Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்தியா இந்து தேசமா..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இந்தியா இந்து தேசமா..?
Permalink  
 


Suresh, on June 14, 2010 at 22:31 Said:

// ஒன் (கல்லு)சாமிய தரிசிக்க பணம் கேட்கிறாய்,சிருஷ்டிக் கர்த்தாவை தரிசிக்க பணம் கொடுக்கிறேன்,யாரையா மோசடி பேர்வழி..?

திருப்பதிக்குச் செல்லும் சாலையோரங்களில் குழந்தையையும் குட்டியையும் வைத்துக்கொண்டும் குடும்பங்கள் தவிப்பது அந்த சாமிக்குத் தெரியாதா?ஒரு நாளாவது அந்த அசையாத‌- உயிரற்ற- அலங்கரிக்கப்பட்ட கல்லாக சமைந்துவிட்ட -பெரிய‌வன் அந்த ஏழை பக்தர்கள் கனவில் வந்து என்னைத் தேடி ஏன் இவ்வளவு தூரம் வந்தாய் நான் உனக்குள் தானே இருக்கிறேன் என்று சொன்னதுண்டாடா,அல்லது பணத்தினால் என்னை வாங்கமுடியாது என்று இலஞ்சப்பணத்தையும் ஏழைகளின் இரத்தக்கறை படிந்த வட்டிப்பணத்தையும் பெற மறுத்ததுண்டா //

// Dear Chilsam, god is not asking money. that fee aslo fixed by the politicians. that money also spend for all people including you //

நண்பரே உங்கள் சாமிய நன்றாக உற்றுப் பாருங்கள், அது என்ன சொல்லவருகிறது என்று யோசித்து -கற்பனை செய்து பாருங்கள்;

அதன் தல புராணமும் சரி, அது நிற்கும் தோற்றமும் சரி, 'இன்னும் கொடு' , 'போதாது ' என்றே நிற்கிறது;

' போதும் ' என்றோ, ' ஆசீர்வதிப்பது ' போலவோ அதன் கரங்கள் இல்லையல்லவா..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

  1. e6a4b00296a037d6bde7fc36a08c3923?s=40&d=identicon&r=Gedwin says:

    Dear bro i hope u r the one who write comment in Tamil hindu .com Pls dont reply in their site just to stimulate them they ll publish some of our comment they ll not publish our right reply which can shut their mouth they criticise very badly abt christianity and jesus i feel very sad b4 i also replied some time now i stopped no christians shd write comment there no hindus also posting thier comments for their spiritual articles with love edwin

  2. 11be7b24527fd2fbacb0d65018f68f28?s=40&d=identicon&r=Gchillsam says:

    அன்பான சகோதரர் எட்வின் அவர்களுக்கு, வாழ்த்துக்கள்; தாங்கள் கணித்தவாறு நான் கிறித்தவ எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் தளங்களில் நமது நியாயங்களை எடுத்துச் சொல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்;

    ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்பது தாங்கள் அறிந்ததுதானே; அவர்களுடைய தளத்துக்கு வரும் எண்ணற்ற இந்து நண்பர்கள் நம்முடைய தரப்பு நியாயத்தை பார்த்து ஓரிருவராது தெளிவடைய வாய்ப்புண்டாகுமோ என்றெண்ணியே இந்த பணியைத் தளராது செய்துவருகிறேன்;

    நம்முடைய ஆண்டவரை வரைமுறையில்லாமல் அவர்கள் தூஷிக்க நான் காரணமாகிவிட்டேனோ என்ற எண்ணத்தில்
    நீங்கள் கூறுவது போல எனக்கும் கூட அநேக முறை சலிப்பு வந்ததுண்டு; அண்மைக்காலமாக அந்த தளத்தை பார்வையிடுவதைக்கூட நிறுத்தியிருந்தேன்;

    ஆனால் அண்மையில் மிஷினரிகளைக் குறித்த குறிப்பிட்டதொரு கட்டுரையைப் புகழ்ந்து “திருச்சிக்காரன்” தளம் எழுதியிருக்க அந்த தளத்துக்காக எழுதியதொரு பின்னூட்டத்தையே “தமிழ்ஹிந்து”விலும் பதித்தேன்; அதிசயமாக – அதாவது வம்பு வளர்க்கவேண்டியே பதித்திருந்தார்கள்; ஆனால் மிகத் தந்திரமாக எனது அடுத்தடுத்த பின்னூட்டங்கள் உள்ளே செல்லாமல் செய்துவிட்டனர்;

    அதையும் தளராது மற்ற தளங்களில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்; ‘இதன்பலன் என்ன, எனது பொன்னான நேரத்தை வீணான வாக்குவாதங்களில் செலவிட்டுக்கொண்டிருக்கிறேனோ,’என அடிக்கடி எனக்குள்ளிருந்து ஒரு எச்சரிக்கையுணர்வு தோன்றிக்கொண்டேயிருக்கிறது;

    ஆனாலும் இதுபோன்ற எதிர்மறைக் கருத்துக்களுக்கு ‘வேகம் அதிகம் விவேகம் குறைவு ‘ என்பதையுணர்ந்த நான் தகுந்த பதிலைத் தராவிட்டால் நமது விசுவாசத்துக்கு ஏதோ துரோகம் செய்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வு வருகிறது;

    ஆணடவர் அனைத்தும் பார்த்துக்கொள்வார் என்பது உண்மைதான்; ஆண்டவர் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதானிருக்கிறார்; நாம் வைராக்கியமுடையவர்களாக இருக்கிறோமா,என்பதையும்;

    நான் இங்கே பதிவுசெய்து வைத்துள்ள செய்திகள் எக்காலத்திலும் பேசிக்கொண்டேயிருக்கும்; அவர்கள் தளத்திலிருந்து என்னுடைய கருத்துக்களை நீக்கினாலும் என்னுடைய தளத்தில் அது இருக்கிறது;

    மேலும் என்னுடைய வருத்தம் என்னவென்றால் நம்முடைய ஆண்டவருடைய பெயரால் ஊழியம் செய்து பல வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொண்ட எந்த ஊழிய ஸ்தாபனமும் நம்முடைய ஆண்டவரைக் குறித்த தூஷணங்களுக்கு எந்த விளக்கத்தினையும் முன்வைக்கிறதில்லை; இது எப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை;

    அந்த மக்களுடன் நேரடியாக மோதாவிட்டாலும் தகுந்த விளக்கத்தினைக் கொடுக்கும் தார்மீக பொறுப்பையாவது நிறைவேற்றலாமே..?

    உதாரணமாக இஸ்லாமிய நண்பர்கள் இந்த இணைய தள வசதிகளைப் பயன்படுத்தி தங்களுக்கு எதிராகப் பேசுவோருக்கு பதிலளிப்பதிலும் தங்கள் மார்க்கத்தினைக் குறித்த போத்னைகளை பதிப்பதிலும் முன்னணியில் இருக்கின்றனர்;

    அதாவது அவர்களுடைய மார்க்க விளக்கப் போதனைகள் என்பது நமது வேதத்தையும் விசுவாசத்தையும் (கிறிஸ்துவின் பாடு, மரணம், உயிர்த்தெழுதலை மறுத்து…) தூஷிப்பதே;

    இதனைத் தடுக்க நாம் செய்த முயற்சி என்ன?
    எண்ணற்ற கிறித்தவ இளைஞர்கள் அவர்களால் வஞ்சிக்கப்பட்டுக் கொள்ளை போய்க் கொண்டிருப்பதை உணர்ந்தோமா?

    கிறித்தவர்களின் சாட்சியற்ற ஜீவியம் மற்றும் ஊழியர்களின் தன்னலப் போக்கினால் சலித்துப் போன இளம் விசுவாசிகளைக் காப்பாற்ற நாம் செய்யப்போகும் முயற்சி என்ன?

    சற்று யோசியுங்கள்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// விவேகானந்தர் சொற்பொழிவுகளின் மூலம் இந்து மதத்தின் சிறப்பை புரிந்து கொண்டனர்.ஆனால் இங்குள்ள கிருஸ்தவர்கள் தான் இன்னும் இந்து தத்துவங்களை புரிந்து கொள்ள வில்லை.அவர்கள் விவேகானந்தரின் நூல்கள் சிலவற்றைப் படித்தால் அவர்களிடம் மாற்றம் ஏற்ப்படும் என்றே கருதுகிறேன். //

விவேகானந்தரை நான் சற்று படித்திருக்கிறேன்; அவருடைய போதனைகளில் கர்மா தியரியும் மறுபிறவிக் கொள்கையும் பேகனிஸ்ம் சார்ந்த கருத்து என்பதால் என்னால் ஏற்கமுடியவில்லை;

சரியானச் சொல்லிச் சமுதாயத்தைச் சரிசெய்ய மகான்கள் அனைவரும் முயன்றனர்;

ஆனாலும் முக்கியமானதை மட்டுமடுத்தியும் சாதாரணமானதை அதிகமாகவும் சொல்லும்போது அதன் வீச்சு குறைந்து போகிறது;

இறைவன் வகுத்துக் கொடுத்த ஆதார சத்தியம் நிச்சயமாக ஒன்றே ஒன்றுதான்;அது எதனுடனும் சமரசம் ஆகாது;

அது எது என்பதிலேயே சர்ச்சை நீடிக்கிறது; அதுவரை எல்லாம் ஒன்றுதான் என்ற சமரசக் கொள்கையில் போவதே பெரும்பான்மையினரின் முடிவாகும்;

ஏனெனில் அன்றாட‌ வாழ்க்கையின் அழுத்தங்கள் அதைவிட முக்கியமானதைப் போன்ற மாயை பரவிவிட்டது.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

தனபால், on June 2, 2010 at 22:31 Said:
// உங்கள் கோப்பையில் ஏற்கெனவே தேநீர் நிரம்பியிருக்கிறது;நான் ஊற்றும் தேநீர் உங்கள் கோப்பையிலிருந்து வழிந்தோடிவிடுகிறது; இருந்தாலும் மீண்டும் நீங்கள் தேநீர் கேட்கிறீர்கள்;நான் தேநீர் ஊற்றலாமா? வேண்டாமா? என்று யோசிக்கிறேன்;தேனீர் கீழே வழிந்தொடினாலும்,நீங்கள் கேட்பதால் நான் கொஞ்சம் தேநீர் ஊற்றுகிறேன். //

நண்பரே எனது கோப்பை நிறைய தேநீர் இருக்கையில் நான் ஏன் உங்களிடம் கேட்கவேண்டும்;அது நீங்கள் கொடுத்ததானால் நான் குடித்தபிறகே மேலும் ஊற்றவேண்டும்;நீங்கள் ஊற்ற முயற்சிப்பது தேநீர் கோப்பைகளைக் கழுவிய கழுநீராக இருப்பதாலேயே தடுமாறி நிற்கிறேன்;என் கோப்பையிலிருக்கும் நல்ல தேநீர் மாசுபடாமலும் அதை எப்படியாவது நீங்களும் ருசிக்கவேண்டுமே எனத் தவிக்கிறேன்..!

// நாங்கள் எல்லையற்ற இந்த பிரபஞ்சத்தைப் படைத்த ஒரே இறைவனையே நாம் கர்த்தர் என்றும்,அல்லாஹ் என்றும் பிரம்மம் என்றும் அழைக்கிறோம் என்று கூறுகிறேன்.ஆனால் நீங்களோ இந்தக்கருத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்.இதற்க்கான காரணம் நீங்கள் உங்கள் மதம்,உங்கள் கடவுள் மட்டுமே உண்மை மற்ற மதங்கள்,கடவுள்கள் பொய்யானவை என்று கருதுகிறீர்கள். //

ஆம்,நண்பரே எல்லையற்ற பிரபஞ்சத்தைப் படைத்த சர்வ வல்ல தேவனை (தாந்தொன்றியை...self existent) சாதாரண ஆண் உருவும் பெண் உருவும் ஆக்கி ஆசாபாசங்களும் கோபதாபங்களும் நிறைந்தவராகச் சொன்னால் அதனை எப்படி ஏற்கமுடியும்?

"அர்த்தநாரீஸ்வரர்"
எனும் தத்துவத்தையும் தரம் தாழ்த்தி அருவருப்பான உருவமாக்கி விட்டீர்கள்;ஞானிகள் வார்த்தையினால் சொன்னதையெல்லாம் தவறான புரிந்துக்கொள்ளுதலால் நீங்கள் உருவமாக்கியது அவர்களுக்குத் தெரியாது;ஞானிகள் என்று நான் சொல்லவருவது ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த தவசீலர்களை;

ஆண்,பெண் இருதன்மையும் சேர்ந்த -அதற்கும் மேலான -ஞானம் மிகுந்த- காணக்கூடாதவரான -பயங்கரமான- ஜோதிவடிவமான பரம்பொருளை எதனுடன் ஒப்பிட்டாலும் அது மாபாவம் என்று வேதம் சொல்லுகிறது;

"யாவே" தேவனுக்கும் பிரம்மாவுக்கும் அதாவது சித்தரிக்கப்பட்ட பிரம்மாவுக்கும் அல்லாவுக்கும் அதாவது முகமதுவுக்கு முன்னரும் அரபியரால் வணங்கப்பட்ட சந்திரக் கடவுளான அல்லாவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை;

யூதர்களின் தேசிய கடவுளான யாவே தேவன் ஒருபோதும் எதனுடனும் இணைத்து சித்தரிக்கப்பட்டதில்லை;அது யாராலும் கூடாது;ஏனெனில் அவர்தாமே அதனை கட்டளையாகக் கொடுத்துள்ளார்;

பிரம்மா என்று உங்களால் சித்தரிக்கப்பட்டு சிவன்,விஷ்ணு போன்ற சகோதரக் கடவுளர்களுடன் ஒப்பிடப்படும் தேவர்களே உலகத்தைப் படைத்தனர் என்று சொல்லிக் கொள்ள உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு;ஆனால் அதுகளுடன் சர்வ வல்ல "யாவே" கடவுளை ஒப்பிடுவதால் எங்களைப் புண்படுத்துகிறீர்கள்;

அதுபோலவே இஸ்லாமியருடைய செயலும் வருந்தத்தக்கது;
இறுதித் தூதர் என்று அவர்களால் நம்பப்படும் முகமதுவின் தனிப்பட்ட வாழ்க்கை முறை பரிசுத்த வேதாகமத்தினால் போற்றப்பட்ட தீர்க்கர்களின் வாழ்க்கை முறைக்கு முற்றிலும் எதிரானது;

இன்றைக்கு சுமார் 6000 வருட பாரம்பரியம் கொண்ட யூதர்களின் தேசியக் கடவுளான "யாவே" தேவனை "அல்லா" என்று கூறும் துணிகரத்தை அவர்களுக்கு "யாவே" கடவுளே கொடுத்திருக்கவேண்டும்;இல்லாவிட்டால் அது யாராலும் கூடாது;

ஏனெனில் யூதர்களுக்கு வெளிப்பட்ட கடவுள் பெயரை மட்டும் தள்ளிவிட்டு அவரது அற்புத செயல்களையும் கட்டளையும் ஆளுக்கு ஆள் எடுத்தாளத் துவங்கியதாலேயே இத்துணை குழப்பங்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்;

// இயேசுகிறிஸ்துவைப் பற்றியோ,கிறித்தவ மதத்தைப் பற்றியோ அறிந்துக்கொள்ள நான் முதலில் செய்யவேண்டியது பைபிளை படிப்பதே;அப்படி நீங்கள் என்றாவது இந்து மத புத்தகங்களைப் படித்து இருக்கிறீர்களா? //

என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்;எனக்கு புத்தி தெரிந்த காலத்திலிருந்து கோவில் கச்சேரிகள் மற்றும் ஒலிப்பெருக்கிகள் மூலம் (அதற்கும் கிறித்தவர்களே உபயம்..!) கேட்டு கேட்டு புளித்துவிட்டது;திருவிளையாடல் கதை வசனமும்,அனைத்து எல்.ஆர்.ஈஸ்வரி பாடல்களும் மனப்பாடம்;அதுபோக பள்ளிப்பாடத்திலும் (நான் நல்ல மாணவன் அல்ல,நல்ல வாசகன்..!) நூலகங்களிலும் எல்லாம் போக டிவி சீரியலாக இராமாயணமும் மகாபாரதமும்...இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..!

இவையெல்லாவற்றினின்றும்
ஞானத்தைத் தேடினேன்,
தொலைந்தேன்; தொலைத்தேன்;
என்னைத் தொலைத்து
நான் தேடியதை
என்னுடையதைத் தொலைத்து
கண்டுபிடித்தேன்;
தொலைந்து போனதாக
எண்ணப்பட்ட நானும்
கண்டுபிடிக்கப்பட்டேன்;
என்னைத் தேடியவரே மகாகுரு,அவரே ஜகத்குரு;
என்னைத் தேட தம்மை தொலைத்தவர்,
தம்மைத் தந்து என்னை மீட்டார்;


// இந்துமத வேதம் அனைத்தும் இயேசுவை பற்றியே கூறுகிறது என்று ஒரு அசிங்கமான சிந்தனையால் எழுந்த குழந்தைத் தனமானக் கருத்துக்கொண்ட ஒரு “அர்த்தமுள்ள இந்துமதம்” (பெயர்கூட சொந்தமாக வைக்க முடியவில்லை,) என்ற சிறு கையடக்க பிரதியைக் கொண்டு எங்கள் வேதத்தை நீங்கள் அறிந்துகொண்டதாகக் கூறுகிறீர்கள்;எங்கள் வேதங்களின் நூல்கள் ஒரு வீடே நிறையும் அளவிற்கு.எண்ணற்றவை.அவ்வளவு பெரிய நூல்களில் உங்கள் ஏசுவைப் பற்றிக் கூறியது ஒரு சிறிய கையடக்கப் பிரதி தானா??? என்ன ஒரு ஏமாற்றம். //

நான் எங்குமே அதுபோலக் கூறவில்லை;"அர்த்தமுள்ள இந்துமதம்" ஏறக்குறைய முழுதொகுதியும் என்னிடமுள்ளது;ஆனால் அது கவிஞர் கண்ணதாசன் எழுதியது;அதனையா இப்படி தூஷிக்கிறீர்கள்?

இயேசுவைக் குறித்து சிருஷ்டிகளெல்லாம் சாட்சி பகர 'அ' முதல் 'ஃ'வரையிலும் ,'க்' முதல் 'ள்' வரையிலும் உயிரிலும் மெய்யிலும் உயிர்மெய்யாக பைபிள் முழுவதுமே அவர் நிரம்பியிருக்க, காமவிகாரங்கள் நிரம்பிய அருவருப்பான புராணங்களிலும் ஆதாரமில்லாத செவிவழி செய்திகளான வேதங்களிலும் அவரைத் தேடவேண்டிய அவசியமென்ன?

Chillsam:
///படைத்தவனைக் கல்லாக்கியது யார்,மனிதனா அல்லது இறைவன் தன்னை கல்லில் வெளிப்படுத்தினானா?///


Dhanapaul:
// உங்கள் வார்த்தை ஜாலம் அருமை...உங்கள் நண்பரின் போடோவைப் பார்த்து என் நண்பனை காகிதமாக்கியது யார்? இல்லை,காகிதத்தில் என் நண்பன் வெளிப்பட்டானா? என்று கேட்கிறீர்கள். //

என்னுடைய நண்பனுடைய போட்டோவைப் பார்த்து 'என் நண்பனுடைய போட்டோ 'என்று தான் சொல்லுவேன்; நண்பனையே பார்க்கும்போது 'உனது போட்டோவைப் பார்த்தேன்,'என்றும் சொல்லுவேன்;ஆனால் நான் ஒருபோதும் பார்த்திராத ஒரு பிணந்தின்னியைப் பார்த்து எனது நண்பன் என்று சொல்லமாட்டேன்;ஒட்டமாக ஓடிவிடுவேன்;

// ஒரு இந்து பல பிறவிகளைக் கடந்து இறுதியாக இறைவனை நேரடியாகக் காண்கிறான் //

நீங்கள் முருகன் ரூட்டைப் பின்பற்றுகிறீர்கள் போலும்;நாங்களோ கணபதியான இயேசுகிறிஸ்துவின் வழியைப் பின்பற்றுவதால் அவர் வழியாக ஒரே பிறப்பில் முக்தியடைகிறோம்;கணபதி என்றால் அனைத்து சேனைகளின் அதிகாரி என்பது அருத்தமாம்;அனைத்து சேனை என்பது வான்சேனை,பாதாளசேனை,பூலோகசேனை ஆகியன உள்ளடக்கியது;

Chillsam:
///அப்படியானால் நான்கு வேதங்களிலும் குறிப்பிடப்படாத ஒன்றை தெய்வமாக்குதல் தெய்வக்குற்றமல்லவா?///

Dhanapaul:
// அப்படி ஒன்றும் வேதத்தில் சொல்லவில்லை. நீங்கள் தான் கூறுகிறீர்கள்..வேதம் வழிபடுவதற்கு அதிக சுதந்திரத்தை தருகிறது.//

Chillsam:
///நான்கு வேதங்களிலும் இன்றைக்கு வணங்கப்படும் பிரபலமான தெய்வங்களைக் குறித்து ஏதாவது குறிப்பிடப்பட்டிருக்கிறதா?///

Dhanapaul:
//ஆம் கூறப்பட்டுள்ளது,சிவன்,விஸ்ணு,கணபதி,சக்தி போன்ற கடவுள்கள் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது.மற்ற தெய்வங்கள் தேவர்களாக சொல்லப்பட்டுள்ளது.//

Chillsam:
///முக்கியமாக‌ சிவனைக் குறித்து இந்துக்களின் ஆதாரமான நான்கு வேதங்களில் என்ன குறிப்பிட்டிருக்கிறது?///

Dhanapaul:
//ஆம் சொல்லப்பட்டுள்ளது.//

அண்ணன் அவர்கள் மிக‌அழகாக மாணவனைப் போல பதிலளித்துள்ளார்; ஆனால் இது ஒரு மார்க் கேள்வியல்ல;பத்து மார்க் கேள்வியாகும்; ஆதாரத்துடன் பதிலளிக்கவும்;

// பைபிள் இதுவரை 22 முறை திருத்தப்பட்டுள்ளதாக அறிகிறேன்,சரியா??? //

தவறு;நீங்கள் கூறுவது உண்மையானால் திருத்தப்படாத பிரதியைக் காட்டவேண்டியது நீங்கள்தான்;(கும்ரான் குகையில் கண்டெடுக்கப்பட்ட ஏசாயா புத்தகத்தின் கையெழுத்துப் பிரதி அற்புதமான வரலாற்று சான்றாகும்..!)

Chillsam:
//சரவணபெலகுலா’வில் எதை வணங்குகிறார்கள்?///

Dhanapaul:
//அவர் சமண மதத்தைச் சேர்ந்தவர்.சமண மதம் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது.//

என்ன நண்பரே இப்படி தடாலடியாக நழுவலாமா?
புத்தர்,மகாவீரர் என எல்லாருமே வேதத்தை விளக்க வந்த ரிஷிகள் தானே..?
அப்படியானால் வாரணாசியில் சுற்றிக்கொண்டிருக்கும் நிர்வாண சாமியார்களைக் குறித்தும் ஆணுறுப்பில் புற்றுநோய் வந்து செத்துப்போன
நம்ம ஊர் விசிறி சாமியாரைக் குறித்து ஏதாவது சொல்லுங்கள்..!


// எங்கள் மதத்தில் மஞ்சளும் குங்குமமும் கிருமிகளை அளிக்கவே,வீடு நிலைகளில் பயன்படுத்தப்பட்டது.மஞ்சளுக்கு எறும்போ,கரையானோ வராது,அதனாலேயே நிலைகளில் மஞ்சளும்,மஞ்சளால் ஆன குங்குமமும் பூசப்படுகிறது...//

நம்முடைய வீட்டுப் பெண்களை நீங்கள் இவ்வளவு கேவலமாக சித்தரிக்கலாமா?அவர்கள் விருப்பத்துடன் அணியும் மங்கலப் பொருட்களை நீங்கள் இவ்வளவு கேவலப்படுத்தலாமா?

Dhanapaul:
// மகா புத்திசாலியான அந்த எலி.என்ன செயஞ்சதுன்னு சொல்லுங்க சார்.ஆனா இந்த கதை சொல்லும் உங்களுக்கு இந்த கதையின் மூலம் தெரியக்கூடிய நீதி என்னவென்றால் எப்படி தீர்க்க நினைக்கிறீர்களோ,அப்படியே தீர்க்கப்படுவீர்கள்.//

Dhanapaul:
// இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் செய்ததைப் போலவே தங்கள் வழக்கத்தை மாற்ற முடியாமல் சர்ச்சிலும் செய்கிறார்கள்.இந்துமத பழக்கவழக்கக்களை கிறிஸ்தவத்தில் கலக்கிறார்கள். //

அண்ணே நான் எலி கதையைச் சொன்னதே உங்களது மேற்கண்ட க்ருத்துக்காகத் தான்;எனவே நீங்கள் எந்த விதத்திலும் உங்கள் வீட்டு எலியை எங்கள் வீட்டுக்குத் துரத்துவது மிகவும் அநியாயம்..!

வர்ட்டா..?!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

ஒரு செயலை மையமாக வைத்து, கற்பனையாக ஒரு உருவத்தை உருவாக்கி ,பொருள் விளங்கப் பயன்படுத்துவது உருவ வழிபாடு ஆகாது;

உதாரணமாக பாடையில் கட்டித் தூக்கிச் செல்லப்பட்ட ஒரு வாலிபனின் பிணத்தைத் தொட்டு இயேசு அவனை உயிர்த்தெழச் செய்தார் என்பது செய்தி;

இதனை விவரிக்க ஒரு ஓவியத்தை வரைந்து அதனைப் பார்க்கும் போது மனக் கண் முன்பு அந்த காட்சி விரியும்;

அதே போல ஒரு "மைனர் குஞ்சு" ஆற்றங்கரையில் குளித்துக் கொண்டிருக்கும் கன்னிப்பெண்களின் உள்ளாடைகளை ஒளித்துவைத்து விளையாடுவதைப் போன்ற ஓவியத்தைப் பார்க்கும்போதும் இதே போன்று கற்பனைச் சிறகு விரிந்து அந்த "மைனர் குஞ்சு"வாக நான் இருக்கக்கூடாதா என மனம் ஏங்கும்;

இரண்டுமே நிகழ்ந்த சம்பவம் என்று வைத்துக் கொள்வோம்;

முதல் நிகழ்ச்சி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை; இறைவன் மீது நம்பிக்கை பெருகியதுடன் எனக்கும் அது போன்று எதாவது அதிசயம் நடக்காதா என்ற எண்ணத்துடன் முன்னேறுகிறேன்;அந்த ஓவியத்துக்கு விளக்கேற்றி வணங்கத் தோன்றவில்லை;

ஆனால் "மைனர் குஞ்சு" ஓவியம் மட்டும் வணங்கத்தூண்டுகிறது;அது எப்படி..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

athikarvitha, on May 31, 2010 at 22:31 Said:
//One has commented (or asked a question) that does an Amman Temple established in a village protects the people from all sort of crime. Poor fellow! I wonder how the ignorance could take such an immense form like this person bears. He has completely forgot that the Christian world’s crime rates. Could his Bible-created God protect the accidents, serial killings, natural disasters, robberies, kidnaps, etc etc. in the Christian countries? Appallingly dreadful arguments.//

எம்ப்பா,ரிச் பெல்லோ...அந்த கர்மாந்தரத்த வணங்குறதால ஒரு ப்ரயோஜனமும் இல்லன்னா எதுக்கு எல்லா ஓட்டையிலும் எதையாவது குத்திக்குனு கவுந்துக்கணும்..?

உங்க வேல் கம்பு ஈட்டியெல்லாம் அங்கே போன பிறகே உலகில் வன்முறை அதிகமாகியிருக்கிறது;

நீங்க கிறிஸ்தவ நாடுன்னு பெரிசா நினைக்கிற எதுவும் கிறித்தவ நாடல்ல;இல்லாவிட்டால் இஸ்லாமிய தீவிரவாதிகள் இடித்துத்தள்ளிய இரட்டை கோபுரத்துக்கு அருகிலேயே மாபெரும் மசூதி அமைய அனுமதிப்பார்களா?‌

நண்பர் திருச்சிக்காரனுக்கு ஒரு வேண்டுகோள்,இதுபோல தனிப்பட்ட விதத்தில் தாக்குவோருக்கு சாமரம் வீசும் போக்கு தொடர்ந்தால் மற்றொரு இந்து தளத்திலிருந்து வெளியேறியது போலவே இங்கிருந்தும் வெளியேறுவோம்;

நட்பு ரீதியில் பெயரைக் குறிப்பிட்டு அமைதியான முறையில் தனது கருத்தைச் சொல்லத் (தெரியாதவனுடைய கருத்தினால் யாருக்கு இலாபம்..?) தெரியாதவர்களை வைத்துக்கொண்டு எப்படி நாகரீக சமுதாயத்தை உருவாக்கப்போகிறீர்கள்..?

இந்து மார்க்கத்தைப் பற்றி எதாவது எழுதினால் அடிப்படை அறிவில்லாமல் எழுதுவதாகக் கூறும் நீங்கள் சகட்டுமேனிக்கு கிறித்தவ மார்க்கத்தவ்ரைக் குறிவைத்து தாக்கி புண்படுத்தினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்..!

இங்கே யாருக்கும் அடுத்தவன் கருத்தை பரிசீலிக்கிற பொறுமை இல்லை;எல்லோரும் புத்திசாலி என்ற நினைப்பிலிருக்கிறோம்;இங்கு நேரத்தை வீணாக்குவதைவிட அறிவு விருத்திக்கு உதவும் உபயோகமான எதையாவது செய்யலாமே என்று தோன்றுகிறது;

நீங்களெல்லாம் சந்தோஷமா எதையாவது பேசிண்டிருங்க..!

http://thiruchchikkaaran.wordpress.com/2010/05/06/ganesh-pooja/#comment-1174



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

thiruchchikkaaran:
// கடவுள் என்று ஒருவர் இருப்பதற்கான நிரூபணம் எதுவும் இல்லை…நிரூபணம் இல்லாத ஒன்றின் பேரால்… //

http://thiruchchikkaaran.wordpress.com/2010/05/06/ganesh-pooja/

இது ஒன்றில் மட்டும் சுருதி மாறாமல் இசைக்கிறார், நண்பர் திருச்சி; அடிக்கடி நாமும் இதனை மனதில் கொண்டே இவருடைய கருத்துக்களுக்கு மதிப்பளிக்கவேண்டும்;

அதாவது மாய்மாலக்காரனை நம்புவதைவிட மார்க்கவெறியனை நம்பலாம்;

இதே கொள்கையைக் கடைபிடித்தே “ஆரியன்” தமிழ் மன்னர்களுக்கும் பிறகு மொகலாயனுக்கும் பிறகு ஆங்கிலேயனுக்கும் அதற்கும் பிறகு தாழ்த்தப்பட்டோரின் விடிவெள்ளி போலும் சொம்படித்தான்;

அதாவது,’நான் அடிக்கற மாதிரி அடிக்கிறேன்,நீ அழற மாதிரி அழு’ என்பது போல..!

ஓடுற குதிர மேல தானே பந்தயம் கட்டமுடியும்..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// படைப்பு பற்றிய சாங்கிய தத்துவம் நூல்களில் உள்ளது.அதைப் பலர் படிப்பதில்லை.சிலர் மட்டுமே படைப்புத்தத்துவத்தை தெரிந்திருக்கிறார்கள். எனினும் லிங்கத்தில் சிவனையே வணங்குகிறார்கள். //

படைத்தவன் சிவனா,பிரம்மாவா எனும் எனது கேள்விக்கு பதிலில்லை; படைத்தவனைக் கல்லாக்கியது யார், மனிதனா அல்லது இறைவன் தன்னை கல்லில் வெளிப்படுத்தினானா?

கல் என்பது உயிரற்ற ஒரு பொருளாகும்;அதன் மூலம் உயிர்கள் எப்படி தோன்றியது? கல் பேசியதால் தெய்வமானதா,அசைந்ததால் தெய்வமானதா, அதிலிருந்து ஜீவ வாசனை வீசியதால் தெய்வமானதா?
கல் தன்னை உடைத்து இன்னொரு க்ல்லை உருவாக்கியதா?

ஆதியும் அந்தமுமில்லா இறைவனின் குறியீட்டு தத்துவம் மட்டுமே இது எனில் அதனைக் கல்லுடன் ஒப்பிடும் உரிமையைத் தந்தது யார்?

ஏனெனில் சூரியனும் சந்திரனும் பூமியும் உட்பட்ட அனைத்து கோள்களும் வட்டவடிவில் நீள்வட்ட பாதையில் பயணித்துவருகிறது என்பது விஞ்ஞானம்.

இந்த இயக்குசக்தியின் ஆதாரமானது கல்லா,வாயுவா?

ஐம்பெரும்பூதங்களின் தன்மையிலும் இறைவன் இருப்பது உண்மையானால் அந்த ஏகத் தன்மையினை அறிந்து அதனை வணங்குவதுதானே இறைவனின் எதிர்பார்ப்பாக இருக்கும்?

மனிதர்களின் உருவில் அதாவது கழிவு உறுப்புகள் உட்பட்ட சாகப்போகும் மனித உருவில் தான் இறைவனும் வாழ்கிறானா?


// இந்துக்கள் அனைவருக்கும் வேதமே பிரமாணம்,ஆனால் நீங்கள் கூறும் அர்த்தத்திற்கு வேதத்தில் ஆதாரம் இல்லை. //

அப்படியானால் நான்கு வேதங்களிலும் குறிப்பிடப்படாத ஒன்றை தெய்வமாக்குதல் தெய்வக்குற்றமல்லவா?

நான்கு வேதங்களிலும் இன்றைக்கு வணங்கப்படும் பிரபலமான தெய்வங்களைக் குறித்து ஏதாவது குறிப்பிடப்பட்டிருக்கிறதா?

முக்கியமாக‌ சிவனைக் குறித்து இந்துக்களின் ஆதாரமான நான்கு வேதங்களில் என்ன குறிப்பிட்டிருக்கிறது?

சிவனின் ரூபம் கல்லானால் அதாவது அம்மிக் குழவியைப் போன்ற நீள்வட்டமானால் சிவனாக வரைந்து காட்டப்படுவது கற்பனை உருவமா?

கற்பனை உருவத்தை அல்லது தெய்வமல்லாததை வணங்குவதும் இணைவைப்பதும் எப்படி சரியாகும்?ஆரம்ப கற்பிதமே சரியில்லாவிட்டால் முடிவு என்னவாக இருக்கும்?

// நீங்கள் இந்துக்கள் அனைவரும் லிங்கத்தை இனப்பெருக்க உறுப்பாக வணங்குகிறார்கள் என்று கூறுவதாக இருந்தால் திருச்சிக்காரர் பைபிளில் இருந்து மேற்கோள் கட்டுவதைப் போல் நீங்கள் எங்கள் நான்கு வகை வேதங்களிலிருந்தும் மேற்கோள் காட்டுங்கள். //

'சரவணபெலகுலா'வில் எதை வணங்குகிறார்கள்?
பிரம்மாண்டமானதொரு நிர்வாண சிலையை நிறுவி அதனை வணங்கச்சொல்லி உங்கள் நான்கு வேதங்கள் சொல்லாத காரியத்தை நீங்கள் செய்கிறீர்கள்;அதற்கு ஆதாரமே இல்லாதபோது வேதத்திலிருந்து எப்படி காட்டமுடியும்? வேண்டுமானால் அதற்கும் எனது வேதத்திலிருந்தே ஆதாரம் காட்டுகிறேன்;அது எப்படி திரிந்து போனது என்பதையும் நிரூபிக்கிறேன்;


// எங்கள் உருவ வழிபாட்டை குறை சொல்வதற்கு முன்னாள் உங்களிடம் உள்ள உருவ வழிபாட்டை சரிசெய்ய மீண்டும் ஒரு தீவிர பிரச்சார இயக்கத்தை கிறிஸ்தவர்களை நோக்கியே செய்யுங்கள். //

ஒவ்வொருவரும் ஒவ்வொரு புரிதலில் ஒரு குறிப்பிட்ட தவறான இறைவனின் குறியீட்டை வணங்குவதைத் தடுக்க நீங்கள் எதாவது செய்யுங்கள்;1% மட்டுமே தவறாக வணங்குவோரைத் தடுப்பதால் இன்னும் பலர் கெட்டுப்போகாமல் தடுக்கலாமல்லவா?

உங்களிலிருந்து வந்தோராலேயே இங்கும் அந்த பழக்கவழக்கங்கள் தொடருகிறது,அது தவிர்க்கமுடியாத‌து;அதனைத் தடுக்க முனைந்தால் நண்பர் திருச்சிக்காரன் எம்மை வெறுப்புக்கருத்துக்களை பரப்புவோர் எனக் கூறுவார்..!

ராமசாமி வீட்டில் ஒரு எலி ரொம்ப நாளாக வாழ்ந்து கொண்டிருந்தது; ஒருநாள் அந்த எலியைப் பிடிக்க ராமசாமி பொறிவைத்தார்;
ஆனால் மகா புத்திசாலியான அந்த எலி கொஞ்சகாலம் அந்த வீட்டிலிருந்து வெளியேறி பக்கத்துவீட்டு முனுசாமியின் வீட்டில் குடிபெயர்ந்து காலைக் கடன்கள் உட்பட அனைத்து தேவைகளையும் முடித்துக்கொண்டு ராமசாமி வீட்டுக்கு ரெஸ்ட் எடுக்க மட்டும் வந்துவிடும்;

இதனை கவனித்துவிட்ட முனுசாமி ராமசாமியிடம் சென்று புகார் செய்தார்;அவர் மிக நேர்மையாக, தான் பொறிவைத்துவிட்டதாகவும் ஆனாலும் அந்த எலி அதில் பிடிபடவில்லை என்றும் 'தேவைப்பட்டால் நீரும் ஒரு பொறியை ஆயத்தப்படுத்தி வைக்கலாம்' என்று கூறினார்;

ஆனால் முனுசாமியோ,'எனக்கு அதெல்லாம் தெரியாது,இனி உங்க வீட்டு எலி எங்க வீட்டுக்கு வந்தா நான் சும்மா இருக்கமாட்டேன்,அப்புறம் நடக்கறதே வேற' எனக் கடுமையாக எச்சரித்துவிட்டு வந்து விட்டார்;

ராமசாமிக்கு என்னசெய்வதென்றே தெரியவில்லை;வீடு தேடி வந்த வம்பை எப்படி சமாளிப்பது என்பதையறியாமல் மிகவும் சோந்துபோனார்;தன்வீட்டு எலி அடுத்த வீட்டு முனுசாமி வீட்டுக்குப் போகாமலும் அந்த எலியைப் பிடிக்கவும் ராமசாமி எடுத்த அனைத்து முயற்சிகளும் தோற்றுப்போக இதற்கிடையில் அந்த எலி இனப்பெருக்கம் செய்து ஆயிரங்களாகப் பெருகியது;யார்வீட்டு எலி யார்வீட்டுக்குப் போனது யார்வீட்டு எலியினால் அவை இனப்பெருக்கம் செய்தது என்பதே தெரியாத அளவுக்கு பிரச்சினை பெரிதானது;

இதற்கிடையில் எலிகளைக் கொல்வதை எதிர்த்து ஜீவகாருண்ய சங்கத்தினர் கோர்ட்டில் கேஸ் போட்டனர்;ராமசாமியும் முனுசாமியும் குற்றவாளிகளைப் போல சித்தரிக்கப்பட்டனர்;அவர்களுடைய துன்பங்களை யாரும் புரிந்துகொள்ளவோ உதவிசெய்யவோ முன்வரவில்லை;

இதற்கிடையில் எலிகள் பல்வேறு சாதிகளாக பிரிந்து இன்னும் புதுப்புது வகைகளாகவும் பெருகி இன்னும் அயல்நாட்டிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு கோடாகோடியாகப் பெருகியது;

கடைசியில் ராமசாமியும் முனுசாமியும் எலித் தொல்லையில்லாத ஒரு இடத்தைத் தேடியலைந்து கண்டுபிடித்து குடிபெயர்ந்தனர்;

"அப்பாடா" என்று நிம்மதி பெருமூச்சுவிட்டு அண்ணாந்து பார்த்த ராமசாமி அதிர்ந்துபோனார்;காரணம் அவர் வீட்டு பரணிலிருந்து ஒரு எலி முனுசாமி வீட்டுக்கு பயணித்துக் கொண்டிருந்தது..!


(கதை தொடரும்...)


















__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

//... இந்த படைப்பு பற்றிய சாங்கிய தத்துவத்தையே, புராணங்கள் மூலம் விவரிக்கப் படுகிறது;கடவுள் (புருஷன்) சிவன் என்றும்,இந்த பிரகிருதியையே சக்தி எனவும்,கடவுள் – பிரகிருதி சேர்ந்த நிலையிலேயே இந்த பிரபஞ்சமும்,உயிர்களும் தோன்றியது என்ற படைப்பு பற்றி சாங்கிய தத்துவத்தை, புராணங்கள் கூறுகின்றன;இது தான் லிங்க தத்துவம். //

//இந்த 1 % க்கும் குறைவான தாந்திரிய வழியைப் பின்பற்றுபவர்களைத் தவிர மற்ற 99 % இந்துக்கள் சிவனையே லிங்க உருவத்தில் வணங்குகிறார்கள்.//

//லிங்கம் என்றால் ஒரு அடையாளம், குறியீடு என்பதாகும்.குறிப்பாக நீள்வட்ட வடிவமே லிங்கமாகும்.தொடக்கம் முடிவில்லாத, அருவமாகவும் உருவமாகவும் உள்ள இறைவனை குறிக்க மிகச்சிறந்த வடிவம் லிங்க வடிவமே.அளப்பரிய சக்தியை பல காலம் தேக்கிவைக்க மிகச் சிறந்த வடிவம் லிங்க வடிவமே.சக்திவாய்ந்த அணு சக்தியையும்,பலகாலம் தேக்கி வைக்க, மிகச் சிறந்த வடிவம் லிங்க வடிவமே என்று அறிவியலார் அறிந்த காரணத்தாலேயே, அந்த லிங்க வடிவ அணு கொள்கலன்களையே அணு மின் நிலையங்களில் பயன் படுத்துகின்றனர்.இப்பிரம்பஞ்ச சக்தியின் ஆதிவடிவம் லிங்க வடிவமே.//

உங்களது இந்த கருத்துக்களிலேயே எத்தனை முரண்பாடுகள் என்று நீங்களே கவனியுங்கள்;இவை ஒவ்வொன்றும் அங்குமிங்கும் கேள்விப்பட்டவைகளின் தொகுப்புதானே?

லிங்கம் என்பது நீள்வட்டமென்றால் நாம் வணங்குவது அப்படியல்ல;அது அரைவட்டமுமல்ல;நீள்வட்டமென்பது புதைந்த நிலையில் இருந்தால் அது மசூதியின் உச்சியைப் போலல்லவா இருக்கும்?

சிவன் என்று சொல்லப்படுபவரின் எந்த பகுதியை லிங்கம் குறிப்பிடுகிறது என்று சொல்லமுடியுமா?

அது சிவனின் ஒரு குறிப்பிட்ட உறுப்பைக் குறிக்குமானால் அந்த உறுப்பு எது?

படைப்புக் கடவுள் பிரம்மாவா,சிவனா?

சிவன் படைத்தவரென்றால் ஏன் துறவிகள்(..?) மசானக் கொள்ளை நடத்தி எரித்த பிணத்தின் சாம்பலைப் பூசிக் கொண்டு கஞ்சா அடித்துவிட்டு வெறித்தனமாக ஆடுகிறார்கள்?

// உங்களுக்கு எப்படி பைபிள் நிரூபண‌மோ அவ்வாறே எங்களுக்கு வேதமே நிருபனமாகும் //

இந்த கருத்துக்கு எதிராக மற்றுமொரு இந்து தளத்தில் வேதம் எங்களுக்கு முக்கியமல்ல,என்றும் இறைவன் என்பதே ஒரு கான்செப்ட் மட்டுமே இறைவன் இருப்பதை யாராலும் நிரூபிக்கமுடியாது என்று சிலர் சவால் விட்டனர்;மனசாட்சியுடன் யோசித்தால் நான் சொல்வது ஞாபகம் வரும்,அல்லது நான் சிரமப்பட்டு தேடித் தரவேண்டும்..!

எல்லாம் தெரியும்,ஆனா ஒண்ணும் தெரியாது;
ஒண்ணும் தெரியாது ஆனா எல்லாம் தெரியும்..?

நன்றி தனபால் சார்..!

http://thiruchchikkaaran.wordpress.com/2010/05/04/how-to-amend-the-sin/#comment-1123


லிங்கத்தின் தத்துவங்கள்...ஒரு பார்வை..!

http://thamizhoviya.blogspot.com/2009/01/12.html


-- Edited by chillsam on Sunday 30th of May 2010 02:57:29 AM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// உங்களுக்கு இந்தக் கருத்துக்கள் பிடிக்கவில்லை. எனவே தான் விதண்டாவாதம், நடிக்கிறான் என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே சமாதானம் சொல்லிக் கொள்கிறீர்கள். சுதந்திரமான பகுத்தறிவு சிந்தனைகளை , மக்களுக்கு நன்மை தரும் அமைதிக் கருத்துக்களை நீங்கள் சொல்லுங்கள் , எல்லோரும் உங்களைப் பாராட்டி பின்பற்றுவார்கள். //

சகோதரரே நீங்கள் சொந்தத்திலிருந்து எடுத்துப் பேசுகிறீர்கள்; நானோ சர்வ வல்ல தேவனும் சிருஷ்டி கர்த்தாவுமான பரம்பொருளிடத்தினின்று வந்ததைக் கொண்டு பேசுகிறேன்;

ஏற்கனவே ஆழ்மனதில் பதிக்கப்பட்டதொரு பாதிப்பினால் ஒருவனுக்கு அம்மன் தரிசனமாகிறாள்;தான் மிகவும் உக்கிரமாக இருப்பதாகக் (சாமியாடி..)கூறி ஊருக்குப் பொதுவான இடத்தில் கோவில் கட்டி வழிபடச் சொல்கிறாள்;

அதன்பிறகு நடக்கும் நன்மையோ தீமையோ அதற்கு அந்த அம்மன் விக்ரஹம் தானே பொறுப்பாகும்?

அதுபோல அம்மன் போன்ற விக்ரஹ பூஜைகளால் குறிப்பிட்ட ஊரார் அடைந்த நன்மைகளாக ஏதேனும் கூறமுடியுமா?

கொலை,கொள்ளை,கற்பழிப்பு முதலான அனைத்தும் அன்றாட நிகழ்வாக இல்லையா?

மனிதன் தன் பெலவீனங்களுக்கேற்ற தெய்வங்களை அவனே உருவாக்கிக் கொண்டு சுயமாகத் தேர்ந்தெடுத்து அதற்கு பயந்து நடப்பதுபோல பாவனை செய்கிறான்;

ஆனால் அவனை ஆளவோ நல்வழிப்படுத்தவோ எந்த தெய்வத்துக்கும் உரிமையில்லை;காரணம்,அவன் வணங்கும் தெய்வத்தை இவனே உருவாக்கினவன் அல்லது வாங்கியவன்; எனவே தான் விரும்பினால் வணங்குகிறான்,இல்லாவிட்டால் வேறு வழி நடக்கிறான்;

ஆனால் தாந்தோன்றியும் சுயம்புமான சிருஷ்டி கர்த்தாவோ நிலையான மாறாத கட்டளைக கொடுத்து சிருஷ்டி கர்த்தர் என்ற உரிமையுடன் சமாதான சுகவாழ்வுக்கு அழைக்கிறார்;ஆனால் கீழ்ப்படிய மனமில்லாத மனிதனோ தொடர்ந்து "திருச்சிக்காரன்" போல விதண்டாவாதம் செய்கிறான்..!

http://thiruchchikkaaran.wordpress.com/2010/05/06/ganesh-pooja/


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// இயேசு கிறிஸ்துவின் சிலையை சர்ச்சில் கிருஸ்தவர்கள் வணங்குகிறார்களே இது தவறு என்று கூற வருகிறீர்களா ? தெளிவு படுத்தவும்...//

நிச்சயமாக இது தவறு..!

இயேசுவானவர் தம்மை சிலையாகச் செய்து வணங்கச் சொல்லி யாருக்கும் கட்டளையிடவில்லை;தமது சீடர்களுக்கும் தமது தாயை வணங்கச் சொல்லி கட்டளையிடவில்லை;

அப்படியானால் இது எங்கிருந்து பரவி வந்தது?
இது பாபிலோனிய கிரேக்க ரோம சாம்ராஜ்யங்களின் பாரம்பரிய கதை மற்றும் திருவிழா கூத்துகளின் தொடர்பான காரியமாகும்; நாடு பிடிக்கும் சாம்ராஜ்யமான ரோமர்கள் அந்த காலத்தில் மிக வேகமாக பரவி வளர்ந்து வந்த கிறித்தவ மார்க்கத்தை அழிக்கச் செய்த பிரித்தாளும் சூழ்ச்சியே இது..!

அதன்மூலம் பக்தி வேடமிட்டு உலகை ஆக்கிரமித்தனர்;அவர்கள் நிகழ்த்திய சிலுவைப் போர்களுக்கும் இயேசுகிறிஸ்துவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பது வரலாறு.




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

//சிவலிங்கத்தைப் பார்க்கும் எந்த இந்துவிற்கும் காம இச்சை தூண்டப் படுவதில்லை //

நண்பரே, காம உணர்ச்சியைத் தூண்டுகிறதா இல்லையா என்பதல்ல பிரச்சினை; இறைவனின் படைப்புத் திறனை ஆணுறுப்புடன் சம்பந்தப்படுத்தி வழிபடுகிறீர்களா இல்லையா..?

இங்கேயே இருவித கருத்து முன்வைக்கப்படுகிறது;
ஒன்று, உயிர்கள் தோன்ற காரணமாக இருந்த இறைவனின் சின்னத்தை (ஆணுறுப்பை) விரசமாக பார்க்காமல் பக்தியுடன் பார்க்கவேண்டும் என்றும் மற்றது இது ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் (சிவசக்தி) இணைந்த நிலை  தன்மை தத்துவமே- அதாவது பெண் குறியினுள் பார்க்கும் பார்வையில் உன்னத படைப்பின் தத்துவம் என்றும் கூறப்படுகிறது;

இதில் எது உண்மை?

மேலும் சிவபெருமான் விஷ்ணுவின் மோகினி அவதாரத்தில் ம்யங்கி பின்னாலேயே துரத்திக்கொண்டே சென்றபோது வழியெல்லாம் சிந்திக்கொண்டே சென்ற விந்து வெள்ளமே பூமியிலுள்ள அனைத்து தங்கமும் வெள்ளியுமாக மாறியது என்றும் கேள்விபட்டிருக்க்கிறேன்;

அருவருப்பின் உச்சக்கட்டமல்லவா இது?(அதனால் பிறந்தவர் ஐயப்பனாம்..!)

பரிசுத்த பரம் பொருளான மெய்ப் பொருளை தேடியடைந்து முக்தி பெறுவீர்..!

(காளஹஸ்தி சிவாலயத்தின் இராஜகோபுரம்...)
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=36145016


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// மத சுதந்திரம் என்ற பெயரில் எல்லோரையும் பாவிகள் என்று திட்ட உரிமை இல்லை //

நண்பரே, நான் யாரையும் பாவி என்றழைப்பதில்லை; "இனியும் நீ பாவி இல்லை"யென்றே புரியவைக்க முயற்சிக்கிறேன்;

ஏனெனில் இந்த சமுதாயமே ஒருவனை "குடிகாரன்" என்றும் "விபச்சாரி" என்றும் "திருடன்" என்றும் "கொலைக்காரன்" என்றும் "ஈட்டிக்காரன்" என்றும் முத்திரை  குத்தி ஒதுக்கிவைக்கிறது;

அவர்கள் தங்கள் குற்ற உணர்ச்சியுடன் வரும்போது அவர்களை உற்சாகப்படுத்தி (அவர்கள் திருந்தி வாழும் பட்சத்தில்) அவர்களுடைய பெலவீனங்களுக்காக ஏற்கனவே ஒரு பலி செலுத்தப்பட்டு பாவம் நிவர்த்தியும் பரிகாரமும் செய்யப்பட்டுவிட்டது என்று உறுதிகூறி தொடர்ந்து பாவமில்லாத வாழ்வு வாழ வழி சொல்லுகிறேன்;

இரத்தம் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பு இல்லை; மற்றும் பாவமே (இரத்தமே) அனைத்து நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது; மனசாட்சியிலுள்ள குற்ற உணர்ச்சி விலகினாலே முழுமையான தேக ஆரோக்கியம் விளங்கும்;

ஆனால் உங்கள் சமதர்ம மார்க்கமோ அவனது மனசாட்சியை கல்லாக்கி பரிகாரம் செய்தால் போதும் என்ற சுயதிருப்தியிலும் தொடர்ந்து பாவ தன்மையிலுமே வைத்திருக்கிறது;

இதனால் இந்த புண்ணியபூமியில் கோடானுகோடி ஆண்டுகளாக முப்பத்துமுக்கோடி தேவர்கள் முயற்சித்தும் குற்றசெயல்கள் மட்டும் குறையவே இல்லை..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

thiruchchikkaaran:
// நீங்கள் சொல்லும் கோட்பாடு மட்டும் இறைவனால் கொடுக்கப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம்? //

ஒருவன் தான் செய்த தவறுக்காக மனம் வருந்துவதும் அதற்கான பரிகாரம் தேவை என்று தவிப்பதுமே முதலாவது காரணம்;தனக்கு மேல் ஒரு மகாசக்தி இருப்பதைக் குறித்த இயல்பான அச்சமே இதற்குக் காரணம்;

அந்த இறை அச்சமானது பல்வேறு நிலைகளைக் கடந்து கலாச்சார எல்லைகளைக் கடந்தும் அதன் ஆதாரம் மாறாமலிருப்பது ஒரு ஆச்சர்யம்;அதாவது சைவமானாலும் சரி வைணவமானாலும் சரி பலியினால் மட்டுமே பரிகாரம் என்பது பொதுவானது;

இரத்தபலியே உச்சமாகக் கருதப்பட்டு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு இன்றைக்கும் தொடருகிறது;

மனமாற்றமில்லாமல் தான் செய்த குற்றத்துக்காக வருந்தாமல் தவறிழைப்பதற்காகவே அபராதம் செலுத்தும் மனப்போக்கில் மனிதன் வாழத் துணிந்த போதே ப்ரஜாபதியின் மகாபலியினால் பாவம் நிக்ரஹமாகும் வேதத் தத்துவம் வெளிப்பட்டு நடைமுறைக்கு வந்தது;


(தொடரும்...)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

தனபால்:
// எல்லையில்லாத கடவுளையே கர்த்தர் என்றும், அல்லா என்றும், பிரம்மம் என்றும் அழைக்கின்றோம்.இந்த கர்த்தர், அல்லா, பிரம்மம் எல்லாமே அந்த ஒரே கடவுளின் வெவ்வேறு பெயர்களே...//

நண்பரே, இப்படி சம்பந்த சம்பந்தமில்லாமல் வாதத்தை வளர்த்துக் கொண்டே போவதில் யாருக்கும் எந்த பயனும் இராது;

இந்த கட்டுரையானது யூத‍ - கிறித்தவ நம்பிக்கைகளின் அடிப்படை போதனைகளை விமர்சித்து எழுதப்பட்டுள்ளதை அறிவீர்கள்;

கர்த்தரும் அல்லாவும் பிரம்மாவும் ஒருவர் எனில் இந்த கட்டுரைக்கு அவசியமே இருந்திருக்காது; ஏனெனில் யூத மார்க்க நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே அல்லது அதன் தொடர்ச்சியாக கிறித்தவம் விளங்குகிறது;

அது, தான் முழுவதுமாக நம்பி ஏற்றுக்கொண்ட கருத்துக்களை மனுக்குலத்தின் முன்வைக்கிறது;

புத்தர் முதல் ஆதிசங்கரர் வரை விவேகானந்தர் உட்பட அனைத்து மார்க்க அறிஞர்களும் தத்தமது ஞானத்தை போதித்தனர்;அதுபோலவே கிறித்தவரும் போதிக்கின்றனர்;அதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பமல்லவா?

அதற்கான மத சுதந்தரத்தைக் கொடுக்காமல் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டும் வண்ணமாகத் தொடர்ந்து கிறித்தவர்களுக்கு எதிரான பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது;

வெட்டவெளியில் மலங்கழித்து சுற்றுபுறத்தைக் கெடுத்த குஜராத்தின் குடிசைப் பகுதியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வெளிநாட்டில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்திஜி சென்று துப்புரவு பணியை மேற்கொண்டாராம்;

அதுபோலவே பாவத்தைக் குறித்த அறிவே இல்லாமல் சமுதாயத்தைக் கெடுக்கும் துன்மார்க்கருக்கு வெளிச்சம் தரும் அரும்பணியில் கிறித்தவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்;

பாவம் என்பது இல்லாவிட்டால் தோஷமும் பரிகாரமும் எங்கிருந்து வந்தது?

முகமதுவுக்கு சிறப்பு அனுமதியில் பலதார மணமும் ஏன் சொந்த மருமகளையும் கூட தாரமாக்கிக் கொள்ள அனுமதிக்கும் அல்லாவும் கர்த்தரும் எப்படி ஒன்றாக முடியும்?

ஆண் பெண் புணர்ச்சியையே ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்ட - அருவருப்பான இச்சையைத் தூண்டும் சொரூபங்களைக் கொண்ட கோவில்களின் நாயகனான பிரம்மாவுக்கும் கர்த்தருக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்?

சிந்தியுங்கள்..!

ஞானம் என்பது "தனித்திரு"க்கும், "பசித்திரு"க்கும், "விழித்திரு"க்கும்..!

பெரும்பான்மையினரில் சமரசம் செய்துகொள்வோர் வயிற்றுக்காக எதையும் விற்கத் துணிவர்;
எம்மதமும் சம்மதம் என்பர்;அடுத்தவர் ஏமாந்தால் அவர் தோளில் சவாரியும் செய்வர்;நான் ஆரியரைச் சொல்லவில்லை..!

(திருச்சிக்காரன் தளத்துக்கான பதில்..!)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 6
Date:
Permalink  
 

// இந்தியர்க‌ள் இந்தியாவின் அச்சு அசலான, ஆதி குடிகள் என்பதை உறுதி செய்ய வேண்டிய அளவுக்கு சாத்தியங்கள் உள்ளன…//

பூசி மெழுகி பொத்தாம்பொதுவில் “இந்தியர்கள்” என்று குறிப்பிடப்படும் சமூகம் யார்?

ஒரு தேசமானது இந்தியாவைப் போன்ற பல்வேறு சமுதாயக் கலாச்சாரக் குழுக்களால் அமைக்கப்படவே முடியாது;

ஆனால் இந்தியா இந்த காரியத்தில் உலக அதிசயமாக விளங்குகிறது;இந்த ஆயிரக்கணக்கான மக்கள் குழுக்களில் ஒவ்வொரு குழுவும் மற்றொன்றின் மீது ஆதிக்கம் செய்ய முயலுவது மனித இயல்பாகும்;

இதனை முழுமையாக ஆராய பண்டைய வரலாற்றின் இந்தியக் குடிகளின் அமைப்பையும் எல்லைகளையும் ஆராய வேண்டும்;அதற்கொரு உதாரணம் இந்த வரைபடத்தைச் சுட்டும் தொடுப்பு..!

http://picasaweb.google.com/aroop.k.banerjee/ZHistoricalMaps#

தெ(ளி)ரிந்து விட்டேன் என்பது மேலும் அறிந்துக் கொள்ளத்தடையாக உள்ள மாயமாகும்;எனவே ஒவ்வொரு அறிஞர்களின் கூற்றையும் காழ்ப்புணர்ச்சியுடன் ஒதுக்காமல் பொறுமையாக அலசி ஆராயவேண்டும்.

அதில் வெற்றி பெற்ற சமுதாயம் எது,
எதன் வேர் எது,
அது மேற்கொள்ளச் செய்த தந்திரம் என்ன,
அதன் பாதிப்பு என்ன, என்பதே ஆராய்ச்சியாகும்;

இதனைக் குறுகிய மனப்பான்மையுடனோ சுயநலத்துடனோ அணுகினால் தீர்வையடைய முடியாது.




__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard