Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஜெர்சன் எடின்பரோவின் "நீரே" மூன்றாம் பாகம்- சிறுவன் நடனம்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
ஜெர்சன் எடின்பரோவின் "நீரே" மூன்றாம் பாகம்- சிறுவன் நடனம்
Permalink  
 


இளம் ஆராதனை வீரர் ஜெர்சன் எடின்பரோவின் "நீரே " மூன்றாம் பாகத்தின் பாடல்களை எனது கணிணி வேலைகளின் போது மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தேன்;அந்த பாடல்களால் கவரப்பட்ட ஐந்து வயது சிறுவனான எனது தம்பியின் மகன் Kevin Jabezஅந்த பாடல்களுக்கு நடனம் ஆடத் துவங்கிவிட்டான்; குறைந்த வெளிச்சக் குறைபாட்டுக்கு பொறுத்துக்கொள்ளவும்.

ஒரு குழந்தையையே குதூகலிக்க வைக்கிறதென்றால் அந்த பாடல்களில் ஏதோ ஒரு மகத்துவம் இருக்க வேண்டுமல்லவா..?

எனது குழந்தையின் நடனத்தைப் பார்த்தபிறகே அந்த பாடல்களின் மீது எனக்கு தனி கவனம் சென்றது;இந்த நடனத்தின் எந்த ஒரு அசைவுமே யாரும் கற்றுத் தராமலே இயல்பாக அவன் ஆடியது ஆச்சர்யம்.

உதாரணமாக "தாயின் கருவிலே நான் உருவான‌ நாள் முதல் " என்ற வரிகளுக்கு வயிற்றைத் தொட்டு காட்டுகிறான்; "எனக்காக மரித்தீரே" என்ற வரிக்கு சிலுவையில் அறையப்பட்ட தன்மையையும் "சாத்தானை மிதித்தீரே" என்ற வரிக்கு காலை உதைத்தும் காட்டுவதையும் காணலாம்; அந்த அளவுக்கு ஐந்து வயதே ஆன ஒரு குழந்தை பாடல் வரிகளையும் கவனித்து நடனம் ஆடுவது ஆச்சரியமே.






__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard