Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்து மத வேதங்கள் காட்டும் இறைவன் இயேசுவே..!


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
இந்து மத வேதங்கள் காட்டும் இறைவன் இயேசுவே..!
Permalink  
 


கட்டுரையில் குறிப்பிட்ட பெண் ஒளியை அடைந்தாள்.
அப்படியானால் ஒளியை அடையாத மற்றவர்கள் ஒளி கிடைக்க வேண்டுமானால் கிருத்துவ மிஷினரியாக மாற வேண்டும் என்று ஒரு இந்து ஆதரவு இணையதளமே கட்டுரை வெளியிட்டிருப்பது ஆச்சரியபடத்தக்க வரவேற்க வேண்டிய விஷயமாகும்.

 
TAMIL HINDU SAYS

"BE A CHRISTIAN FIRST SO THAT LATER YOU WILL BECOME EX-CHRISTIAN AND YOU WILL FIND LIGHT"


-- Edited by SANDOSH on Thursday 10th of June 2010 08:17:03 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இந்து மத வேதங்கள் காட்டும் இறைவன் இயேசுவே..!
Permalink  
 


DSCF3126.JPG

விஜய் டிவியின்,” நடந்தது என்ன..?”

நிகழ்ச்சியில் நடந்தது என்ன..?

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=36397468



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 3
Date:
Permalink  
 

மிஷனரியாக இருந்தது எனக்கு ஒளி காட்டியது

மூலம்: நவோமி ப்ரெட்டிமேன் (Naomi Prettyman)
தமிழில்: ஜடாயு

naomi_prettyman_ex_christian1நான் மிசௌரி மாநிலத்தின் கான்சாஸ் சிடி நகரில் (யு.எஸ்) வசீகரம் மிகுந்த எனது கிறிஸ்தவப் பெற்றோர்களால் வளர்க்கப் பட்டேன். கிறிஸ்தவ இல்லங்களில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளையும் போன்றே ஐந்து வயதாகும்போது நானும் “ரட்சிக்கப்” பட்டேன். எனக்கும், என் கூடப் பிறந்த ஏழு சகோதர, சகோதரிகளுக்கும் எனது  அம்மாவே வீட்டுப் பள்ளிக் கூடத்தில் கல்வி கற்றுத் தந்தார். எனது நண்பர்களாக இருந்த எங்கள் சர்ச்சைச் சேர்ந்த எல்லாக் குழந்தைகளும் இதே வகையில் தான் வளர்க்கப் பட்டார்கள்.

நாங்கள் கான்சாஸ் நகரில் இருந்த எந்த உட்பிரிவையும் சாராத (non-denominational) கிறிஸ்தவ சர்ச்சுக்குச் சென்றோம். அங்கு அதிதீவிர கிறிஸ்தவத்தைக் கடைப் பிடித்தோம். மக்கள் ஆடுவதும், ஆவேசத்துடன் கூச்சலிடுவதும், வலிப்பு வந்தவர்கள் போன்று நடப்பதுமாக, பிரார்த்தனை நேரங்கள் பெரும்பாலும் வெறியாட்டங்களாகவே இருந்தன. “ஜீசஸ் கேம்ப்” என்ற ஆவணப் படம் எங்களுக்கு அளிக்கப் பட்ட அந்த போதனைகளை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகிறது. அப்போதே நாங்கள் “ஏசுவின் போர்வீரர்களாக” இருந்தோம். சர்ச் அதன் உறுப்பினர்களை மிஷன் குழுக்களாக பல இடங்களுக்கு அனுப்பியது, குறிப்பாக மெக்சிகோவுக்கு.

இதற்கெல்லாம் நான் உடன்பட்டேன். அந்தக் காலத்தில் எனது வாழ்க்கை லட்சியம் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது, கர்த்தருக்கு ஊழியம் செய்வது என்பதாக இருந்தது. ஒரு சராசரி பதின்மவயது ஜீசஸ் பைத்தியமாக (”Jesus Freak”) இருந்தேன்.

ஜீசஸ் கேம்ப் ஆவணப் படம் - முன்னோட்டம்

Jesus Camp is a 2006 documentary directed by Rachel Grady and Heidi Ewing about a pentecostal summer camp for children who spend their summers learning and practicing their “prophetic gifts” and being taught that they can “take back America for Christ.”

எனக்கு பதினான்கு வயது இருக்கும்போது, இந்தியாவில் புதுதில்லிக்கு மிஷன் குழுவாக செல்ல தகுந்த ஊழியர்களைத் தேடிக் கொண்டிருப்பதாக சர்ச்சில் அறிவித்தார்கள். நான் கண்டிப்பாகப் போயே ஆக வேண்டும் என்று எண்ணினேன். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. எனது உயிர் நண்பனும் அந்த மிஷன் குழுவில் செல்வதாக இருந்தான். நான் அவனை விட்டுப் பிரிந்திருக்க விரும்பவில்லை. அந்தக் கோடை விடுமுறை முழுவதும் பலவிதமாக வேலை செய்து பணம் திரட்டினேன் - புல்வெளி சீர்செய்வது, புத்தகம் விற்பது, குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, நன்கொடை கேட்பது இப்படியெல்லாம்.

இப்படித் தான் பதினான்கே வயதான நான் இந்தியா போகும் விமானத்தில் ஏறி உட்கார்ந்தேன். எங்களது மிஷன் குழுத்தலைவர் பணி என்ன என்பதைத் தெளிவாகவே விளக்கியிருந்தார் - அந்தப் பகுதி முழுவதும் மக்களை வலைவீசித் தேட வேண்டும், ஜப வீடுகளை உருவாக்க வேண்டும் (”scout the land” and plant “house churches”). அங்கு நாங்கள் ஆச்சரியகரமான இந்தியக் குடிகளை சந்தித்தோம். அவர்களைப் போலவே உடையணிந்து கொண்டோம். அவர்களுடன் புது தில்லி அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்தோம். பிரசினை என்னவென்றால், அவர்கள் அனைவரும் இந்துமதம் அல்லது புத்த மதத்தைக் கடைப் பிடிப்பவர்களாக இருந்தார்கள். அவர்களது “தீய, சாத்தானிய” வழிகள் அகன்று, ஏசு அவர்களது மண்ணிற்கு வந்து அவர்களுக்கு ஒளி காட்ட வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தித்தோம். நானும் பணியில் முழுமையாகவே ஈடுபட்டிருந்தேன். “தீய, சாத்தானிய” வழிபாட்டாளர்கள் மனம் திருந்த கூவிக் கூவிப் பிரார்த்தனை செய்தேன்.

hindu_religion_is_cultureநாங்கள் இந்தியாவில் இருந்தபோது தீபாவளி என்ற பண்டிகை வந்தது. அதைப் பற்றிய நேரடி அனுபவத்தைப் பெற எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அந்த மக்கள் தங்களது மதம் மீது கொண்டிருந்த பெரும் நம்பிக்கையையும், சிரத்தையையும் நாங்கள் பார்த்தோம். அவர்கள் மதம் எப்படி அவர்களது கலாசாரத்தின் அழகிய அங்கமாக இருக்கிறது என்பதையும் உணர்ந்தோம்.

நான் யு.எஸ் திரும்பியதும், எனது 5 வயது தங்கை மிகவும் நோய்வாய்ப் பட்டாள். எங்கள் பெற்றோர்கள் ”கர்த்தரே பெரிய மருத்துவர்” என்ற நம்பிக்கை கொண்டிருந்ததனால் எனது தங்கை 2004ம் வருடம் ஜனவரி 9ம் நாள் இறந்து போனாள் (”Victory Halbert” என்று கூகிள் செய்தால் அவளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்). எங்கள் பெற்றோர்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்கள். நானும், என் உடன்பிறந்தவர்களும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அனுப்பப் பட்டோம். மூன்று வருடங்கள் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் சீர்திருத்த இல்லங்களுக்கும் அலைக்கழிக்கப் பட்டு, கடைசியாக எங்கள் அப்பாவிடம் கொண்டு சேர்க்கப் பட்டோம். அப்போது விவாகரத்தாகியிருந்தது, அம்மா பிரிந்து சென்று விட்டிருந்தாள். அப்பா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆட்பட்டார். நிறையக் குடிக்க ஆரம்பித்தார். என் இஷ்டப் படி என்ன வேண்டுமானாலும் செய்ய அனுமதித்தார்.

நான் ஒருவிதமாக வளர்க்கப் பட்ட வீட்டுச் சூழலிலிருந்து, மதச்சார்பற்ற சுதந்திர உலகத்துக்குள் தள்ளப் பட்டது எனக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. முதலில் அம்மாவிடம் வீட்டுப் பள்ளிக் கூடத்தில் பாடம். பிறகு, மிசௌரி மாநிலத்திலேயே மிகவும் மோசமான அரசுப் பள்ளிகள் இருக்கும் பகுதியில் அரசுப் பள்ளிக்குப் போகவேண்டி வற்புறுத்தப் பட்டேன்.

நான் அறியவந்த எல்லாவற்றுக்கும் எதிராக புரட்சி செய்தேன். அடிக்கடி பள்ளிக்குச் செல்வதை தவறவிட்டேன், அதனால் பள்ளியிலிருந்து நிற்கவேண்டியதாயிற்று. புதிய பெரிய கிளாஸ் நண்பர்களுடன் சேர்ந்து சுற்றினேன். கடைசியாக பதினேழு வயதில், பள்ளிப் பருவத்தில் சினேகமான தோழனுடன் சேர்ந்து வாழத் தொடங்கினேன். உடனேயே, நான் கர்ப்பமானேன். என்னை இழுத்துப் பிடித்து வைத்திருந்த எல்லாவற்றையும் உதறி, என் வாழ்க்கை இட்டுச் செல்லும் பாதையில் செல்லத் தொடங்கினேன். நானும் என் தோழனும் சேர்ந்து ஒரு அபார்ட்மெண்ட் வாங்கினோம். சேர்ந்து வாழ நிச்சயித்தோம். 2008ல் எங்களுக்கு இன்னொரு குழந்தை பிறந்தது. இறுதியாக திருமணம் செய்து கொண்டோம். அப்போது வயது எனக்கு 19, அவனுக்கு 21. பிறகு புது வீடு கட்டிச் சென்றோம். நான் வீட்டிலிருந்தே குழந்தைகள் காப்பகம் நடத்தினேன். அவன் கல்லூரியில் படித்த பட்டதாரி என்பதால் நல்ல வேலை கிடைத்தது. நாங்கள் பொருளாதார ரீதியாக முற்றிலும் பாதுகாப்பு அடைந்து விட்டோம்.

என் கணவர் பாப்டிஸ்ட் (Baptist) சூழலில் வளர்ந்தவர். என்னைப் போலவே அவரும் தன்னை கிறிஸ்தவன் என்று பெருமையாக அழைத்துக் கொண்டிருந்தார். ஆனால் உண்மையில் நாங்கள் இருவருமே எங்கள் நம்பிக்கைகளுடன் போராடிக் கொண்டிருந்தோம். நாங்கள் இள வயதினர். கிறிஸ்தவ மதத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாததால், அதைப் பற்றிப் பேசுவதை முற்றாகவே தவிர்த்தோம்.

எனது இந்திய மிஷன் பயணம் பற்றிய குற்ற உணர்வுடன் நான் போராடிக் கொண்டிருந்தேன். நான் உண்மையில் அங்கு போய் என்ன செய்தேன்? ”தேவனின் நற்செய்தியைப் பரப்பிக் கொண்டிருந்தேன்!” அந்த இந்தியர்கள் தங்கள் மதத்தின் மீது எவ்வளவு பற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதை எண்ணிப் பார்த்தேன். அவர்களது கலாசாரத்திற்குள் எனது விசுவாச வெறியுடன் நான் அத்துமீறி நுழைந்திருக்கிறேன் என்பது எனக்குப் புரிந்தது. சொல்லப் போனால் அதன்மீது உண்மையில் எனக்கே நம்பிக்கை இருந்ததில்லை.

கிறிஸ்தவ மதத்தைப் பற்றிய ஏராளமான கேள்விகளை எனக்குள் எழுப்பிக் கொண்டேன். இதை அலங்கோலமாகாமல் எப்படி என் பாப்டிஸ்ட் கணவருடன் பேசப் போகிறேன் என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன். நல்லவேளை அவருக்கும் பைபிளைப் பற்றி கிறிஸ்தவத்தைப் பற்றி அதே போன்று கேள்விகள் இருந்தன என்று தெரியவந்தது. எனக்கு ஆசுவாசமாக இருந்தது. ஆனாலும், இதைப் பற்றி என்ன செய்வது என்று எங்கள் இருவருக்குமே தெரியவில்லை.

mclout_kansasஅது 2009ம் ஆண்டு கோடை காலம். என் அப்பா, தீவிரமாக கிறிஸ்தவத்தை உதறித் தள்ளி விட்டிருந்தார். மத மௌடிகம் பற்றி இடைவிடாத பேச்சுக்களிலும், சதிவலைகள் பற்றிய சலிக்காத உரையாடல்களிலும் ஊறி அதன் எல்லைக்கே சென்று விட்டிருந்தார். ”ஓய்வான உழைப்பாளர் தினம்” (Laid Back Labor Day) என்ற கொண்டாட்டத்திற்காக கான்சஸின் மெக்லவுத் (Mclouth) பிரதேசத்திற்கு கூட்டாகச் சேர்ந்து போக எங்களை அழைத்தார். நாங்கள் தயங்கினோம், ஏனென்றால் அந்த இடம் பாகன்கள் அதாவது இயற்கை வழிபாட்டாளர்கள் கூடும் மைதானம் (Pagan campground). கிறிஸ்தவர்களான எங்களுக்கு, பாகன்கள் சாத்தானிய வழிபாட்டாளர்கள், சூனியக் காரர்கள் என்று ஆதிமுதலே கற்றுக் கொடுக்கப் பட்டிருந்தது.

இருந்தாலும் அங்கு போனோம். அது எங்கள் வாழ்க்கையை மாற்றிவிட்டது. இப்போது நாங்களே எங்களை ”பாகன்கள்” என்று அழைத்துக் கொள்கிறோம். எதையும் நாங்கள் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் மந்திர வித்தைகளையும், மறைஞானத்தையும் திறந்த மனதுடன் அணுகுகிறோம். இயற்கை மீது அன்பு கொண்டவர்களாக இருக்கிறோம்.

கர்த்தரால் நிராகரிக்கப் படுவது பற்றியும், நரகத்தில் உழல்வது பற்றியும் இப்போது எனக்குப் பயம் இல்லை. உலகத்தில் ஒருவர் சொல்வதும் முழு உண்மை இல்லை என்று இப்போது எனக்குப் புரிகிறது. அப்படி இருக்க ஒரே ஒரு மதம் மட்டும் எப்படி சரியானதாக இருக்க முடியும்? மதம் என்பது உண்மையில் கலாசாரம் சம்பந்த பட்ட விஷயம் என்று நான் நினைக்கிறேன், குறிப்பாக, எனது இந்தியப் பயணத்தின் காரணமாக. கடவுளை வேறு பெயரில் வழிபடுவதாலோ, ஏசு என்பவரை அவர்கள் இதயங்களில் ஏற்றுக் கொள்ளாததாலோ இந்தியர்கள் தீயவர்கள் அல்ல; சாத்தான்கள் அல்ல. இப்போது அதை நான் அறிவேன். நான் சுதந்திரமடைந்து விட்டேன்.

இந்த வாழ்க்கைக் கதையைச் சொன்னதன் நோக்கம் என்ன என்று என்னால் சரியாகக் கூற முடியவில்லை. இது ஒரு வாக்குமூலம் அல்ல. நான் யார், எப்படிப் பட்டவளாகியிருக்கிறேன் என்பதை உறுதியுடன் சொல்ல விரும்பினேன் என்றே நினைக்கிறேன். நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை அறிவேன். முன்னாள் கிறிஸ்தவர்களாக எங்களது பழைய நினைவுகளை, எண்ணங்களை, புரிதலுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய கணவர் கிடைத்தார் என்பது என் அதிர்ஷ்டம். இந்த இடத்தில் “நீ நரகத்திற்குப் போவாய்” என்று சொல்லப் படாமல், என்னுடைய வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது என்பதிலும் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் (மற்ற இடங்களில் அப்படி நிறையப் பேர் இன்னமும் சொல்லத் தான் செய்கிறார்கள். நான் தான் நம்புவதில்லை).

நான் நம்பிக்கைகளுக்காக அச்சுறுத்தப் படவில்லை. ஆனால் அந்த ஒரு காரணத்தினாலேயே தான் கீழ்ப்படிந்தேன் - அச்சம். கர்த்தரால் நிராகரிக்கப் பட்டு நரகத்தில் உழலாமல், சுவர்க்கத்திற்குப் போக வேண்டும் என்ற அச்சத்தால், முற்றாக பைபிளில் கூறியபடி வாழ்க்கையை வாழ முயற்சி செய்தேன். எனக்கு பைபிளைப் பற்றிச் சொல்வதற்கு நிறையவே உள்ளது, ஆனால் இப்போது வேண்டாம்.

ex_christian_tshirtஒரு விஷயத்தை ஒத்துக் கொள்கிறேன் - இப்போதும் நான் அச்ச உணர்வுடன் போராட வேண்டியுள்ளது, கிறிஸ்தவத்தின் காரணமாக. சில சமயம் நினைக்கிறேன் - ஒருவேளை நான் எண்ணுவது தவறோ? உண்மையிலேயே நரகம் இருந்து, நான் அங்கு தான் போகப் போகிறேனோ? என்று. உடனே என்னை ஒரு உலுக்கு உலுக்கிக் கொள்கிறேன். தங்கள் பார்வையில் ”சரியான உலகத்தை” உருவாக்க கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்த சமாசாரம் தான் நரகம் என்று நினைவு படுத்திக் கொள்கிறேன்.

(இந்தக் கட்டுரை Exchristian.net என்ற இணையதளத்தில் வெளிவந்தது. இந்தக் கட்டுரை ஆசிரியர் போன்று கிறிஸ்தவ மதத்தால் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட கடும் மன உளைச்சல்கள், குற்ற உணர்வுகளிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் துவக்கியவர்கள் மற்றும் அதில் முயல்பவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் இணையதளம் அது).

http://www.tamilhindu.com/2010/06/being-missionary-showed-me-light/comment-page-3/#comment-14546



__________________
With Love Truth Alyays Triumps http://devapriyaji.wordpress.com/


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 11
Date:
Permalink  
 

vedam.gif

ரிக் வேதம் 10:90:2 கூறுகிறது...
'புருஷா எவேதம் சர்வம்
யூத்பூதம் யச்சபவ்யம்
உதாம் ருதத்வஸ்யா ஈசான
லதான் மனனதிரே ஸரதி'


அதாவது கடவுளின் தலைப்பேறான மகனே ஆதியில் இருந்ததும், இன்று இருப்பதும், இனி வரப்போவதுமாவான். மனிதர்க்கு அவர்தம் செயல்களுக்கேற்ப கைமாறு அளிக்க அவன் வருவான்.

'அகரமும் னகரமும் நானே' என்கிறார் ஆண்டவராகிய கடவுள்.
'இருக்கிறவர், இருந்தவர், இனி வருபவர் அவரே' (திவெ 1:8).

'இதோ விரைவாகவே வருகிறேன். அவனவன் செயலுக்கேற்ப அவனவனுக்கு அளிக்கும் கைமாறு என் கையிலிருக்கிறது' (திவெ 22:12). என்ன பொருத்தம் பார்த்தீர்களா!

'தம் யஜ்னம் பரிஷி ப்ரெனசஷம்
புருஷம் ஜாதமக் ராதா தேன தேவா அயஜந்தா சத்ய ருஷயஷ்ச்சயே'
(ரிக் வேதம் 10:90:7).

கடவுளின் தலைப்பேறான இம்மகன் மரத்தாலான பலிக்கம்பத்தில் கட்டப்பட்டு தேவர்கள், அரசர்கள் மற்றும் ஞானிகள் முதலியோரால் பலியாக்கப் பட்டான். நான்கு சுவிசேஷங்களும் கூறுவது: இயேசு மரத்தாலான சிலுவையில் ஆட்சியாளர்களாலும் (ஏரோது, பிலாத்து), ஞானிகளாலும் (அன்னாஸ், கைப்பாஸ்) அறையப்பட்டார்.

யசூர் வேதம் 31:18, ரிக் வேதம் 10:90:16

'தமேவம் வித்வானம்ருதா
இஹ பவதி
நான்ய பந்தா அயனாய
வித்யதே'

இப்பலியே மனிதன் மீட்படையவும், விடுதலையடையவும் உள்ள ஒரே வழி. இம்மனிதனை தியானித்து அடைவோரும், அவனை இதயத்தில் விசுவசித்து வாயினால் அறிக்கையிடுவோரும் இவ்வுலகிலேயே விடுவிக்கப்படுவர். மீட்பிற்கு இதைத்தவிர வேறு வழியில்லை.

'இயேசு ஆண்டவர் என உன் வாயினால் அறிக்கையிட்டு, கடவுள் அவரை இறந்தோரிடமிருந்து உயிர்ப்பித்தார் என உன் உள்ளத்தில் விசுவசித்தால் நீ மீட்புப் பெறுவாய்' (உரோ 10:9). இந்த வாக்கியங்களையெல்லாம் வாசித்தபொழுது மீண்டும் குழம்பிப் போனேன். நான் அந்தப் பிராமண குருவிடம் சென்று 'என்ன அற்புதம்!' என்று வியந்தேன். மீண்டும் அவர் கூறினார்: 'இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, எல்லா பழங்கால வேதங்களும் ஒன்றே. இந்து மதம், கிறித்தவம், இஸ்லாம் எல்லாம் மனிதனால் வகைப்படுத்தப்பட்டவை. கடவுளின் வார்த்தை ஒன்றே. ஏனென்றால் ஒருவனே கடவுள். கடவுள் ஒருவனே என்று நீ நம்புகிறாயா?' என்னும் ஒரு கேள்வியை என்முன் வைத்தார். நான் நம்புவதாகக் கூறினேன். அப்பொழுது அவர் கூறியதாவது: 'கடவுள் ஒருவராக இருக்கும்போது கடவுளின் மகன் எவ்வாறு பலவாக இருக்க முடியும்? கடவுளின் மகனும் ஒருவனே.'

வீட்டிற்கு திரும்பி வந்தேன். 27 சூன், 1992 - எனது வாழ்வில் என்னால் மறக்க முடியாத நாள். பகல் நேரம் முழுவதும் அமைதியற்றிருந்தேன். எனது மனதில் ஒரு போர் நடந்து கொண்டிருந்தது. நான் பிறந்து வளர்ந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கும், அதே கலாச்சாரத்திற்குரிய பழங்கால வேதங்களில் நான் மூழ்கி முத்தெடுத்த உண்மைக்கும் இடையேயான போர். அன்றிரவு படுக்கையில் இயேசு கிறிஸ்துவைப் பற்றி சிந்தித்தேன். இயேசுவின் ஓர் உருவம் என் மனதிலும் இருந்தது. சூசையப்பர் மற்றும் மரியாவுக்கு மகனாக பெத்லகேமில் பிறந்து நாசரேத்தில் வளர்ந்து யூத மத வேதங்களை இருபத்தொன்பதரை வயதுவரை படித்து அரசனையும், மதக்குருக்களையும், ஏழை மீனவர்களின் துணை கொண்டு எதிர்க்கத் துணிந்தவர், அரசனின் படைவீரர்களால் பிடிக்கப்பட்டவர். சித்திரவதைகளை அனுபவித்து சிலுவையில் மரித்தவர் இயேசு கிறிஸ்து என்பதே என்மனதில் இயேசுவைப் பற்றியிருந்த உள்ளுணர்வு. கம்யூனிஸ்ட் வழியில் இயேசுவைப் பற்றிய சிந்தையாகும் இது. ஆனால் அன்றிரவு எனது வாழ்வில் முதன் முறையாக இயேசுவை வேறு விதத்தில் சிந்தித்தேன். கடவுளின் மகனாகிய இயேசு உலக பாவங்களுக்காக பலியாக்கப்பட்டார். இதன் பலன் வியக்கத்தக்கது. பலமுறை திரும்பத் திரும்பப்படித்த பின்பும் எனக்குப் புரியாத சில ரிக் வேதப் பாடல்கள். இயேசுவை ஒரு பலி கடாவாகவும், சிலுவை மரணத்தை பலியாகவும் கண்டபோது தெள்ளந் தெளிவான பொருளோடு என் மனதில் பதியத் தொடங்கின. அப்பொழுது எனது குரு கூறியது உண்மையென உணர்ந்தேன். இயேசு கிறிஸ்து கடவுளின் ஒரே மகன்.

எனது படுக்கையில் எழுந்து அமர்ந்தேன். வாழ்வில் முதன் முறையாக, பாரம்பரிய இந்து மதத்தைச் சேர்ந்தவனாகிய நான் இயேசு கிறிஸ்துவிடம் செபித்தேன். எவ்வாறு செபிக்க வேண்டுமென்று எனக்குத் தெரியாது. செபங்களைக் கூறும் முறையும் எனக்குத் தெரியாது. விவிலியத்தில் காணப்படும் 'பரலோகத்திலிருக்கிற எங்கள் தந்தையே' போன்ற செபங்களேதும் எனக்குத் தெரியாது. 'ஓ, இயேசுவே, என்னிடம் வாரும், நான் துயரத்திலிருக்கிறேன், என்னிடம் வந்து என்னைக் காப்பாற்றும்' என்று மட்டுமே மன்றாடினேன்.

யாருக்கும் தெரியாமல் எப்பொழுதும் மௌனமாகவும், இரகசியமாகவுமே இயேசுவிடம் மன்றாடினேன். அன்றிரவும் எனதருகில் படுத்திருந்த என் மனைவி கேட்காதவண்ணம் மௌனமாகவே செபித்தேன். இயேசுவிடம் மன்றாடுவது அவமானத்திற்குரியதென நினைத்தேன். ஆனால், ஒன்று இந்துவாகிய நான் இயேசுவில் விசுவாசம் கொண்டது விவிலியம் அளித்த ஊக்கத்தாலோ, கிறித்தவ அருட்பணியாளராலோ, நண்பர்களாலோ அல்ல. பாரம்பரிய இந்து மத வேதங்களைப் படித்த தின் மூலமே. அதனால் என் மனைவிக்குத் தெரிந்தாலென்ன? அவளுக்கும் தெரிய வேண்டும். ஆனால், அந்த நேரத்தில் அவ்வாறு சிந்திக்க என்னால் முடியவில்லை. அதற்குக் காரணம் அவளும் இந்து மதத்தைச் சார்ந்தவள் என்பதல்ல. எங்களது திருமண நாளன்று என் மனைவி என்னிடம் ஒரு புதுமையான வேண்டுகோள் விடுத்தாள். அவளுடைய அண்டை வீட்டார் அனைவரும் பாரம்பரிய கத்தோலிக்க கிறித்தவர்கள். ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் குருக்களும், கன்னியரும் உருவாகியிருந்தனர். அவளுடன் படித்தவர்களும், தோழிகளும் குருக்களாகவும், கன்னியர்களாகவும் படித்துக் கொண்டிருந்தனர். சிறுவயதிலிருந்தே கிறித்தவ குடும்பங்களோடு இருந்த இப்பழக்க முடைமை காரணமாக இயேசு கிறிஸ்துவில் அவளுக்கு விசுவாசமிருந்தது. தினமும் இயேசுவிடம் செபிக்கிறாள். ஞாயிறுதோறும் திருப்பலிக்குச் செல்கிறாள். நான் பாரம்பரிய இந்துவாக இருந்தாலும் அவளுடைய பக்தி முயற்சிகளைத்டுக்க கூடாது. இதுவே அவளது வேண்டுகோள்.

நான் கம்யூனிஸ்ட் கட்சியிலும், நாத்திகனாகவும் இருந்ததால் இத்தகைய விசுவாசங்கள் எனக்கு இல்லை. மற்றவர்களுடைய நம்பிக்கையும் தடை செய்ய மாட்டேன். எங்களது குழந்தைகளையும் அதே விசுவாசத்தில் எனது மனைவி வளர்த்து வந்தாள். என்னையும் இயேசுவில் நம்பிக்கை கொள்ளுமாறு வற்புறுத்தினாள். எனது வேலையை நான் இழந்த போதும், குடும்பம் துக்கத்தில் ஆழ்ந்தபோதும் கூட இயேசுவில் விசுவாசம் கொள்ளுங்கள், நமது குடும்பம் மீட்படையும் என்று என் மனைவி கூறினாள். அவளுக்கு செவிசாய்க்காமல் நான் சிலைகளை வழிபட்டு ஏமாற்றமடைந்தேன். நாத்திகனாக மாறினேன். கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்தேன்.

ஆனால், இப்பொழுது இந்துமத வேதங்களைப் படித்து நானே இயேசு கிறிஸ்துவில் விசுவசிக்கிறேன், பதினெட்டு வருடங்களாக என் மனைவி கூறியது உண்மையென எனக்குப் புரிந்தது. ஆனால், கணவனாகிய நான் எவ்வாறு அவள்முன் ஒப்புக்கொள்வது? சிறிது நேரம் மௌனமாக செபித்தபின் படுத்துவிட்டேன். அப்பொழுது எனதருகே படுத்திருந்த என் மனைவி எழுந்திருந்தாள். அவள் உறங்கவில்லை. பக்கத்து அறையில் அவள் செபத்திற்காக வைத்திருந்த மரச்சிலுவையை எடுத்து மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து, முழந்தாளிட்டு, மனமுருகி, கண்ணீர் வழிந்தோட இயேசுவை துதிக்க ஆரம்பித்தாள். இப்புகழ்ச்சிக்கான காரணம் எனக்கு உடனே புரிந்தது. கடந்த 18 வருடங்களாக எனக்காக இந்தப் பெண் செபித்திருக்கிறாள். இப்பொழுது அவளுடைய செபம் நிறைவேறிவிட்டது. என்னாலும் உறங்க முடியவில்லை. நானும் எழுந்து சென்று அவள் அருகே முழந்தாள் பணிந்து கரங்களைச் சேர்த்து இயேசுவிடம் செபித்தோம். அதுவே எங்களது முதல் குடும்ப செபமானது.

(பரபரப்பு தொடரும்...)

 

 



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 34
Date:
Permalink  
 

பிராமண சமுதாயத்திலிருந்து விலக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள என் போன்றோரின் காயத்துக்கு மருந்து போலிருந்தது,இந்த கட்டுரை; இதனைக் கண்டு பதித்த அன்பு சகோதரருக்கு நன்றி..!

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
இந்து மத வேதங்கள் காட்டும் இறைவன் இயேசுவே..!
Permalink  
 


படித்ததில் பிடித்தது...

(பிராமணரின் உண்மை சாட்சியம்)

Vedas.jpg

அன்பு வாசகர்களே, என் பெயர் ஹரிபாஸ்கர். சொந்த ஊர் ஈரோடு.

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி விடுதியில் நானும் நமது சீயோன் குரலின் ஆசிரியரும் ஒன்றாகத் தங்கி படித்து வந்தோம்.

அவரது செபங்களில் ஏனோதானோ என்று முதலில் கலந்து கொண்டாலும் பின்னர் ஆர்வத்துடன் கடவுளைத் தேடியதன் விளைவாய் சில உண்மைகளைக் கண்டு கொண்டேன்.

பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி பாரம்பரிய பிராமணரான நான் பூணுலைக் கழற்றி வைத்து விட்டு கிறித்தவ மறையை முழு மனதாய் ஏற்றுக்கொண்டேன். சாலக்குடி டிவைன் இல்ல தியானத்தில் என்னைப் போன்ற பிராமணச் சகோதரர் ஒருவர் பேசிய சாட்சியம் என்னை வெகுவாய்க் கவர்ந்தது. அதை உங்கள் நன்மைக்காக இதோ தொகுத்துள்ளேன்.

இயேசு கிறிஸ்துவில் அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே,
எனது பெயர் அரவிந்தாஷ மேனன். என்னுடைய பெயரிலிருந்தே நான் ஒரு பாரம்பரிய இந்து மத பிராமணன் என்பதை நீங்கள் அறியலாம். எனது குடும்பம் பிராமண பண்பாட்டில் விளங்கியதால் நான் இந்து மத வேதங்களான இராமாயணம், மகாபாரதம் மற்றும் பகவத் கீதை போன்றவைகளை சிறு வயதிலிருந்தே கற்க வேண்டிய கடமையிருந்தது.
கோயில்களில் நடக்கும் பூஜைகளில் கலந்து கொள்வது, துதிப்பாடல்களை ஓதுவது, வேதங்களைப் படித்தறிவது இவ்வாறாக நான் ஓர் ஆன்மீகச் சூழலில் வளர்க்கப்பட்டேன்.

எனது 18வது வயதில் முறைப்படியான கல்வியில் தேறிய வண்ணம் மத்திய அரசு சேவையில் பொருளாதாரத் துறையில் வேலைக்குச் சேர்ந்தேன். அன்றிலிருந்து 20 வருடங்களாக எனது வாழ்வில் சந்தோசமும், குதூகலமும் நிறைந்திருந்தது. ஆன்மீகப் பயிற்சியின் பலன் என் மனதில் நிறைந்திருந்தமையால் என்னால் மற்றவர்களைப் பற்றி நினைக்க முடிந்தது. எப்போதும் மற்றவர்களை அன்பு செய்ய முடிந்தது. எல்லோர்க்கும் உதவ முடிந்தது. இதன் மூலம் என்னைச் சூழ்ந்திருந்தோரும், உடன் பணிபுரிந்தோரும் விரைவில் எனக்கு நண்பர்களாயினர். அவர்களின் ஆதரவால் நான் பணி புரிந்த நிறுவனத்தின் சேவை இயக்கத் தலைவனாக மாறினேன். இந்த அரசியல் வயப்பட்ட இயக்கத்தின் மூலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொள்ள முடிந்தது. குறுகிய காலத்தில் நான் ஓர் உறுதியான நம்பிக்கைக்குரிய பொதுவுடமைத் தொண்டனாக மாறினேன். நான் வாழ்ந்த பகுதியின் கம்யூனிஸ்ட் கழகத் தலைவனாகவும் முடிந்தது. எனது அரசியல் பணியைக் கண்ட எனது பகுதி வாழ் மக்கள் என்னை அன்பு செய்தனர். எனது இயக்கச் சேவையைக் கண்ட உடன் பணி புரிவோர் என்னை அன்பு செய்தனர். மதித்தனர். இவ்வாறாக 20 வருடங்களுக்கு எனது வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.

இந்த 20 வருட வசந்த காலத்திற்குப் பின் ஒருநாள், மிகவும் எதிர்பாராத விதத்தில் என்னுடைய வேலை பறிபோனது. கம்யூனிஸ்ட் கட்சியுடன் எனக்கிருந்த தொடர்பு, கட்சிக்கான என்னுடைய பணிகள், கிளர்ச்சிகள், எனது தலைமையில் நடந்த வேலை மறுப்புப் போராட்டம் முதலிய பல்வேறு அரசியல் காரணங்களை மேற்கோள் காட்டி எனது மேலதிகாரிகள் என்னை பணிநீக்கம் செய்தனர். எப்போதும் அரசியல் மற்றும் இயக்கப் பணிகளில் நான் மூழ்கியிருந்ததால் பொருளாதார வசதியில நான் பின்தங்கியிருந்தேன். பொருளாதாரமில்லாத குடும்பம், தனது தலைவன் திடீரென்று பணியை இழந்த நிலையில் எவ்வித அவலங்களுக்கும், போராட்டங்களுக்கும் உட்படுமென்பதை நான் உங்களுக்கு விளக்கத் தேவையில்லை. சாதாரணமாக நமக்கு பணத்தட்டுப்பாடு வரும்போது கடவுளைப் பற்றி நினைக்கிறோம். நான் ஆன்மீகப் பின்னணியில் வளர்ந்ததால் கடவுளைப் பற்றி நினைப்பதென்பது எனக்கு எளிதாக இருந்தது. எனது குடும்பத்திற்கென்று சொந்தமாக மூன்று பெரிய கோயில்கள் இருந்தன. பரதேவதைகள் என்னும் தெய்வங்கள் எழுந்தருளியிருக்கின்ற அக்கோயில்களுக்குச் சென்று முழு மனதோடு செபித்தும், உபவாசித்தும், காணிக்கைகளை செலுத்தியும் பல நாட்கள் கடந்தன. ஆனால், எனது வாழ்க்கையில் மாற்றமேதும் நிகழவில்லை.

துன்பத்தில் குறைவேதும் வரவில்லை. பொதுவாக, இந்துக்களாகிய நாங்கள் கடவுளின் அருள் கிடைக்காத பொழுது ஜோதிடம் பார்த்து பிரச்சனைகளின் காரணத்தையறிய முயல்வது வழக்கம். நானும், கேரளத்தில் புகழ்வாய்ந்த ஒரு ஜோதிட நிபுணரிடம் சென்றேன். நான்கு முறை நான் அவரை அணுகிய போதும் அவர் எனது பிரச்சனைகளுக்கு வேறுபட்ட காரணங்களைக் கூறினார். ஒரு தெய்வத்தின் சாபம், பெண் தெய்வங்களின் சாபம் மற்றும் பிறப்பு நட்சத்திரங்களின் சாபம் என பல்வேறு சாபங்களைக் காரணம் காட்டினார். நான் அவரிடம் சென்றபோதெல்லாம் அவர் பணச் செலவுமிக்க பரிகாரங்களைச் செய்யுமாறு ஆலோசனை கூறினார். எனக்கிருந்த பண நெருக்கடியில் இப்பரிகாரங்களை உடனடியாகச் செய்வதற்காக முடிந்த அளவு கடன் வாங்கினேன். இவ்வளவு செய்தும் என் வாழ்வில் மாற்றமேதும் நிகழவில்லை. எனது பிரச்சனைகள் அதிகமாயின. முடிவில் கடவுள் நம்பிக்கையை இழந்தேன். ஒரு நாத்திகனாக மாறினேன். கடவுள் இல்லை என்னும் கொள்கையில் மிகவும் திருப்தியடைந்தேன்.

குருக்கள், ஜோதிடர்கள் மற்றும் கோயில்களின் நன்மைக்காக மனிதனின் கற்பனையில் உருபெற்ற ஒரு யூகம்தான் கடவுள். கேரளத்தில் புகழ்வாய்ந்த நாத்திகர் பலர் உள்ளனர். நாத்திக இயக்கங்களும் உள்ளன. இத்தருவாயில் இந்திய நாத்திக இயக்கத்தின் சில தலைவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. எனது கதையைக் கேட்ட அவர்கள் நீ ஓர் அனுபவசாலி. உனக்குக் கற்பிக்கப்பட வேண்டியது ஒன்றுமில்லை. எங்கும் சென்று கடவுள் இல்லை என அறிவிப்பது உன்னுடைய சமூகக் கடமையாகும் என்றனர். இச்சங்கத்தில் மூன்று வருட காலமாக கேரளம், தமிழகம், கர்நாடகம், ஆந்திரா மற்றும் ஏறக்குறைய இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் சென்று கடவுள் இல்லை என்றும், கடவுள் மனிதனால் உண்டாக்கப்பட்ட ஒரு கற்பனைப் பொருள் என்றும் பிரச்சாரம் செய்து வந்தேன்.

இந்த மூன்று வருடங்கள் கடவுளுக்கெதிராக நான் பிரச்சாரம் செய்து வந்தாலும் ஒருவிதத்தில் எனக்கு அக்காலக்கட்டம் பயனுள்ள வகையில் அமைந்தது. பல புத்தகங்களை வாசிக்கவும், பல புகழ்வாய்ந்த எழுத்தாளர்களையும், சிந்தனையாளர்களையும் சந்திக்கவும் அது வாய்ப்பாக
அமைந்தது. அவர்களோடு நட்பு கொள்ளவும் முடிந்தது. அந்நட்புகளில் ஒன்று என் வாழ்வையே மாற்றியது.

ஒருநாள் தென்மாநில நகரமொன்றில் நான் நாத்திகக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்தேன். என்னுடைய பேச்சைக் கேட்ட ஒரு வயது முதிர்ந்த பிராமணர் என்னிடம் வந்தார். அவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். தனது கடின உழைப்பாலும், இடைவிடா முயற்சியாலும் ஒரு வழக்கறிஞரானார். பின்னர் படிப்படியாக முன்னேறி நீதிபதியானார். தலைமை நீதிபதியாக ஓய்வு பெற்றார். ஆங்கில மற்றும் சமஸ்கிருத மொழிகளில் கைதேர்ந்த வல்லுநராவர். இத்தகைய மாண்புள்ள மனிதர் என்னிடம் வந்து, 'மகனே, உன்னுடைய வாழ்வில் இரண்டு முறை நீ தவறியிருக்கிறாய். ஒன்று, உனது வாழ்வு சோதனைக்கும், துன்பத்திற்கும் உள்ளானபோது கடவுளிடம் திரும்புவதாக நினைத்துக்கொண்டு நீ சிலைகளையும், கோயில்களையும் வழிபட்டாய். இது தவறாகும்'. சிலை வழிபாட்டையே மையமாகவும் ஜீவனாதாரமாகவும் கொண்டு வாழ்க்கை நடத்தும் பிராமண குலத்தைச் சேர்ந்த ஒருவர் இங்ஙனம் கூறுவதைக் கேட்ட பொழுது அதிர்ச்சியடைந்தேன். மீண்டும் அவர் கூறினார்: 'சிலை வழிபாட்டில் பயனில்லை என நீ அறிந்தபோது நாத்திகனாக மாறினாய். இதுவும் தவறாகும். பிறப்பால் நீ இந்து மதத்தைச் சார்ந்தவன். அதைக் குறித்து பெருமைப்பட வேண்டும். பெருமையடைய வேண்டுமென்றால் இந்துமத வேதங்களை நீ வாசித்திருக்க வேண்டும்' என்றார். இதைக் கேட்ட நான் பெருமிதத்தோடு 'வேதங்களை வாசித்தது மட்டுமல்ல, மனப்பாடம் செய்துமிருக்கிறேன். இராமாயணம், மகாபாரதம் முதலிய வேதங்களை நன்றாக அறிவேன். ஆகவே, இதைக் குறித்து ஒன்றும் செய்வதற்கில்லை' என்றேன். அவரோ எனது அறியாமையைக் கண்டு சிரித்துக்கொண்டே கூறினார்: 'இராமாயணம், மகாபாரதம் மற்றும் பகவத் கீதை முதலியவை மத வேதங்களல்ல. அவை கதைப் புத்தகங்களாகும். இராமாயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்க அயோத்திய மன்னனான $ராமனின் கதையாகும். மகாபாரதம் மதுரா நாட்டு இளவரசனான ஸ்ரீ கிருஷ்ணனின் கதை. மகாபாரதத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினெட்டு அத்தியாயங்களின் தொகுப்புதான் பகவத் கீதை. ஆகவே, இவற்றில் எதுவும் வேதமல்ல. ரிக் வேதம், யசூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் இவைகளே இந்து மதத்தின் அதிகாரப்பூர்வமான வேதங்களாகும். இவ்வேதங்களைத்தான் நீ படிக்க வேண்டும். அப்பொழுது நீ ஒளியைக் கண்டடைவாய். உண்மையை அறிவாய். உனக்கு சமாதானமும், சந்தோசமும் தரக்கூடிய உண்மையான கடவுளைக் காண முடியும்' என்றார். உடனடியாக நான் நூலகத்திற்கு சென்றேன். வேதங்களில் முதன்மையானதான ரிக் வேதத்தின் பிரதிகளை வாங்கி வாசிக்கத் தொடங்கினேன். சில பத்திகளை வாசித்த பிறகே எனக்கு ஒரு விசயம் தெளிவானது. அம்மனிதர் என்னிடம் கூறிய ஒன்று உண்மை என அறிந்தேன். எனக்கு ஒளி கிடைக்கத் தொடங்கியது. இந்துமத வேதமான ரிக் வேதத்திலிருந்து எனக்குக் கிடைத்த முதல் ஒளி இதுதான்.

என்னுடைய துன்பக்காலத்திலும், இன்பக் காலத்திலும் நான் செபித்து பலிகள் செலுத்திய தெய்வங்களெல்லாம் தெய்வங்களல்ல. ரிக் வேதத்தில் ஒரு தெய்வத்தைக் குறித்தே காணப்படுகிறது. அக்கடவுள் இப்பிரபஞ்சத்தைப் படைத்தவர். பூமியிலுள்ள எல்லா ஜீவராசிகளையும் படைத்தவர். அவரே பரலோகத் தந்தை!

(பரபரப்பு தொடரும்...)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard