Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவனுடைய பிள்ளைகள் என்பார் யார்?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: தேவனுடைய பிள்ளைகள் என்பார் யார்?
Permalink  
 


"....Adam, son of God". Luke 3:38 (NIV)

ஆதாம் தேவனுடைய குமாரன் என்றால் அவன் சந்ததி முழுவதுமே அப்படித்தான். "மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்ச்சிப்பைக் காண்பார்கள்..." லூக்3:5

அனைவரும் தேவனுடைய பிள்ளைகள்; அனைவருக்கும் இரட்ச்சிப்பு என்று உண்மையைச் சொன்னால் நம் பிழைப்பு கெட்டுவிடுமே என்று எண்ணுபவர்களுக்கு இதெல்லாம் விளங்க வாய்ப்பில்லை.

ஆம்,ஆதாம் தேவனால் உண்டானதால் அவன் தேவனுடைய பிள்ளை; ஆனால் அவன் விழுந்துபோன இடத்திலேயே சர்வ வல்ல தேவன் மாம்சத்தில் வந்து அவனை மீட்டெடுத்துப் பரலோகம் சென்றார்;

இனி உலகம் இரண்டாகப் பிரிகிறது;

விழுந்து போனவனை எழுந்து வந்து இழந்து போனதை மீட்டெடுத்த மேன்மையுடன் விண்ணகம் எழுந்தருளியவரின் மீதான விசுவாசத்தை பெற்றோர் மட்டுமே அவருடைய பிள்ளைகள்;

இதுவே சுவிசேஷம் மற்றது வேதப்புரட்டு..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

சிலர் அறியாமலோ பிழையாகவோ உலகத்திலுள்ளோர் அனைவரும் தேவனுடைய பிள்ளைகளே என்று போதித்துவருகின்றனர்; ஆனால் வேதம் மிகத் தெளிவாகப் போதிக்கிறது,

"அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்." (யோவான்.1:12)

அதாவது அதரிசனமான தேவனுடைய தற்சொரூபமான இயேசுவானவரை ஏற்றுக்கொண்டோரே தேவனுடைய பிள்ளைகள்; ஏனையோர் உலக மக்கள் என்பது இதனால் விளங்குகிறது;

"தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத்  தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,

பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும்  இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ்சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?  (யோவான்.10:35,36)

dadwithkids.jpg

மேற்கண்ட வசனத்தின்படியும் தேவ வசனத்தைப் பெற்று அதற்குக் கீழ்ப்படிந்து அதன்படி வாழ்வோரே தேவனுடைய பிள்ளைகள்  என்றாகிறது; ஏனையோர் தேவனுடைய பிள்ளைகளல்ல என்றறியலாம்;

இதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் கீழ்க்கண்ட வாக்கியங்களைக் குறிப்பிட்டு அடிப்படையற்ற ஏதோ ஒரு கருத்தைச் சொல்லுவார்கள்;

சங்கீதம் 33:14 தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து பூமியின் குடிகள் எல்லார்மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார்.

சங்கீதம் 33:5 அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது.

மேற்கண்ட வசனமும் வேத வசனமே;அதில் எந்தவித மாற்றுக்கருத்துமில்லை;ஆனால் அதில் பிள்ளைகள் என்று எங்கே வருகிறது? தேவன் பார்க்கிறார் என்பது உண்மையே,எதற்காக என்று கீழுள்ள வாக்கியம் போதிக்கிறது;

"தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.

எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை."(சங்கீதம்.14:2,3 )


இதுவரை தேவன் - குடிகள் என்று இருந்த அடிமை நிலை மாறவே இயேசு அடிமையின் ரூபமெடுத்து வந்தார் என்பது சுவிசேஷம்; எனவே பவுலடிகள்,"அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.(ரோமர்.8:15) என மிகத் தெளிவாகப் போதிக்கிறார்;

அடிமைகளுக்கே கற்பனைகள் கொடுக்கப்பட்டது;
பிள்ளைகளுக்கோ கிருபை வரமானது.


(இன்னும் வரும்...)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard