Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Be an example...மாதிரியாயிரு..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Be an example...மாதிரியாயிரு..!
Permalink  
 


(தொடர்ச்சி...)

"Be an example...மாதிரியாயிரு..!" எனும் தலைப்பில் வார்த்தையை தியானிக்கிறோம்; இனி தொடர்ந்து...

"உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.

நான் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு.

மூப்பராகிய சங்கத்தார் உன்மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப்பற்றி அசதியாயிராதே.

நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு.

உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்." (1.தீமோத்தேயு.4:12 முதல் 16)

-மேற்கண்ட வேதபகுதியின் அடிப்படையில் முதலாவது வார்த்தையில் மாதிரியிரு என்றும் அடுத்து நன்னடத்தையில் மாதிரியாயிரு என்றும் பார்த்தோம்; மூன்றாவதாக அன்பிலும் ஆவியிலும் என்று சேர்த்து தியானிப்போம்;

051020101998.jpg

செய்தியைப் பகிர்ந்த ஐயா மனோகரன் அவர்கள்

3. அன்பிலும் ஆவியிலும் (Love and Spirit)

"அன்பு" எனும் வார்த்தையினைக் குறித்த பலவித அபிப்ராயங்கள் உண்டு; வேதம் பொதுவாக அன்பு என்று சொன்னாலும் அதன் மூலபாஷையான கிரேக்கத்தில் "phileō"-ஃபீலியோ, அகாபே "agapē", ஈராஸ்டஸ் "Erastos" என்றும் வெவ்வேறு வார்த்தைகளால் குறிப்பிடப்படுகிறது;

இதில் "phileō"- ஃபீலியோ என்பது நண்பனின் அன்பையும் "Erastos"-ஈராஸ்டஸ் என்பது கணவன் மனைவி அன்பையும் "agapē" அகாபே தேவனுடைய அன்பையும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது;

இதில் தேவ அன்பைக் குறிக்கும் சொல்லானது பிரதிபலன் எதிர்பாராததும் இயல்பானதுமாக அறியப்படுகிறது;ஆம்,இப்படிப்பட்ட அன்பை தேவனால் மட்டுமே தரமுடியும்; குறிப்பிட்ட அந்த வார்த்தையே இங்கே பயன்படுத்தப்படுவதால் நாம் எப்படிப்பட்ட அன்புடையவர்களாக இருக்கவேண்டும் என்பதை இதன்மூலம் அறியமுடியும்;

G26
ἀγάπη
agapē
ag-ah'-pay

From G25; love, that is, affection or benevolence; specifically (plural) a love feast: - (feast of) charity ([-ably]), dear, love.

தேவனுடைய அன்பு ஒருவருக்குள் நிறையும் போது அதன் பயனாக உருவாகும் அன்பின் ஐக்கியத்தையே இந்த குறிப்பிட்ட வார்த்தை விளக்குகிறது; இது நண்பர்களின் விருந்து நேரத்தைப் போல கலகலப்பாகவும் பாசத்துடனும் இருப்பதைக் குறிக்கிறது.

ஆபிரகாம் லிங்கன் இப்படி சொன்னாராம்,"உன் எதிரிகளை அழிக்கவேண்டுமா,அவர்களை நண்பர்களாக்கிக் கொள்"-"The Best way to destroy your enemy, make them your friends"

ஒரு சிறுவன் தனது தகப்பனுக்கு கறுப்பு நிற வால்நட் ஒன்றை அன்புடன் கொடுத்தான்;அவர் அதை உடைத்து சாப்பிடவில்லை;நாட்கள் சென்றது மகன் வளர்ந்து பெரியவனான், தகப்பனும் மரித்துப் போனார்;

ஒருநாள் அவருடைய பெட்டியை மகன் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தபோது அந்த வால்நட் கொட்டையைக் கண்டு ஆச்சரியப்பட்டான்;அதன்மீது இவ்வாறு எழுதப்பட்டிருந்தது,"இது எனதருமை மகன் கொடுத்தது"-"This is given by my Son".

"மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது." (
Romans.5:5)

இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள "ஆவி" என்ற சொல்லானது மூலபாஷையில் "நியூமா" எனப்படுகிறது;அதன் அர்த்தத்தை பின்வருமாறு பார்க்கலாம்;

G4151
πνεῦμα
pneuma
pnyoo'-mah

From G4154; a current of air, that is, breath (blast) or a breeze; by analogy or figuratively a spirit, that is, (human) the rational soul, (by implication) vital principle, mental disposition, etc., or (superhuman) an angel, daemon, or (divine) God, Christ’s spirit, the Holy spirit: - ghost, life, spirit (-ual, -ually), mind. Compare G5590.

ஆம்,அன்பு தேவ அன்பாக அவருடைய ஆவியினாலேயே நம்முடைய இருதயங்களிலே ஊற்றப்பட்டிருப்பதால் அது இயல்பாக இயங்கும்; நாம் அந்த உணர்வுடன் அதனைக் காத்துக்கொண்டாலே போதும்; ஏனெனில்
தேவ ஆவி தூய்மையானதாக தேவனுடைய சுவாசத்தைப் போல ஆதியில் ஆதாமுக்குள் ஊதப்பட்டது போலவே ஊற்றப்பட்டுள்ளதாக வேதம் சொல்லுகிறது.


(தொடரும்...)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இன்று (05.10.2010)மாலை ஒரு வீட்டுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியது;அங்கே நல்லதொரு முதிர்ந்த அனுபவமுள்ள மூப்பர் ஒருவர் மூலம் கிடைத்த சத்தியத்தை இங்கே தொகுத்து வழங்குகிறேன்; ஐயா அவர்கள் தனது எழுபது வயதிலும் கம்பீரமாக நின்று வார்த்தையைப் பதறாமல் பகிர்ந்து கொண்ட விதமே ஒரு பாடமாக இருந்தது;அவர்களது பெயர் திரு.மனோகரன்.

இப்படியாக மிக இயல்பாகத் துவங்கினார்,"வேதத்தில் சில சிறப்பான வார்த்தைகளைச் சொன்னதுமே ஒருவருடைய பெயருடன் அது சம்பந்தப்பட்டிருக்குமல்லவா,உதாரணமாக மறுதலிப்பு என்றதுமே பேதுரு,சந்தேகம் என்றதும் தோமா என்றும் சொல்வது போல ஜெபம் என்றதும் யாருடைய பெயர் ஞாபகம் வரும்...தானியேல்,அன்னாள் என பலர் இருந்தாலும் யாபேஸ் எனும் பெயர் ஜெபத்துக்கு புகழ் பெற்றதல்லவா,அவனுடைய ஜெபத்தை யாபேஸின் ஜெபம் என்றே சொல்லுகிறோம்;அது வேதத்தில் எங்கே இருக்கிறது,1.நாளாகமம்.4:10 இல் அல்லவா,அதனை நாம் இணைந்து சொல்லலாமா,"யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப்  பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதைத் தேவன் அருளினார்." சரி,இதனைச் சொல்ல எவ்வளவு நேரம் ஆனது,வெறும் 12 நொடிகள் மட்டுமே அல்லவா,ஆம்,கடவுள் மிகச் சிறிய ஜெபத்தைக் கூட கவனிக்கிறார்;நாம் தியானிக்கப் போகும் வார்த்தைக்காக நம்முடைய இருதயம் ஆயத்தமாக 30 நொடிகள் மட்டும் ஜெபிப்போமா...?"

ஜெபம் முடிந்ததும் தொடர்ந்து வேத தியானம்...
இன்று மாலை நாம் தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதிய முதலாம் நிருபத்திலிருந்து சில வசனப் பகுதிகளை மட்டும் தியானிக்கலாம்;
அது பின்வருமாறு 1.தீமோத்தேயு.4:12 முதல் 16 வரையிலான வசனங்கள்.

"உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.

நான் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு.

மூப்பராகிய சங்கத்தார் உன்மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப்பற்றி அசதியாயிராதே.

நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு.

உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்." (1.தீமோத்தேயு.4:12 முதல் 16)

இந்த நிருபத்தை பவுலடிகள் சிறைமீண்டு சுமார் கிபி 63 ல் பிலிப்பு பட்டணத்திலிருந்து எழுதியதாகக் கூறப்படுகிறது; இளம் போதகரான தீமோத்தேயு அப்போது எபேசு சபையை நிர்வகிக்கும் பொறுப்பிலிருந்தார்; எனவே அவருக்கு ஆலோசனைகளாகவும் அறிவுரைகளாகவுமே இந்நிருபத்தின் வார்த்தைகள் அமைந்திருக்கும்; அவை இன்றைக்கும் மிகப் பொருத்தமானதாகவும் பயனுள்ளதாகவும் உயிரோட்டமுள்ளதாகவும் இருப்பது வேதத்தின் சிறப்பாகும்;

இந்நிருபத்தை எழுதிய மறுவருடமே அதாவது கிபி 64 ஜூலை 19ல் நீரோ மன்னனால் ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தது, சுவிசேஷப் பணியானது தடைசெய்யப்பட்டு மரண தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டு பவுல் போன்ற தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்; கிபி 66 ல் இப்படி சிறையிலிருந்தே தீமோத்தேயுவுக்கு இரண்டாம் நிருபத்தை எழுதிய பவுலடிகள் கிபி 67ல் இரத்தசாட்சியாக மரித்ததாகக் கூறப்படுகிறது;

தீமோத்தேயுவும் கூட டொமிஷியன் எனும் ரோம அரசன் காலத்தில் எபேசுவிலுள்ள தியானாளின் கோவிலுக்கருகில்  கைப்பிரதி கொடுத்து சுவிசேஷப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது கல்லெறிந்து கொல்லப்பட்டார்.

இனி...

இந்த தியானத்தின் தலைப்பு "மாதிரியாயிரு".

மாதிரி அதாவது ஆங்கிலத்தில் model என்றதுமே தற்கால இளைஞர்களுக்கு fashion models விளம்பரத்தில் வரும் வாலிபரையும் கன்னியரையுமே நினைவுக்கு வரும்; ஆனால் இங்கே மாதிரி என்பது யோவான்.13:15 இல் ஆண்டவர் கூறும் கிறித்துவின் மாதிரி.

"நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். "(யோவான்.13:15 )

எதிலெல்லாம் கிறித்தவன் மாதிரியாயிருக்க வேண்டும்?
1.வார்த்தை (Word)
கிறித்தவன் முதலாவது வார்த்தையில் மாதிரியாக இருக்கவேண்டும்; இதைக் குறித்து சொல்லுவார்கள், கிறித்தவன் தனது நாவை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிந்திருப்பான், அதாவது அவன் நாவு எப்போது சுழலவேண்டும் அல்லது எப்போது நிறுத்தவேண்டும் என்பதை அறிந்திருப்பான்.

"அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக. (கொலோசெயர்.4:6)

மேற்கண்ட வசனமானது புதிய பொது மொழிபெயர்ப்பில் நமது வார்த்தைகள் இனிமையானதாய் அல்லது சுவையுள்ளதாய் இருக்கவேண்டும் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; ஆம், கிறித்தவன் தன் இனிமையான சொற்களால் அநேகரைக் கவரமுடியும்.

பிரபல ஊழியர் ஜான் வெஸ்லி அவர்கள் வாழ்விலிருந்து ஒரு உண்மை சம்பவம்; ஒரு முறை அவர்  குறுகலான ஒரு பாலத்தின் வழியே செல்லவேண்டிய சூழ்நிலை;அந்நேரம் எதிரே ஒரு நாத்திகன் வருகிறார்; அந்த பாலமானது குறுகலானதாக இருந்தபடியால் ஒருவர் விலகி வழிவிட்டாலே மற்றவர் செல்லமுடியும்;

ஜாண் வெஸ்லியைக் குறித்து அறிந்திருந்து அவரை அவமானப்படுத்த எண்ணிய நாத்திகன் நான் ஒருபோதும் ஒரு முட்டாளுக்கு வழிவிடமாட்டேன் '(i never make a way for a fool) என்றானாம்;

ஆனால் அதற்கு மிக சாந்தத்துடன் எளிமையான ஒரு வரி பதிலைச் சொன்னார்,ஜாண் வெஸ்லி;"நான் எப்போதும் அப்படியே செய்வேன்"(i always do) என்று;நாத்திகன் ஒன்றும் பேசுவதற்கிடமில்லாமல் தலைகுனிந்து கடந்து சென்றான்.

நம்முடைய வார்த்தைகளைப் பயன்படுத்தும் விதத்தை அறிந்திருந்தால் அதன்மூலம் நாம் பல நன்மைகளையடைய முடியும்;

அமெரிக்காவில் ஒரு வருடத்தில் பிறரைக் குறித்துப் பேசும் வதந்திகளுக்கு (gossips) மட்டும் சுமார் 65 மணிநேரத்தை செலவிடுகிறார்கள் என்று ஒரு கருத்துகணிப்பு கூறுகிறது; பிறரைக் குறித்து இல்லாததும் பொல்லாததுமான காரியங்களைப் பேசுவதால் தாங்களும் மாசுபடுவதுடன் மற்றவரை அது எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை அநேகர் உணருகிறதில்லை;

"அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது! "(
யாக்கோபு.3:5)

"அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்." (
எபேசியர்.5:4)

"மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார்." (
மத்தேயு .12:36,37
)

ஆகிய வசனங்கள் நாவைக் குறித்து வார்த்தையைக் குறித்தும் தெளிவாகப் போதிக்கிறது;ஒரு மனுஷன் பேசும் வார்த்தையினாலேயே அவன் நீதிமான் அல்லது குற்றவாளி என்று விளங்கும் என்று ஆண்டவர் சொல்வது மிகவும் கவனிக்கப்படவேண்டிய காரியமாகும்.

2.ந‌ல்நடக்கை (Conduct)

அடுத்து நல்நடக்கை; இதனை நன்னடத்தை என்றும் கொள்ளலாம்; இதன்படி நம்மிடம் மற்றவர் எதிர்பார்ப்பது உண்மை; ஒரு விபத்தோ அல்லது ஏதோ ஒரு காரியமோ நடந்துவிட்டால் நமது உண்மை பரிசோதிக்கப்படுகிறது; ஓட்டுநர் உரிமம் இல்லாமல் விபத்தில் சிக்கிக் கொண்டால் வக்கீ
லின் அறிவுரைப்படி ஓட்டுநர் உரிமம் உள்ள ஒருவரே அந்த விபத்துக்குக் காரணம் என்பது போல பொய்யான ஆதாரங்களை சமர்ப்பித்து அதன் மூலம் வழக்கிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறோம்; இப்படி நமது அன்றாட வாழ்வில் நாம் உண்மையிலிருந்து வழுவிப்போகும் பல சந்தர்ப்பங்கள் ஏற்படுகிறது.

கடந்த மார்ச்'10 ரீடர்ஸ் டைஜஸ்ட் (Reader's digest) பத்திரிகையில் கடந்த வருடத்தின் சிறந்த மனிதர்கள் 100 பேரை வரிசைப்படுத்தியிருந்தனர்;அதில் ஒருவர் கூட கிறித்தவர் இல்லை என்பது தெரியுமா? ஆனால் அன்றாடச் செய்திகளில் வரும் கொலை கொள்ளை மோசடி செய்திகளில் அதிக கிறித்தவ பெயர்களைக் காணமுடிகிறது;முன்பு எந்த ஒரு நம்பிக்கையான வேலைக்கும் கிறித்தவரையே நியமிப்பார்கள்;தற்காலத்திலோ நிலைமை தலைகீழாக இருக்கிறது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது,"சாதனையாளராக மாறுவதைவிட மதிப்பிற்குரியவராக மாறுவதே அவசியம்" (Try not to become a man of Success;but try to become a man of values) என்றாராம்;

"புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்."(1.பேதுரு.2:12)

மேற்கண்ட வசனத்தின் படி நம்முடைய நன்னடக்கை என்பது இந்த உலக வாழ்வுடன் முடிகிறதில்லை என்று அறிகிறோம்;எனவே நாம் நம்முடைய அன்றாட நடத்தைகளில் கவனமாக இருக்கவேண்டும்.



(தொடரும்...)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard