இது அண்மையில் நான் தமிழ் ஹிந்துவில் போட்ட பின்னூட்டமாகும்.காழ்ப்புணர்ச்சின் காரணமாக பைபிளுக்கு விரோதமாக எழுதி பதிக்கப்பட்ட இந்த முதல் பாவம் கட்டுரைக்கு யாரும் இதுவரை தகுந்த பதிலைக் கொடுக்கவில்லை;என்னுடைய முயற்சிக்கும் பல்வேறு தடைகள் வந்துவிட்டது;விரைவில் அதனை செய்துமுடிப்பேன்.
// Recently i saw a person Hindu To converted Christrian… he saying to me homosex is also not blunder mistake in this world but our kal vikara arathanai or hindu god prayer is the great blunder mistake of the world… what is this????? how can we respect yr religion… its very shame thing… how about yr teaching style?? is the good way… this one example but me having see my day to day life this type of example..
Bible words are only creation of human not jesus saying words… no one destroy true at any case….
sakthi ganesh //
திரு.சக்தி கணேஷ் அவர்களே, தங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளமுடிகிறது;இந்தியா ஒரு கலாச்சார செழிப்புமிக்க நாடு என்பதில் எந்த ஐயமும் இல்லை;அண்மையில் மதம் மாறிய தங்கள் நண்பர் சொன்னது நிச்சயமாகவே கண்டிக்கத்தக்க கருத்துதான்;ஒருவேளை ஆர்வக்கோளாறு காரணமாக அவர் அவ்வாறு சொல்லியிருக்கலாம்;ஆனால் பைபிள் அவ்வாறு போதிப்பதாக தயவுசெய்து கருதவேண்டாம்;ஏனெனில் முதல் கொலையானாலும் சரி,முறைதவறிய பாலியல் உறவுகளானாலும் சரி அதனை பைபிள் கண்டிப்பதை நீங்கள் பைபிள் மூலமே அறியமுடியும்;பைபிள் எந்த மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் அதன் ஆதாரக் கருத்து மாறாததுடன் ஒன்றையொன்று விஞ்சியே நிற்கும்;பைபிள் பலரையும் கவராததற்குக் காரணமே அது யாருடனும் சமரசம் செய்துகொள்ளாததே;நுனிப்புல் மேய்ந்தவர்களெல்லாம் ஆதிவேதமான பைபிளைக் குறித்து விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள்;ஒரு மனிதனால் படைக்கப்பட்டதை இன்னொரு மனிதன் ஒருபோதும் பல்லாயிரம் தலைமுறைகளைக் கடந்தும் ப்ரொமோட் செய்ய வாய்ப்பில்லை என்பதை உணருவீர்களா? முதன்முதலில் இறைவனாலேயே எழுதித்தரப்பட்ட இறைவேதம் பைபிள் மாத்திரமே;அது இறைவனால் எழுதித்தரப்பட்டது என்பதற்கான நிரூபணம் அதனைப் பெற்ற மனிதன் மூலம் பகிரங்கமாக வெளிப்பட்ட கடவுளுடைய அற்புதசெயல்களே;யோசிப்பீர்களா?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இது தமிழ் ஹிந்துவில் அண்மையில் வெளியான முதல்பாவம் 1 & 2 கட்டுரைக்கான நமது விளக்கம்...
இனிமேலும் தமிழ் ஹிந்து தளத்தில் பின்னூட்டமிட்டு நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்காமல் அதற்கு இதுதான் பதில் என்ற ரீதியில் தெளிவான நம்முடைய விளக்கத்தை நேர்மையுடனும் உள்நோக்கமில்லாமலும் போட்டுவைக்கிறோம்; இதனை அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் சரி புறக்கணித்தாலும் சரி அதைக் குறித்து நமக்கு கவலை இல்லை;
குறிப்பிட்ட அந்த இரு கட்டுரைகளுக்கான நம்முடைய பொதுவான பதிலை சற்று நேரமெடுத்து பொறுமையாக எழுதுகிறோம்; தள நண்பர்களும் அவ்வப்போது தமது மேலான கருத்துக்களை இங்கே பதிக்கவும், நம்முடைய இந்த சிறிய முயற்சியை ஊக்கப்படுத்தும் விதமாக அவரவர் தளங்களில் இந்த தொடரை மறுபதிப்பு செய்யவும் வேண்டுகிறோம்;
கருத்துப் பிழைகள் இருந்தால் தாராளமாகச் சொல்லலாம்;அவற்றை நாம் விவாதமாக்காமல் நியாயமான முறையில் சுட்டிக்காட்டப்படும் கருத்துப் பிழைகளைத் திருத்திக்கொள்ள நாம் ஆயத்தமாக இருக்கிறோம்.
இனி...
முதல் பாவம் அல்லது ஆதி பாவம் கொள்கையைக் குறித்த போதனை முன்னுரை: மேற்காணும் தலைப்பில் முதல் பாவம் எனும் வார்த்தையானது அண்மையில் தமிழ் ஹிந்து தளமானது வெளியிட்டுள்ள பைபிள் விரோதக் கட்டுரையின் அடிப்படையிலானது; மற்ற மார்க்கங்களைப் போல யூதமோ கிறித்தவமோ தன்மீது வீசப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் உண்மைக்கு மாறான காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய பொய்ப் பிரச்சாரங்களுக்கும் எப்போதும் அலட்டிக் கொள்கிறதில்லை; இந்த கட்டுரையைக் குறித்த நமது பொதுவான பார்வையை முதலாவது முன்வைக்கிறோம்; அடுத்து கட்டுரையின் கருத்துக்களுக்கு வரிக்குவரி நேரடியான நேர்மையான பதிலைத் தருவோம்;
அந்த கட்டுரையில் யூத மற்றும் கிறித்தவ நம்பிக்கைகளைக் குறிப்பிட்டு ஒவ்வொன்றுக்கும் ஆதாரம் கேட்கப்படுகிறது; நண்பர் திருச்சிக்காரன் என்பவரும் இதுபோல அடிக்கடி ஆதாரம் கேட்டுத் தொல்லை செய்வது அனைவரும் அறிந்ததே; தான் பெண்பார்த்து வந்தவளின் கண்ணானது கோணக்கண் என்று குற்றஞ்சாட்டும் நொள்ளைக் கண்ணன் போல நம்முடைய நம்பிக்கைகளை வசைபாடும் இவர்கள் அதற்கான மாற்றாக இந்து மார்க்கத்தைச் சொல்லுவது தான் வே(வா)டிக்கை..!
1.ஆதாரத்தைக் குறித்த மாயைகள்
தற்கால சமுதாயம் அறிவின் அடிப்படையிலும் ஆதாரத்தின் அடிப்படையின் அடிப்படையிலும் மாத்திரமே எதையும் ஏற்றுக்கொள்ளும் முற்றிலும் உண்மையல்ல;நிரூபிக்கப்படாத எத்தனையோ மாயைகளுடன் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்; அது எங்கோ இல்லை, நம் அருகில் தான் இருக்கிறது என்பதே மிகவும் பரிதாபத்துக்குரியதான விஷயம்;
1.1 வானம் எனும் மாயை
உதாரணமாக வானம் என்பது ஒரு போர்வையைப் போல நம்மீது அதாவது இந்த பூமிப் பந்தின் மீது விரிக்கப்பட்டுள்ளது;ஆனாலும் நீல நிறத்தில் தோன்றும் அது தொடக்கூடிய பொருளாக இல்லாமல் பல்வேறு வாயுக் கூட்டங்களால் நிறைந்த மாயத் தோற்றமாகும்;
1.2 நிறம் எனும் மாயை
அதுபோலவே இன்ன நிறம் இது என்பதும் அதற்கு இது தான் பெயர் என்பதும் மாயையாகும்;அது ஒரு பொதுவான அல்லது பெரும்பான்மையினர் காலங்காலமாக சொல்லிவந்த அல்லது ஏற்றுக்கொண்ட பொய்யான உண்மையின் அடிப்படையில் உருவாகி வந்தது;
1.3 நிறக்குருடு எனும் மாயை
நிறக்குருடு என்பதையும் யாராலும் நீருபிக்கவோ சரிசெய்யவோ முடியாது; நிறக்குருடு நோயால் பாதிக்கப்பட்டவன் உண்மையே சொல்லுவதாகவோ பொய் சொல்லுவதாகவோ யார் நிரூபிக்கமுடியும்?மூளையின் எந்த பகுதியில் ஏற்பட்ட பாதிப்பினால் இந்த பிரச்சினை வந்தது என்று கண்டுபிடித்தாலும் யார் அதனை குணமாக்கமுடியும்? அது போல மாலைக் கண் நோயையும் நிரூபிக்கவோ குணமாக்கவோ முடியாது.
1.4 முன்னோரைக் குறித்த மாயை
எந்த ஒரு மனுஷனும் தன் முன்னோர் இவர் தான் என்பதையும் ஏன் தன் தகப்பன் இவன் தான் என்பதையும் நிருபணத்தின் அடிப்படையில் நம்பிக் கொண்டிருக்கவில்லை; மரபணு சோதனையின் மூலமே தன் தகப்பனை ஒருவன் தகப்பன் என்று ஏற்றுக்கொள்ளுவேன் என்று அடம்பிடித்தால் அவனுடைய தாய்க்கு அதைவிட அவமானம் இருக்கமுடியாது;
1.4.1 மேலும் தன் முன்னோர் அதாவது தாத்தாவுக்கு தாத்தாவைக் குறித்த வரலாற்றையும் அவருடைய குணாதிசயத்தையும் தாத்தாவையும் எல்லோரும் அறிந்திருக்கவில்லை.அதுபோலவே பாட்டியின் பாட்டி ரொம்ப பத்தினி என்று தன் தாத்தாவுக்கு தாத்தா சொன்னதாக ஒருவன் சொல்லிக் கொண்டிருந்தாலும் யாரும் அதற்கு ஆதாரம் காட்டமுடியாது;
1.4.2 இன்னும் தன் தாத்தாவை ஒருவன் காட்டமுடியாததாலேயே தாத்தா என்பவரே உலகத்தில் இல்லை என்று எவனாவது சொல்லமுடியுமா?
1.5 இந்து எனும் மாயை
இதுபோலவே யுகங்களைக் குறித்தும் படைப்பைக் குறித்தும் பல தெய்வ அவதாரங்களைக் குறித்தும் மறுபிறவி, ஊழ்வினை, கர்மா, கன்மா,மாயா, சைவா, வைணவா, நல்வினை, செய்வினை என்று அனைத்து யூகமான செய்திகளையும் இன்னும் ராமன் கிருஷ்ணன் எனும் அவதார தெய்வங்களைக் குறித்த பொய்யான செய்திகளையும் செவி வழி வந்த செய்திகளையும் மனதார நம்புகிறோம்;
1.5.1 இவை எதற்குமே எழுத்துப்பூர்வமான வரலாற்றுரீதியிலோ அகழ்வாராய்ச்சியின் மூலமோ புதைபொருள் ஆராய்ச்சியின் மூலமோ எவரும் ஆதாரத்தை இதுவரை யாரும் கேட்கவுமில்லை, காட்டிவிடவுமில்லை; நிரூபணத்தின் அடிப்படையில் நாம் எதையும் வைத்திருக்கவில்லை;
1.5.2 நண்பர் திருச்சிக்காரன் சொல்லுவதுபோல தெய்வத்தையும் இதுவரையிலும் யாரும் பார்க்கவில்லை; பார்க்காத இறைவனைப் பார்த்ததாகச் சொல்லுவது பொய்யானால் இருக்கும் இறைவனை இல்லை என்பதும் மதியீனம் என்று வேதம் சொல்லுகிறது; இருக்கிறார் என்பதற்கு ஆதாரம் கேட்போர் கூட இறைவன் இல்லை என்பதற்கான ஆதாரத்தைக் காட்டமுடியாது.
2 கிறித்தவ மார்க்கத்தின் நேர்மை
இந்நிலையில் கிறித்தவமானது இரண்டுவிதங்களில் தனது நேர்மையினைப் பறைசாற்றுகிறது;அது தனது நம்பிக்கைகளுக்கெதிராகப் பேசுவோரைத் தடைசெய்யவில்லை;இரண்டு தவறுகளைத் திருத்திக்கொள்ளுகிறது; இதனால் சரியானதை நோக்கி வேகமாக முன்னேறும் நன்மையை அது அடைந்திருக்கிறதுஉலகத்திலேயே கிறித்தவம் மட்டுமே தவறானவற்றை சரிசெய்து கொண்டும் தன் ஆதாரங்களை வேகமாக சேகரித்துக் கொண்டும் உலகமெங்கும் வேகமாக வளர்ந்து வருகிறது.
2.1 இஸ்லாமின் நேர்மை
உதாரணமாக இஸ்லாத்துக்கு எதிராகவோ அதன் இறுதித் தூதருக்கு எதிராகவோ எதையும் பேசுவதோ கேள்வி கேட்பதோ விமர்சிப்பதோ சீர்திருத்தங்கள் செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது; இதனால் அது மிகவும் தூய்மையான மார்க்கம் என்று யாராவது சொல்லிவிடமுடியுமா?
ஒருவேளை அந்த மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் வேண்டுமானால் அது தூய்மையானது என்று சொல்லிக்கொள்ளலாம்;ஆனால் அது பொதுவான உண்மையாக இல்லை;உலகமுழுவதும் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒவ்வொரு நாளும் ஓயாமல் 'அஸ்ஸலாமு அலைக்கும் ' என்று அதாவது 'சமாதானம் உண்டாவதாக ' என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் உண்மையில் அப்படி இல்லை என்பதே உண்மையாகும்;அவர்கள் எதை சமாதானம் என்கிறார்கள் அதனை எப்போது அடைவார்கள் என்பதையும் அவர்களால் சொல்லமுடியாது
2.2 இந்துயிஸத்தின் நேர்மை
'ஓம் ஸாந்தி 'என்று துவங்கி எண்ணற்ற பூஜைகளும் புனஸ்காரங்களும் மந்திரங்களும் இந்துத்வா தாசர்களை வாழ்வித்துக் கொண்டிருக்கிறது; ஆனாலும் மக்களுடைய வியாதியோ பாவங்கள் என்று கிறித்தவர்களால் குறைகூறப்படும் குடி,கொள்ளை,வேசித்தனம் போன்ற குற்றச்செயல்களோ குறைந்துவிடவில்லை;மாறாக அதிகரித்துக் கொண்டே போகிறது;
இதற்கு மதத் தலைவரும் பொறுப்பேற்றுக் கொள்வதுமில்லை;அது நியாயம் என்பது போலவே அது போன்ற தவறுகளைச் செய்வோர் மதத் தலைவர்களால் அரவணைக்கப்படுகின்றனர்;கோடிக்கணக்கான வருடங்களாக பாவிக்கப்படும் புண்ணிய மார்க்கமாகத் தங்களைப் பறைசாற்றிக் கொள்ளும் இந்துயிஸம் தேசத்துக்கான எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வை சொல்லிவிடவில்லை;
அனைத்து பிரச்சினைக்கும் காரணமாக இருக்கும் குழப்பமான தனது சித்தாந்தங்களை மாற்றிக் கொள்ளவும் இல்லை;உதாரணமாக இந்தியாவிலுள்ள ஜாதி மத சண்டைகளுக்கும் இன மோதல்களுக்கும் பிரிவினைகளுக்கும் இந்துத்வா கொள்கைகளே காரணமானாலும் அவர்கள் சகிப்புத்தன்மை,சனாதன தர்மம் என்றெல்லாம் பேசினாலும் எதையும் நடைமுறையில் நிறைவேற்றும் நேர்மை அவர்களிடம் இல்லாததால் தேசத்தின் சுமார் 80 கோடி மக்கள் இன்னும் அறியாமையிலும் தோல்வியிலும் வறுமையிலும் வாடிக்கொண்டிருப்பதுடன் கல்வியிலும் சுகாதாரத்திலும் ஆளுமைப் பண்புகளிலும் பொருளாதாரத்திலும் பின் தங்கியுள்ளனர்;பணத்துக்காக இந்துக்கள் மதம் மாற்றப்படுவதாகக் கூறப்பட்டாலும் அதுபோன்ற இழிநிலைக்கான காரணத்தை ஒப்புக்கொள்ளும் நேர்மை அவர்களிடம் இல்லை;'என் மனைவி செத்தாலும் சாகட்டும் ' என்று தன் மனைவியின் தீராத வியாதிக்கு அசைவ சூப் கொடுக்க மறுத்த காந்திஜியின் தேசமல்லவா இது? இதனால் அவர்களை மற்றொரு மக்கள் குழு அல்லது நாட்டினர் எளிதில் கவர்ந்து மேற்கொள்ளூம் பரிதாபநிலை நிலவுகிறது.
2.3 தவறுகளை சரிசெய்துகொள்வதில் கிறித்தவ மார்க்கத்தின் நேர்மை
கிறித்தவம் தோன்றிய முதல் நூற்றாண்டிலிருந்து கிறித்தவத்துக்குள் பல்வேறுபட்ட பாரம்பரிய நம்பிக்கைகளையும் பழங்குடி கதைகளையும் கொண்டாட்டங்களையும் கொண்ட மக்கள் குழுக்கள் வேகமாக இணைந்து வந்தது; இதனால் கிறித்தவத்தின் ஆதார நோக்கங்கள் சிதைக்கப்பட்டது; அது ஆதிக்கம் செலுத்த சிறந்த வழி அரசியலா மதமா எனும் போட்டி நிலவிய காலம்; எனவே மதத்தில் அரசியலும் அரசியலில் மதமும் கலந்து அனைத்தும் மாசுபட்டது;
ஆனாலும் கிறித்தவம் இன்னும் இன்னும் மோசமான நிலைக்குச் சென்றுவிடாமல் அனைத்தையும் கிரகித்துக் கொண்டும் இன்னும் மேம்பட்ட நிலையை நோக்கியும் வளரத் துடிக்கிறது; எந்த ஒரு மார்க்கமோ மார்க்கக் கலாச்சாரமோ காலம் போகப் போக சிதைந்து க்ஷீணித்து அதன் அடையாளத்தையே இழந்து மற்றொரு புதிய தன்மைக்கு மாறுவதே மனுக்குல வாழ்வின் பெரும் துன்பமாகும்; ஆனால் கிறித்தவமும் சரி யூதமும் சரி அதன் அடையாளத்தை இழக்காமலிருக்க ஒவ்வொரு யுகத்திலும் ஒரு சிறுகூட்டம் இருந்துவந்துள்ளது; (தொடரும்...) இங்கே பின்னூட்டமிட இயலாதோர் எனது வலைப்பூவைத் தொடர அன்புடன் வேண்டுகிறேன். http://chillsams.blogspot.com/2010/09/yauwana-janam_1870.html
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)