Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சுவிசேடகர்கள் ஏன் விஷம் குடிப்பதில்லை..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: சுவிசேடகர்கள் ஏன் விஷம் குடிப்பதில்லை..?
Permalink  
 


bereans
தமிழ் ஆராய்சி நடத்தும் பல தளங்கள் இருக்கிறது, அங்கு போய் உங்களை திறமைகளை வெளிப்படுத்துங்கள். கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க தெரியாமல் தேவையில்லாததில் மூக்கை நுழைத்து கொண்டு இருப்பது "ஊழியர்களின்" தனி சிறப்பு. அது அப்படியே தங்களிடமும் இருக்க தான் செய்கிறது என்பது உமது பதிவிலிருந்து வெளிப்படுகிறது.

//"நீங்களோ எவனோ அப்பன் பேர் தெரியாதவனுடைய கூற்றையெல்லாம் நம்பிக் கெட்டுப்போய் இங்கே பெற்ற தாயை தூஷித்துக் கொண்டிருக்கிறீர்கள்;"//

இப்ப‌டி ப‌ட்ட‌ த‌ங்க‌ளின் த‌மிழ் ஞான‌த்தை தாங்களே தமிழ் தொன்றாட்டுங்கள், ஆனால் அதற்கென்று தளங்கள் இருக்கிறது, அங்கு இல்லை, இந்த தளத்தில் வால் நீண்டுச்சுனா நறுக்கிவிடுவோம். இப்ப‌டி எல்லாம் எழுதிவிட்டு நாக‌ரீக‌த்தை ப‌ற்றி பேச‌ அறுக‌தை இல்லாத‌வ‌ர் நீங்க‌ள்!!

இந்த‌ த‌ள‌த்தில் நாங்க‌ள் யாரும் எங்க‌ள் க‌ருத்துக‌ளை ஏற்க‌ சொல்ல‌வில்லை, ஏனென்றால் இந்த‌ க‌ருத்துக்க‌ளை ஏற்றுக்கொண்டால், சோம்பேறிக‌ளாக‌ பிச்சை எடுத்து தின்ன முடியாது, ஊற் மேய‌ முடியாது, ப‌ல‌ வீடுக‌ளுக்கு ஊழிய‌ம் என்கிற‌ பெய‌ரில் நுழைய‌ முடியாது. ஆக‌வே இதை ஏற்ப‌து க‌ஷ்ட‌ம் தான், ஆனால் யாருக்கு தேவையோ அவ‌ர்க‌ளுக்கு போய் சேரும், ஓநாய்க‌ள் இருந்தும்.

அண்ணே நீங்கள் பெருமைபேசும் கொள்கையின் பிதாமகனும் அவருடைய மொழியும் இதே சிறப்புப் பெயரால் வழங்கப்படுவது தாங்கள் அறியாததோ..?

அப்பன் பேரு தெரியாத மொழி ஆங்கிலம்;அப்பன் பேரு தெரியாதவன் அந்த காலத்தில் எழுதிப் போதித்தது "வேதப்புரட்டு "எனும் வேதப்புரட்டு..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// என்னமோ நான் தான் வேதத்தை மொழிப்பெயர்த்து எழுதினது போல் பேசுகிறீர்களே! முதலாவது, என் தமிழை நக்கலும் நையாண்டியும் செய்ய வேண்டும் என்றால் தயவு செய்து இங்கு உங்கள் பதிவுகளை தராதீர்கள். நான் பல முறை பதிந்து இருக்கிறேன், நான் உங்களை போல் மேதாவியான தமிழ் படித்தது கிடையாது என்று. மீண்டும் மீண்டும் அதை சொல்லுவது என்னை தனிப்பட்ட முறையில் கேலி செய்வதாக நான் எடுத்துக்கொள்ளவேண்டியதாக இருக்கிறது. //

நண்பரே நான் கேலி செய்தால் நீங்கள் அழுதுவிடுவீர்கள்;மிகவும் நாகரீகமாகவே எடுத்துக்கூறியிருக்கிறேன்;அது உங்களுக்குப் புரியாவிட்டாலும் நமது வாசகர் அறிவர்;

தமிழுக்கே ததிங்கணத்தோம் போடும் நீங்கள் எப்படி தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பைக் குறித்துக் குறைகூற இயலும்;ஒன்று நீங்கள் எபிரேய மொழியினை அறிந்து அதன் தமிழாக்கச் சொல்லை மனதார உணர்ந்து அறிந்து அந்த கருத்தைச் சொல்லும் ஆற்றலைப் பெற்றிருந்தால் நான் உங்கள் முன் தலைவணங்குவேன்;

நீங்களோ எவனோ அப்பன் பேர் தெரியாதவனுடைய கூற்றையெல்லாம் நம்பிக் கெட்டுப்போய் இங்கே பெற்ற தாயை தூஷித்துக் கொண்டிருக்கிறீர்கள்;

ஒரு காரியத்தை நம்பி ஏற்றுக்கொள்வதற்கான எந்த விதிமுறைகளையும் - அதாவது விஞ்ஞானரீதியிலும் மார்க்கரீதியிலும் தர்க்க சாஸ்திர ரீதியிலும்- கடைபிடிக்காத உங்கள் கூற்றை நான் எப்படி ஏற்க முடியும்?

உங்கள் எதிர்தரப்பு மேற்பூச்சாக காயத்தை குணமாக்குகிறது என்பது உங்கள் கூற்றானால் நீங்கள் மருத்துவமே அறியாதவராக அல்லவா இருக்கிறீர்கள்?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// இருக்கும் தேவ வார்த்தைகளில் ஒன்றையும் சேர்க்க வேண்டாம் என்று தான் சொல்லுகிறோமே தவிர வேதத்தை வேண்டாம் என்று சொல்லவில்லை. சபைகளில் இன்று வெளிப்படுத்தன விசேஷம் எடுக்க பயம், காரணம் அர்த்தம் தெரிந்தால் தானே அதை பிரசங்கிக்க, ஆகவே வெறுமனே அதை படித்தால் போதும், அவன் பாக்கியவான் என்று போட்டிருப்பதால் அதை படியுங்கள் என்று போதிக்கும் சபைகள் உண்டு. என்னமோ போதக ஊழிய வரம் பெற்றிருக்கிறோம் என்று இப்படி சொல்ல வெடக்க படுவதில்லையா? //


ஒரு வாதத்துக்காகச் கேட்கிறேன்..,
நீங்கள் குறிப்பிடும் ஒன்றையும் சேர்க்கக்கூடாது அல்லது நீக்கக்கூடாது எனும் விதியானது குறிப்பிட்ட அந்த வேதப்பகுதிக்கு மட்டுமே உரியதா அல்லது முழுவேதத்துக்கும் உரியதா?

அதனை எப்படி யார் நிரூபிக்கமுடியும்?

முழுவேதத்துக்குமுரியதெனில் அதனைத் தொகுத்துக்கொடுத்தவரின் ஆவியானது சரியானது என்கிறீர்களா?

அப்படியானால் நீக்கப்பட்ட புத்தகங்களின் கதியென்ன?

உலகத்திலுள்ள எத்தனையோ குப்பையான நீதிநூல்கள் வரிசையில்கூட அவை வைக்கப்பட தகுதியற்றதானது ஏனோ?

ஆங்கிலத்தில் மட்டும் சரியான மொழிபெயர்ப்பு என்று எதைச் சொல்லமுடியும்?

அந்த காலத்தின் குறைவான வசதியிலும் நெருக்கமான பொருளாதார சூழ்நிலையிலும் உங்களைப் போன்றோருடைய தமிழ்ப் புலமையுடன் மொழிபெயர்த்திருந்தால் எப்படியிருந்திருக்கும்?

கட்டின வீட்டுக்கு குத்தம் சொல்வது மிகவும் எளிது;நன்றியுணர்ச்சியும் தேவ அன்பும் பொங்கினால் மற்றதை ஆவியானவரே போதிப்பார் என்பது எனது அன்றாட அனுபவம்;

தமிழ் வேதாகமத்தை மொழிபெயர்த்த பரிசுத்தவான்களின் தனிப்பட்ட வாழ்க்கைதரத்துக்கும் நீங்கள் பெருமை பேசும் -உங்களுக்கு வசதியான வாக்கியங்களை அமைத்துத் தந்த வெளிநாட்டு மேதைகளின் தனிப்பட்ட வாழ்க்கைதரத்துக்கும் நிரம்ப வித்தியாசமுண்டு; அந்த கால தியாக செம்மல்களைப் போற்றாவிட்டாலும் தூற்றாமலிருந்தால் நலமாகும்;

எபிரேய மொழியைப் போன்ற சிக்கலான பழங்குடியினரின் மொழி வேதத்தை வானத்தின் கீழிருக்கும் எந்த கல்விமானும் மேதையும் மிகத் துல்லியமாக மொழிபெயர்த்துவிடமுடியாது.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// சேர்த்துக்கொள்ளப்பட்ட வசனங்கள் மேல் இத்துனை வாஞ்சையாக இருப்பது ஆச்சரியம் தான். அப்படி தான் வேதத்திற்கு எக்ஸ்டென்ஷன் கிடைத்துக்கொண்டு, ஊழியர்கள் சொல்லுவது எல்லாம் வேத வாக்காகியிருக்கிறது. ஒரு எழுத்தையும் கூட்ட கூடாது என்பது தேவ கட்டளை. மாற். 16: 9 முதல் 20 வரையான வசனங்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டது என்று தெரிந்தோ தெரியாமலோ தாங்கள் நம்புகிறீர்கள் அதன் மேல் விசுவாசம் இருப்பதாக சொல்லுவது வசனத்தை மீறுவதே ஆகும். //

இப்படி வகைபிரித்துக் கொண்டே போனால் பைபிள் எனும் புத்தகத்தில் வெறும் முன்பக்க அட்டையும் பின்பக்க அட்டையும் மாத்திரமே மிஞ்சும்;

ஒவ்வொரு மார்க்கபேத குழுவும் ஒன்றை மேன்மை பாராட்டும்; தேவையில்லாததை நீக்கிவிட்டு புதிய விளக்கங்களோடு புதிய வேதாகமம் வெளியிடப்படும்;அதற்கும் குரான் என்பது போல ஏதாவது பெயர் கொடுக்கலாம்;ஏற்கனவே மார்மன் மற்றும் பிரன்ஹாம் குழுவினர் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்;கிறிஸ்துவின் சபையார் எனும் குழுவினரோ வெளிப்படையாகவே பழைய ஏற்பாட்டை எதிர்க்கிறார்கள்;

சுவிசேஷங்களின் முரண்பாட்டுக்காகவும் பவுலின் ஆதிக்கத்துக்காகவும் புரியாத காரணத்துக்காக வெளிப்படுத்தின விசேஷமும் ஒதுக்கப்படுமானால் பிரச்சினை தீர்ந்தது,உலகில் வேதம் என்ற ஒன்று இல்லாமலே போகும்;அப்புறமென்ன,மீண்டும் ஆராய்ச்சி... ஆராய்ச்சி... ஆராய்ச்சிதான்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

வேதாகம மாணவர் தளத்தின் கருத்தும் எனது பின்னூட்டமும்...

// நண்பர் தங்கமணி தெரிந்துக்கொள்வது என்னவென்றால், முதலாவது இந்த வார்த்தைகளை இயேசு கிறிஸ்து சொல்லவில்லை. வேதப்புத்தகத்தை நம்புவோர் தெரிந்துக்கொள்வது என்னவென்றால், மூலபாஷையில் இல்லாத இந்த வேதப்பகுதி (லூக். 16:9 முதல் 20 வரையான வசனங்கள்) மொழிப்பெயர்ப்புகளில் நுழைந்துவிட்டது. அப்போஸ்தலர்கள் காலத்தில் இந்த நிகழ்வுகள் நடந்தது என்னமோ உண்மை தான், ஆனால் அது ஆரம்பக்காலத்தில் மாத்திரமே. இன்று இந்த வசனத்தை பிரசங்கிப்பவர்கள் நிச்சயமாக இதை செய்ய முடியாது, ஏனென்றால் இந்த பகுதி அப்போஸ்தலர்களை பார்த்து யாரோ பிற்பாடு வேதத்தில் சேர்த்துக்கொண்டதை அப்படியெ மொழிப்பெயர்த்துவிட்டார்கள் நம் மொழிப்பெயர்ப்பாளர்கள்.
//

அது (16:9 முதல் 20 வரையான வசனங்கள்) லூக்கா
வினால் எழுதப்படாமல் பிற்காலத்தில் இணைக்கப்பட்டிருந்தாலும் அது மிஷினரிகளின் பணித்தளங்களில் இன்றும் நிரூபிக்கப்படுகிறது;அந்த வசனத்தை நான் மறுதலிக்கப்போவதில்லை;அதையும் வேதத்தின் ஒருபகுதியாகவே பார்ப்பதில் எனக்கு எந்த சங்கடமுமில்லை;அந்த வசனம் சொல்லப்பட்ட நோக்கம் மற்றும் சூழல் நிச்சயமாகவே இயற்கைக்கு மாறுபட்ட அல்லது அசாத்தியமான சூழலிலேயே என்பது தெளிவு;நாமே சொல்வழக்காக சொல்வதுண்டு 'என் உயிரைக் கொடுத்தாவது உன்னைக் காப்பாற்றுவேன் ' என்று...ஆனால் வசனம் ஒருபோதும் பொய்த்துப் போகாது..!

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

அவ்வப்போது இந்து தனங்களில் முன்வைக்கப்படும் பரியாசமான கேள்வி இது;இதற்கு நான் தமிழ்ஹிந்துவில் அளித்துள்ள பின்னூட்டமாவ‌து...

// தங்கமணி
24 August 2010 at 8:42 pm

ஏசு சொன்னதை விஷத்தை குடித்து காட்டுங்கள் என்று சில்சாமிடமும் கிளாடியிடமும், ஏசுவை விற்கும் கிறிஸ்துவ பிரச்சாரகர்களிடமும் கேட்கிறேன். யாருமே விஷத்தை குடித்து காட்ட தயங்குகிறார்கள். அவர்களுக்கே ஏசு சொன்னதில் நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இல்லாமல், ஏதோ சேல்ஸ்மேன் மாதிரி விற்பவர்களிடம் இப்படி நோண்டுவது நியாயமா? ஏதோ காசுகொடுக்கும் வெளிநாட்டு முதலாளி விற்கச்சொல்கிறார். இவர்கள் விற்கிறார்கள். பாவம் விட்டுவிடுங்கள். //

நண்பர் தங்கமணி பெயரிலேயே தங்கம் இருப்பதால் நீங்கள் தங்கக் கடைக்கு போவதில்லை என்று கேள்விப்பட்டேன்; இந்த விஷம் குடிக்கும் பிரச்சினைக்கு பலமுறை பதில் சொல்லியாகிவிட்டது; மைசூர் போண்டாவுக்குள் மைசூரைத் தேடும் உம்மைப் போன்றோருக்காக  விஷம் குடிக்க நான் தயாரில்லை;

விஷம் குடிக்கச் சொன்ன இயேசுவும் கொழுப்பெடுத்துப் போய் விஷம் குடிப்பவருக்காக அதனைச் சொல்லவில்லை என்பது குழந்தைக்குக் கூடத் தெரியும்; இங்கே உம்மைப் போன்றோர் கொட்டும் விஷத்தை ஏற்கனவே குடித்து ஜீரணம் செய்துக் கொண்டுதானிருக்கிறோம்;

வேதத்தில் இன்னொரு வசனமும் உண்டு,
"ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை." (ஏசாயா.49:15)

மேற்கண்ட வசனத்தின்படி தன் குழந்தையின் மீதான பெண்களுடைய அக்கறையினை வேதம் கேள்வி கேட்கிறதென்று அர்த்தமா? அதில் "நான் உன்னை மறப்பதில்லை." என்பதே இறைவனின் அற்புதமான செய்தி;

இதுபோன்ற ஆறுதலான செய்தியினை உலகில் பல்வேறு மக்களால் தொழப்படும் எந்த ஒரு தெய்வமும் சொன்னதில்லை;கத்தியையும் கப்படாவையும் எடுத்துவைத்துக்கொண்டு எப்போதுமே ஒருவித டென்ஷனிலேயே இருக்கும் எனது மூதாதையரின் தெய்வங்களைவிட பைபிள் கூறும் இரட்சகரின் அருகாமையே எந்த தீயசக்தியும் என்னை அணுகாமல் காத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையினால் அவரை அண்டிக்கொண்டேன்;

இவர் ஒருவரை ஏற்றுக்கொண்டதால் நான் அடைந்த நன்மைகள் இகத்திலும் அகத்திலும் ஏராளம்..ஏராளம்...பரத்திலோ அது இன்னும் அதிகம்..!

அப்படிப்பட்ட அருள்நாதருக்காக நான் விஷம் குடிக்கத் தயாராக இருக்கிறேன்; ஆனால் நான் விஷம் குடித்தால் மரித்துப்போவேன் என்பது நிச்சயம்; அதில் எந்த சந்தேகமும் இல்லை; ஏனெனில் இயேசு விஷம் குடிக்க‌ என்னை அழைக்கவில்லை; அவரைக் குறித்துப் பேசவே அழைத்திருக்கிறார்; விஷம் குடித்து மரித்துப்போனால் நான் எப்படி அவருக்காகப் பேசமுடியும்? எனவே "குடித்தாலும்" என்று யூகநிலை வாக்கியமாகச் சொல்லப்பட்டுள்ளது;

நான் விஷம் குடித்து அதன் பலனாக‌ நீங்கள் இயேசுவை ஆண்டவராக ஏற்றுக்கொள்வதாக இருந்தாலும்கூட உங்கள் பக்தி விலை பேசப்படுவது சிறப்பாக இல்லை; அப்படியும் கூட விஷம் குடித்து நான் இறந்துவிட்டால் நீங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை; ஏனெனில் இறக்காமலிருந்தாலே இயேசுவின் வாக்கை நீங்கள் உண்மையென்று நம்புவீர்கள்; அப்படியே நான் தெய்வாதீனமாகத் தப்பிவிட்டாலும் தங்களுடைய அடுத்த சோதனைக்கு நான் தயாராகவேண்டும்;அல்லது விஷம் சரியாக வேலை செய்யவில்லையென்று கூறி நீங்கள் மீண்டும் விஷத்தைக் குடிக்கச் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை; விஷம் குடிப்பது என்பது மேஜிக் போன்று நிகழ்த்திக்காட்டவேண்டிய காரியமானால் அதன் அளவும் காலநேரமும் குறிப்பிட்டிருக்கவேண்டும்; ஆனால் அதுபோன்று வசனத்தில் குறிப்பிடாததால் இது நிச்சயமாக இயற்கைக்கு மாறுபட்ட சூழலிலேயே நிறைவேறும் என்பது திண்ணம்;அதுபோன்று அநேகர் பிழைத்துமிருக்கிறாகள்; அப்படி பிழைத்து மார்க்கத்தை வளர்த்தோரைவிட மூர்க்கர்களால் தன் இன்னுயிரை தத்தம் செய்தோரின் இரத்தத்திலேயே சபையானது அமைந்துள்ளது;

"தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை..."(அப்போஸ்தலர்.20:28)


இதில் இத்தனை உள்விவகாரங்கள் இருக்க வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என ஏதோ ஒன்றை போட்டுவிடுவது சரியல்ல‌.

தெளிந்துணர்க‌..!


// murugesan
27 August 2010 at 8:46 pm
விட்டுதொலையுங்கள் சொந்தங்களே , இவர்களெல்லாம் காசுக்காகவும் அதிகாரத்திக்காகவும் கீழ்த்தரமானமுறையில் தன்னைபெற்ற தாய் ஏழை என்பதற்காக மற்றொரு வசதியான பெண்ணை தாயாக ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள். இவர்களுக்கெல்லாம் மரியாதை கொடுத்து பதில் போடுவது நமது தகுதிக்கும் இழுக்கு நேரத்திற்கும் கேடு //

ஐயா முருகேசு என் தாயின் பெருமையை எனக்கு உணர்த்தியதே என் இரட்சகர் தான்; உங்களுடைய தத்துவங்களெல்லாம் யாருக்கோ எங்கோ சொல்லப்பட்டு அதன் பக்தர்களால் ஸ்வீகரித்துக் கொள்ளப்பட்டது;

ஆனால் இங்கே என் தெய்வம் என்னிடம் நேரடியாகப் பேசுகிறார்; சொப்பனத்தின் மூலமும் வேதத்தின் மூலமும் அவரது அடியவர் மூலமும் என்னுள்ளிருந்தும் இடைபடுகிறார்;

"நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்." (எரேமியா.1:5)

ஆண்டவருடைய மார்க்கத்தை ஏற்ற பிறகே என் தாயின் அருமையே எனக்குத் தெரியவந்தது; இந்துமார்க்கத்தின் நீதிக் கதைகள் சாதிக்காததை என் இரட்சகர் சாதித்தார்;

எதிரே நிற்பவனுடனான உறவையும் வயதையும் தரத்தையும் பொருட்படுத்தாமல் அம்பைவிட்டு காலிபண்ணு என்று எனது தாத்தா கீதையிலிருந்து போதித்தார்;

இவரோ பகைவனுக்கும் அருளும் தர்மத்தை நிலைநாட்டினார்; வேதங்களில் பேசப்பட்டது கதாபாத்திரங்கள்;  இவரோ வானத்தையும் பூமியையும் என்னையும் படைத்த இறைவன்; எனவே சரணடைந்தேன்;

இந்த அறிவில்லாத எனது இனத்தானையும் பணியச் செய்யும் பணியினை ஏற்றது எனக்கு பாக்கியமாகும்;

எனக்கு அருமையானவர்கள் பிண்டத்திலிருந்து அண்டத்தில் கலந்து விடுவர்; நான் அவர்களை சந்திக்கமுடியாது;ஆனால் அங்கிருந்து காக்கை ரூபத்தில் அவ்வப்போது வருவர் என்ற மாயமான நம்பிக்கையில் நானிருந்தேன்;

ஆனால் அவர்களுடன் நான் மீண்டும் இணையமுடியும் என்ற மறுமையின் நம்பிக்கையையும் மரணம் என்பது வெறும் உறக்கநிலையே என்றும் போதித்தது எனது இரட்சகர்;

இன்னும் என்ன சொல்ல‌..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard