிடமானது என்பது வாசிப்பவர்கள் புரிந்து கொள்வர்.  இவற்றையெல்லாம் கண்டித்து எழுதாத நீங்கள் மற்றவர்களைப் பற்றி விமர்சனத்தை மட்டும் தவறாது செய்து விடுவீர்கள். முதலில் சொந்த சகோதரனை இரட்சிப்புக்குள் வழிநடத்துங்கள். பின்னர் பால் தினகரன் குடும்பத்தின் மோசடிகளை எழுதுங்கள். அதற்கு பின் மற்றவர்களை பற்றி பிறகு பார்க்கலாம்.

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இங்கே நான் எழுதியிருப்பது "அனுபவங்கள்" என்ற பகுதியில் எனது சகோதரின் அனுபவமாகும்; இந்த திரியைக் குறித்து நித்திய ஜீவன் தள நிர்வாகியான பெரியவர் திரித்து கருத்து கூறுகிறார் ; இது ஏதோ என்னுடைய அனுபவம் போலவும் நானே ஏமாளி போலவும் இருக்கிறது அவருடைய வர்ணனை; இந்த சமூகத்தில் எல்லோருமே ஏதாவதொரு வகையில் யார் மூலமாகவாவது ஒவ்வொரு நாளும் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறோம் என்பதை பாவம் அந்த பெரியவர் அறிந்தாரில்லை.

இதோ பெரியவர் அன்பு அவர்களின் விமர்சனம்...


சில மனிதர்களுக்கு தீமையான ஒரு விஷயத்தை அறிகிற அறிவு அதைப் பார்த்த மாத்திரத்தில் வராது; அதன் மூலம் நேரடியாகப் பாதிக்கப்பட்டபின்னரே வரும். இதைத்தான் “பட்டபின் வரும் புத்தி”, அதாவது “பாதிக்கப்பட்டபின் வரும் புத்தி” எனப் பெரியவர்கள் சொல்வார்கள். இதற்கு ஒரு உதாரணமாய் சில்சாம் விளங்குகிறார்.


தேவஊழியர் எனச் சொல்லிக்கொள்ளும் ஒருவர், எப்போது தனது ஊழியத்துக்கு காணிக்கை கேட்கிறாரோ அப்போதே அவர் தேவஊழியர் எனப்படும் தகுதியை இழந்துபோவார் என்பதை சில்சாம் போன்ற பலர் அறியாததால்தான், அம்மாதிரி ஊழியர்களால் நேரடியாகப் பாதிக்கப்பட்டபின்னரே அவர்களின் மோசடி பற்றிய அறிவை அவர்கள் பெறுகின்றனர்.

சொல்லப்போனால், “பட்டபின்கூட” சில்சாமுக்கு புத்தி வரவில்லை என்றே தோன்றுகிறது. இளம் பங்காளர் திட்டத்திற்கு காணிக்கை கொடுத்து ஆதரித்த தனது சகோதரர், அத்திட்டத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பின்னர்கூட, அத்திட்டத்தைத் துவக்கிவைத்த காலஞ்சென்ற டி.ஜி.எஸ்.-தான் அத்திட்டத்தின் மோசடிகளுக்கு மூலகாரணர் என்பதை ஒப்புக்கொள்ள சில்சாமுக்கு மனமில்லை.

டி.ஜி.எஸ்-இடம் எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும், அவரது அன்பின் வார்த்தைகளினிமித்தம் அந்த முரண்பாடுகளை சில்சாம் பொருட்படுத்தாமல் இருந்தாராம். இச்சகப் பேச்சு மற்றும் வசனிப்பான பேச்சால் எப்படியெல்லாம் விசுவாசிகள் மதிமயங்குகின்றனர் என்பதற்கு சில்சாம் ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகிறார். அவர் ரோமர் 16:18; 1 தெச. 2:5; கலாத்தியர் 1:10 வசனங்களைப் படிப்பாராக.

மோசடி ஊழியர்களின் பிரதான சொத்தே “இச்சகமான பேச்சுதான்”. அதேவேளையில் அவ்வூழியர்கள் உருவாவதற்கு பிரதான காரணமும் விசுவாசிகளின் “இச்சைதான்”.

“இளம் பங்காளர் திட்டத்தை” ஆதரித்த தனது சகோதரருக்கு தற்போது உண்டான அவமானத்தால் படிப்பினை பெற்ற சில்சாம், அத்திட்டம் தொடங்கப்பட்டபோதோ அல்லது அவரது சகோதரர் அத்திட்டத்தில் தனது பிள்ளைகளை சேர்த்தபோதோ, இத்திட்டம் வேதத்துக்கு உட்பட்டதுதானா என சற்றேனும் சிந்தித்துப்பார்த்திருப்பாரா?

ஏசாயா 58:5-9 வசனங்களில் தேவன் சில காரியங்களைச் சொல்லி, அவற்றையெல்லாம் செய்பவன் தம்மை நோக்கிக் கூப்பிட்டால் தாம் உடனே மறுஉத்தரவு கொடுப்பதாகவும் அப்படிப்பட்டவனின் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும் எனவும் அருமையான வாக்குத்தத்தங்களைக் கொடுத்திருக்க, “இளம் பங்காளர் திட்டத்தில்” தனது பிள்ளைகளைச் சேர்த்தால் அவர்களுக்கு அபரிதமான ஆசீர்வாதம் உண்டாகும் என சில்சாமின் சகோதரர் நினைக்கக் காரணமென்ன?

தனது பிள்ளைகள் உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்களைப் பெறவேண்டும் எனும் “இச்சையை” வேதாகமம் காட்டும் வழியில் நிறைவேற்றுவதில் சில்சாமின் சகோதரருக்கு நம்பிக்கை இல்லாததால்தான், “இளம் பங்காளர் திட்டம்” போன்ற குறுக்கு வழியில், தனது இச்சையை நிறைவேற்ற அவர் நினைத்துள்ளார்.

ஏசாயா 58:8,9 வசனங்கள் மற்றும் அவை போன்ற ஏராளமான வசனங்களில் நம்பிக்கை உள்ளவர்கள், நிச்சயம் இம்மாதிரி திட்டத்தை நம்பமாட்டார்கள்.

இளம் பங்காளர் திட்டம் வேதத்துக்குப் புறம்பானதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க சில்சாம் முன்வரமாட்டாராம். ஆனால் அத்திட்டத்தை அறிவித்த டி.ஜி.எஸ். நல்ல ஊழியர்தான் எனச் சொல்லி அதை பறைசாற்றுவாராம்.

ஓர் ஊழியரின் ஒரு திட்டம் வேதத்துக்குப் புறம்பானதா இல்லையா என்பதை அறியாமல், அவ்வூழியர் நல்ல ஊழியரா அல்லது கள்ள ஊழியரா என்பதை எப்படித் தீர்மானிக்க முடியம்? ஓர் ஊழியர் கள்ள ஊழியர் என்பதை ஆராய்ந்து அறிந்தால்தானே மத்தேயு 7:15-ல் இயேசு கூறுகிறபடி, “கள்ள ஊழியர்களிடம்” எச்சரிக்கையாயிருக்க முடியும்?

உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை என்றும், உலகத்தார் உலகுக்குரியதைப் பேசுவார்கள் என்றும் வேதாகமம் சொல்லியிருக்க (யாக்கோபு 4:4; 1 யோவான் 4:5), இளம் பிள்ளைகளின் உலகத் தேவைகளை முன்னிறுத்தி அறிவிக்கப்பட்டுள்ள “இளம் பங்காளர் திட்டம்”, நிச்சயமாக வேதத்துக்குப் புறம்பானது என சில்சாம் அறியத் தவறியது எப்படி? அவரது சகோதரரும் அறியத் தவறியது எப்படி?

என்னைக் கேட்டால், சில்சாமும் சரி அவரது சகோதரரும் சரி, உலகத்தேவைகளை சற்றும் பொருட்படுத்தாதிருந்தால், நிச்சயமாக அத்திட்டம் வேதத்துக்குப் புறம்பானதுதான் என்பதை அறிந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் மனதில் உலகத்தைக் குறித்த இச்சை இருந்ததால்தான், உலகத்திற்குரிய அத்திட்டம் வேதத்துக்குப் புறம்பானது என்பதை அறியத் தவறியுள்ளனர்.

சில்சாமுங்கூட, மாணவர்களின் உலகத்தேவையான கல்விக்காக உபவாசமிருந்து ஜெபித்தவர்தான். அதனால்தான் “இளம் பங்காளர் திட்டம்” வேதத்துக்குப் புறம்பானது என அவரால் சொல்லமுடியவில்லை.

உலகத்தார் சொல்கிற உலகக்காரியங்களுக்கு உலகம் செவிகொடுக்கும் என 1 யோவான் 4:5 கூறுகிறபடியே, சில்சாமின் சகோதரர் “இளம் பங்காளர் திட்டத்துக்கு” செவிசாய்த்து, அத்திட்டதிற்கான கட்டணத்தை இயேசு அழைக்கிறார் நிறுவனத்திற்கு செலுத்தி, தனது பிள்ளைகளை அதில் சேர்த்துள்ளார். ஆனால் அந்தோ, அத்திட்டத்தால் அவரது பிள்ளைகள் “ஆசீர்வாதத்தைப்” பெற்றார்களோ இல்லையோ, அவர் தனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச ஆசீர்வாதத்தையும் இழந்து, தன் பிள்ளைகளின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கான திட்டத்திற்குக் கட்டணத்தைச் செலுத்த இயலாத நிலைக்கு ஆளாகியுள்ளார்.

அதன் பின்னர்தான் அத்திட்டத்தைத் தந்தவர்களின் “சுயரூபமான” ஓநாய்த்தனம் வெளிப்பட்டது. இப்போது அவர் மட்டுமல்ல, இச்செய்தியை படிக்கிற அனைவருமே “ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்கள்” யார் என்பதைப் புரிந்திருப்பார்கள். ஆகிலும் இன்னமுங்கூட அந்த ஓநாய்களின் சுயரூபத்தை அறியாத அறிவிலிகளும் இருக்கக்கூடும். அவர்களின் கண்களும் திறக்கப்படத்தக்கதாக, இந்த ஓநாய்கள் இன்னும் வெளிப்படையாக தங்கள் சுயரூபத்தைக் காட்டும் நாள் நெருங்கிவருகிறது. //

நான் இதுவரை டிஜிஎஸ் அவர்களுக்கோ இயேசு அழைக்கிறார் நிறுவனத்துக்கோ எந்த காணிக்கையும் அனுப்பியதில்லை; எனவே எனக்கு எந்த தனிப்பட்ட பாதிப்பும் இல்லை;ஆனாலும் எனது சகோதரர் செய்வதை நான் தடுப்பதற்கு எனக்கு உரிமையில்லை;அவரே உணர்ந்துள்ள இந்த நேரத்துக்காகவே நான் காத்திருந்தேன்.

இயேசு அழைக்கிறார் ஊழியத்தையும் நான் தொடர்ந்து விமர்சித்துக்கொண்டே இருக்கிறேன்; அது விரைவில் தனி மன்றத்தில்  (forum) தொகுக்கப்படும்; ஆனாலும் மற்றவர்களைப் போலக் காழ்ப்புணர்ச்சியுடன் அல்லாது சமதளத்திலிருந்து நாகரீகத்துடன் அதனைச் செய்வேன்; ஏனெனில் அவர்கள் இந்த தேசத்தில் ஆண்டவருக்காக சாதித்தவைகள் அதிகமாகும்; அவர்களால் தமிழ்க் கிறித்தவ உலகம் இழந்ததைவிட அடைந்தது அதிகமாகும்; இந்த சமநோக்கு பார்வையுடனே நான் அவர்களை விமர்சிப்பேன்.

ஏனெனில் ஒரு குறிப்பிட்ட அடித்தளத்தை இடித்து தரைமட்டமாக்குவதற்கு முன் அதன் மீது எதைக் கட்டப்போகிறோம் என்பதை தீர்மானிக்க வேண்டுமல்லவா? அதாவது இயேசு அழைக்கிறார் எனும் ஊழியத்தின் மீதான நம்பிக்கையைக் குலைத்துவிட்டு அதற்கு மாற்றாக நான் யாரை காட்டப்போகிறேன்? எதைக் கட்டப்போகிறேன்? அப்படி திசைகெட்டுப் போகும் அப்பாவி மக்களை நான் மீண்டும் எப்போது சந்திக்க இயலும்? அதைவிட ஆரம்பக்கட்ட மந்த நிலையிலுள்ளோருடன் தொடர்ந்து பழகி இணக்கமான உறவை ஏற்படுத்திக்கொண்டு அதன்பிறகு சரியான கிறித்தவத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்; இந்த தந்திரத்தையும் பெரியவர் அன்பு அவர்களைப் போன்ற‌ துருபதேசக்காரர்களிடமே கற்றுக்கொண்டேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
"இளம் பங்காளர் திட்டம்" எனும் மோசடி திட்டம்..!
Permalink  
 


எனது இளைய சகோதரரின் இரு பிள்ளைகளும் இயேசு அழைக்கிறார் நிறுவனத்தின் இளம் பங்காளர் திட்டத்தின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்; எனது சகோதரர் காலஞ் சென்ற டிஜிஎஸ் அவர்கள் மீது கொண்ட அபிமானத்தினால் தன் பிள்ளைகளை அதில் சேர்த்திருக்கிறார்.

images?q=tbn:ANd9GcSIvp3i2juNMkY4fTqSPt4reyWCLgwD7ctHIagtyIeHMTZ_lTNSMQ
காரணம்,சிறு வயதிலேயே தகப்பனாரை இழந்துவிட்ட நாங்கள் சொந்தங்களின் ஆதரவுமில்லாமற் போகவே அவரவருக்குக் கிடைத்த வாய்ப்பில் முன்னேறினோம்;ஆனாலும் அன்பின் ஏக்கம் மாத்திரம் இருந்துகொண்டேயிருந்தது;அந்த இடத்தில் டிஜிஎஸ் போன்றோரை வைத்து தகப்பனைப் போல நேசித்தோம்; அவருடைய பாடல்கள் அனைத்துமே அன்பு மற்றும் ஆறுதலின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதால் அதனால் ஈர்க்கப்பட்ட நாங்கள் இன்றுவரை அந்த அன்பினால் மாத்திரமே கட்டப்பட்டு அவர்களுடைய எத்தனையோ முரண்பாடுகளைப் பொருட்படுத்தாமல் இருந்தோம்; ஆனால் அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சி என் சகோதரரின் மனதை , டிஜிஎஸ் பாணியில் சொல்வதானால் சுக்குநூறாக உடைத்துப் போட்டுவிட்டது.

அரபு நாட்டின் அடிமையாக கடந்த ரெண்டு வருடமாக உழைத்து களைத்து வேலையிழந்து மனம் சோர்ந்து போய் கடந்த ஐந்து மாதங்களாக வேலை தேடிக்கொண்டிருக்கிறார், எனது சகோதரர்; அவர் வேலையிலிருந்த வரைக்கும் இளம் பங்காளர் திட்டத்துக்கு மாதந்தோறும் தவறாமல் கப்பங் கட்டிவிடுவார்;ஆனால் வேலையில்லாத இந்த ஐந்து மாதங்களும் தன் குடும்பத்தை நடத்தவே வழியில்லாத நிலையில் இதுபோன்ற பொது செலவுகளுக்கு எப்படி செலவு செய்யமுடியும்?

இந்நிலையில் அவரும் அவரது மனைவி பிள்ளைகளுடன் வாரத்துக்கு மூன்று,நான்கு நாட்கள் எங்கள் வீட்டில் தங்கிவிடுவதுண்டு;மேலும் அவர் அவ்வப்போது வேலை தேடி எங்காவது வெளியே போய்விடுவார்;அந்த நேரத்தில் அவரது வீட்டைத் தேடி வந்த இயேசு அழைக்கிறார் ஊழியர் வீடு பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்துவிட்டு நேரடியாக வீட்டு உரிமையாளரிடம் சென்று விசாரித்திருக்கிறார்;என்ன விவரம் என்று கேட்டதற்கு அவர் , கடந்த ஐந்து மாதமாகப் பணம் செலுத்தவில்லை, அதை வசூலிக்கவே வந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

http://www.prayertoweronline.org/fs/ptr/ypp.asp


வீட்டு உரிமையாளருக்கு இளம் பங்காளர் திட்டத்தின் அருமை பெருமைகளைக் குறித்து ஒன்றுந்தெரியாது;எனவே வந்தவர் யாரோ ஒரு பெரிய கடங்காரர் என்று நினைத்துக்கொண்டு எனது சகோதரரிடம் உங்களைத் தேடி சர்ச்சிலிருந்து வந்திருந்தாங்க,நீங்க ஏதோ பணம் கட்டணுமாமே அதற்காகவே வந்தாங்க என்று சொன்னதும் எனது சகோதரருக்கு மிகவும் அவமானமாகிப் போனதுடன் அந்த ஊழியத்தின் மீதான நல்லெண்ணமும் சிதைந்துபோனது.


images?q=tbn:ANd9GcS83NcZoG0kJCfsex5vkjMC3AFCch4fNN5LnEwdaGhd51R7qGXd

இளம் பங்காளர் திட்டம் என்பது வேதத்துக்குப் புறம்பானதா அல்லது நல்ல திட்டமா என்று நாம் நியாயந்தீர்க்கப் போவதில்லை;ஆனால் நேர்ந்துகொண்ட ஒரு தொகையை ஒரு குடும்பம் செலுத்தத் தவறும் போது அதனை அணுக தற்காலத்தில் பல்வேறு நவீன வசதிகள் இருக்கும் சீட்டு கம்பெனி போல ஒரு ஆளை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய அவசியமென்ன? வருபவரின் நேர்மைக்கு யார் உத்தரவாதி? குறுஞ்செய்தி (Sms) மின்னஞ்சல் (email) போன்ற எத்தனையோ எளிமையான தொடர்பு சாதன வசதிகள் இருக்க வீட்டு ஒரு ஆளை அனுப்பி பணத்தை வசூலிக்க உரிமை கொடுத்தது யார்? நிச்சயமாக இந்த திட்டத்தில் இணையும் போது நாங்கள் அந்த உரிமையைக் கொடுக்கவில்லை.

ஒரு குடும்பம் தான் நேர்ந்துகொண்ட ஒரு குறிப்பிட்ட காணிக்கையை செலுத்தாத காரணம் என்ன என்று விசாரித்து ஆறுதல் கூறி ஆலோசனை தந்து ஜெப உதவி செய்வதற்கு தானே இயேசு அழைக்கிறார்..?

நமது சமுதாயத்தில் ஒரு வீட்டில் துக்கம் என்றால் அடுத்த வீட்டுக்காரன் சமைத்து கொடுத்து அவன் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ளுவான்;ஆனால் இந்த மோசடி ஊழியர்கள் மக்களுடைய துன்பத்தைக் குறித்து எந்த கரிசனையும் கொள்ளாமல் அவர்கள் கண்ணீரைக் காசாக்குவதிலேயே கவனமாக இருக்கிறார்களே,இதுவா கிறித்துவின் மாதிரி..? இதற்கா இயேசு அழைக்கிறார்..? இப்படிப்பட்டவர்களின் இயேசு எங்களுக்கு வேண்டாம் என்கிறோம்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard