Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கர்த்தர் நல்லவரா..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
கர்த்தர் நல்லவரா..?
Permalink  
 


// எனது இப்பதிவில் ஒரு தவறு உள்ளது. “நியாயப்பிரமாணம் கொடுக்கப்படாத புறஜாதியினருக்கும் தேவனுக்கும் “பகை” இல்லை” எனும் எனது கூற்று தவறாகும். //

திரு.அன்பு அவர்கள் தனது கூற்றை மறுத்துள்ளார்;அவரது நேர்மைக்கு நமது பாராட்டுக்கள்;நமது வேலையை எளிதாக்கும் வண்ணமாக அவர்களுக்குள்ளேயே விவாதம் துவங்கிவிட்டதால் நாம் வேறு உபயோகமான வேலைகளில் நம்முடையநேரத்தை செலவிட சூழ்நிலை உருவாகியுள்ளது;நன்றி..!

அவர்களது தளத்திலேயே இந்த சத்தியத் தடுமாற்றங்களையும் புரட்டுகளையும் தகிடுதத்தங்களையும் கவனித்துக்கொள்ள உதவியாக அவர்களது தொடுப்பைக் கொடுத்துள்ளோம்.

http://www.lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=3&topicID=40063682


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

திரு.அன்பு அவர்களுடன் உபதேசரீதியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இந்த குறிப்பிட்ட திரி சம்பந்தமான அவருடைய கருத்துக்கள் மிகவும் பாராட்டுக்குரியது; இஸ்ரவேலரைத் தவிர மற்றவருடன் தேவனுக்குப் பகை இல்லை என்பதை எந்த அடிப்படையில் சொன்னாரோ அது மட்டும் சற்று யோசிக்க வேண்டியதாக இருக்கிறது;மற்றபடி இத்தனை நேர்த்தியான ஒரு ஆரோக்கிய உபதேசத்தை அளிக்கும் பொறுமை அவருக்கு மட்டுமே உண்டு என்பதை சிரம் தாழ்த்தி ஒப்புக்கொள்கிறேன்;பாராட்டுக்கள்..!

இதோ அவருடைய எழுத்துக்கள்...
எனது அன்பு வாசகர்களின் பார்வைக்கு...

anbu57

1213199?AWSAccessKeyId=1XXJBWHKN0QBQS6TGPG2&Expires=1294272000&Signature=RezLmMChDRxRhZsxLvGqmeJpx04%3D&1263359727Date: 11h, 41m ago

sundar wrote:
//பழைய ஏற்பாட்டு காலத்தில் ஒருமனிதன் பாவம்செய்யும்போது ஒரு பாவமறியா மிருகம் பலியாகக் கொடுக்கப்பட்டது. அது தேவனின் கோபத்தை சாந்திபடுத்த என்று நீங்கள் கருதினால் அது மிகமிக தவறு. தேவன் தனது கோபத்தை சாந்திபடுத்த, தான் படைத்த ஒரு உயிரையே பலியாகக் கேட்டு அதில் திருப்தி கொள்ளுவது இல்லை ....//

sundar wrote in தேவனின் இருதய நிலையை அறியும் பாக்கியம்!:
//பலியிடுதல் பற்றி எந்த ஒரு கட்டளையோ அல்லது பலி செலுத்துதல் பற்றிய எந்த நியமனமோ இல்லாத, எந்த ஒரு பலியும் செலுத்தப்படாத அந்தக் கால நிலையில், ஜலப்பிரளயத்தில் இருந்து தப்பி பேழையில் இருந்து வெளியே வந்த நோவா என்னும் தேவமனிதன், சில சுத்தமான மிருகங்களைக் கர்த்தருக்குப் பலியாக செலுத்துகிறான்:

ஆதியாகமம் 8:20 அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.

அவ்வாறு தேவனின் எண்ணநிலைகளை அறிந்து செயல்படுவது கர்த்தருக்கு மிகுந்த பிரியமாகையால் கர்த்தர் பலியை அங்கீகரித்ததோடு ஒரு நல்ல வாக்குத்தத்தமும் கொடுக்கிறார்.

ஆதியாகமம் 8:21 சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர்: இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; .......; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை

இங்கு கர்த்தர் எந்த பலியையும் கேட்கவில்லை; ஆனால் கர்த்தரின் இருதயத்தில் பலியிடும் கட்டளை இருப்பதை முன்கூட்டியே அறிந்த நோவா, இவ்வாறு விசுவாசத்தால் அதைநிறைவேற்றி தேவனின் இருதயத்தை குளிரப்பண்ணினான்.
//

அன்பான சகோதரரே! பலியால் தேவனின் இருதயத்தை நோவா குளிரப்பண்ணினதாக எழுதின நீங்கள், தற்போது தேவன் பலியில் திருப்தி கொள்வது இல்லை என்கிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு? விளக்கம் தரவும்.

மற்றொரு விஷயத்தையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்: நோவாதான் முதன்முதலாகப் பலி செலுத்தினதாகக் கூறுகிறீர்கள். ஆனால் நோவாவுக்கு முன்பாகவே ஆபேல் தனது காணிக்கையாக “மிருகங்களின் தலையீற்றைக்” கொடுத்தான் என்றும் தேவன் அதை அங்கீகரித்தார் என்றும் ஆதி. 4:4 கூறுகிறது.

sundar wrote:
//ஆதாமும் ஏவாளும் சாத்தானின் சொல்லைக்கேட்டு  தேவனின் வார்த்தைகளை மீறி கனியைப் புசித்ததன் காரணமாக ஆடுகளைப்போல வழிதவறி, தேவன் போட்ட வட்டத்தை தாண்டி வெளியேபோய், சத்துருவாகிய சாத்தானுக்கு சொந்தமாகி போனார்கள். அவர்களைப் பிடித்த சாத்தான், அவர்கள்செய்த குற்றத்திற்கு அவர்கள் உடனடியாக சாகவேண்டும் என்று தேவனிடம்  பிராது செய்கிறான். அவ்வாறு அவர்கள் சாவாது தப்பிக்கவேண்டும் என்றால் உம்முடைய படைப்புகளில பாவமறியா ஒரு படைப்பை மனிதனுக்கு ஈடாக (தற்காலிக ஜாமீன்) தரவேண்டும் என்று வாதிடுகிறான். இந்நிலையில் தேவன் ஆதாம் ஏவாளுக்குப் பதில் தனது படைப்பில் உள்ள பாவமறியா ஒரு மிருகத்தை சாகக்கொடுத்து, ஆதாம் ஏவாளை மீட்டார். அந்த மிருகத்தின் தோல்தான் ஆதாம் ஏவாளுக்கு உடையாக தேவனால் கொடுக்கபட்டது//

உங்கள் கூற்றுப்படி பார்த்தால், கனியைப் புசித்த நாளில் ஆதாமும் ஏவாளும் சாகவில்லை என்றாகிறது. அதாவது “கனியைப் புசிக்கிற நாளில் சாகவே சாவாய்” எனும் தேவனின் வார்த்தை பொய்யாகிப்போனது என்றாகிறது. இதற்கு உங்கள் விளக்கம் என்ன?.

சாத்தான் பிராது செய்ததால், ஆதாம்-ஏவாளின் உயிர்களுக்கு ஈடாக ஒரு மிருகத்தைத் தேவன் கொடுத்தார் என்கிறீர்கள். அவ்வாறெனில் தேவன் சாத்தானுக்குப் பலி கொடுத்தார் என்றல்லவா அர்த்தமாகும்? தேவனின் இச்செயல் அஞ்ஞானிகளின் செயலுக்கு ஒத்ததாகிவிடுமே? இதற்கு உங்கள் விளக்கம் என்ன? பின்வரும் வசனத்தைப் படியுங்கள்.

1 கொரி. 10:20 அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்;

தேவஜனங்களின் பலிக்கும் சாத்தானுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. தேவஜனங்களின் பலிகள் அனைத்தும் தேவனை மட்டுமே சேரும். பலி என்பது தேவநியமனம். இந்த நியமனத்தை தேவன் ஏன் வைத்தார் எனும் கேள்விக்கு பதில் தெரிந்துதான் ஆகவேண்டுமின்றில்லை. இவ்விஷயத்தில் நீங்கள் ஆராயவேண்டாம் என நான் சொல்லவில்லை. ஆனால் உங்கள் ஆராய்ச்சி மூலம் அறிகிற காரியங்கள் தேவனுக்கு தூஷணத்தைக் கொண்டுவருவதாக இருக்கக்கூடாது. மேலே நீங்கள் கூறியுள்ள காரியங்கள் அனைத்தும் தேவனை தூஷிப்பதாகவே உள்ளன. உங்கள் கூற்றுக்களிலுள்ள தேவதூஷணங்கள்:

1. கனியைப் புசிக்கும் நாளில் சாவீர்கள் எனும் தேவனின் வார்த்தை பொய்யாகிப் போனது.

2. தேவனின் வார்த்தை பொய்யாகிப் போனதற்குக் காரணம்: அவர் சாத்தானின் பிராதுக்கு செவிசாய்த்தது.

3. அஞ்ஞானிகளுக்கு நிகராக தேவன் சாத்தானுக்குப் பலி கொடுத்தது.

கனியைப் புசிக்கும் நாளில் நீங்கள் சாகவே சாவீர்கள்” எனும் கூற்றை நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டதுதான் இத்தனை தேவதூஷணங்களுக்குக் காரணம்.

ஒரு பெற்றோர் தங்கள் மகனிடம், “நீ என்னைக்கு பி.ஏ. பாஸ் பண்ணுகிறாயோ அன்னைக்குத்தான் உனக்குத் திருமணம்” எனச் சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்? அவர்கள் மகன் பி.ஏ. பாஸ் செய்ததும் அவனது திருமண ஏற்பாடுகள் தொடங்கி விரைவில் நிச்சயமாக திருமணம் செய்துவைக்கப்படும் என்பதுதானே? அதேவிதமாகத்தான் “கனியைப் புசிக்கும் நாளில் சாகவே சாவாய்” என்றால் கனியைப் புசித்ததும் அவனது சாவு நிச்சயமாகிவிடும் என்பதுதான் அர்த்தம்.

தேவன் தாம் படைத்த அனைத்து உயிர்களின்மீதும் அன்புள்ளவர் என்பது மெய்தான். ஆகிலும் ஏதேனும் ஒரு காரணத்துக்காக அல்லது தேவனின் ஒரு நியமனத்துக்காக ஒருவன் அல்லது ஒரு மிருகம் சாவதற்கு தேவன் அனுமதித்தால், அது தேவனின் அன்பை கேள்விக்குறியாக்கிவிடாது.

யோபுவை சோதிக்கையில், சம்பந்தமே இல்லாமல் யோபுவின் வேலைக்காரர் அனைவரும் (ஒருவனைத் தவிர) சாவதற்கு தேவன் அனுமதித்தார். இது தமது படைப்பின்மீது தேவனுக்குள்ள உரிமையைக் காட்டுகிறது. தாம் படைத்த ஓர் உயிரை எந்த நேரத்திலும் எடுத்துக்கொள்ள தேவனுக்கு உரிமை உள்ளது. பிறந்த அனைவரும் ஒரு நாளில் மரிக்கத்தான் வேண்டும். அப்படி மரிக்கவேண்டிய அவர்களில் ஒருவன் குழந்தைப் பருவத்தில் மரிக்கலாம், ஒருவன் வாலிப வயதில் மரிக்கலாம், ஒருவன் முதிர்வயதில் மரிக்கலாம்.

மரணம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணத்தின் மூலம் சம்பவிக்கலாம். வியாதியாலோ, விபத்தாலோ, கொலையாவதாலோ, முதிர்வயதானதாலோ இப்படி காரணங்களால் மரணம் சம்பவிக்கலாம். இவற்றில் முதிவயதாகி மரிப்பதைத் தவிர மற்ற அனைத்து மரணமும் வேதனையுள்ளதாகத்தான் இருக்கும்.

அமலேக்கியரின் குழந்தைகள் உட்பட அனைவரையும் கொல்லும்படி தேவன் சொன்னதை நாம் அறிவோம். இங்கு சாத்தானை சாந்திபடுத்த தேவன் இவ்வாறு சொல்லவில்லை. அமலேக்கியர் முழுமையாக நிர்மூலமாக்கப்படவேண்டும் என்பது தேவநியமனம். அவரது அந்த நியமனத்தை நிறைவேற்ற அவருக்கு முழு உரிமை உள்ளது, அதன்படி அவரது உரிமையை நிலைநாட்டினார், அவ்வளவே. இவ்விஷயத்தில் தேவன் ஏன் இவ்வாறு குழந்தைகளையெல்லாம் கொல்லச் சொல்கிறார் என நாம் கேள்விகேட்க வேண்டியதில்லை. அப்படிக் கேட்பது, தேவனைவிட நம்மை நீதிமானாக்குகிற அல்லது நம்மை இரக்கமுள்ளவராக்குகிற முயற்சியாகும். அம்முயற்சியை நாம் செய்யவேண்டாம்.

//ஆண்டவராகிய இயேசு மனிதர்களின் பாவத்தை தீர்க்க தேவநீதியின்படி சாத்தானின் உக்கிரத்தைதான் தன்மீது தாங்கினாரேயன்றி தேவனின் உக்கிரத்தை அல்ல என்பதே இந்த கட்டுரையின் கருத்து!//

உங்களது இக்கூற்றும் தவறானதே. பின்வரும் வசனத்தைப் படியுங்கள்.

எபேசியர் 2:3 அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.

இவ்வசனத்தில் கோபாக்கினை என்பது தேவகோபாக்கினையையே குறிப்பிடுகிறது. தேவகோபாக்கினையின் காரணமாக தேவனுக்கும் நமக்கும் உண்டான “பகையை” கிறிஸ்துவானவர் “சிலுவையில் கொன்றார்”. இதைத்தான் எபே. 2:16 கூறுகிறது.

இருதிறத்தார் என்பது “நியாயப்பிரமாணத்தைப் பெற்றவர்கள்”, “பெறாதவர்கள்” எனும் இருபிரிவினரைக் குறிப்பிடுகிறது. இஸ்ரவேலருக்கு நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டு, அந்த நியாயப்பிரமாணத்தை அவர்கள் மீறியதால் அவர்களுக்கும் தேவனுக்கும் “பகை” உண்டானது. ஆனால் நியாயப்பிரமாணம் கொடுக்கப்படாத புறஜாதியினருக்கும், தேவனுக்கும் “பகை” இல்லை.

இந்நிலையில், கிறிஸ்துவானவர் தமது சிலுவை மரணத்தின் மூலம் நியாயப்பிரமாணத்தால் உண்டான கோபாக்கினையை ஒழித்தார். எனவே இஸ்ரவேலருக்கும் தேவனுக்கும் நியாயப்பிரமாணத்தால் உண்டான “பகை” கொல்லப்பட்டது. இதனால், “நியாயப்பிரமாணத்தினிமித்தம் தூரமாயிருந்த இஸ்ரவேலர்” எனும் ஒரு திறத்தாரும், “நியாயப்பிரமாணம் இல்லாததால் ஏற்கனவே தேவனுக்குச் சமீபமாயிருந்த புறஜாதியினராகிய” மற்றொரு திறத்தாரும், கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாகி ஒப்புரவாக்கப்பட்டனர். இதைத்தான் இவ்வசனங்கள் கூறுகின்றன.

எபேசியர் 2:13,16,17 முன்னே தூரமாயிருந்த நீங்கள் (இஸ்ரவேலர்) இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே (பிதாவுக்குச்) சமீபமானீர்கள். ... (நியாயப்பிரமாணத்தால் பிதாவுக்கும் உங்களுக்கும் உண்டான) பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் (இஸ்ரவேலராகிய நம்மையும் புறஜாதியினரையும்) ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார். அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும் (இஸ்ரவேலருக்கும்), சமீபமாயிருந்த அவர்களுக்கும் (புறஜாதியினருக்கும்), சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார். அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே (கிறிஸ்துவின் ஆவியினாலே) பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர் மூலமாய்ப் (கிறிஸ்துவின் மூலமாய்ப்) பெற்றிருக்கிறோம்.


(இத்தனை நேர்த்தியாக விளக்கியபோதும் தண்டவாதம் புரியும் அதாவது விதண்டாவாதம் பிடிக்கும் சுந்தரின் பரிதாப நிலையினைப் பாரீர்..!)


SUNDAR Date: 3h, 11m ago

1211561?AWSAccessKeyId=1XXJBWHKN0QBQS6TGPG2&Expires=1294272000&Signature=AOzlbu4OykvyBu63H57fki%2F8kxs%3D&1290686990

சகோ. அன்பு  அவர்களே தாங்கள் இந்த திரியில் இடைபட்டு தெளிவான சில  விளக்கங்களோடு கூடிய  கேள்விகளையும்  முன்வத்ததற்காக தேவனை  ஸ்தோத்தரிப்பதோடு தங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பலியோடு கூடிய  இந்த காரியத்தில் ஒரு தெளிவை நாம் பெறுவது தேவனை பற்றி அறியும்  அறிவில் வளர மிக  மிக அவசியம் என்றே நான் கருதுகிறேன்.  எனவே முடிந்த அளவு தங்கள் கேள்விக்கு ஒவ்வொன்றாக பதில்தர விளைகிறேன் மாறுபாடுகள் தென்பட்டால் சுட்டவும்:
SUNDAR WROTE
இங்கு கர்த்தர் எந்த பலியையும் கேட்கவில்லை; ஆனால் கர்த்தரின் இருதயத்தில் பலியிடும் கட்டளை இருப்பதை முன்கூட்டியே அறிந்த நோவா, இவ்வாறு விசுவாசத்தால் அதைநிறைவேற்றி தேவனின் இருதயத்தை குளிரப்பண்ணினான்.//

Bro. ANBU ASKS
அன்பான சகோதரரே! பலியால்  தேவனின் இருதயத்தை நோவா குளிரப்பண்ணினதாக எழுதின நீங்கள், தற்போது தேவன் பலியில் திருப்தி கொள்வது இல்லை என்கிறீர்கள். ஏன் இந்த முரண்பாடு? விளக்கம் தரவும்.
"நோவா பலியால் தேவனின் இருதயத்தை   குளிரப்பண்ணினான்" என்று நான் எழுதியது தாங்கள் கருதுவதுபோல் "அந்த மிருகத்தின் சாவு தேவனை  குளிரப் பண்ணியது" என்ற கருத்தில் உருவானது அல்ல, தேவனின் திட்டத்தை முன் கூட்டியே அறிந்து செயல்பட்டதாலேயே தேவனின் இருதயத்தை அவன் குளிரப்பண்ணினான்.
உதாரணமாக!

ஒருமுக்கிய வேலையிநிமித்தம் நான் மதுரை போகவேண்டியது இருந்தது அதை குறிப்பால்  அறிந்த எனது மகன் எனக்கு முன்கூட்டியே ஒரு டிக்கட் புக் செய்து விட்டான் அதானால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இங்கு நான் மகிழ்ச்சி யடைவது டிக்கக் புக் பண்ணியதர்க்குதான் என்றாலும் எனது முக்கிய நோக்கம் மதுரை  போகவேண்டும் என்பதுவே!
அதுபோல் தேவனின் முக்கிய திட்டம் மனிதனை பாவத்தில் இருந்து மீட்க வேண்டும் என்பதுவே!  அது நிறைவேற இடையில்  தற்காலிகமாக பலியிட வேண்டிய அவசியம் இருந்தது, இதை நோவா முன்கூட்டியே அறிந்து பலி செலுத்தியதால் தேவன் மனது குளிர்ந்து என்பதுவே அதன் கருத்து.
Bro. ANBU ASKS
////மற்றொரு விஷயத்தையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்: நோவாதான் முதன்முதலாகப் பலி செலுத்தினதாகக் கூறுகிறீர்கள். ஆனால் நோவாவுக்கு முன்பாகவே ஆபேல் தனது காணிக்கையாக “மிருகங்களின் தலையீற்றைக்” கொடுத்தான் என்றும் தேவன் அதை அங்கீகரித்தார் என்றும் ஆதி. 4:4 கூறுகிறது.///

ஆபேல் கொடுத்தது கர்த்தருக்கு "காணிக்கை" என்று ஆதியாகமமும் "மேன்மையான பலி" என்று எபிரெயரும்  சொல்வதால் "காணிக்கை" என்று தனியொரு கருத்தாக எடுத்து அதே கட்டுரையில் விளக்கினேன். காணிக்கையாக வரும்  எல்லாமே  பலியிடபடத்தான் வேண்டும்  என்று அவசியமில்லை. சில போக்காடுகளாகவும் விடப்படலாம் எனவேதான் அவ்வாறு தனி கருத்தாக எழுதினேன்.
ஒருவேளை  எபிரெயர்  சொல்வதுபோல் அதுவும்  பலியிடப்பட்டது என்றால் நோவாவுக்கு  முன்னரே, ஆபேல் தேவனின் இருதய நிலையை அறிந்து பலியிட்டு ற்சாட்சி பெற்றான் என்றுகூட எடுத்துகொள்ளலாம். அதனால் அந்த கட்டுரையின் யகருத்து மாறாது என்றே கருதுகிறேன்!
தொடர்ந்து அடுத்த கருத்தை ஆராயலாம்....


(biggrinfuriousnoஇதுக்கே விவரம் பத்தலே இதிலே இன்னும் வேற ஆராயணுமாம்..!disbelieffuriousbiggrin)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

வியாக்கியானத்தில் தான் எத்தனை வகைகள்?சிலர் என்ன எழுதினாலும் நான் எதிர்ப்பதாக அலுத்துக்கொள்ளுகிறார்கள்; தவறான ஒரு கொள்கையை முளையிலேயே கிள்ளியெறிந்து விட்டால் அது வளர்ந்து பலரைக் கெடுப்பதைத் தடுக்கலாமே..!

ஒரு தவறான வியாக்கியானத்தைக் கொடுத்து - அதுவும் தேவத்துவத்தையே தவறாக்குவதை விட அதைக் குறித்து அறியாமலிருப்பதே மேலானதாகும்;அது என்ன கவர்ச்சியோ, இறையியல் கொள்கையை அறிவிப்பதிலேயே அனைவரும் குறியாக இருக்கிறார்கள்.

இதோ இறைவன் தளத்தில் மற்றொரு சத்தியப்புரட்டு...
கண்டும் காணாமல் விடலாமென்றால் இந்த கட்டுரையின் கடைசி வரியானது உறுத்திக்கொண்டே இருந்தது; எனவே நம்மால் அவர்களுக்கு விளம்பரம் கிடைப்பதைக் குறித்து நாம் அச்சப்படக்கூடாது என்று முடிவெடுத்து களத்தில் இறங்கினேன்; ஆம்,ஆரம்பம் முதலே நம்முடைய விமர்சனங்களே அவர்கள் தளத்துக்கு அதிக வாசகர்கள் செல்ல காரணமாக இருக்கிறது என்பதை பாவம் அந்த மறுபிறவிக் கொள்கையாளர் அறிந்திருக்க வாய்ப்பில்லை; உதாரணத்துக்கு இந்த கட்டுரையை விமர்சிக்கிறோமென்றால் இந்த கட்டுரையின் ரேட் (
Today's views 26nos) உயர்வதைக் காணலாம்; போகட்டும், நமக்கு சத்தியமே முக்கியம்; ஏதோ ஒரு லூஸு (நாம் சொல்லவில்லை...இது கோவை பெரியன்ஸ் கொடுத்த பட்டப்பெயர்..!) உளறுகிறது என்று கண்டும் காணாமற் போனால் பிறகு நமக்கே ஆபத்து.

// ஆண்டவராகிய இயேசு மனிதர்களின் பாவத்தை தீர்க்க தேவநீதியின்படி சாத்தானின் உக்கிரத்தைதான் தன்மீது தாங்கினாரேயன்றி தேவனின் உக்கிரத்தை அல்ல என்பதே இந்த கட்டுரையின் கருத்து!  //

முத்தாய்ப்பான இந்த வரிகளே ஆபத்தானது; இது "நியூ ஏஜ்" (New Age) எனப்படும் புதுயுக மார்க்கத்தின் திரிபாகும்; அந்த நவீன கொள்கையின் படி கர்த்தர் நல்லவர், நல்லவர், நல்லவர்,பாசமிகுந்த தகப்பன்
..! மேலோட்டமாகப் பார்த்தால் இது சரியானது போலவும் அதற்கேற்ற நல்ல வசனங்களும் கொடுக்கப்பட்டாலும் இது கிறித்தவ விசுவாசத்திற்கே சவால் விடும் கொள்கையாகும்.

இந்த சூழ்நிலையில் போதகர் சாம்.P அவர்கள் நடத்தும்  தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு "கர்த்தர் நல்லவர்" எனும் பெயரிடப்பட்டிருப்பது புதிய அர்த்தங்களைக் கொணருகிறது; அதனை
த் தனியாக விவாதிப்போம்; ஆனாலும் இந்த கோணத்தில் சிந்தித்தால் எல்லாமே அதிர்ச்சிரகமாக இருக்கிறது; எல்லாவற்றையும் கோர்த்து பார்த்தால் நன்றாக விளங்குகிறது.

இந்த புதுயுக மார்க்கக் கொள்கையின்படி, "கர்த்தர் மிகவும் நல்லவர், இந்த மாம்சத்தில் நாம் செய்யும் எதுவும் மறுமை வாழ்வை பாதிப்பதில்லை; அது  முழுவதும் புதிய உலகம்; இவ்வுலக வாழ்க்கையில் செய்யும் தவறுகளுக்கான தண்டனையை நாம் இங்கே பல்வேறு வியாதிகளின் மூலம் அனுபவித்து விடுகிறோம்; அதுவே தண்டனை தான் என்பதால் மிகுந்த அன்புள்ள இறைவன் மீண்டும் ஒரு முறை மறுபிறவியிலும் கவனிக்கவும்,மறுபிறவியிலும் தண்டிப்பார் என்பது மதவாதிகளின் அடிப்படையற்ற கூற்று;அதை தான் இயேசு சிலுவையில் ஒரே தரம் செய்து முடித்துவிட்டாரே...." -இப்படியாகப் போகும் அந்த போதனை;

இதோ அதன் சாயலை இந்த கட்டுரையில் காண்கிறோம்; நம்ம ஆட்கள் ரொம்ப உஷாராக்கும்; எதிர்ப்பு வந்ததும் உடனே அதனைத் திருத்திவிடுவார்கள் அல்லது நீக்கி விடுவார்கள்; எனவே கொஞ்சம் கௌரவத்தையும் சிரமத்தையும் பாராது அந்த கட்டுரையின் முழுபகுதியையும் சுட்டுவிட்டேன்; இனி அது நீக்கப்பட்டாலும் அல்லது அந்த‌ மனிதர் திருந்திவிட்டாலும் நமக்கு பிரச்சினையில்லை;

இனி யாரும் இதுபோன்ற போலியான கொள்கைகளை பரிசுத்த வேதாகமத்திலிருந்து எடுத்து திரித்து வெளியிடாமல் இருக்க இது ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும்;

''ஆண்டவராகிய இயேசு சிலுவையில் கொன்ற பகை! "

-இது கட்டுரையின் தலைப்பு; நாமும் ஆர்வத்துடனே வாசித்தோம்; ஆனால்...

// ஆண்டவராகிய  இயேசுவை  பற்றி ஏசாயா சொல்லும் கீழ்கண்ட வார்த்தைகளை சற்று நிதானமாக படிக்கவும்...

ஏசாயா 53 அதிகாரம் :
5.
நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

6. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

10. கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.


மேற்கண்ட இந்த வசனங்களில் இருந்து மூன்று முக்கிய காரியங்களை நாம் அறிந்துகொள்ளலாம்.

1. நாமெல்லோரும் ஆடுகள்போல வழி தவறி அவனவன் வழியிலே
போனோம்    

2. கர்த்தரோ நம்முடைய அக்கிரமங்களை இயேசு மேல் சுமத்தி அவரை நொறுக்க சித்தமானார் குற்ற நிவாரண பலியாக ஒப்புகொடுத்தார்.

3. நம்முடைய மீறுதலுக்காக நம்முடைய சமாதானத்துக்காக  இயேசு காயப்பட்டு பாவத்துக்கான ஆக்கினையை தம்மேல் ஏற்று நம்மை மீட்டார்.

இந்த வசனங்களை படித்து,தேவன் எதுவோ மிகப்பெரிய  பெரிய கோபக்காரர் போலவும், பாவம் செய்த  மனிதரை அழித்தே தீருவேன் என்று உக்கிரத்தில் நின்றதாகவும்  அவரது  உக்கிரத்தை எல்லாம் ஆண்டவராகிய இயேசு மேல் சுமத்தியதாகவும் எண்ணிவிட வேண்டாம். தேவனைபற்றி  சரியாக அறியாத பலர் இதுபோல் எண்ணிக்கொண்டு இருக்கலாம்!   பாவம் செய்த மனிதன் மேல் தேவன் கடும் கோபம் கொள்வது உண்மையே! காரணம் பாவம் என்பது தண்டனையை கொண்டு வரும் என்பதாலும், சத்துரு தூஷிக்க வகை செய்யும் என்பதினாலேயே!

ஆனால் அவரது கோபமோ  நிரந்தரமானது அல்ல! 

"அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு" (சங்கீதம் 30:5 )

"அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என்முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன்.(ஏசாயா 54:8 )

ஆம்! இதுதான் நமது பரம தகப்பனின் கோபத்தின் நிலை.   ///

வேதவசனத்தை எவ்வளவு புரட்டமுடியுமோ அவ்வளவும் புரட்டும் விடா முயற்சியை இங்கே வாசகர் கவனிக்க வேண்டும்;ஆண்டவருக்கு கோபமே வராதாம்;ஆனால் கொஞ்சம் வருமாம்;அதுகூட "இந்த சாத்தான் முன்னால் என்னை அசிங்கப்படுத்தறியே" என்று ஒரு "உலுபுலாய்" கோபம் அவ்வளவே; இத்தனை இலகுவாய் தேவனுடைய பயங்கரத்தையும் ஆண்டவருடைய தியாகத்தையும் சிறுமைப்படுத்த யாராலும் முடியாது;

இந்த வசனங்களையெல்லாம் போட்டு இதற்கு என்ன விளக்கம் என்று யாராவது கேட்டோமா? அல்லது இயேசு கொன்ற பகை எது, என்று கேட்டோமா? வலிய வாசலுக்கு வரும் வம்பு என்பது இதுதான்;

இவர்களுடைய கொள்கை விளக்கத்தின்படி நாம் அறியக்கூடியது என்னவென்றால்,தேவன் மிகவும் நல்லவர், அவருக்கு கோபமே வராது, அவர் பாவம் செய்தவரையெல்லாம் அழிப்பேன் என்று சொல்லவில்லை; எனவே இயேசுவின் மீது சுமத்தப்பட்டது பாவத்துக்கான தண்டனையல்ல, அது தேவனுடைய உக்கிரமும் அல்ல; ஆஹா,என்ன அற்புதமான விளக்கம்..?

தொடர்ந்து...

/// பழைய ஏற்பாட்டு காலத்தில் ஒருமனிதன் பாவம்செய்யும்போது ஒரு  பாவமறியா மிருகம் பலியாக கொடுக்கப்பட்டது அது தேவனின் கோபத்தை சாந்திபடுத்த என்று நீங்கள் கருதினால் அது மிக மிக தவறு. தேவன் தனது கோபத்தை சாந்திபடுத்த,  தான் படைத்த ஒரு உயிரையே பலியாக கேட்டு அதில் திருப்தி கொள்ளுவது இல்லை என்பதை கீழ்கண்ட வசனத்தில் சொல்கிறார்.

"உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்.."(ஏசாயா 1:11)

" நான் எருதுகளின் மாம்சம் புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?"(சங்கீதம் 50:13) ///

மேற்கண்ட செய்தியானது ஒரு தவறான நிலையை எடுத்துவிட்டு அதை நிரூபிக்கப் படும்பாட்டுக்கு ஒரு உதாரணமாகும்;அதாவது "தும்பை விட்டு வாலைப் பிடித்தவன் கதை"யாக ஆரோக்கிய உபதேசத்தை மறுக்க முடிவு செய்துவிட்டதால் அதற்கு மாற்றாக எதையாவது சொல்லணுமே என்ற சாத்தானின் தவிப்பு இங்கே பட்டவர்த்தனமாகிறது;

இதனால் ஆதிமுதலே பலியிட்டவர்களெல்லாம் நோவா முதலாக தேவனுடைய கட்டளையின்படி பலியிட்ட ஆபிரகாம் உட்பட பிசாசை சாந்திபடுத்தவே அல்லது அதன்மூலம் தேவநீதியை நிறைவேற்றவே பலியிட்டார்கள் என்பது நூதன சீஷனின் உபதேசம்..!

இங்கே தேவ நீதி என்பது என்ன? "அதுவா,ஆண்டவர் ரொம்ப ஜென்டில்மேன்;உதாரணமா ஒரு டோல்கேட்டை நிர்வகிக்கும் பொறுப்பை ஆண்டவர் மனிதனுக்குக் கொடுத்தார்;அதை மனிதன் அற்ப ஆசைக்கு பலியாகி சாத்தானுக்கு விற்றுப்போட்டான்;எனவே கடவுளே அந்த வழியாகப் போனாலும் சாத்தானுக்கு கப்பம் கட்டிவிட்டே போகவேண்டிய நிலை; இதன்படி கடவுளே சாத்தானுக்குக் கட்டுப்பட்டவர் என்றாகிறது; எல்லாம் இந்த மனிதனின் அவசரத்தால் வந்தது; என்ன பண்றது, காரியம் ஆகணுமே, நீ உயிரோடிருக்கணுமானால் அந்த சாத்தானுக்கு உன் சார்பில் ஒரு பலிசெலுத்திவிட்டு வந்துடுபா...." என்ன அருமையான - நியாயமான இறையியல் கொள்கையல்லவா? இவர்களே தற்கால கிறித்தவத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள்..! இந்த ஜென்மங்களுக்கு (ஆமாம், தன்னை ஜென்மம் எடுத்து வந்தவராகத் தானே சொல்லிக்கொள்கிறார்..?) சுயமாகவும் ஒன்றும் தெரியவில்லை; கற்
றுக்கொள்ளவும் தாழ்மையில்லை, என்ன செய்வது..?

///அவ்வாறு தேவன் தனது படைப்பின்  மாமிசத்தை புசித்து இரத்தம் குடித்தால்  தேவனுக்கு பிசாசுக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் போய்விடும். நமது தேவன் மிகுந்த இரக்கம் உள்ளவர் மிருகங்களுக்காககூட பரிதபிபவர் என்பதை யோனா புஸ்தக  வசனங்கள் மூலம் அறியமுடியும் //

" எனவே நியாயப்பிரமாணக் காலத்தின் பலிகளெல்லாம் பிசாசுக்கே செலுத்தப்பட்டது;அதுவே தேவநீதி;காரணம்,மிகுந்த அன்புள்ளவர்; மிருகங்கள் கொலைசெய்யப்படுவதைக் காண சகிக்காதவர்" என்கிறது, இந்த அனர்த்தமான இறையியல் கொள்கை.

அப்படியானால் தேவநீதியை நிறைவேற்றும் முயற்சியாக சாத்தானுக்கு பலியிட்ட ஆபேல் கொலைசெய்யப்பட்டானே அதற்கு என்ன காரணம்? ஓஹோ, சாத்தான் ஆண்டவருக்கு போட்டியாக ஆபேலையும் அவன் காணிக்கையையும் ஏற்கவில்லையோ? அப்படியானால் ஆண்டவர் ஏற்றுக்கொண்ட ஆபேலின் காணிக்கையை சாத்தான் ஏற்காமல் காயீனின் காணிக்கையை ஏற்றுக்கொண்டு சரியாக காணிக்கை செலுத்தாத  ஆபேலைக் கொலை செய்யவைத்தான் என்பார்களோ;(ஆ..ஆமாம்...அது தான் உண்மை என்று ஒரு சத்தம் கேட்கிறதே...அப்ப்பாலப்போ சாத்தானே..!)

/// பிறகு என் அவர் பலியை கட்டளையிட்டார்? ஆதாமும் ஏவாளும் சாத்தானின் சொல்லைக்கேட்டு  தேவனின் வார்த்தைகளை மீறி கனியை புசித்ததன் காரணமாக ஆடுகளைபோல வழிதவறி  தேவன் போட்ட வட்டத்தை தாண்டி வெளியேபோய், சத்துருவாகிய  சாத்தானுக்கு சொந்தமாகி போனார்கள். அவர்களை பிடித்த சாத்தான், அவர்கள்செய்த குற்றத்திற்கு அவர்கள் உடனடியாக சாக வேண்டும் என்று தேவனிடம்  பிராது செய்கிறான். அவ்வாறு அவர்கள் சாவாது  தப்பிக்கவேண்டும் என்றால் உம்முடைய படைப்புகளில பாவமறியா ஒரு படைப்பை  மனிதனுக்கு ஈடாக(தற்காலிக ஜாமீன்) தரவேண்டும் என்று வாதிடுகிறான். இந்நிலையில் தேவன் ஆதாம் ஏவாளுக்கு  பதில்  தனது படைப்பில் உள்ள பாவமறியா ஒரு மிருகத்தை சாககொடுத்து, ஆதாம் ஏவாளை மீட்டார் அந்த மிருகத்தின் தோல்தான் அதாம் ஏவாளுக்கு உடையாக தேவனால் கொடுக்கபட்டது

ஒரு ஆட்டுக்கோ அல்லது மாட்டுக்கோ  ஆண்டவரிடம் "எந்த பாவமும் செய்யாத நான் மனுஷனின் பாவத்துக்கு சாகமாட்டேன்" என்று மறுப்பு தெரிவிக்கதெரியாது அதனால் அது தானாகவே தேவனின் திட்டத்துக்கு கீழ்படிந்து மனிதனின் அக்கிரமத்தை தன்மேல் சுமந்து மனிதனுக்காக பலியானது. இதன் அடிப்படையில் பார்ப்போமென்றால், ஏனென்று கேட்காமல் தேவன் என்ன சொன்னாலும் கீழ்படிந்து நடக்க ஆயத்தமாக இருக்கும் ஒருவர்மேல் எல்லோருடய அக்கிரமத்தையும்  சுமத்தி கீழ்படியாதவர்களையும்கூட  மீட்பது என்பது தேவனின ஒரு திட்டம். அந்த திட்டம்தான் மிருகங்கள்  பலியில் ஆரம்பித்து இயேசுவின் பலியோடு முடிந்தது.

இதே அடிப்படயில் இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தை தனக்கு கீழ்படிந்த எசேக்கியேல் மீது சுமத்தி அவரை சுமக்க சொன்னதை நாம் எசேக்கியேல் 4 ம் அதிகாரத்தில் பார்க்க முடியும்.

அடுத்தவர் அக்கிரமங்களை சுமந்த  எசேக்கியேல் மேலேயோ அல்லது அடுத்தவர் அக்கிரமத்துக்காக பலியாகும்  ஒரு ஆட்டின் மேலேயோ அல்லது அனைவர் அக்கிரமங்களுக்காகவும் பலியான இயேசுவின் மேலேயோ எந்த கோபமோ உக்கிரமோ தேவனுக்கு இல்லை. சாத்தானின் கையில்  இருந்து மனிதனை மீட்கும் திட்டத்தின் ஒருபகுதியாக தேவன்தான் இந்த நிர்மாணத்தை ஏற்ப்படுத்தினாரே யன்றி தேவனின்  உக்கிரத்தை இயேசு தாங்கினார் என்ற கருத்து சரியானது அல்ல!

"தேவனுக்கு இணையாக சிங்காசனத்தை உயர்த்துவேன்"என்று  லூசிபர் பெருமை அடைந்தபோது, தேவன் அவனை  ஆகாதவன் என்று கீழே  தள்ளியதால் உக்கிர கோபம்கொண்ட சாத்தான், தன்னை ஆகதவன் என்று தள்ளிய  தேவனை எப்படியாவது பழி தீர்க்கவேண்டும் என்று வெறியோடு தந்திரத்தால் ஆதாம் ஏவாளை வஞ்சித்து பாவம் செய்யவைத்தான். அவர்களை மீட்பதற்கு பலியாக  தேவகுமரன் பூமிக்கு வந்த போது, தனது  உக்கிரத்தை, பகையை  எல்லாம்  மாம்சத்தில் வந்த இயேசு மீது தீர்த்துகொண்டான்!

இயேசுவை சித்திரவதை செய்ததும் சிலுவையில் அடித்ததும் கேலி செய்ததும் சாத்தானின் ஆவிகளே. அவன் தனது உக்கிரத்தை தீர்க்க மனிதர்களை  பகடைக் காய்களாக  பயன்படுத்தி கொண்டான்! அதை ஆவியில் அறிந்த இயேசு "இந்த மனிதர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமல் செய்கிறார்களே" என்று ஆதங்கபட்டு "அவர்களுக்கு மன்னியும்" என்று பிதாவை வேண்டினர்.   

சாத்தானின் அந்த கொடூர சித்ரவதையை  இயேசு தன்மீது ஏற்றுக்கொண்டு நம்மை மீட்டு  தேவனோடு நம்மை ஒப்புரவாக்கினார்!  

இதையே  "இயேசு கொன்ற பகை" என்று எபி 2:16 சொல்கிறது 

எபேசியர் 2:16 பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார். ///

ஐயா சாமி, நீ சொல்றதெல்லாம் நல்லா புரியுது , போதும் நிறுத்திரு..!

/// ஆண்டவராகிய இயேசு மனிதர்களின் பாவத்தை தீர்க்க தேவநீதியின்படி சாத்தானின் உக்கிரத்தைதான் தன்மீது தாங்கினாரேயன்றி தேவனின் உக்கிரத்தை அல்ல என்பதே இந்த கட்டுரையின் கருத்து!  ///

ஆஹா, ரொம்ப சந்தோஷம்... நல்லவேளை இதோடு விட்டீரே... என்னது திரும்ப வருவீரா... வேணாம்... சொல்லிட்டன்..!

என்ன தந்திரமா நிறைய வசனங்களையும் கொஞ்சம் விஷத்தையும் கலந்தடிக்கிறான்,பிசாசு...சாமர்த்தியம் தான்...பழைய ஆளில்ல,அதான்..!

கர்த்தர் நல்லவர் என்பது அவருடைய மகத்துவத்துக்கு ஆதாரமாக இருக்குமானால் அவர் பயங்கரமானவர் என்பது அவரது மாட்சிமையாகும்; எரேமியா சொல்லும் போது,"நீர் எனக்குப் பயங்கரமாயிராதேயும்; தீங்குநாளில் நீரே என் அடைக்கலம்." (எரேமியா.17:17 ) என்கிறார்.

அப்படிப்பட்ட தேவாதி தேவனின் பராக்கிரமத்தையும் அவருடைய பயங்கரத்தையும் வேதம் முழுவதும் காணலாம்;அதனை இன்னும் விரிவாக எழுதுவேன்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard