Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இராப்போஜனம்..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இராப்போஜனம்..?
Permalink  
 


நண்பர் தனது கருத்தை மட்டும் முன்வைத்தால் போதுமானது; மீண்டும் மீண்டும் தனிநபர் விவரங்களை சேகரிப்பதிலேயே கவனமாக இருப்பதில் எந்த பயனுமில்லை;

திருவிருந்து என்பதாக இன்றைக்கு கடைபிடிக்கப்படும் முறைக்கு எதிராக நான் எதையும் சொல்லவில்லை;ஆனால் அது முழுவதுமே ஆண்டவர் நியமித்த வழிமுறைகளையும் காலநேரங்களையும் நோக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதை அனைவரும் அறிவோம்;

ஆனால் ஆண்டவர் தாமே அதனைப் பொருட்படுத்துகிறதில்லை;அவரை முன்வைத்து எதைச் செய்தாலும் அதனை தடுக்கிறதுமில்லை;

திருவிருந்து என்று ஆசரிக்கப்படும் சடங்கினால் எந்த ஒரு ஆத்துமாவும் பூரணப்பட இயலாது என்பதே சத்தியமான உண்மையாகும்;

இது தொடர்பாக நண்பர்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வரவேற்கிறேன்;



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 11
Date:
Permalink  
 

//இயேசு செய்த சிம்பாலிக்கான ஒரு காரியத்தையே ஒரு கட்டளை போலாக்கி விட்டால் கொலோசெயர்.2:16 க்கு என்ன சொல்வோம்..?//

திருவிருந்தைக் குறித்ததான தங்களுடைய இப்படிப்பட்ட கருத்துக்களுக்கு என்னுடைய தாழ்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

//இயேசு இராப்போஜனம் மேற்கொண்ட நாளும் நேரமும் நம்முடைய வாழ்வில் வரப்போவதில்லை;ஆனால் அந்த நிகழ்வும் அதன் நோக்கமும் நெஞ்சில் நிறுத்தினாலே போதும்..!//

19. பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
லூக் 22-19

தாங்கள் சபை ஊழியம் செய்யவில்லை எனக் கூறிவிட்டீர்கள்; ஏதேனும் ஒரு சத்தியமுள்ள சபையில் ஐக்கியம் வைத்து திருவிருந்து எடுக்கிறீர்களா இல்லையா எனத்தெரியவில்லை.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
கர்த்தருடைய பந்தி எனப்படும் இராப்போஜனம்..?
Permalink  
 


கர்த்தருடைய பாடு மரணம் உயிர்த்தெழுதலை நினைவுகூறும் காலங்களில் இருக்கிறோம்;

இந்த நேரத்தில் அபஸ்வரம் போல சிலருடைய துருபதேசங்கள் கிறிஸ்துவுக்குள்ளான நமது சுயாதீனத்தை ஐயத்துக்குள்ளாக்குவதைப் போல ஒலித்துக்கொண்டிருக்கிறது;

இது வழக்கம்போல வருடாவருடம் நாம் சந்திக்கும் சர்ச்சைதான்; இதற்கு இதுவரை கண்டுக்கொள்ளாமல் கடந்துப்போகும் வழிமுறையினையே கடைபிடித்துவருகிறோம்;

ஆனாலும் இதற்கு சரியானதொரு பதில் இருக்குமல்லவா? அதனை தெரிவித்தால் அநேக அப்பாவி ஆத்துமாக்கள் சூதான போதகங்களால் வஞ்சிக்கப்படுவதைத் தவிர்க்கலாமே!

கர்த்தருடைய பந்தி எனப்படும் இராப்போஜனமே முதலாவது சர்ச்சை; அது மிகவும் முக்கியமானதாக கட்டளையாகவும் வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது;

அது அத்தனை முக்கியமானதாக இருந்தால் ஒவ்வொரு சபையும் ஒவ்வொரு நேரத்திலும் காலத்திலும் முறையிலும் அதனை ஆசரிப்பது ஏன்?

இதைக் குறித்த எனது பொதுவான அபிப்ராயத்தினை எனது தளத்தில் பதித்துள்ளேன்;அதற்கு ஆதரவாகவோ எதிராகவோ எழும்பக்கூடிய கருத்துக்களை தளநண்பர்கள் பகிர்ந்துக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்..!


// இராபோஜனம் என்கிற கர்த்தர் பந்தியை எடுத்து பார்க்கலாமே! ஒரு கன்வென்ஷன் என்றால் ஒன்று சேரும் இந்த பல்வேறு சபைகள் இந்த இராபோஜன விஷயத்தில் மன்னுக்கும் வின்னுக்கும் உள்ள வித்த்யாசம் கொண்டிருக்கிறார்கள்.

முதல் காரியம் இவர்களில் ஒரு சபைக்கூட இந்த இராபோஜனம் என்கிற இந்த வார்த்தைக்கு தகுந்தாற் போல் இரவில் நடத்துவது இல்லை. ஒரு சபைக்கூட இல்லை (ஒரு வேளை 0.1% இருக்கலாம்).

இப்படி ஒரு முக்கியமான விஷயத்தை அதுவும், நம் கர்த்தர் இயேசு கிறிஸ்து "இதை நான் வரும் மட்டும் என்னை நினைவு கூறும் படி செய்யுங்கள்" என்று சொல்லியும் ஒரு சபைக்கூட அவர் சொன்னபடி செய்வதில்லை, ஆனால் நாங்கள் தான் உண்மையான சபை, நாங்கள் சொல்லுவது தான் சத்தியம் என்று மாத்திரம் சொல்லிவருவதில் தயங்குவதில்லை!!

இராபோஜனம் என்றாலே இரவில் உண்டான ஒரு விஷயம் "தமிழ் வேதாகமம்" மாத்திரம் போதும் என்று சொல்லுபவருகளுக்கும் புரியவில்லை போல். இந்த ஒரு விஷயத்தில் எல்லா சபைகளும் குருட்டாட்டம் தான் கான்பித்து வருகிறார்கள். பாபிலோன் சபை என்று இவர்களை சொல்லுவதில் என்ன தவறு? //


யூதர்களுக்கு தலைமுறைதோறும் நியமமாகக் கொடுக்கப்பட்ட கட்டளையை நிறைவேற்றுவதற்காக சூரியனுக்குக் கீழே அவர்கள் எந்த மூலையில் இருந்தாலும் எருசலேமுக்குத் திரும்புவார்கள்;

அதுபோன்றதொரு பெரிய பண்டிகை நாளில் தான் இயேசுவான‌வர் கொலைசெய்யப்பட்டார்;அது சிறப்பான பண்டிகை நாளாகவும் அனைத்து பண்டிகைகளின் நிறைவு நாளாகவும் மாறியது;

எனவே இனி முன்பு போல இதனைக் கொண்டாடாமல் அவரை நினைவுகூறும் வண்ணமாக ஆசரிக்கக் (அதாவது அனுதினமும்) கட்டளையிட்டார்;

ஆனால் புறவினத்தாரான நமக்கு எந்த நேரடி கட்டளையுமில்லையே; யூதர்களைப் போலவே நாமும் அதனை நியமத்தின்படி ஆசரிக்க வேண்டுமானால் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஆசரிக்கவேண்டும்; அப்போதுதான் அதன் முழுநோக்கமும் நிறைவேறும்;

அப்படியானாலும் இயேசுவானவர் செய்துமுடித்த ஒரு காரியத்தை மீண்டும் யாரும் செய்யவேண்டுவதில்லை,செய்யவும் முடியாது;ஆனால் அதைக் கட்டாயமாகச் செய்பவர்கள் பாரம்பரியமாக அதனைச் செய்யாமல் ஆண்டவர் செய்து முடித்ததை செய்கிறோம் என்ற உணர்வுடன் செய்யவேண்டும் என்பதே போதனையாகும்;

இது எனது புரிதல்..!



-- Edited by chillsam on Wednesday 31st of March 2010 12:49:08 PM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
இராப்போஜனம்..?
Permalink  
 


DSCN6325-2.JPG

இராப்போஜனம்
என்பது கலாச்சாரம் சம்பந்தமான விஷயம்;
தற்போதுள்ளது போல மூன்று வேளையும் வயிறு முட்ட உண்ணும் கலாச்சாரத்துக்கும் அதற்கும் சம்பந்தமில்லை;

ஆனால் யூதர்களின் வழக்கமான இராப்போஜன நேரத்தையும் வருடாவருடம் தலைதலைமுறையாக ஆசரித்துவந்த பஸ்கா விருந்தையும் அர்த்தமுள்ள ஒரு விருந்தாக ஒரு புதிய கோணத்தில் நிறைவேற்ற கர்த்தர் முடிவு செய்து அதை நிறைவேற்றியதுடன் புதிய பிரமாணத்தையும் உடன்படிக்கையையும் ஸ்தாபித்தார்;

ஆனால் ஒரு செயலை செய்த நோக்கத்தைவிட அந்த செயலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் விக்கிரக ஆராதனைதான் என்பது என் கருத்து;

உதாரணமாக திருமுழுக்கு எனப்படும் கட்டளையை எடுத்துக் கொண்டால் அதன் நோக்கத்தைவிட அப்போது உரைக்கப்படும் நாமத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மார்க்கபேதங்களை உருவாக்கிவிட்டோம்..!

இயேசு செய்த சிம்பாலிக்கான ஒரு காரியத்தையே ஒரு கட்டளை போலாக்கி விட்டால் கொலோசெயர்.2:16 க்கு என்ன சொல்வோம்..?

இயேசு இராப்போஜனம் மேற்கொண்ட நாளும் நேரமும் நம்முடைய வாழ்வில் வரப்போவதில்லை;ஆனால் அந்த நிகழ்வும் அதன் நோக்கமும் நெஞ்சில் நிறுத்தினாலே போதும்..!

(தொடர்ந்து தளநண்பர்களும் தங்கள் கருத்தை முன்வைக்கலாம்.)


-- Edited by chillsam on Tuesday 30th of March 2010 08:25:13 AM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard