Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு பாபாவிடம் பாடம் கற்றார..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
இயேசு பாபாவிடம் பாடம் கற்றார..?
Permalink  
 


அன்பு எழுதியது:
//1. எபிரெயர் 1:6-ன்படி பார்த்தால், இயேசு தேவதூதர்களில் ஒருவரல்ல என்பது தெளிவாகிறது.//

"எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா? "(
எபி 1:5 )

கோவை பெரியன்ஸ் வெளியிட்டிருக்கும் கருத்து:
ஏன் தூத‌ர்க‌ளூட‌ன் மாத்திர‌ம் ஒப்பீட்டு பேச‌ ப‌டுகிறார்!! மிகாவேல் (மிக்கேல்) என்கிற‌ தூத‌ன், மிக் என்றால் தேவ‌ சாய‌ல‌ என்றும் ஏல் என்றால் தேவ‌ன் என்றும் அர்த்த‌ம் கொண்டு, தேவ‌னின் சாயலான‌வ‌ர் என்கிற‌ அர்த்த‌ம் கொண்டிருக்கிறாரே,

"அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்." (
கொலோ 1:15 )

தேவ‌னுடைய‌ த‌ற்சுரூப‌மான‌வ‌ர் ஏன் பிர‌தான‌ தூத‌னாக‌ இருக்க‌ கூடாது!! ப‌ழைய ஏற்பாட்டில் அநேக‌ இட‌ங்க‌ளில் தூத‌னான‌வ‌ர் என்றும் தேவ‌னின் தூத‌ன் என்றும் விசேஷ‌மாக‌ போட்டிருக்கும் வ‌ச‌ன‌ங்க‌ள் இருக்கிற‌தே, ஏதோ ஒரு தூத‌ன் என்று எப்ப‌டி எடுத்துக்கொள்ல‌ முடியும்!!

"அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது." (
யாத்திராகமம் 3:2 )

"அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவ தூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேக ஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது." (
யாத்திராகமம் 14:19 )

"வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்." (
யாத்திராகமம் 23:20)

"என் தூதனானவர் உனக்குமுன் சென்று, எமோரியரும் ஏத்தியரும் பெரிசியரும் கானானியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அதம்பண்ணுவேன்." (
யாத்திராகமம் 23:23 )

"இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்துக்கு ஜனங்களை அழைத்துக்கொண்டுபோ; என் தூதனானவர் உனக்குமுன் செல்லுவார்; ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன் என்றார்." (
யாத்திராகமம் 32:34 )

"நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியனையும் எமோரியனையும் ஏத்தியனையும் பெரிசியனையும் ஏவியனையும் எபூசியனையும் துரத்திவிடுவேன்." (
யாத்திராகமம் 33:2
)

இப்ப‌டி இந்த‌ வ‌ச‌ன‌ங்க‌ளில் சொல்ல‌ப்ப‌ட்ட‌ "என் தூத‌ன்" அல்ல‌து தூத‌னான‌வ‌ர் என்கிற‌ ப‌த‌ங்க‌ள் எல்லாம் குறிபிட‌ப்ப‌ட்ட‌ அந்த‌ தூத‌ன் ஒரு சாதார‌ன‌ தூத‌னாக‌ இருந்திருக்கும் வாய்ப்பு இல்லை என்ப‌தையே காண்பிக்கிற‌து!!

தேவ ‌தூத‌ர்க‌ளில் ஒருவ‌ர் இல்லை என்ப‌தை எழுதிய‌ தாங்க‌ள், அவ‌ர் என்ன‌வாக‌ இருந்தார் என்ப‌தையும் வ‌ச‌ன‌த்துட‌ன் எழுதியிருந்தால் ந‌ல‌மாக‌ இருந்திருக்குமே!!

ஆனாலும் த‌ங்க‌ளின் க‌டைசி ப‌திவு அருமையான‌ ச‌த்திய‌த்தை சொல்லியிருக்கிற‌து!! கிறிஸ்து ஆதாமின் நிலையில் இயேசுவாக பிற‌ந்தார் என்ப‌து தான் உண்மை, ஆக‌வே தான் இர‌ண்டாம் ஆதாம் என‌ப்ப‌டுகிறார்!! //

நானும் இதேபோல ஆமாஞ்சாமி போட்டால் எல்லோருக்கும் நண்பனாக இருக்கமுடியும்;ஆனாலும் அப்படிப்பட்ட கேடுகெட்ட நட்பை நாம் விரும்பவில்லை.முற்றிப்போன கேஸ்களை நட்புகொள்ளுவதால்
ஆதாயம் செய்ய முடியும் என்ற அதீத நம்பிக்கையும் நமக்கு இல்லை.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


// தேவனுக்கெதிரான சாத்தானின் சவாலில் யாருக்கும் வெற்றி/ தோல்வியை தீர்மானிக்க முடியாதபடி சாத்தானின் வஞ்சகத்தால் ஆதாம் வீழ்ச்சியுற்றான். மாத்திரமல்ல, ஆதாமின் சந்ததியில் அனைவரும் பிறக்கும்போதே பாவத்தில் பிறந்ததால் (சங்கீதம் 51:5), அவர்களில் எவராலும் சாத்தானின் சவாலை முறிக்கமுடியாத நிலையும் உண்டானது.

எனவேதான் தேவன் தமது குமாரனாகிய இயேசுவை, புருஷசித்தம் இல்லாமல் ஸ்திரீயின் வித்தாக இவ்வுலகில் பிறக்கச்செய்தார். சாத்தானால் வஞ்சிக்கப்படுவதற்கு முன் ஆதாம் எந்த நிலையில் இருந்தாரோ அதே நிலையில் இயேசுவும் இருந்தார். எனவேதான் இயேசுவும் “ஆதாம்” என அழைக்கப்பட்டார் (1 கொரி. 15:45). //

இது அன்பு என்பவர் அண்மையில் இறைவன் தளத்தில் எழுதியது:

இதில் நாம் அறிய விரும்புவது யாதெனில், "அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார். " ( 1கொரிந்தியர்.15:45 ) எனும் மேற்கண்ட வார்த்தையைத் திரித்து இயேசு இந்த உலகில் வெளிப்பட்டபோது ஆதாமைப் போலவே இருந்தார் என்று குறிப்பிட்டிருக்கிறார்; அதற்கு ஆதாரமாக மேற்கண்ட வசனத்தைக் குறிப்பிட்டிருக்கிறார், இது சரியா..?



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

"வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே." (யோவான்.5:39)

இந்த வசனத்தை நமதருமை ஆண்டவர் தாமே திருவாய் மலர்ந்து மொழிந்ததாகும்; ஆனால் இந்த ஒரு வசனத்தை மட்டுமே எடுத்துக்கொண்டு வரம்பை மீறிச் சென்று ஆராயும் சில சகோதரர்களின் துணிகரத்தினால் நான் அதிர்ச்சியுற்றிருக்கிறேன்; இவர்கள் செய்யும் பயங்கரங்களில் எதைக் கண்டிப்பது எதைக் கண்டுகொள்ளாமல் விடுவது என்றே புரியவில்லை;

இவர்களைக் குறித்து எளிமையாக ஒரு உதாரணத்துடன் சொல்லமுடியுமானால் மாணவப் பருவத்தின் அனுபவத்திலிருந்து சொல்லுகிறேன், கணக்கு பரீக்ஷை, எப்படியாவது விடையை எட்டிப்பார்த்தாவது பிட் வைத்தாவது எப்படியாவது எழுதிவிடுவோம், ஆனால் அந்த குறிப்பிட்ட கணக்கின் படிகளும் ஃபார்முலாவும் வழிமுறைகளும் தெரியாது; அதுபோலவே இவர்களும் எதையோ தடவிப் பார்த்து இவர்களாக ஒரு யூகத்தின் மூலம் ஒன்றைப் பிடிக்கிறார்கள்,பிறகு அதனை எப்படியெப்படியோ வளைத்து நெளித்து நிரூபிக்கப்பார்க்கிறார்கள்; இதுவே இவர்களுடைய பிரச்சினை..!


இந்த ஆராய்ச்சியில் தற்போது முன்னணியில் இருப்பவர் நமக்கு அருமையான நண்பர் சுந்தர் அவர்களே..!

நான் என்ன சொல்லுவது நண்பர்களே, அவர் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளும் பிரச்சினைகளையும் அதற்குக் கொடுக்கும் தலைப்புகளையும் அதில் கூறும் அரும்பெரும் கருத்துக்கோவைகளையும் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்; நம்மால் இயன்ற ஒரே காரியம், இந்த களைகளைக் கர்த்தர் தமக்கு சித்தமானால் அவர் தமது வருகை பரியந்தமும் வளரவிடுவார், ஆனாலும் நாம் நம்முடையவர்களை எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

உதாரணத்துக்கு ஒரு தலைப்பும் அதன் தொடுப்பும்

இவ்வுலகிற்கு இயேசு அனுப்பப்பட்டதன் நோக்கம்

http://www.lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=3&topicID=40469001


இயேசு இந்த உலகத்துக்கு அனுப்பப்பட்ட நோக்கத்தை தானே சிறுவயது முதல் படித்த பள்ளியிலிருந்து தொடர்ந்து ஞாயிறு பள்ளியிலும் கற்று வருகிறோம்; தெரியலன்னா எங்கிட்ட கேளு, சொல்லித் தரோம், இதில் என்னய்யா ஆராய்ச்சி வேண்டிக்கிடக்கு..? சரி உன்னுடைய ஆராய்ச்சியின் போக்கு எப்படியிருக்கிறது, அதனால் யாருக்கு பிரயோஜனம் என்று உணர்ந்தாயா..?

'போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது." (1கொரிந்தியர்.3:11)

இதைச் சொன்னவன் பரிசுத்தவான் இல்லையா..? அப்படியானால் அஸ்திபாரத்தையே அசைப்பது போன்ற எதிர்மறையான கருத்துக்களை இங்கே விதைத்து யாரை வஞ்சிக்க திட்டம் போடுகிறாய் என்று கேட்கிறேன்..!

நான் மனிதர்களிடம் பேசாமல் அவர்களை ஆட்டிப்படைக்கும் பிசாசிடம் பேசியதால் ஒருமையில் எழுதவேண்டியதானது, நண்பர்கள் மன்னிக்கவும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

EDWIN SUDHAKAR:
நிச்சயமாக இயேசு பாபாவுக்கு பாடம் கற்று கொடுத்திருக்கலாம் தவிர
பாபா ஏசுவுக்கு கற்றுகொடுதிருக்க முடியாது என்பது எனது கருத்து

வாதிப்பதிலும் உண்மையை அறியும் தேடலிலும் இரண்டு வகையுண்டு; ஒன்று
(for internal evidence)உள்ளிருந்து தேடுவது,
அடுத்து (
for external evidence)வெளியிலிருந்து தேடுவது;

வேதத்தை நேசிக்கும் ஒருவன் உள்ளிருந்து தேடினால் போதும்; வெளியிலிருந்து தேடினால் வேதத்தைவிட்டு தூக்கியெறியப்படுவீர்;
இது வேண்டாத வேலை..!

உலக அறிஞர் பார்வையில் இயேசுவுக்கோ- ஏன் எகிப்திலிருந்த இஸ்ரவேலருக்கோ சாதகமான எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்லப்படுகிறது;

ஏன் இயேசுவும் கூட உயிர்த்தெழுதலுக்கு முன்பும் சரி பின்பும் சரி தம்மை அனைவருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கவில்லை;

நான் முழுமனதாக நம்பும் ஒரு காரியத்தை நான் மட்டுமே உண்மை... உண்மை எனக் கத்திக் கொண்டிருந்தால் கேட்பவன் என்னைப் பார்த்து சிரிப்பான்... இயேசுவை ஆதாரப்பூர்வமாக நிரூபித்த பிறகு விசுவாசம் எனும் குழந்தை செத்துப்போகும்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இயேசு இந்து கடவுள்  பாபாவிடம் பாடம் கற்றதாக வரலாறு இருக்கிறது என்றும பாபா இயேசுவின் குரு  என்றும்...

"பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்."(லூக்கா.2:51)

மேற்கண்ட இந்த வசனத்தினை நான் மனதார நம்புகிறேன்;
ஆண்டவரும் கூட இதற்கு ஆதரவாக காணாமற்போன இஸ்ரவேலரிடத்துக்கே அனுப்பப்பட்டேன் என்று கூறியதுடன் தம்முடைய சீடரையும் எல்லைக் கடவாதபடி கட்டளையிட்டார்;

சகோதரர் சந்தோஷ் பரிசுத்த வேதாகமத்தை நம்புவதாக இருந்தால் அதில் உரைக்கப்பட்டவைகளுக்கு மிஞ்சி கேட்கப்படும் கேள்விகளுக்கு (யோவான் சுவிசேஷத்தில் 9ம் அதிகாரத்தில் உரைக்கப்பட்டு ஆண்டவரால் பார்வையடைந்த பிறவிக் குருடனைப் போல )"தெரியாது" என்று செல்வதே சிறந்தது;

உதாரணமாக நான் தற்போது வெளிப்படையாகச் சொல்லுகிறேன், "குரான்" முழுக்க முழுக்க கட்டுக்கதை... அப்பட்டமான பொய்... பைபிளின் தழுவல்... சாத்தானின் சூழ்ச்சி..!

அதிலிருந்து ஒரு ஆதாரத்தை நீங்கள் சொல்ல அது அடுத்த சந்ததியைச் சேரும்போது வேதத்தின் ஒரு பகுதி போல மாறிவிடும்;

இந்த தவறை எந்த ஒரு சீடனும் இதுவரை செய்யவில்லை; நாமும் செய்யவேண்டாம் என்று ஆண்டவரை வேண்டிக்கொள்கிறேன்;

உலகின் முதல் குடிமதிப்பு முதலாக அனைத்தையும் பதிவு செய்துள்ள தேர்ந்த கல்வியாளரும் கிரேக்கரும் மருத்துவருமான லூக்காவுக்கு அவருடைய காலத்திலேயே தெரியவராத ஒரு செய்தி 500 வருடம் கழித்து முகமதுவுக்கும் அதற்கும் பின்னால் இந்திய ரிஷிகளுக்கும் தெரியவந்ததா என்ன..?

"மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி"(யோவான்.1:29)

இது நம்முடைய ஆண்டவருடைய பணியினைப் பற்றிய யோவான் ஸ்நானனின் அறிக்கை;இதன் மூலம் அறியக்கூடியது,வேதம் அவரைக் குறித்து என்ன சொல்கிறதோ அதைச் சொன்னால் போதும் தவிர வீணான வெற்று அலங்காரங்களும் கூட அவரைத் தாழ்த்தி இழிவுசெய்துவிடும் அல்லது அவருக்காகப் பொய் சொன்ன பாவத்துக்கு நம்மை ஆளாக்கும்.

நண்பர் சந்தோஷ் அவர்களின் கேள்விக்கு பதிலளிக்காத காரணம் அது ஆங்கிலத்தில் இருந்தததே;அதனை மொழியாக்கம் செய்து அதற்கு பதிலளிக்க அவகாசமில்லை;மேலும் பிற நண்பர்களின் கருத்தையறிந்து பிறகு பதிலளிக்கவே காத்திருந்தேன்;

// Now, I am asking another question consider this is the question from a non-believer what will be your answer?

"Did Jesus Christ eat food or drink water in his childhood?"

I am 100% sure your answer will be "I don't know" because it is not written in Bible. //

பழைய ஏற்பாட்டில் ஆசரிப்புகூடாரத்தில் பல்வேறு பலகாரங்களை கடவுளின் கட்டளைப்படி தயாரித்து படைத்தனரே அவற்றை அவர் உண்டது உண்மையானால் புதிய ஏற்பாட்டில் அது இன்னும் அதிக உண்மையாகும்;

வேதம் மிக இயல்பானது;அதனை யாரும் உள்நோக்கத்துடன் "குரான்" போல உட்கார்ந்து தயாரிக்கவில்லை;எந்த நிலையிலும் பரிசுத்த வேதாகமத்தை மற்ற வேதங்களுடன் ஒப்பிடுவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை;


வாதத்தில் மேற்கொள்ளுவதல்ல மையநோக்கம்;அதனைக் கடவுளின் வழியில் நேர்மையாகச் செய்து முடித்தோமா என்பதையே இறைவன் கண்காணிக்கிறார்;கையளிக்கப்பட்டதை அதன் ஆதாரம் மாறாமல் செய்து முடிப்பதே தலையாய கடமையாகும்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard