Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ப்ரஜாபதி யார்..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: ப்ரஜாபதி யார்..?
Permalink  
 


// மேற்கண்ட வேதவாக்கியமே எனக்கு ஆதாரம் நான் இதிலிருந்தே சத்தியத்தை நோக்கி வந்தேன்; இதையே அடித்தளமாகக் கொண்டு பணிபுரிகிறேன்; இந்து வேதத்திலிருந்து இயேசுவை நிரூபிக்க முயற்சிப்பது ஒருவகை தந்திரமே. //


சத்திய வேதாகமத்தை எடுத்து சொல்வ்தற்கு தந்திரங்களும் பொய்களும் எதற்காக? நீங்கள் செய்யும் தந்திரங்களை பார்த்துகொண்டு இருக்கும் இந்துக்கள் எல்லாம் மடையர்கள் என்று நினைக்கிறீர்களா?

// எனவே ப்ரஜாபதியைக் குறித்த அனைத்துமே இயேசுவுக்குப் பொருந்துகிறது என்று சொல்வதற்கில்லை.


// அது தெரிந்ததுதான். பிறகெதற்கு பிரஜாபதிதான் இயேசு என்ற பொய்கள்? மற்றவர்கள் செய்தால் தப்பு. நீங்கள் செய்தால் சரி என்பதுதான் உங்களது பிடிவாதமான நிலைப்பாடு. நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. நடத்துங்கள் //

colvin Wrote on 05-12-2010 16:09:07:

அன்பான சகோதரர்களே , சகோ. stepanraj சொல்லுவதில் உண்மை உள்ளது. இந்த பிரஜாபதிதான் குணங்களை தெரிந்து கொண்டால் அவரை இயேசுவுடன் ஒப்பிடுவது அவ்வளவு பெரிய மடமை என்பது தெரியவரும். கிறிஸ்தவத்தில் மட்டுமே மெய்யான கிறிஸ்துவை அவதானிக்கலாம்.


மாறாக இந்துப்புராணங்களிலிருந்து எடுத்துக்காட்டினால் வேறு சில தீய குணங்களும் இந்த த பிரஜாபதிதான் உள்ளது எனவே அவற்றினையும் ஒப்புக் கொள்வீர்களா? எனவே இந்து புராணத்தில் இயேசு இருக்கிறார் என்று எழுதுவதை தவிரத்துக் கொள்ளுங்கள்.

நண்பர்கள் கொல்வின் மற்றும் ஸ்டீபன்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்; நான் மிகவும் நேர்மையுடன் எனது நோக்கங்களை முன்வைத்திருக்கிறேன்; ஆனாலும் அது உங்களுக்கு ஏற்புடையதாக இல்லை, என்ன செய்ய? ஸ்டீபன்ராஜ் அவர்கள் புதிய நண்பராக இருந்தும் சிநேக பாவமில்லாமலிருக்கிறாரே? வருத்தம்.

நான் தந்திரங்கள் என்று சொன்னது பவுல் சொன்ன வசனத்தின் அடிப்படையில் எனும் போது அதில் பொய் எப்படி வரும்? மற்றவர்கள் செய்வது எதை நாங்கள் தப்பு என்று சொல்லிவிட்டோம்?

இந்துக்கள் மடையர்களாக இருப்பதாலேயே அவர்களிலிருந்து தோன்றிய ஒருவர் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார்; நாம் இங்கே காணும் இந்துமார்க்கத்தின் வர்ணாசிரமம் உட்பட்ட காரியங்களும் சடங்குகள் சம்பிரதாயங்களும் பைபிளில் இருந்து செல்லவில்லை என்று உங்களால் சொல்லமுடியுமா? அப்படியானால் பைபிளையே குறைகூறுவீர்களா?


"அப்படியாகட்டும்; நான் உங்களுக்குப் பாரமாயிருக்கவில்லை; ஆனாலும், உபாயமுள்ளவனாயிருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம்." (2.கொரிந்தியர்.12:16)

இங்கே இந்த வேத வசனத்தை சம்பந்தமில்லாமல் கையாளுவதாகக் குற்றம் பிடிக்கவேண்டாம்; இந்த உபாய தந்திரத்தில் வஞ்சகமான உபதேசமில்லை;ஆனாலும் எதிராளியை வசப்படுத்தும் தந்திரம் இருந்தது; இங்கே தந்திரம் என்பது மோசடியோ பொய்யோ ஏமாற்றோ இல்லை; எப்படியாகிலும் சிலரை மீட்க எல்லாருக்கும் எல்லாமுமானேன் எனும் பவுலடிகளின் கூற்றே நிறைவேறுகிறது.

// அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர்...//

பவுலடிகள் தாம் அணுகிய மக்களுடைய பாரம்பரியத்தில் சொல்லப்பட்டவைகளை மேற்கோள் காட்டி பேசும் போது எந்த மனநிலையில்- சூழலில்- நோக்கத்தில் பேசினாரோ அதுவே நம்முடைய நிலையும்; ப்ரஜாபதியைக் குறித்தவை எழுத்துப்பூர்வமான ஆதாரத்துடனான கலப்படமில்லாமலோ அமைந்திருக்கவில்லை என்று ஒப்புக்கொண்டேன் அல்லவா? ஆனாலும் அது எழுத்துப்பூர்வமான ஆதாரமில்லாதது என்று கூறுவதால் முழுவதும் கட்டுக்கதை என்றோ கலப்படமானது என்பதால் முழுவதும் புறக்கணிக்கப்படவேண்டியது என்றோ எப்படி தீர்மானிக்க முடியும்?

அரமேய,அரேபிய,மொழிகளின் சம காலத்திலேயே சமஸ்கிருதமும் வழங்கப்பட்டு அது தெய்வீக மொழியாக ஏற்கப்பட்டு இந்த உலகின் ஆறில் ஒரு பகுதி மக்களால் பாவிக்கப்படுகிறதே? அதில் வழங்கப்பட்ட பாரம்பரிய துதி தோத்திரங்களை அத்தனை எளிதில் புறக்கணித்துவிடுவீர்களா? அப்படியானால் யூதமே சிக்கலில் ஆழ்ந்துவிடும்; நான் ஆதாரத்துடனோ பொதுவான ஞானத்துடனோ யூதத்தைப் பிரதானப்படுத்தி அதன் வழியே இந்துவேதங்களை அணுக விரும்புகிறேன்; ஆனால் உண்மையில் யூதத்தின் கலப்புகளை நீங்கள் ஆராய்ந்தால் நம்முடைய மார்க்கத்துக்கே சிக்கலாகி விடும்.

அதாவது " பாவப் பரிகார பலி " என்பது மொழி -கலாச்சாரம் வித்தியாசமின்றி யுகாயுகமாக மனுக்குலத்தின் எதிர்பார்ப்பாக இருந்து- அது தரிசிக்கப்பட்டு, அதன் எதிர்பார்ப்புகள் காரணமாக பல்வேறு கதைகளும் அதைச் சுற்றி பின்னப்பட்டு வந்தது என்பது நியாயமான உண்மையாகும்.

வெறும் 1500 வருட முன் தோன்றி பட்டயத்தால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு மார்க்கத்தை இவ்வளவு ஆராயும் நண்பர்கள் இந்து மார்க்கத்தின் வேர்களை சற்று ஆராய்ந்தால் என்ன? நாம் யாருமே பிறவி கிறித்தவரல்ல; அதாவது தாத்தா காலத்திலிருந்தே கிறித்தவராக இருப்போர் மிக மிகக் குறைவு; இந்த நிலையில் நம்மைச் சுற்றிலும் இருக்கும் பெரும்பாலான மக்கள் வழிபடும் காரியங்கள் நம்முடைய பாரம்பரியத்தில் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டிருந்தால் ஆராயத் தோன்றாதா? ஒன்று அவர்களிடமிருந்து நாம் காப்பியடித்திருக்க வேண்டும் அல்லது நம்மிடமிருந்து அவர்கள் காப்பியடித்திருக்கவேண்டும்; அது வேறு, இது வேறு என்று எந்த காலத்திலும் உங்களால் சொல்லவே முடியாது; " ஞானஸ்நானம் " என்று எடுக்கிறீர்களே, அந்த கிரியையானது இந்துக்கள் மூழ்குவதற்கு ஒப்பாக இல்லையா? நோக்கம் வேறாக இருந்தாலும் செயல் ஒன்றுதானே?அது எங்கிருந்து , எதற்காக வந்தது என்பதே ஆராய்ச்சி..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இந்த விவாதம் (பைபிளை நம்ப பைபிள் மட்டுமே போதுமா?)
தமிழ்க் கிறித்தவ தளத்திலிருந்து...

stepanraj on
05-12-2010 06:40:19

// arputham Wrote on 22-08-2010 04:46:33:
வேதாகம கருத்துக்களை பிற வேதங்களில் தேடுவது மிகவும் தவறானதாகிவிடும். அவை சொல்வதற்கு வேண்டுமானால் கவர்ச்சிகரமாக இருக்கலாம். ஆனால் இரட்சிப்புக்கு வழி நடத்த வேதாகம வசனங்களே போதுமானது. வேறே வழி இல்லை . புது வழி என்று புது மார்க்கத்திற்கு போய்விடக் கூடாதே ! //

மிக நல்ல கருத்து. சமீபத்தில் ஜோஸப் சினேகா, சில்சாம் போன்றோர் இந்து வேதங்களிலிருந்து அங்கங்கு உருவி எடுத்து கர்த்தரை பற்றி இந்து வேதங்கள் கூறுகின்றன என்று மோசடியாக எழுதினார்கள். அது மோசடித்தனம் என்று ஒரு இந்து ஆதாரத்தோடு எழுதியிருந்தார். அவரது கருத்து நீக்கப்பட்டது.

ஜோஸப் சினேகா, சில்சாம் போன்றோர் உங்கள் கருத்தை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.

நண்பரே, எமது எல்லைகளுக்குள்ளிலிருந்தே செயல்படுகிறோம்; இந்து வேதங்களிலிருந்து மோசடியான ஆதாரங்களை உருவாக்கி நாம் சாதிக்கப்போவது ஏதுமில்லை; இயேசு என்பார் ஏற்கனவே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனாவார்; இன்னும் பொருள் விளக்கப்படாததும் மக்களால் அறியப்படாததுமான பொக்கிஷங்கள் இந்து வேதம் என்று சொல்லப்படும் நான்கு வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் பொதிந்துள்ளது; நாம் மோசடியாகச் சொல்கிறோமென்றால் அவர்கள் சரியானதைச் சொல்லலாமே, அது அவசியம் இல்லை என்றல்லவா சொல்லுகிறார்கள்?

மேலும் அந்த வேதமந்திரங்களும் அதன் பொருளும் சாமான்யர்களால் விவரிக்கப்படவில்லை ஐயா,அவர்களெல்லாம் சமஸ்கிருத வல்லுநர்களும் நிதர்சனமான உண்மையின் தேடலில் மெய்ப் பொருளான இயேசுவையடைந்தோரும் ஆவர்; எனவே அந்த வேத மந்திரங்களின் சுலோகம் ஒருபுறமும் அதன் பொருள் மறுபுறமும் விளக்கப்பட அது யாருக்குள் நிறைவேறியிருக்கிறது என்று ஆராய்ந்தால் இயேசு பெருமான் ஒருவருக்கே பொருந்துகிறது என்பது கிறித்தவர்களின் நிலையல்ல, மெய்யான மொழி அறிஞரும் மார்க்க அறிஞருமான இந்துக்களுடையது;

இதைக் குறித்து கேள்வி கேட்கவேண்டுமானால் நேரடியாகவே பதிலளிக்க வல்லுநர்கள் ஆயத்தமாக இருக்கிறோம்; இந்த நேரடி விவாதத்துக்கு வராமல் ச்சும்மா சேற்றை அள்ளி வீச சிலர் முயன்றால் எப்படி அங்கீகரிக்கமுடியும்;

ரெண்டும் ரெண்டும் நாலு என்று நான் சொன்னால் அது தவறு என்று சொல்லும் நீங்கள் தானே அதனை நிரூபிக்கும் பொறுப்பை ஏற்கவேண்டும்; ச்சும்மாவேனும்," நீ போங்கடிக்கிறே " என்றால் சரியாகுமா?



stepanraj Wrote on 05-12-2010 08:41:15:

// சகோ சில்சாம்.
http://www.biblebeliever.co.za/Brethren%20Assemblys/Brethren%20Information/Prajapathi_Heresy.htm


இந்த பிரஜாபதி மோசடியின் வரலாறு,

இதனை யார் ஆரம்பித்தது,
இதற்கு வேதாகமத்தில் ஆதாரம் உண்டா,
இப்படி வேதாகமத்தை நிரூபிக்க மற்றவர்களது வேதங்களில் ஆதாரம் தேடுவது சரியானதா
என்பதை முழுவதுமாக ஆராய்ந்து எழுதிய கட்டுரை.

எனக்கு ஒன்றும் பதிலளிக்க வேண்டாம். நேர்மையாக இந்த கட்டுரையில் உள்ளவற்றை படித்து உணர்ந்தாலே போதுமானது. //

சகோதரரே, நானோ ஜோசப் ஸ்னேகாவோ ப்ரஜாபதியின் வரலாற்றைக் கண்டுபிடித்து அதனை இயேசுவானவருடன் சம்பந்தப்படுத்தி எழுதவில்லை; அது ஏற்கனவே சபைகளில் ஊடுறுவியிருப்பது தெரிந்ததே; அதனை கையில் எடுத்துக்கொண்டு அதையே முழுநேர சுவிசேஷமாக நாங்கள் யாருமே அறிவிக்கவில்லை; ஒரு இந்து நண்பர் எழுப்பிய கேள்விக்கு ஏற்கனவே பரவிவிட்ட இந்து ஸ்லோகங்களைக் குறிப்பிட்டு நண்பர் ' ஜோ ' எழுதியிருந்தார்; அதனை மறுத்து அவர் அதன் தொடுப்பைக் கேட்டபோது அதன் ஆதாரத் தொடுப்பைத் தராமல் அதிலிருந்து எடுத்து நான் போட்டிருந்தேன்.

"மகா கனம்பொருந்திய தேயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை,

ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக் குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால்,

ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று,

அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று." (லூக்கா.1:1 முதல் 4 வரை)


மேற்கண்ட வேதவாக்கியமே எனக்கு ஆதாரம் நான் இதிலிருந்தே சத்தியத்தை நோக்கி வந்தேன்; இதையே அடித்தளமாகக் கொண்டு பணிபுரிகிறேன்; இந்து வேதத்திலிருந்து இயேசுவை நிரூபிக்க முயற்சிப்பது ஒருவகை தந்திரமே.

"ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்.

நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்குத் தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது."(அப்போஸ்தலர்.17:28,29)


மேற்கண்ட வேதபகுதியை முழுவதும் வாசித்துப் பாருங்கள்; பவுலடிகள் மாற்று நம்பிக்கையுள்ளவர்களிடம் எத்தனை நளினமாகவும் ஞானத்துடனும் நிதானமாக முன்னேறி அந்த எதிர்கூட்டத்தாரை வசப்படுத்தினார்; அன்றைக்கு அவரை குறைகூற யாருமில்லை;எனவே முழுமையாக செயல்பட்டார்; அப்படியும் அவரைத் தொடர்ந்து வந்த சில கள்ள அப்போஸ்தலர்கள் அவருடைய உபதேசத்துக்கு மாறாக உபதேசித்து மக்களைக் குழப்பினர்; அதன் விளைவாகவே நமக்கு அருமையான நிருபங்கள் கிடைத்தது; அது நன்மைக்கே என்றானது; அதுபோலவே இந்தியா போன்ற ஒரு பிரம்மாண்டமான தேசத்தை சந்திக்க அவர்கள் வழிபாடுகள் மற்றும் நம்பிக்கையின் ஆதாரங்களிலிருந்து சில ஒப்பீடுகளை எடுத்து அதனுடன் இயேசுவை சம்பந்தப்படுத்தி நம்முடைய பரிசுத்த வேதாகமத்தைக் கற்பிப்பது தவறாகத் தோன்றவில்லை; அதிலும் கூட எமது எல்லைகளை அறிந்தே செயல்படுகிறோம்; இந்து வேதங்கள் எனப்படுவது எழுத்துப்பூர்வமான சான்றுடையதாகவோ கலப்படமில்லாததாகவோ யாரும் நிரூபிக்க இயலாது; எனவே ப்ரஜாபதியைக் குறித்த அனைத்துமே இயேசுவுக்குப் பொருந்துகிறது என்று சொல்வதற்கில்லை.

இதே போன்ற ஒப்பீடுகளை பிரபலமான இந்து துறவியரின் கொள்கைப் பிரச்சாரங்களிலிருந்தும் எடுத்துப் பேசுகிறோம், ஆனாலும் அவர்களை நாங்கள் புனிதர்களாக ஏற்றுக்கொண்டோம் என்பது அர்த்தமல்ல; உதாரணமாக காந்தியடிகள் மத்தேயு.5 அதிகாரத்தை விரும்பி வாசித்தாராம், ஆனாலும் அவர் மனந்திரும்பிய அனுபவத்தைப் பெறவில்லை என்பதையும் இந்தியாவில் கிறித்தவம் வேரூன்றாமல் தடுத்ததில் முக்கிய பங்காற்றியவர் என்பதையும் அறிந்திருக்கிறோம்; அதற்காக அவருடைய படம் போட்ட இந்திய பணத்தை உங்கள் சட்டைப் பையில் வைக்கமாட்டேன் என்பீர்களா?

இறுதியாக, இந்து வேதங்களிலிருந்து சத்திய வேதத்தை நிரூபிக்க முயலவில்லை என்றும் சத்திய வேதத்தின் போலி அமைப்புகளே இந்து மார்க்கத்தின் வழிபாடுகள் என்றும் அதன் வழிபாடுகள் ஏற்கனவே சத்திய வேதத்தில் ஒரு காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும் அவற்றை நிவர்த்தை செய்து நிறைவேற்றவே இயேசு வந்தார் என்பதையும் நிரூபிப்போம்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard