Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மூல பாஷையில் யோவான்.7:38 இல்லை..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: மூல பாஷையில் யோவான்.7:38 இல்லை..!
Permalink  
 


இவ்வளவு எழுதிய பிறகும் சில மிருககுணமுள்ள மனிதர்கள் தொடர்ந்து அடுத்தடுத்த அஸ்திரங்களை எடுத்து வீசுகிறார்கள்;இதோ மற்றுமொரு புரட்டு..."15ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் 1.யோவான்.5:7 இடம் பெறவில்லை;15ம் நூற்றாண்டுக்குப் பிறகே உள்நோக்கத்துடன் திரித்துவக்காரர்களால் அது சேர்க்கப்பட்டது " என்கிறார்கள்; சரி இருக்கட்டும், என்ன பிரச்சினை?

ஒரு வசனம்- ஒரு வரி தொடர்பில்லாமலோ- சிதிலமடைந்தோ இருந்தது பிரச்சினை என்றால் தமிழுக்கு வேதம் என்பதே 300 ஆண்டுகளுக்கு முன்பு தான் கிடைத்தது, அதினால் அதற்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள் அல்லது கடந்த 50 வருடமுன்பு வேதம் சரியாகச் சென்று சேராததால் தங்களுக்குப் போதிக்கப்பட்டதை மட்டுமே ஏற்றுக்கொண்டு வாழ்ந்து மறைந்த‌ தமிழர்கள் இரட்சிப்படையமாட்டார்களா? அதான் உங்களுக்கு இரட்சிப்பு என்பதோ- சுவிசேஷம் என்பதோ தேவையில்லையே பிறகு ஏன் கெடந்து தவிக்கவேண்டும்?

தற்போது எனது கையிலிருக்கும் வேதப்புத்தகம் எனக்கு கிடைத்தது பெரிய பாக்கியம்;ஆனாலும் அது இன்னும் சென்று சேராத ஆயிரக்கணக்கான மொழிகள் இன்னும் வானத்தின் கீழே உண்டு;இதற்கிடையே வேதம் என்ற ஒன்று எனக்கு கிடைக்காமலிருந்தாலும் நான் விசுவாசத்தின்படி ஆண்டவருடைய சுதந்தரவாளியே;இந்த வேதத்தின் ஒரே ஒரு புத்தகமே கிடைத்திருந்தாலும் நான் விசுவாசியே;

யோவான்.1:12 மற்றும் 3:16 மட்டும் அடங்கிய குட்டியூண்டு வேதம் கூட என்னுடைய இரட்சிப்புக்குப் போதுமானது;கெளம்புப்பா..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

கையெழுத்து பிரதிகள் (manuscripts) என்பது வேறு,கையெழுத்து படிவங்கள் (original autograph) என்பது வேறு;நம்முடைய புதிய ஏற்பாடு ஆயிரக்கணக்கான மூலப் பிரதிகளை மாத்திரமல்ல,மூல எழுத்துப் படிவங்களையும் உடையதாக இருந்து தன்னிகரில்லாத நிரூபணத்தன்மையுடன் விளங்குகிறது;இன்று வரை சுமார் 25,000 பிரதிகளும் சுமார் 5,600 அசல் படிவங்களும் உடையதாகவும் இவையனைத்தும் முதல் இரண்டு மற்றும் முன்றாம் நூற்றாண்டுக்குட்பட்டதாகவும் இருக்கிறது;அதில் பெரும்பாலானவை முதல் நூற்றாண்டு காலத்துக்கு படிவங்களுடன் ஒத்துப்போகிறது;மற்ற சரித்திர நாயகர்களின் படைப்புகளுடன் ஒப்பிட்டால் நம்முடைய புதிய ஏற்பாட்டின் நம்பகத்தன்மையானது மிகவும் கௌரவமான நிலையிலிருக்கிறது;

உதாரணமாக ஜூலியஸ் சீஸரின் The Gallic Wars எனும் புத்தகமானது வெறும் பத்து கையெழுத்துப் படிவங்கள் மட்டுமே இருக்கிறது; அதுவும் மூலத்தின் தேதியுடன் ஒப்பிட்டால் 1000 வருடம் கழித்தே கிடைத்தது;

அடுத்து பிரபல தத்துவ ஞானியான பிளாட்டோவின் குறிப்புகள் வெறும் 7 பிரதிகள் மாத்திரமே உண்டு;அதுவும் 1,300 ஆண்டு காலத்துக்குப் பிந்தியது;இப்படி மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் புதிய ஏற்பாட்டின் பிரதிகள் மாத்திரமே இன்று வரையிலும் சுமார் 25,000 கிடைத்திருப்பது அதன் தன்மையையும் நம்பகத்தன்மையையும் தொன்மையையும் பறைசாற்றுகிறது.

இவற்றை மொழி பெயர்த்தவர்கள் சில பிரதிகளில் சில வசனங்கள் காணவில்லை என்றும் சிதிலமடைந்துள்ளதாகவும் மிகவும் நேர்மையுடன் குறிப்பிட்டதே அவர்களுடைய நேர்மைக்கு சவாலாகவும் ஆகிவிட்டது;மூல பிரதிகளில் இல்லாததை எப்படி மொழி பெயர்த்து சேர்க்க முடியும் அதற்கு ஆதாரம் வேண்டுமே? அப்படியானால் அவர்கள் நூற்றுக்கு மேற்பட்ட பிரதிகளை பொறுமையாக வாசித்து அதில் பெரும்பாலானவற்றில் கூறப்பட்டவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வேத பகுதியில் அனுமதித்திருக்கிறார்கள்.

அப்படியானால் நம்முடைய முன்னோர்கள் நமக்கு மிகத் தூய்மையானதைத் தரவேண்டும் என்று உழைத்த நோக்கத்தைப் பாராட்ட வேண்டுமே தவிர அவர்களுடைய நேர்மையைக் குறித்து கேள்வி எழுப்பக்கூடாது.

நம்முடைய
ஆதி சபையின் தலைவர்கள் இவற்றை எழுதி பதிவுசெய்த நோக்கமே உயர்ந்ததான ஒரு செய்தி தம்முடைய காலத்திலேயே மறைந்துவிடாமல் அடுத்த சந்ததிக்கும் சென்று சேரவேண்டும் என்பதாகவே இருந்தது;நாம் நம்முடைய டைரியில் பொய்யானவற்றை உள்நோக்கத்துடன் எழுதுவோமா,அப்படி எழுதினால் அது நம்முடைய மனசாட்சிக்கே நாம் அஞ்சாதது போலாகும்;அதுபோலவே எதிர்கால சந்ததிக்கு சரியானதை தூய்மையானதை தரவேண்டும் என்பதிலேயே அவர்களுடைய முழு கவனமும் இருந்திருக்கும்;அப்படிப்பட்ட முன்னோர்களை சந்தேகம் கொள்ளக்கூடாது என்பதைவிட தற்போது அதற்கு அவசியமில்லாத வண்ணமாக அன்றாடம் அவர்களுடைய தியாகத்துக்கு மணிமகுடம் சேர்க்கும் வண்ணமாக அகழ்வாராய்ச்சியில் மகிழ்ச்சிகரமான கண்டுபிடிப்புகள் வந்துகொண்டே இருக்கிறது.

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

ஞானஸ்நானம் அவசியமா,எது ஞானஸ்நானம்,ஜீவத் தண்ணீர் என்பது என்ன,அது வசனமா,ஆவியா என்பது மும்மூர்த்திகளின் விவாதம்..!

அதில் சந்தடி சாக்கில் வேதமாணவர் செருகிச் சென்ற ஒரு வேதப்புரட்டு, மூல பாஷையில் யோவான்.7:38 என்பதே இல்லை,என்றும் அது இடையே வேறு யாரோ செருகியது என்றும் ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார்;தமிழ் வேதாகமத்தைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் அப்பாவிகள் வேறு வழியில்லாமல் தேவையில்லாமல் அதனை வாசித்துக்கொண்டிருக்கிறோம் என்பது அன்னாரது கருத்து.

By Bereans October 28th

சுந்தர் காட்டிய வசனம்:

யோவான் 7:38 வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். 39. தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார்.

"அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீர்" என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டாமா!? கிறிஸ்துவை விசுவசிப்பவனின் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீர் (இது கேட்பவனிடம் உருவாகும் என்கிறது வசனம்) கொண்ட நதிகள் ஓடும்!! மேலும் சுந்த‌ரிட‌த்தில் சொன்னால் அவ‌ர் கோபித்துக்கொள்வார், என்ன‌வென்றால் // 38வ‌து வ‌ச‌ன‌ம் மூல‌ பாஷையில் இல்லாத‌ ஒரு வ‌ச‌ன‌ம்!! த‌மிழ் வேதாக‌ம‌ம் மாத்திர‌ம் போதும், அதில் என்ன‌ கொடுத்திருந்தாலும் ந‌ம்புவேன் என்று இருப்ப‌வ‌ரிட‌ம் என்ன‌ விள‌க்க‌ம் சொல்ல‌ முடியும்!! // ச‌ரி அப்ப‌டியே இங்த‌ வ‌ச்ன‌ம் இருந்தால் இந்த‌ வ‌ச‌ன‌ம் சொல்லுவ‌து என்ன‌!! இந்த‌ ஜீவ‌த்த‌ண்ணீர் தான் அவ‌ன் பெற‌ போகும் ஆவி என்றா? இல்லை, மாறாக‌ இந்த‌ ஆவி இருந்தால் தான் அவ‌ரின் வார்த்தைக‌ளை விசுவ‌சிக்க‌ முடியும், அந்த‌ வார்த்தைக‌ளே ஒருவ‌னுக்குள் ஜீவ‌த்த‌ண்ணீரை ஓட‌ச் செய்யும்!! 39வ‌து வ‌ச‌ன‌ம் சொல்லுகிற‌து, இயேசு கிறிஸ்து இன்னும் ம‌கிமை அடையாத‌தால் ப‌ரிசுத்த‌ ஆவி இன்னும் கொடுக்க‌ப்ப‌ட‌வில்லை என்று!! ஆக‌ இயேசு கிறீஸ்து ம‌கிமை அடைந்த‌ பிற‌கு ப‌ரிசுத்த‌ ஆவி வ‌ழ‌ங்க‌ப்ப‌டும், அதினால் அவ‌ர்க‌ள் அவ‌ரின் வார்த்தைக‌ளை விசுவாசிப்பார்க‌ள் என்ப‌தே சுந்த‌ர் சுட்டி காட்டிய‌ வ‌ச‌ன‌ம் சொல்லுகிற‌து!!

இவர்களாக எதையோ கனவில் கண்டு மிரண்டது போல எவனோ ...பேர் தெரியாதவன் சொன்னதை மண்டையில் ஏற்றிக்கொண்டு வாசிக்கும் அத்தனை பேரையும் முட்டாளாக்கப் பார்த்தால் நம்மால் வாளாவிருக்க இயலாது;

இதோ அவர்கள் கூறும் மூல பாஷையின் வசனம் இதில் இல்லாத வசனத்தை இடையில் மூல பாஷையிலும் சேர்த்து யார் செருகினார் எனும் விவரத்தை அவர்கள் சொல்லட்டும்,காத்திருப்போம்;

இனி எந்த மடையனும் இதுபோல மூலபாஷையில் இது இல்லை,மூல பாஷையில் மட்டுமே இது இருக்கிறது,மூல பாஷையில் இதன் அர்த்தம் வேறு,தமிழில் தவறாக இருக்கிறது என்று (மூல வியாதியிலேயே முக்கட்டும்...) உளற‌க்கூடாது; அல்லது அதன் தொடுப்புடன் கூடிய விவரத்தை ஒப்பிட்டு விளக்கமாக சமர்ப்பித்தால் தக்க பதிலடி கொடுப்போம்.


38

o
the
πιστεύων
pisteuōn
believes
εἰς
eis
on
ἐμέ,
eme
me
καθὼς
kathōs
as
εἶπεν
eipen
said

ē
the
γραφή,
graphē
Scripture
ποταμοὶ
potamoi
rivers
ἐκ
ek
of
τῆς
tēs
the
κοιλίας
koilias
belly
αὐτοῦ
autou
his
ῥεύσουσιν
reusousin
flow
ὕδατος
udatos
water
ζῶντος.
zōntos
living
39
τοῦτο
touto
this
δὲ
de
But
εἶπεν
eipen
said
περὶ
peri
of
τοῦ
tou
those
πνεύματος
pneumatos
Spirit
οὒ / ὃ
o
whom
ἔμελλον
emellon
should
λαμβάνειν
lambanein
receive
οἱ
oi
those
πιστεύσαντες
pisteusantes
believed
εἰς
eis
on
αὐτόν·
auton
him
οὔπω
oupō
yet
γὰρ
gar
for
ἦν
ēn
was
πνεῦμα,
pneuma
Spirit
ὅτι
oti
because
Ἰησοῦς
iēsous
Jesus
οὔπω / οὐδέπω
oudepō
yet
ἐδοξάσθη.
edoxasthē
glorified

நமது வேதாகமத்தை மொழி பெயர்த்த பரிசுத்தவான்கள் மூலப் பிரதிகள் சிலதில் விடுபட்டதையும் கூட நேர்மையுடன் குறிப்பிட்டு மிகுந்த தியாகத்துடனும் மனத் தூய்மையுடனும் உள்நோக்கமில்லாமல் மொழி பெயர்த்தனர்;அவர்கள் நினைத்திருந்தால் அவற்றை மற்ற மார்க்க அறிஞர்களைப் போல மறைத்து சொந்தமாக எதையாவது எழுதியிருக்கலாம்;அவர்களுடைய உளத் தூய்மைக்கு சான்றாகவே அண்மைய கையெழுத்துப் பிரதிகளுடனும் நம்முடைய வேதாகமத்தின் வரிகள் ஒத்துப்போகின்றன;இதனைக் கண்டு நம்முடைய எதிரிகளே அதிர்ந்து போயிருக்கின்றனர்;விதைப்பிலும் சேராமல் அறுப்பிலும் பங்காற்றாமல் பொறுக்க வந்தவர்கள் விளைச்சலைக் குறித்து விமர்சனம் செய்வது தகுமா? வேதம் என்பதே இல்லாமல் அல்லது மொழி பெயர்க்கப்படாமலே இருந்திருந்தால் என்ன செய்திருக்க முடியும்? அல்லது மொழி பெயர்த்த பரிசுத்தவான்கள் யாருடைய கட்டாயத்தின்படி அல்லது என்ன ஆதாயத்துக்காக வேதத்தை மொழி பெயர்த்தார்கள்? இதனால் அவர்கள் அடைந்த இன்னல்களைக் குறித்து நாம் சற்று யோசித்தால் இதுபோல விட்டேத்தியாக எதையாவது உளற மாட்டோம்.

கட்டின வீட்டுக்கு நட்டம் சொல்லி குத்தம் சொல்றவனுக்கு குஷ்டம் தான் பிடிக்கும் என்றால் நாம் என்ன செய்யமுடியும்?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard