Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிரிவினையில் மேட்டிமை எதற்கு..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
பிரிவினையில் மேட்டிமை எதற்கு..?
Permalink  
 


கோவை பெரியன்ஸ் எனும் மாறுபாடானதைப் போதிக்கும் குழுவினர் (அவர்கள் கூட்டத்தினர் என்று கூறப்படுவதை விரும்புகிறதில்லை; ஒருவேளை சிலரான‌ எண்ணிக்கையுள்ளவர்களை பெரிய கூட்டம் என்று கூறுவது உண்மைக்கு மாறாக இருக்குமே என்ற தன்னடக்கமாகவும் இருக்கலாம்...) தொடர்ந்து வரைமுறையில்லாமல் ஊழியர்களையும் ஊழியங்களையும் தூஷித்துக் கொண்டிருக்கிறார்கள்;

நாமும் குறைகளைச் சுட்டிக்காட்டுகிறோம்; இதற்கும் அதற்கும் என்ன வித்தியாசம்? அது வாசகருக்கு நன்றாகத் தெரியும்;

அவர்களுடைய தூஷணத்தில் சுபாவ அன்பில்லை;காழ்ப்புணர்ச்சி மட்டுமே தெரிகிறது; இதன் பின்னணியிலுள்ள தந்திரமானது வெகுஜன மக்களைக் கவரும் ஊழியர்களின்மீதான நம்பிக்கையைக் குலைத்துப் போட்டுவிட்டு அனைத்து அமைப்பின்மீதும் ஒருவித சலிப்பை ஏற்படுத்தி ஒரு ஆத்துமாவைத் தனிமைப்படுத்திவிட்டு பின்னர் சத்தியத்தைவிட்டு விலகும் கொள்ளையையும் கொலையையும் நடத்தி முடிப்பது; இதுவே சாத்தானின் பயங்கரமான திட்டம்;

இறைவன் தளத்தின் சுந்தர் ஒரு ஆத்துமாவை உள்ளேயிருந்து வெளியே இழுத்துச் செல்ல பார்த்தால் இவர்கள் வெளியே இருந்து கூச்சல் போட்டு கூடாரத்துக்குள்ளிருப்போரை வெ
ளியே வரச் செய்து இழுத்துச் செல்லப்பார்க்கிறார்கள்;

ஆரம்பக்கட்டத்திலேயே இவர்கள் இத்தனை தீவிரமாகவும் பயங்கரமாகவும் செயல்பட்டால் இன்னும் இணையதளத்தின் வசதிகளால் இவர்கள் வளர்ந்து பெருகினால் எத்தனை ஆபத்தாக முடியுமோ?

அவர்களுக்கு நாம் அண்மையில் அளித்ததொரு பதிலூட்டம்...


// ஆகவே தான் கத்தோலிக்கத்தை விட்டு, பிறகு "ஆவிக்குறிய சபை" என்று மேட்டிமை பாராட்டும் சபைகளில் இருந்து வெளிவர தேவன் உதவை செய்தார்.//

தமிழைப் பிழையில்லாமல் எழுத முதலில் பழகுங்கள்; இது மிகவும் ஆபத்தாக முடியும்; ஏனெனில் ஒரு எழுத்துப்பிழை முழு வாக்கியத்தின் அர்த்தத்தையும் மாற்றிவிடும்;

இரண்டு திருத்தங்கள்:

'ஆவிக்குறிய ' என்பது 'ஆவிக்குரிய ' என்றும் 'உதவை ' என்பது 'உதவி ' என்றும் வரவேண்டும்; எனக்கும் எழுத்துப்பிழை வரும்,ஆனாலும் மீண்டும் ஒருமுறை படித்துப்பார்த்துவிட்டு பதிப்பதால் தப்பிக்கிறேன்;

இனி உங்கள் கருத்து தொடர்பாக‌...
தற்போதுள்ள உங்கள் நிலைமையும் மேட்டிமையானதுதான் என்பதையறிந்தால் தாங்கள் நலம்; உங்கள் பார்வையில் மோசடியான அமைப்பாகத் தோன்றும் சுமார் 2000 பிரிவினைக் கூட்டத்தாரில் ஏதோ ஒரு குழுவை நான் சார்ந்திருந்தாலும் நான் சிலுவையைக் குறித்தே மேன்மைபாராட்டுவேன்;

முதலில் இந்த பிரிவினைக்கூட்டத்தார் என்ற சொல்லாட்சி கத்தோலிக்கர்களாலேயே சொல்லப்பட்டுள்ளது என்பதையறியவும்; இப்படி ஒருவரையொருவர் பிரிவினைக் கூட்டத்தார் என்று சொல்லிக்கொண்டிருந்தால் எது சரி என்று தீர்க்கும் அமைப்பு இங்கு இல்லை;

எந்தவொரு அரசியல் அமைப்புக்கும் ஜனநாயக அமைப்புக்கும் தங்களை உட்படுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து பிரிவினைக் கருத்துக்களையே பேசும் மாவோயிஸ்டுகளின் நோக்கங்கள்கூட இரு கட்டத்தில் நிறைவேறிவிடும்; ஆனால் உங்களைப் போன்றோர் ஆறுதலடையப்போகும் நாள் எந்நாளோ, தெரியவில்லை.

// ஆனால் விவாதத்தின் தலைப்பு, "கத்தோலிக்க சபைகளும் ஆவிக்குரிய சபைகளும்" என்பது தானே, இதில் வேதமாணாக்கள் எங்கு வந்தார்கள்? //

இயேசுவானவரையே நோக்கி கேட்கப்பட்ட கேள்விதான், 'நீர் யார்,எந்த அதிகாரத்தில் இவைகளையெல்லாம் செய்கிறீர் ' என்பது;வேதமாணாக்கராகவோ யெகோவா சாட்சிக் கூட்டத்திலிருந்து பிரிந்தவராகவோ அல்லது எந்த குழுவையும் சேராமலோ நீங்கள் செயல்பட எல்லா உரிமையுமுண்டு;ஆனால் வேதம் சொல்லுகிறது,

Rom 2:1 ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.

Rom 2:2 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

அப்படியானால் மற்றவரை எச்சரிக்கிறேன் என்ற பெயரில் தூஷித்துக் கொண்டிருப்பதையே ஒரு ஊழியமாகச் செய்தால் ஒரு கட்டத்தில் அதுவே ஒரு நோயாக மாறிவிடும்;ஏனெனில் நாம் இன்னொரு சந்ததியின் பொறுப்பாளிகளாக இருக்கிறோம்;நம்முடைய அடிச்சுவடுகளையே அவர்களும் பின்பற்றி வருவார்கள்;

சரியானதைத் தொடர்ந்து சொல்லுவதையே ஒரு இயக்கமாக எடுத்து செய்தால் அதினால் பயனுண்டு;தவறானதைச் சுட்டிக்காட்டுவதையே வாழ்க்கை முறையாக்கிக் கொள்வதால் எந்த பயனுமில்லை;

இனி உபதேசம் சார்ந்த வேறுபாடுகளை மாத்திரமே விளக்கினால் அதற்குத் தகுந்த பதிலளிக்க ஆயத்தமாக இருக்கிறோம்;

ஆதி அப்போஸ்தல ஊழியமுறை இன்று எங்குமே கிடையாது;அது ஏறக்குறைய கம்யூனிசக் கொள்கையைப் போன்றது;இன்றைக்கு கம்யூனிசத்தின் நிலை உங்களுக்கே தெரியும்;எப்போது ரோம சாம்ராஜ்யத்தின் சூழ்ச்சியினால் சபையானது ஆலயக் கட்டிடத்துக்குள் சிறைவைக்கப்பட்டதோ அப்போதே ஊழியம் என்பது இருபிரிவானது;

ஊழியம் செய்வோர் என்றும் ஊழியம் செய்வோருக்கு உதவி செய்வோர் என்றும் அன்றே பிரிந்தது;அந்த நிலைமை கடந்த சுமார் 1500 வருடங்களாகத் தொடர்ந்து இப்போதுதான் சீர்படத் துவங்கியுள்ளது;

ஊழியத்தில் காணப்படும் மோசடிகள் அமைப்புரீதியானது எனில் உங்கள் பிரச்சினையானது சித்தாந்தரீதியிலானது;அது உங்கள் மனம் சம்பந்தமானது;நீங்களாக இதுவே சரியென்று ஏதோ ஒரு சூழ்நிலையில் நிர்ணயித்துக்கொண்டது; அதையும் சபையின் செயல்பாடு சம்பந்தமான கோளாறுகளையும் முடிச்சு போடவேண்டாம்.

எல்லா குழுக்களுமே பிரிந்துக் கொண்டுதானிருக்கிறது;எனது பகுதியிலும் கூட ஒரு சிறு வேதாகம மாணவர் குழுவானது வெறும் பத்துபேரை மட்டுமே கொண்ட அது ஆறாகவும் நாலாகவும் பிரிந்துவிட்டது; வேண்டுமானால் ஆதாரம் மற்றும் விவரத்துடன் இங்கே பதிக்க ஆயத்தமாக இருக்கிறேன்;இதற்கு என்ன சொல்லுவீர்கள்?

(இன்னும் வரும்...)




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard